ஓட்டுதல் எனக்குப் பிடிக்கும்... உங்களுக்கு?
ஓட்டுறது ஒரு கலைங்க ... நம்ம குசும்பன் பண்ணுற வேலைய சொல்லலைங்க... அவங்க மாதிரி நமக்கு நகைச்சுவையா ஓட்டத் தெரியாதுப்பா. நான் சொல்லுறது தரையில் வாகனம் ஓட்டுறது. பாசமலர் அக்கா (? என்னது... பாசமலர்ல தங்கை தானே வருவாங்க) பாசமா மொக்கைப் போட கூப்பிட்டிருந்தார் (http://pettagam.blogspot.com/2008/01/tag.html). நம்ம அதை தவிர வேறேதும் எழுதுறதில்லைன்னு புச்சா வந்த அவுங்களுக்கு தெரியாது போல. ஆனாலும் நம்மளை மதிச்சவங்களை மதிக்காம விடலாமா? அது நல்லாயிருக்குமா? அதான் ச்சும்மா ச்சும்மா சுயபுராணம் ஒன்னு எடுத்துவிடப் போறேன்.
சின்ன வயசிலிருந்தே எனக்கு வாகனம் ஓட்டுறதுல அம்மாம் சந்தோஷம். முதல்ல ஆரம்பிச்சது 2 கால்(!) சைக்கிள் தான். அதுவும் பெரியவுக ஓட்டுற சைக்கிள். குரங்கு பெடல் போட்டு, நடக்கு நடக்குன்னு...... ம்ம்ம்..... அந்த காலம். அதுவும் பசங்களோட போட்டிப் போட்டுட்டு.... ஒருத்தர ஒருத்தர் முந்துறோமின்னு, இடிச்சி, முட்டிய பெயர்த்த நாட்கள்.... சுகமாத்தேன் இருக்கு. அதெல்லாம் ஒரு காலம்.
அப்புறம் மோட்டார் வண்டிகளின் வரிசை. முதல்ல வர்றது அம்பாசிடர் கார். 8 வயது சிறுமியாய் இருக்கும் போது, அப்பாவின் மடியில் அமர்ந்து ஸ்டியரிங் பிடிக்க, அவருக்கு தெரியல... தப்பான புள்ளைக்கு சொல்லிக் கொடுக்கோமின்னு.... அப்போ பிடிச்சிது கார் பயித்தியம். 10 வயசு வரை ஸ்டியரிங் மட்டும் தான். :-( அப்புறம் 10 வயசுல ஏதோ தைரியத்துல தனியா (திருட்டுத்தனமாத் தான்), முதல் பிள்ளையார் சுழி. தன்னோட மகள் யாரும் சொல்லிக் கொடுக்காமலே தைரியமா ஓட்டியது பார்த்து அப்பாருக்கு ஏகப் பெருமை. பெருமையா (அவர் காரை காப்பாத்திக்கவும் தான்) கார் ஓட்ட சொல்லிக் கொடுத்தார். திருட்டுத்தனம் தேவையில்லைன்னு சொல்லாமல் சொல்லிட்டார்.
13 வயசு இருக்குறப்போ லூனா. சர்... சருன்னு ஊரை வலம் வந்தது இன்னுமும் ஞாபகம் இருக்குது. வெள்ளை கலரு வண்டி.. செம்மண்ணா வீடு வந்து சேரும். ஆனா இது மேல ஆசை உடனே போயிருச்சி. த்ரில் இல்லாத மாதிரி ஒரு உணர்வு. அதுக்கு காரணம் அப்பாவோட புல்லட்ன்ன்னு நெனைக்கிறேன். டட் டட்டுன்னு ப்பெருசா சத்தம் போட்டு நெஞ்சை திடுக்கிட வைக்கிற அது மேல ஒரு கண்ணு. இல்ல...ரெண்டு கண்ணுமேன்னு சொல்லலாம். மெல்ல அவர்கிட்ட கிசுகிசுக்க... அம்மா காதில் அது விழ... செமத்தியா அப்பா வாங்கிக் கட்டிக்கிட்டாங்க அம்மா கிட்ட. புள்ளைக்கு ஓவரா செல்லம் கொடுக்குறாங்கன்னு பழி வேற. அதனால ரெண்டு பேரும் சேர்ந்து திருட்டுத்தனம் பண்ண வேண்டியதாப் போச்சி. ஹி ஹி ஹி. ஞாயிறு தோறும் காலையில எல்லாருமா அப்பாவோட பீச்சுக்கு போவோம். அன்னக்கி நான் மட்டும். மத்தவங்களை கட்டிங்ஸ் போட்டாச்சி. :-) அப்புறம் என்ன... புல்லட் ராணி ஆகிட்டேன். இன்னும் புல்லட் மோகம் போகலைன்னா பார்த்துக்கோங்க.
