வாருங்கள் வாழ்த்துவோம் மங்கையை!
நம் எல்லோருக்கும் மங்கை செய்து வரும் சேவை பற்றி தெரியும். உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாளை (டிசெம்பர் 1 -- http://manggai.blogspot.com/2007/11/blog-post_30.html) ஒட்டி பல விழிப்புணர்வு கூட்டங்கள்/மாநாடு/இயக்கம் நடத்தினார். அவர் தில்லியில் வெற்றிகரமாக நடத்திய ஒரு கூட்டம் குறித்து பெருமையடைந்த UNICEF, அவருக்கு புதிய ப்ராஜெட் செய்ய அனுமதி கொடுத்ததை ஒட்டி, இந்த வாரம் தில்லியிலிருந்து கோயம்புத்தூர் பயணமானார். அங்கிருந்து எனக்கெழுதிய இ-மடலில் தனக்கு கிடைத்த அங்கீகாரம் பற்றி குறிப்பிட்டிருந்தார். இந்தியா முழுவதிலிருந்தும் 400 பேர் பங்கேற்ற இந்த ப்ரோகிராம் நல்ல படியாக முடிந்தது என்றும், இறுதியில் அவருக்கு UNICEF-லிருந்து BEST IMPLEMENTER and ORGANIZER அவார்டும், சாந்தி ஆசிரமத்திலிருந்து மகிளசேவகி சிறப்பு அவார்டும் கிடைத்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
நம்மிடையே வலம் வரும் ஒருவருக்கு கிடைத்த இந்த பெருமை நமக்கும் பெருமையே. மங்கையே தாங்கள் செய்யும் சேவைக்கு தலை வணங்குகிறோம். நீவீர் மென்மேலும் வளர, தங்களுக்கு உளநலனும், உடல் நலனும் கொடுக்க பிராத்திக்கிறோம்.
வாருங்கள் வாழ்த்தலாம் மங்கையை!
பின்குறிப்பு:
எனக்கு இந்த ப்ரோகிராம் பற்றி விரிவாக தெரியாததால், மங்கை பயணம் முடித்து திரும்பியதும் விரிவாக பதிவொன்று எழுதுவார் என நம்புவோம்.
28 பேர் மறுமொழிந்துள்ளனர்:
WOW.... congrats... :)
நல்வாழ்த்துகள் - எடுத்த திட்டத்தினை நினைத்த படி செயல்படுத்தி வெற்றி பெற நல் வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் தலைவி ...
'மங்கை'யராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!!!!!!
வாழ்த்துக்கள் மங்கை
வாழ்த்துக்கள் மங்கை ஆண்ட்டி
வாழ்த்துக்கள் மங்கை
அட கதை இப்படிப் போகுதா? வாழ்த்துக்கள் கோடி, மங்கை... மென்மேலும் உயருங்கள்!
Congrats Mangai!
Keep Up!
Best Wishes!
மிக சந்தோஷமாக இருக்கு
வாழ்த்துக்கள் மங்கை அக்கா...:))
மங்கை அக்காவுக்கு வாழ்த்துக்கள் :-)
மங்கை அக்காவுக்கு வாழ்த்துக்கள் :)))
செய்தியை பகிர்ந்த காட்டாறு அக்காவுக்கும் நன்றிகள் பல :))
அன்பு தம்பி சென்ஷி
வாழ்த்துக்கள் மங்கை!
வாழ்த்துக்கள் மங்கை
என்னது, மங்கை ஆன்ட்டியா? வாழ்த்துக்கள் (இள)மங்கை!
வாழ்த்துக்கள் மங்கை...உங்கள நினைச்சா பெருமையா இருக்கு!!!!:):)
உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...மங்கை!
செய்தியைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, காட்டாறு ..
வாவ் :) தகுதிக்கேற்ற விருதுகள் கொடுக்கப்பட்டது குறித்த மகிழ்ச்சி!
ஆஹா.. ரொம்ப சந்தோஷம்.வாழ்த்துக்கள் மங்கை அக்கா..
என்னங்க எனக்கு முதல்ல சொ ல்லியிருகலாமே-((
வாழ்த்துக்கள் மங்கை. உங்களால் இன்னும் உதவி தேடும் பலருக்கு ஆதரவு கிடைக்கட்டும். மிக்க மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் மங்கை, உங்கள் முயற்சிக்கும், கிடைத்த அங்கீகாரத்திற்க்கும் அதை எடுத்துக் கூறிய காட்டாறு வுக்கும்.
