எங்க ஊர் கார் திருவிழா
எங்க ஊர்ல ஒவ்வொரு வருடமும் ஜனவரி 19 ஆரம்பித்து 27 வரை கார் திருவிழா நடைபெறும். இந்த 9 நாட்களும் ஜே ஜேன்னு திருவிழாக் கோலம் தான். பல வருடங்களாக நடைபெற்று வரும் இந்த விழாவிற்கு, கார் மோகம் கொண்டவர்கள் மட்டுமல்லாது வேடிக்கை பார்க்க நினைக்கும் எல்லாருமே வருவாங்க. வயது வித்தியாசமில்லாது அனைவரும் கண்டுகளிப்பதைப் பார்க்க அருமையாக இருக்கும். 1907 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திருவிழா, இரண்டாம் உலகப்போரின் தற்காலிகமாக 1941 முதல் 1953 வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 1953-இருந்து இன்று வரை தங்குதடையில்லாமல் நடைபெற்று வருகிறது.
கோபோ ஹால் எனப்படும் 2.4 மில்லியன் சதுரடி கொண்ட இடத்தில் வருடாவருடம் நடக்கும் இந்நிகழ்ச்சியினால் 500 மில்லியன் டாலர் வருமானம் வருவதாயும், பலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதாயும், குழந்தைகள் நல்வாழ்விற்கு கடந்த ஆண்டு 6 மில்லியன் டாலர் கொடுத்ததாயும் இந்நிகழ்ச்சியை நடத்தும் NAIAS (North American Internationa Auto Show) நிறுவனத்தர் கூறுகின்றறர்கள். இவ்வாண்டு 86 கார் கம்பெனிகளும், கார் பாகம் தயாரிக்கும் கம்பெனிகளும் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கார் கம்பெனிகாரர்களும் புதிய புதிய மாடல்களை அறிமுகம் செய்வாங்க. இதில் அடுத்த வருட வெளியீடுகளும் (production cars), 10 வருடம் கழித்து இப்படியும் இருக்கலாம் என யூக வெளியீடுகளும்(Concept cars) அடங்கும். யூக வெளியீடுகளை விவரிக்க பெண்மணிகள் இருக்காங்க. (எங்கெயிருந்து தான் பிடிச்சிட்டு வருவாங்களோ? ரொம்ப சிம்பிள் இவங்களெல்லாம்...). இவங்க பேசும் பேச்சைக் கேட்பதற்கே வரும் கூட்டமும் இங்குண்டு. ;-) ஒவ்வொரு கம்பெனிக்காரர்களும் விளம்பரத்திற்காக செலவிடும் பணத்தை சொன்னால் கண்டிப்பா மயக்கம் தான்!
வருடா வருடம் பார்ப்பினும் சலிக்காத ஒரு நிகழ்வு எனக் கூறலாம். பிரமிக்க வைக்கும் விளம்பரங்கள், போட்டிகளின் உச்சத்தில் உருவான கார்கள், அவற்றின் பெருமைபாடும் சிட்டுக்கள், எல்லாவற்றிற்கும் மேலாக கால்வலி பொருட்படுத்தாது சுற்றி சுற்றி வந்து புகைப்படம் பிடிக்கும் மக்கள் கும்பல்.... அப்பப்பா சொல்லி மாளாது. இதையெல்லாம் பார்த்தப்போ மனதில் தோணினது நெப்போலியன் சொன்ன வரிகள் தான் Imagination rules the world. No doubt about it! அங்கே எடுத்த எனக்குப் பிடித்த கார்களின் புகைப்படங்களை பார்த்து மகிழுங்கள் மக்களே!
பின்குறிப்பு:
யாருக்காவது படங்கள் தேவைப்பட்டால், மறுக்காமல் மறுமொழில சொல்லுங்க. உங்களுக்கு இல்லாததா? பிற்தயாரிப்பு இல்லாத ஒரிஜினல் படம். உடனே அனுப்பிடலாம்.
13 பேர் மறுமொழிந்துள்ளனர்:
Mitsubishi எனக்கு பிடிச்சது...ஒரு வேளை சிவப்பு நிறத்தினால் இருக்கலாம்...
