நாங்களும் போட்டாச்சில்ல
தென்றலிடமிருந்து மிரட்டல் மடல் ஒன்று. ஆகா... மென்மையான அவரை மிரட்டும் அளவுக்கு தள்ளி விட்டோமேன்னு நெனச்சிட்டு இருக்கும் போது, நமக்கும் ஒரு வாரம் வேலை வெட்டி இல்லை என்ற நிலையை இந்த தொடர் விளையாட்டில் பங்கெடுக்க உபயோக படுத்தியாச்சி.
1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
புனைப்பெயர்:
விளக்கம் என்னோட ஃப்ரோஃபைல்ல இருக்குமே. என் அப்பா என்னை Free sprit என்பார். என் தோழி என்னை காட்டாற்றுக்கு ஒப்பிடுவார். இரு பெயர்களுக்கும் ஓர் ஒற்றுமை இருப்பதாய் பட்டது. அவ்ளோ தான். நான் எழுதும் கிறுக்கல்களுக்கும் இப்பெயர் உபயோகித்தேன். அதே பெயர் கொண்டே ப்ளாக் ஆரம்பித்து விட்டேன்.
பெற்றோரிட்ட பெயர்:
எங்கள் வீட்டில் எனக்கு மட்டும் தான் வித்தியாசமான பெயர். பள்ளியில் படிக்கும் போது இந்து, கிறிஸ்தவ குழப்பம் வரும். அப்போ என்னடா நமக்கு மட்டும் இப்படி செய்து விட்டார்களே என நினைத்தது உண்டு. அப்புறம் என் வட்டம் மறைய தொடங்கிய பின், பெயர் பெரிதாக தெரியவில்லை. வெளிநாடுகளில் வேலை பார்க்க ஆரம்பித்த பின், பெயர் விளக்கம் கேட்கும் போது, பெயரிலே அன்பு இருப்பதால், இரசித்து விளக்கி சொல்வதால், என் பெயர் ரொம்ப பிடிக்கும்.
2) கடைசியா அழுதது எப்போது?
20 வருஷம் முன்னர் என் அப்பா இறந்த போது கதறியது. அந்த நிகழ்விற்கு பின் நமக்கும் அழுகைக்கும் வெகு தூரமாகிவிட்டது. ஆனா, சின்ன புள்ளையா இருக்கும் போது எதுக்கெடுத்தாலும் அழுவேன்னு எங்க அம்மா சொன்னாங்க. இப்போ, குழந்தைகளையோ, வயது முதிர்ந்தவர்களையோ யாரேனும் துன்பப் படுத்தி, அதனால் அவர்கள் கண்கலங்கினால், நமக்கும் கண்கலங்குவது உண்டு.
3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
கண்டிப்பா. சிறுவயதில் பரிசெல்லாம் வாங்கியிருக்கிறேனாக்கும். ;-) பரிசுக்காக எழுதி பழகிய நாட்களும் உண்டு. இப்போ முன்ன மாதிரி அழகா இல்லைன்னாலும், நான் இரசிக்கிற மாதிரி தான் இருக்குது.
4) பிடித்த மதிய உணவு?
எல்லா வெஜிடேரியன் சாப்பாடும் வஞ்சனை இல்லாது சாப்பிடுவேன். கடல் வாழ் பிராணிகளில் இறால் பிடிக்கும்.
5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
கண்டிப்பா!இப்பவே நான் எனக்கு நண்பன் தானே!
6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
கடலோ, அருவியோ, குளமோ, குட்டையோ, தொட்டியோ…. குளிப்பது ரொம்பப் பிடிக்கும். அதுவும் பரந்த வெளியில் குளிப்பது…ம்ம்ம்.. ஆகா… என்ன சுகம்.
7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
அவர்கள் பேசும் வார்த்தைகளை.
8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்தது:
(1) எந்த பிரச்சனை என்றாலும், அது என்னை ஆக்கிரமிக்க இடம் கொடுக்காது உடனே அடுத்து என்ன செய்ய வேண்டும் என பேச ஆரம்பிப்பது. இக்குணத்தால் சில பல நண்பர்களை இழக்கவும் செய்திருக்கிறேன் என்றால் மிகையில்லை. (அவங்க என் கிட்ட சொன்னது; there is a time to moan and there is a time to rejoice-ன்னு.) (2) இரசனை. (3) காலை வேளையில் படுக்கையில் உருண்டு கனவு காண்பது
பிடிக்காதது:
(1) நேர நிர்வாகத்துல வீக் நான். ஆனா பாருங்க… வேலையில் அதில் தான் நல்ல பெயர். ஆனால், வீட்டிலோ, என்ன இப்படி இருக்குறன்னு கேப்பாங்க. (2) 24 மணி நேரம் பத்தவில்லை என பொலம்புவது.
9) உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?
கேட்டு சொல்லவா?
10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
எல்லாருமே பக்கத்துல இருக்குற மாதிரி நெனச்சுக்குவேன். பேசுவேன். ஆகவே, இது வரைக்கும் வருந்தினதில்லை.
11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
கறுப்பு.
12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
பார்த்துக் கொண்டிருப்பது - மானிட்டரை.
கேட்டு கொண்டிருப்பது - 'ச்சிச்சிச்சி.. என்ன பழக்கம் இது' பாடல்
13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
வானவில்.
14) பிடித்த மணம்?
நெறையா இருக்கு.
15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
பூக்கிரி – இவங்க பதிவுலக உதவி தாரகைன்னு பலர் சொல்ல கேள்வி. ;-) புதிதாக திருமணம் ஆனவர். அவர்கள் புரிதல் அறிய கூப்பிட்டாச்சு.
தெக்கிக்காட்டான் – இவரு என்னமோ எப்பவுமே சீரியஸா இருக்குற மாதிரியே தோணும். எழுத்துக்களில் மட்டும். ஜாலியா எழுதட்டுமேன்னு கூப்பிடுறேன்.
கண்மணி - இரசித்து வாசித்த இல்ல சிரித்த பல பதிவுகள் இன்னும் நினைவிருக்கு. இவங்க அடிக்கடி டெம்ளேட் மாத்துவதை ரசித்திருக்கேன். ரொம்ப நாளா இவங்களை காணோம். அதான்.
நாமக்கல் சிபி – இவரின் கலாய்த்தல் பதிவுகளும், பின்னூட்டங்களும் பிடிக்கும். இவருடைய பின்னூட்டங்கள் படிப்பதற்காகவே ரீடர்ல இருந்து கவிதாவின் பதிவுகளுக்கு செல்வது வழக்கம்.
மங்கை – இவங்க சேவை நமக்கு பிடிக்கும். சில்லுனு சிரிப்பாங்க. பிடிக்கும். நம்ம தோஸ்தாக்கும். அம்மணி சொந்த ஊருக்கு போயிருக்காக. நல்ல மூடுல இருப்பாங்கல்ல.
16) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
தென்றல் - இவருடைய பதிவுகள் இவரைப் போலவே மென்மையானவை. இவருடைய நாணயம் பதிவுகள் அனைத்தும் எளிமையாக, எனக்கும் புரியுறது போல இருக்கும்.
17) பிடித்த விளையாட்டு?
புரண்டெழுந்து விளையாடும் அனைத்து விளையாட்டுகளும்.
18) கண்ணாடி அணிபவரா?
சுரியனார் வீச்சத்திற்கு மட்டும்.
19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
மூன்று மணி நேரம் விரையமாக்க விருப்பமில்லை.
20) கடைசியாகப் பார்த்த படம்?
தெரியல.
21) பிடித்த பருவ காலம் எது?
இளம்பிராயம். ;-) ஓ…. அதைக் கேக்கலையா? காலத்தில், குளிரிமில்லாது, வெயிலும் அல்லாது ரெண்டுகெட்டான் பருவம்.
22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
எப்போதும் கட்டிலை சுற்றி புத்தகங்கள் இறைந்து கிடக்கும். அன்று இருக்கும் மூட் படி எடுத்து வாசிக்க வேண்டியது தான். நேற்றிரவு வாசித்தது The Inferno – Dante Alighieri . என்னுடன் வேலை பார்க்கும் ரஷ்ய நண்பர் இந்த புத்தகத்தை வாசிக்க சொல்லி உற்சாக படுத்தினார். ஆங்கில இலக்கியமோன்னு கொஞ்சம் உதறலோடு வாசிக்க ஆரம்பிச்சேன். ஆனா முன்னுரையே ஆகான்னு சொல்ல வச்சிருச்சி. ரொம்ப நாளுக்கு அப்புறம் இரசித்து வாசிக்கிற புத்தகம் இது. இவரின் இத்தாலிய எழுத்துக்களை மொழிபெயர்த்துள்ளவர் Henry Fances Carey.