இது மங்கைக்கு,
உங்கள் பதிவுகள் சிலது படித்தேன். நல்ல விஷயங்கள் சொல்லி இருக்கிறீர்கள்.
இப்படிக்கு புதிதாய் வந்திருக்கும் மங்கை.
என்னை பெயர் மாற்ற துளசியும் முத்துலக்ஷ்மியும் ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள்.
எழுதும் நேரம் குறைவாக இருப்பதால் பெயர் மாற்றம் பற்றி யோசிக்க முடியவில்லை. உங்களுக்கு ஆட்சேபம் இல்லாத பட்சத்தில் இதே பெயரில் தொடரலாம் என்றே நினைக்கிறேன்.
மங்கைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இவர்களோடுகூட வலைப்பதிவதில் பெருமையடைகிறேன்.
வாழ்த்துக்கள்!
//இப்படிக்கு புதிதாய் வந்திருக்கும் மங்கை.
என்னை பெயர் மாற்ற துளசியும் முத்துலக்ஷ்மியும் ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள்.
எழுதும் நேரம் குறைவாக இருப்பதால் பெயர் மாற்றம் பற்றி யோசிக்க முடியவில்லை. உங்களுக்கு ஆட்சேபம் இல்லாத பட்சத்தில் இதே பெயரில் தொடரலாம் என்றே நினைக்கிறேன்.//
பெயர் மாற்றம் இல்லாமல் போவது இருவருக்குமே சிரமமாய் போகும் வாய்ப்புகள் அதிகம். தொடர்ச்சியாக மங்கை அக்காவென டெல்லி பதிவரே அறியப்பட்டதால் தங்களின் பெயரை மாற்றி வைத்துக்கொள்ளும்படி நானும் இவ்விடத்தில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கு: பெயரை மாற்றிக்கொண்டு புதிய பெயரைப்பற்றி ஒரு பதிவு இடுங்கள். இதுபோன்ற அனுபவம் முத்துலட்சுமி அக்கா அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பெயர் மாற்றிய பிறகு முத்துக்காவிற்கு அதிக ஹிட்ஸ்கள் கிடைத்தது பெயர் ராசியா, இல்லை நன்றாக பதிவு எழுதுவதாலா என்ற குழப்பம் அவருக்கும் உண்டு. உங்களுக்கும் அனுபவம் கிடைக்க வாழ்த்துக்கள்.. :))
புதிய பெயர் வைத்தபிறகு ட்ரீட் கொடுக்கவும்.
சென்ஷி
நம்ம ஆளு ஒருத்தர் கலக்கறாங்கன்னா...அது நம்ம எல்லாருக்கும் பெருமைதானே...
இங்க மங்கையை அதிகம் கலாய்த்தவன் நானாகத்தான் இருப்பேன்....ஆனா இந்த தடவை We should definately give her a standing ovation, because she puts her all into her work!
ஆஹா...காட்டாறு... நீ தான் கலக்கிட்டே..
இதை கேள்விப்பட்ட உடனே எனக்கு ஒன்னும் பெருசா தோனலை....ஆனா காட்டாறு கிட்ட சொன்ன உடனே அவர் வெளிப்படுத்துன சந்தோஷமும் சொன்ன வாழ்த்தும் என்னையும் தொத்திகிடுச்சு..
நன்றி காட்டாறு...
இது பெருசா ஒன்னும் இல்லை.. நான் ஈடுபட்டிருந்த திட்டத்த நல்ல படியா நடத்துனதுக்காக கொடுத்த அங்கீகாரம்...
ஆனா சந்தோஷமா தான் இருக்கு..
வாழ்த்து சொன்ன காட்டாறுக்கும் மற்ற நண்பர்களுக்கும் நன்றி...
வாழ்த்துக்கள், மங்கை! மிக்க மகிழ்ச்சி!!
//நம்மிடையே வலம் வரும் ஒருவருக்கு கிடைத்த இந்த பெருமை நமக்கும் பெருமையே. மங்கையே தாங்கள் செய்யும் சேவைக்கு தலை வணங்குகிறோம். //
அதே!
இதுக்கு வாழ்த்துச் சொல்லாம விட்டுட்டேனே. லேட்டா வந்தாலும்....
வாழ்த்துக்கள் மங்கை அக்கா!!
Post a Comment