அப்புறம் காலேஜ் வாழ்க்கை. அக்காவுடன் லூனா. கடியா இருக்கும். ஏன்னா அவளுக்கு வேகம் பயம். எனக்கோ மெதுவாப் போனா பயம். முதல் வருடம் எப்படியோ சமாளிச்சிட்டேன். அந்த லீவுக்கு தாத்தா ஊருக்குப் போக, அங்கே ஸ்கூட்டர் முதல்ல ஓட்ட... அப்புறம் மெல்ல அப்பாகிட்ட ஸ்கூட்டர் வாங்கி கேட்க, எங்கள் ஊரில் முதல் முதலில் தினமும் ஸ்கூட்டர் ஓட்டும் பெண்மணி ஆயிட்டோமில்ல. இதுல கீழ விழுந்து வாரின கதையெல்லாம் நாங்க சொல்ல மாட்டோமாக்கும்.
ஒரு வழியா மேல்படிப்புக்கு ஹாஸ்டல்ல போட்டதும் தான் அம்மாவுக்கு நிம்மதி வந்திருக்குமின்னு நெனைக்கிறேன். அங்கேயும் சும்மா இருப்போமா? தோழ பெருமக்களோடு கம்பைண்ட் ஸ்டடி. பசங்க அவங்க வீர தீர செயல்களையெல்லாம் சொல்ல, பொண்ணுங்க ங்கேன்னு கேட்டுட்டு இருக்க, நாம செய்த வீர சாகசங்களை சொன்னா... நம்புனா தானே. தோழியின் அம்மா அப்பா வெளியூர் போயிருக்கப்போ... அவங்க வீட்டு ஆட்டோவை ஓட்டி நிரூபிக்க சொல்ல.... அதையும் விட்டு வைக்கல. ஆட்டோவை எருமை மாடு மேல ஏத்துன கதையெல்லாம் சொல்வோமாக்கும். ;-)
ஒரு வழியா ஆசையெல்லாம் போயிருச்சின்னு மட்டும் நெனைக்க வேண்டாம். எங்க ஊர்ல லாரி நெறையா உண்டு. தம்பியின் உதவியோடு... ஒரு லோடு அடிச்சோமில்ல. அதுக்கப்புறம் தான் மனசு நிம்மதியாச்சி. எல்லா வண்டியும் ஓட்டியாச்சின்னு மனசுக்குள்ள குதியாட்டம் போட்ட அந்த நிம்மதி அமெரிக்கா வந்ததும் போயே போச்சி. ஏன்னு கேக்குறீங்களா... இங்கே ட்ரக்குன்னு ஒரு வண்டி இருக்குதுங்க. இங்கே போய் படம் பார்த்துக்கோங்க (http://www.hankstruckpictures.com/len_rogers4.htm) எப்பப்பா.... அத்துணை நீளம். அதை பெருமூச்சோட பார்க்குறதோட சரி. ஓட்ட ஆசை இருக்குது. ஆனா அதுக்குன்னு தனியா லைசென்சு எடுக்கனுமாம். (என்ன இருந்தாலும் நம்மூரு போல வருமா?) ஏன் ஓட்டனுமின்னு காரண காரியமெல்லாம் சொல்லனுமாம். அதனால ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்குமின்னு அப்பப்போ பெருமூச்சியோட பார்த்துக்க வேண்டியது தான்.
எனக்கே அறுவையா இருக்குதே. மக்களே.... உங்கள் புதுவருடம் இப்படியா ஆரம்பிக்கனும். ம்ம்ம்... எல்லாம் உங்கள் நேரம். என்சாயீஈஈஈஈ.....
பின்குறிப்பு:
மொக்கை போட 4 பேரை கூப்பிடனுமாமே. வாங்க ராசாத்திகளா.... வாங்க....