அப்புறம் Charles Seife Zero a biography of a Dangerous Idea-விலிருந்து ஒரு அத்தியாயம் வாசித்தேன். நமக்கு தெரிந்த விஷயங்கள் பல இருந்தாலும், அட போட வைக்கும் விஷயங்களும் உண்டு. முடிந்தால் கண்டிப்பா வாசிங்க.
23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
15 நிமிடத்திற்கு ஒரு முறை அதுவே மாறிக்கொள்ளும். நான், என் நண்பர்கள் எடுத்த இயற்கை காட்சிகளும், மக்களும் அதில் அடங்கும்.
24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம்:
குழந்தை/பறவைகளின் குரல், அடர்த்தியான மரங்களினூடே ஊடுறுவி மெல்லிதாக சலசலக்க வைக்கும் தென்றல், அப்புறம்… பருவகால சப்தங்கள்
பிடிக்காத சத்தம்:
அப்படியெல்லாம் இல்லை. ஆனாலும், டயர்டா இருக்கும் போது நிசப்தம் பிடிக்கும். சிறு குண்டூசி விழும் சப்தம் கூட பிடிக்காது. டயர்டா ஆகுறது ஆடிக்கொரு முறை தான். ;-)
25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
தினம் தினம் என் ஆபீஸுக்கு தான். ஒரு வழி மட்டும் 37 மைல்கள்.
26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
இருக்குதே.
27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
பொய்.
28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
இரசனை.
29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
மலையும் மலையைச் சார்ந்த இடங்களும்.
30) எப்படி இருக்கணும்னு ஆசை?
அப்படி ஏதுமில்ல. அப்படி கண்டிப்பா ஆசை இருந்து தான் ஆகனுமின்னா... இப்படியே இருக்கனுமின்னு-ன்னு சொல்லலாம்.
31) மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
வரும்போது சொல்கிறேன்
32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க
Let go.
12 பேர் மறுமொழிந்துள்ளனர்:
நன்றி!
இவ்வளவு சீரியசா போடுவீங்கனு எதிர்பார்க்கலை! ;)
/அழைக்கப்போகும் பதிவரிடம்/
interesting.. I love them...!
/என்ன புத்தகம் படித்துக்கொண்டு /
ஒரு மண்ணாங்கட்டியும் புரியலை. ;(
நல்லா இருங்கடே!
/தென்றலிடமிருந்து மிரட்டல் மடல் ஒன்று/
எகொஇச!
சரியாப் போச்சு, நீங்களும் இந்த ஜோதியில ஐக்கியமாயாச்சா? பல கேள்விகளுக்கு பதில் யூசுவல் மண்டைக் காய்ச்சல்தான் :-)).
சரி, என்னய கூப்பிட்டு இப்படி உள்குத்து வைச்சிருக்கீங்களே இது ஞாயமா?
பதினாறாம் நம்பர் கேள்விக்குப் பதில் தெரியாததால், மொத்த பரிட்சையும் புறக்கணிக்கப்படுகிறது!
இன்னுமா முடியலை இந்த 32 ...
நாங்களும் போட்டுட்டோமில்ல கமெண்ட்டு...
சரி சரி அப்பப்ப இருக்கோமின்னு காட்டுறீங்க..
ஆகா...வர வர என்னை போல ஒருத்தின்னு ஆகிட்டு வரிங்க ;))
பதில்கள் கலக்கல்...;)
\- 'ச்சிச்சிச்சி.. என்ன பழக்கம் இது' பாடல்
\\
இப்படி ஒரு பாட்டா?? எந்த படம்?
Gopinath, thats an Asin,Vikram movie.:)
peyar maRanthu pochu.
/என்ன புத்தகம் படித்துக்கொண்டு /
ஒரு மண்ணாங்கட்டியும் புரியலை. ;(
நல்லா இருங்கடே!//
ha ha:)
repeatey,.
ராசாத்தி...மாட்டி விட்டுட்டீயா... அதான் எங்க ஊர்ல இருக்கோம்ப... ஜாலியா இருக்கனே...ஹோம் வர்க் எதுக்கு...
பிடிக்காத சத்தம்..இதற்கான பதில் மிகவும் ரசித்தேன்..
http://pithatralgal.blogspot.com/2009/06/blog-post.html
நான் ஏற்கனவே எழுதிட்டனே!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...!
உங்க அன்பான அழைப்பை ஏற்றுக்கொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன்! தயை கூர்ந்து மன்னிக்கவும்!
32 கேள்வி...
இருக்கட்டும் இருக்கட்டும்...
என்னை யாராச்சும் கூப்டாமலா போய்டுவாங்க....
:)
Post a Comment