Sunday, December 16, 2007

கண்டுபிடிங்க பார்க்கலாம்

எங்கள் ஊரில் இது பனிக்காலம். இன்னக்கி கூட அரை அடிக்கு பனி பெய்துள்ளது. இந்த காலங்களில் பூக்கள் பார்ப்பது கொஞ்சம் கடினம் தான். அதனால கஜானா போய், ஆயிரக்கணக்கான புகைப்படங்களுக்குள் புகுந்து, ஒரு அலசல் அலசி, வெளி வந்து பாத்தா..... லேட்டாச்சின்னு சொல்லிட்டாங்க. :-) ஆனாலும் பதிவிடாம விட முடியுமா? அதனால உங்களுக்காக இங்கே கொஞ்சம் பூக்கள். அதோட உங்களுக்கு ஒரு போட்டியும். இங்கிருப்பவை என்ன பூவென்று கண்டுபிடியுங்கள். கண்டுபிடித்து எனக்கும் சொல்லுங்கள். ;-)

படம் 1:




படம் 2:


படம் 3:



படம் 4:


படம் 5:


படம் 6:



படம் 7:



படம் 8:


படம் 9:


படம் 10:

12 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

எல்லா படங்களும் நல்லாயிருக்கு..;))

கேள்வி பதிலை யாராவது சீக்கிரம் சொல்லுங்கப்பா..;)

said...

ஆமா படமெல்லாம் நல்லாருக்கு.. கோபி, பதில் யாராவது சொல்வாங்க...கேள்வி தான் காட்டாறே சொல்லிட்டாங்களே
கேள்வி பதிலை யாராவது சொல்லுங்கன்னு ஏன் கேட்டிருக்கப்பா...

said...

என்னாதிது...

காலையில இருந்து கேட்டுட்டு இருக்காங்கல்ல....பதில் சொல்லாம எல்லாருக்கும் என்ன ஒரு மெதப்பூ....ம்ம்ம்

சீக்கிரமா யாராச்சும் பதில் சொல்லுங்கப்பூ...

said...

ஆத்தா இந்த மாதிரி பூவெல்லாம் பாத்ததேயில்லை.நீயே சொல்லிடேன்.
முன்னாடி அந்த ஐந்து விரல் மேட்டர் க்கு பதில் சொன்னியா தாயி.ரொம்ப நாளு எதிர் பார்த்தேன்
போட்டிக்கு விடை தெரிஞ்சா வைக்கனும் தாயீ

said...

படம் 4: டைகர் லில்லி
படம் 7: ரோஜா

இது ரெண்டை தவிர மத்தவைகளின் பெயர் தெரியாது. :(

கண்மணிக்கா... என்ன இப்பிடி சொல்லிட்டீங்க. அஞ்சு வெரல் கதைக்கு தான் ஆளாளுக்கு விடை சொல்லிட்டாங்கல்ல... என்ன செய்ய.. நமக்கு கேக்க மட்டும் தானே தெரியும். ;-)

said...

நல்ல வேளை நீங்க லேட்டா வந்தீங்க.. ஒரு திறமையானா போட்டியாளர் இல்லடா...

said...

படம் 7 - குருவி மாதிரி இருக்கு.

said...

// நாகை சிவா said...
நல்ல வேளை நீங்க லேட்டா வந்தீங்க.. ஒரு திறமையானா போட்டியாளர் இல்லடா...
//

உங்க பாராட்டே சொல்லிருச்சே... நான் தான் வின்னருன்னு. ;-)

said...

// வடுவூர் குமார் said...
படம் 7 - குருவி மாதிரி இருக்கு.
//

அது படம் 6. எனக்கும் அந்த படத்தை பார்க்கும் போது அப்படி தான் தோணும்.

said...

பேரல்லாம் தெர்லங்கோ...ஆனா, எல்லாம் நல்லா இருக்குங்கோ..
கூகுலாண்டவரே சொதப்புறாருங்கோ :)

சரி, அரையடி பனி கொட்டிகிடக்க எங்கே புடிச்சீங்க இதெயெல்லாம்?

said...

// தஞ்சாவூரான் said...
சரி, அரையடி பனி கொட்டிகிடக்க எங்கே புடிச்சீங்க இதெயெல்லாம்?
//

தஞ்சாவூர்காரரே.. குசும்பா? நாங்க தான் தெளிவா சொல்லிருக்கோமில்ல
//இந்த காலங்களில் பூக்கள் பார்ப்பது கொஞ்சம் கடினம் தான். அதனால கஜானா போய், ஆயிரக்கணக்கான புகைப்படங்களுக்குள் புகுந்து, ஒரு அலசல் அலசி, வெளி வந்து பாத்தா..... //

எல்லாமே 5 மாதங்களுக்குள் எடுத்தவை. படம் 3, 4, 5, 6, 7, 9, 10 மட்டும் நம்ம வூட்டாண்ட எடுத்தது. 1, 2 மயர் பூந்தோட்டத்திலே எடுத்தது.

said...

//கண்டுபிடித்து எனக்கும் சொல்லுங்கள். ;-)//

உங்களுக்கு சோம்பல்னா எங்களுக்கு அதைவிட இருக்கும்ல...