1) காதலுடன் காதலன் சென்ஷி (http://senshe-kathalan.blogspot.com)
2) முயற்சியின் தலைவி முத்தக்கா (http://sirumuyarchi.blogspot.com)
3) அலசல் சிகாமணி காட்டான் தெகா (http://thekkikattan.blogspot.com)
4) மதுர சொக்கரு (http://aayirathiloruvan.blogspot.com)
29 பேர் மறுமொழிந்துள்ளனர்:
ம்ம்ம்....பெரிய ஆளுதான் அக்கா நீங்க! ;;))
சைக்கிளில் ஆரம்பிச்சி லாரி வரைக்கும் எல்லாத்தையும் ஒருகை பார்த்துட்டிங்க..சூப்பர் ;)
\\\ஆட்டோவை எருமை மாடு மேல ஏத்துன கதையெல்லாம் சொல்வோமாக்கும். ;-)\\
புதுசாக ஒட்டும் போது இந்த எருமை மாடு எல்லாம் எங்க இருந்து தான் வருமோ! ;)
\\இங்கே ட்ரக்குன்னு ஒரு வண்டி இருக்குதுங்க. இங்கே போய் படம் பார்த்துக்கோங்க (http://www.hankstruckpictures.com/len_rogers4.htm) எப்பப்பா.... அத்துணை நீளம். அதை பெருமூச்சோட பார்க்குறதோட சரி\\\
எவ்வளவோ ஓட்டியாச்சி இதெல்லாம் ஓட்ட மாட்டோமா என்ன! :)
புல்லட் ராணி அவர்களே மொக்கை போட்டுயிருக்கேன்னு சொன்னிங்களே அது எங்க?? ;)))
இந்த 'ஓட்டு' நமக்கு ஆகாது.
அதென்னா இப்படி ஒரேதா?
நாலு கால் தான் எனக்குச் சரிப்பா:-))))
இது சத்தியமாக மொக்கையில் வராது திரும்ப இன்னொரு பதிவு எழுதுங்க:))
யாரப்பா அங்கே? மொக்கை போடுவது எப்படியென்று காட்டாறுக்குச் சொல்லிக் கொடுங்கள்...
போனாப் போகுதுன்னு இதை மொக்கைன்னு ஏத்துக்க வேண்டியதுதான்..tag தொடர்ந்ததற்கு ஒரு நன்றி..
தாயுமானவள், உயிரோடு உயிராய் இன்னும் பலவும் மொக்கையென்று காட்டாறு சொன்னால் புச்சா வந்த நானும் சரி..களத்துல இருக்குற மத்த பழையவங்களும் சரி..எப்படிப்பா ஒத்துக்கிறது?
ஏங்க.. சும்மா மொக்கை போட்டாலே தாங்கமுடியல.. இதுல பாசமா வேற கூப்பிடுவாங்களா மொக்கை போட? யப்பா... இதுல இருந்தெல்லாம் தப்பிச்சுத் தொலைக்கவாவது நான் வலைப்பூ துவங்கவே மாட்டேன்... சொல்லிட்டேன்.
ஸேம் ப்ளட்....ஹி..ஹி
புதுசா என்ன மொக்கை, இப்ப நான் எளுதுறதே மொக்கைதானே....
நல்லாப்
போறாமையக் கிளப்பிவிடரப்பா
காட்டாறு... என்ன ல்லாமோ ஓட்டிருக்கிங்க...ஹ்ம்...
என்னமொக்கையா... சரி பதிவு எழுதறேன்..இதுக்கு முன்னால எழுதினதுக்கும் இப்பஎழுதபோறதுக்கும் வித்தியாசம் இல்லன்னா என்ன கேட்கக்கூடாது சொல்லிட்டேன் ஆம்ம்மா...
என்னது "அலசல் சி...மணி"யா புச்சு, புச்சா என்னன்னமோ அவார்ட் எல்லாம் கொடுக்குறீங்க... இருங்க எதுக்கும் ஒரு அன்னெக்ஸ் கராஷ் ஒண்ணு ஆர்டர் கொடுத்திடுறேன்.
மொக்கைக்கு எனக்கு யாராவது சிறப்பு வகுப்பு எடுத்தாத்தேன் உண்டு...
