Friday, February 01, 2008

தோழியவள் சிரிப்பு

தோழியவள் சிரிப்பு


களங்கமில்லா சிரிப்பு
கலங்கடிக்கும் சிரிப்பு
தோழியவள் சிரிப்பு
எனக்குள் சிலிர்ப்பு

சிரிப்பின் உள்ளிருக்கும் துடிப்பு
துடிப்பு ஏற்படுத்தும் கிறுகிறுப்பு
அவள் உதிர்க்கும் சிரிப்பு
பத்திரமாய் காதினருகே

குழந்தையின் கொஞ்சல்
குமரியின் சிணுங்கல்
இயற்கையின் ரசிப்பு
தோழி, உன் சிரிப்பு

கள்ளமில்லா சிரிப்பு
பட படக்கும் பட்டாம்பூச்சியாய்
வெட்கமே மையமாய்
கூத்தாடும் நெஞ்சம் ஆனந்தமாய்

ஒதுங்கி நின்றக் கூரையில்
சில்லெனக் காற்றில்
சில துளி மேனி தொட
சிலிர்க்கும் மனம் போல

சாரலை அள்ளி அடக்க
தவிக்கும் உள்ளம்
விட்டு ஓடவே
தடுமாறும் எண்ணம்

ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காண்பாய்
தோழியவள் சிரிப்பில்
எனை நீ காண்பாய்

இதழ் விரிய சிரித்திடுவாள்
என் நங்கை
அவள் அனைவரின் உள்ளங்கவர்
நல் மங்கை

-- காட்டாறு

14 பேர் மறுமொழிந்துள்ளனர்:

Anonymous said...

காட்டாறு கலக்கிக்கிட்டு ஓடுது அருமையா!

Anonymous said...

கவித...கவித....

இன்னொருவாட்டி படிச்சிட்டு வந்து சொல்றேன்...

Anonymous said...

ஏனுங்க அம்மணி..

நீங்க வக்காளத்து வாங்குனீங்களே..அவுக தானா... அப்படி இருந்தா நல்ல வேளை ஒலிப்பதிவு பண்ணி போடலை...

அப்படி இல்லைன்னா கவிதை நல்லா இருக்கு..ஹி ஹி

said...

பிரிவோம் சந்திப்போம் பாத்து நானே என் தோழிங்களை எல்லாம் விட்டுட்டுவந்து இங்க கிடக்கனேன்னு நினைச்சிக்க்ட்டு இருக்கற வேளையில் காட்டாறு ஏன்ப்பா இப்படி தோழி சிரிப்பு சந்தோஷம்ன்னு ... உனக்கே நல்லாருக்காப்பா...

said...

யக்கோவ்...சூப்பர் கவிதை ;))

\\ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காண்பாய்
தோழியவள் சிரிப்பில்
எனை நீ காண்பாய்\\

அட அட நல்லாயிருக்கு இந்த வரிகள் ;))

\\இதழ் விரிய சிரித்திடுவாள்
என் நங்கை
அவள் அனைவரின் உள்ளங்கவர்
நல் மங்கை\\\

மங்கைக்கா மட்டும் தானா!!

அப்போ முத்துக்கா? கண்மணிக்கா எல்லாம் இல்லையா! ?? ;)))

said...

தமிழ்மண குடும்பத்துக்குள்ள குழப்பம் கொண்டு வராதீங்க ராசாத்திகளா... ஒட்டு மொத்தமா எல்லா மங்கைகளுக்குமின்னு எடுத்துக்கோங்க. டிஸ்கி வேணா போட்டுறவா? :-)

said...

// Anonymous said...
காட்டாறு கலக்கிக்கிட்டு ஓடுது அருமையா!
//
நன்றி அனானி. பெயர் கொடுத்திருக்கலாமே.

said...

// இரண்டாம் சொக்கன் said...
கவித...கவித....

இன்னொருவாட்டி படிச்சிட்டு வந்து சொல்றேன்...
//

படிச்சிட்டு வரமாயே ஓடிப்போயிட்டீங்களா? இல்ல படிக்க தொலதூரத்திலே இருந்து வரணுமா? :-)

said...

// Anonymous said...
ஏனுங்க அம்மணி..

நீங்க வக்காளத்து வாங்குனீங்களே..அவுக தானா... அப்படி இருந்தா நல்ல வேளை ஒலிப்பதிவு பண்ணி போடலை...

அப்படி இல்லைன்னா கவிதை நல்லா இருக்கு..ஹி ஹி
//

தெளிவா சொன்னீகன்னா வசதியாப் போகுமில்ல. என்ன சொல்ல வாரீக?

பாராட்டுக்கு நன்றி. அப்படியே பேரை சொல்லிப் போயிருக்காலாமில்ல. :-)

said...

// முத்துலெட்சுமி said...
பிரிவோம் சந்திப்போம் பாத்து நானே என் தோழிங்களை எல்லாம் விட்டுட்டுவந்து இங்க கிடக்கனேன்னு நினைச்சிக்க்ட்டு இருக்கற வேளையில் காட்டாறு ஏன்ப்பா இப்படி தோழி சிரிப்பு சந்தோஷம்ன்னு ... உனக்கே நல்லாருக்காப்பா...
//

எங்கேயிருந்தாலும் தோழிகளின் கொட்டம் மனசுக்குள்ளே தானே இருக்கும். எத்தனை முறை தனியா சிரிச்சிருப்போம். கவலைய விடுங்க.

said...

// கோபிநாத் said...
மங்கைக்கா மட்டும் தானா!!

அப்போ முத்துக்கா? கண்மணிக்கா எல்லாம் இல்லையா! ?? ;)))
//

கோபி அண்ணாச்சி... தோழிகளுக்குள்ள சண்டைய மூட்டிவிடப் பாக்குறீங்க. அது தான் நடக்காது. மங்கைன்னா பெண் என்ற அர்த்தமும் உண்டப்பா. ஒரு ரைமிங்கா எழுதனுமின்னா விட மாட்டீக போலவே. ;-)

said...

கள்ளமில்லா சிரிப்பு- பல் சில இல்லா சிரிப்பும் கூட.

said...

இந்த ஒரு வாரத்திற்கு யாராவது அந்தச் சிரிப்பை இரவல் கொடுத்து உதவ முடியுமா...

கவுஜா நல்லாத்தேன் இருக்குது ஓய்!

said...

மின்னலாய் கீறிய புன்னகைகள்
இடியாய் இடித்த சிரிப்புகள்...
இன்று மேகத்தின் பின்னால் பத்திரமாய்...
மழையாய் ஒரு நாள் கொட்டலாம்
....
வானம் பார்க்கவே நேரமில்லாதவன்...