நல்ல வேளை நான் உங்க ஊரில எதுவும் கால் நடையாக நடந்து திரியல... ஆமா, அந்த 1975ல இருந்து 80ஸ் வரைக்கும் நிறைய அடையாளம் தெரியாத மக்கள் அடிப்பட்டு ரோட்டு ஓரத்தில து.குடியில கிடந்ததா 'தினத் தந்தி'யில படிக்கிறதுண்டு, அதுக்கும் இதுக்கும் ஏதாவது தொடர்பிருக்குதுங்களா?? :-)))
ஏ ஆத்தா நீயென்ன பொண்ணா இல்லை ஜெகன் மோகினியா? இம்புட்டு தகிரியமா கத்துகிட்ட?
உடாதே தாயி யாரையாவது புடிச்சி 'டிரக்'ஓட்டிடு.அப்பால போலிஸ் புடிச்சாலும் ஒரு சொகமாயிருக்கும்ல;)
// கோபிநாத் said...
புதுசாக ஒட்டும் போது இந்த எருமை மாடு எல்லாம் எங்க இருந்து தான் வருமோ! ;)
//
நம்மூர்ல அதானே நெறையா.. மக்களையும் சேர்த்து தான். ;-)
// கோபிநாத் said...
எவ்வளவோ ஓட்டியாச்சி இதெல்லாம் ஓட்ட மாட்டோமா என்ன! :)
//
// கண்மணி said...
உடாதே தாயி யாரையாவது புடிச்சி 'டிரக்'ஓட்டிடு.அப்பால போலிஸ் புடிச்சாலும் ஒரு சொகமாயிருக்கும்ல;)
//
எம்பூட்டு பாசம் உங்க ரெண்டு பேருக்கும். நான் அமெரிக்க ஜெயில்ல இருப்பதை பார்க்க/கேட்க அம்பூட்டு சந்தோசமா... நல்லாயிருங்க ராசாத்திகளா...
// துளசி கோபால் said...
இந்த 'ஓட்டு' நமக்கு ஆகாது.
அதென்னா இப்படி ஒரேதா?
நாலு கால் தான் எனக்குச் சரிப்பா:-))))
//
டீச்சர்.. நமக்கு இன்னைக்கும் 2 கால் தான். ;-) நான் சைக்கிளை சொன்னேன்.
அட அட...புல்லட் ராணி, லேடி ஜேம்ஸ்பாண்ட், Gun fight காஞ்சனானு ஏகப்பட்ட பட்டம் குடுக்கலாம்...
இந்த புல்லட் மோகம், அனுபவம் எனக்கும் இருக்கு...
/புல்லட் ராணி, லேடி ஜேம்ஸ்பாண்ட், Gun fight காஞ்சனா/
சரியான title. ஆனா, titleக்கு முன்னாடி 'புரட்சி' னு போட்டுங்கணும் .. அதான் இப்ப 'fashion'ம்...
கலக்கல்தான்...!! ;)
// குசும்பன் said...
இது சத்தியமாக மொக்கையில் வராது திரும்ப இன்னொரு பதிவு எழுதுங்க:))
//
வாங்க குசும்பரே.. நம்மூட்டுக்கு முதல்ல வந்துருக்கீங்க... வாங்க வாங்க...
இப்ப இன்னொரு பதிவுக்கு நானெங்கே போறது? வந்துட்டு இப்படி ஒரு குண்டை தூக்கிப் போட்டுட்டீங்களே. ;-)
// Thekkikattan|தெகா said...
நல்ல வேளை நான் உங்க ஊரில எதுவும் கால் நடையாக நடந்து திரியல... ஆமா, அந்த 1975ல இருந்து 80ஸ் வரைக்கும் நிறைய அடையாளம் தெரியாத மக்கள் அடிப்பட்டு ரோட்டு ஓரத்தில து.குடியில கிடந்ததா 'தினத் தந்தி'யில படிக்கிறதுண்டு, அதுக்கும் இதுக்கும் ஏதாவது தொடர்பிருக்குதுங்களா?? :-)))
//
அண்ணாச்சி.. நீங்க கொடுத்த வருடங்களில் நான் பிறக்கவேயில்ல. அதனால எனக்கும் இந்த செய்திகளுக்கு சம்பந்தமே இல்லன்னு நெனைக்கிறேன். நீங்க சம்பந்தப் படுத்தி ஒன்னும் சொல்லலையே?
http://sirumuyarchi.blogspot.com/2008/01/blog-post_10.html எந்த வகையில் சேர்த்தின்னு பாத்துக்கோங்கப்பா நான் போட்டுடேன்.. கூப்பிட்ட ஆளூங்கள சரியா பாக்கல நானு ம் சென்ஷியைவே கூப்பிட்டுருக்கேன் .. :)
இதத்தான் எலக்கியமா குறிப்புகள் னு சொல்லுவோம்..செல்லாது செல்லாது இதெல்லாம் மொக்கையில வராது :))
இது மொக்கையா - மொக்கைக்கு இலக்கணமே புரியலே ! - ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரியா சொல்றாங்க - இது கொசுவத்தி - ஓட்டுனர் திலகம் பட்டம் கொடுத்துடலாம்.
நீங்களே ஒரு காட்டாறு உங்களுக்கு எதுக்கு இத்தனை மோட்டாரு! கால் நடையாக நடந்து திரிந்து இருக்கலாமே பல உயிர்கள் பிழைத்து இருக்கும்! :-))
இங்கே சென்னைல மீன்பாடி வண்டினு ஒன்னு இருக்கு அது மட்டும் ஏன் மிச்சம் வச்சிங்க (அதை நீங்க ஓட்டினா பலப்பேரு டெட் பாடித்தான் :-))
அப்பப்பா.. ஏகப்பட்ட பட்டங்களப்பா.. இதெல்லாம் மாஞ்சா போட்டு எப்போ நான் பறக்க விட. இங்கே ஒரேடியா ஸ்நோ கொல்லுது.
// அய்யனார் said...
இதத்தான் எலக்கியமா குறிப்புகள் னு சொல்லுவோம்..செல்லாது செல்லாது இதெல்லாம் மொக்கையில வராது :))
//
அய்யனாரே.. இதெல்லாம் என்னா? நவீனனாகிய நீங்களே இப்படி சொல்லிட்டா?
// cheena (சீனா) said...
இது மொக்கையா - மொக்கைக்கு இலக்கணமே புரியலே ! - ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரியா சொல்றாங்க - இது கொசுவத்தி - ஓட்டுனர் திலகம் பட்டம் கொடுத்துடலாம்.
//
நீங்களுமா?? பட்டம் குடுப்பதிலுமா? அய்யோ.. இதை கேட்க யாருமில்லையா? :-)
// வவ்வால் said...
நீங்களே ஒரு காட்டாறு உங்களுக்கு எதுக்கு இத்தனை மோட்டாரு! கால் நடையாக நடந்து திரிந்து இருக்கலாமே பல உயிர்கள் பிழைத்து இருக்கும்! :-))
இங்கே சென்னைல மீன்பாடி வண்டினு ஒன்னு இருக்கு அது மட்டும் ஏன் மிச்சம் வச்சிங்க (அதை நீங்க ஓட்டினா பலப்பேரு டெட் பாடித்தான் :-))
//
நல்லா ரைமிங்கா தான் பேசுறீங்க. எந்த கால் நடையும் என்னால உயிரிழக்கலப்பா...
மீன்பாடி வண்டியெல்லாம் நமக்கு அத்துப்படிங்க. அதெல்லாம் ஓட்டியாச்சி. மெய்யாலுமே யாரும் டெட் பாடி ஆகல.
குதிரை வண்டி, மாட்டு வண்டி கூட விட்டு வைக்கல. வேற ஏதுனாச்சும் புச்சா வண்டி இருக்குதுங்களா? ரோட்டுல ஓடுறது மட்டும் சொல்லுங்க.
//அய்யோ.. இதை கேட்க யாருமில்லையா? :-)//
என்னது அப்படி சொல்லிட்டீங்க...
இது வரைக்கும் உங்களுக்கு எத்தனை பட்டம் கிடைச்சிருக்கு...ம்ம்ம்
புல்லட் ராணி
லேடி ஜேம்ஸ்பாண்ட்
Gun fight காஞ்சனா
ஓட்டுனர் திலகம்
இன்னும் பல பட்டங்கள் கிடைக்க வாழ்த்துகள்! ;)
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்....
எதுக்குங்க அதுக்கு மீன்பாடி வண்டின்னு பெயர் வச்சுருக்காங்க?
மீன் பாடுமா?
நானும் உங்க மாதிரி தான்...
Post a Comment