பார்க்க அழகா இருக்குன்னு சொல்றத தவிர நமக்கு கார்களை பத்தி வேற ஒன்னும் தெரியாது...:-)
யாராது ஓட்டீட்டா போனா நல்லா உட்கார்ந்துட்டு வேடிக்கை பார்க்க தெரியும்..:-))
படங்கள் அருமை அம்மணி
ஏனுங்கோ...
நம்ம ஊரு Nano வ அங்கன காட்சிக்கு வச்சாகளா....
இந்த மாதிரி காரல்லாம் பாக்கும் போது வயித்தெறிச்சல்தான் வருது....என்னிக்கு இதல்லாம் ஓட்டப்போறேனோ...ஹூம்..ம்ம்ம்ம்ம்
இம்போர்ட் பண்ணலாம்னா யானைவெல சொல்றானுங்க...கட்டுபடியாவாது.
இப்பதைக்கு பெருமூச்சுதான்....ம்ம்ம்ம்ம்ம்ம்...ஹி..ஹி...
யப்பா..!!! சூப்பர் காருங்க எல்லாம்..;))
அட!
Detroit Auto show!!
போன வருஷம் போயிருந்தேன் அக்கா!!
நிறைய படங்கள் சுட்டு தள்ளி இருந்தேன்!!
நீ சொல்லுற போல எவ்வளவு விளக்குங்க,எவ்வளவு மக்கள்,எவ்வளவு பணம் யப்பா யப்பா!!!
படங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு!!
வாழ்த்துக்கள்!! :-)
எங்க ஊர் தேர் திருவிழான்னு படிச்சிட்டேன்.. ஹிஹி.. பின்ன உங்க ஊர்ல கார் தானே தேர் :-)
// மங்கை said...
Mitsubishi எனக்கு பிடிச்சது...ஒரு வேளை சிவப்பு நிறத்தினால் இருக்கலாம்...
//
சிவப்பு தான் உங்களுக்கு பிடிச்ச கலரா?
//யாராது ஓட்டீட்டா போனா நல்லா உட்கார்ந்துட்டு வேடிக்கை பார்க்க தெரியும்..:-))
//
எனக்கும் அது ரொம்ப பிடிக்கும். வந்த புதிதில் இங்கே கார் ஓட்ட பிடிக்கல. ஏன்னா... எல்லாரும் ரூல் படி ஓட்டுவாங்க. ரோட்டுல நம்மூரு மாதிரி திடீருன்னு யாரும் குறுக்கால பாய மாட்டாங்க. இதுல ஆல்மோஸ்ட் எல்லா காருமே ஆட்டோமேடிக். அதனால செம போர். :-)
// இரண்டாம் சொக்கன்...! said...
ஏனுங்கோ...
நம்ம ஊரு Nano வ அங்கன காட்சிக்கு வச்சாகளா....
//
நம்மூரு Nano மாதிரி பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிய காருகளெல்லாம் இவய்ங்களுக்கு தெரியாது. பொழச்சிட்டுப் போறாங்க.
//இந்த மாதிரி காரல்லாம் பாக்கும் போது வயித்தெறிச்சல்தான் வருது....என்னிக்கு இதல்லாம் ஓட்டப்போறேனோ...ஹூம்..ம்ம்ம்ம்ம்
//
வயித்தெரிச்சலெல்லாம் வேண்டாம். நான் மங்கைக்கு சொன்ன இரண்டாவது பதிலை படிங்க. திரில் இல்லாத வண்டி ஓட்டல் வேலைக்கு ஆகுமா? ;-)
// CVR said...
அட!
Detroit Auto show!!
போன வருஷம் போயிருந்தேன் அக்கா!!
நிறைய படங்கள் சுட்டு தள்ளி இருந்தேன்!!
//
ஆமா சிவிஆர். டிட்ராய்ட் ஆட்டோ ஷோ தான். நீங்க எடுத்த படத்தோட லிங்க் போட்டிருந்தீங்கன்னா நானும் பார்த்திருப்பேன்ல. போன வருடம் நான் இந்தியா போனதால மிஸ் பண்ணிட்டேன். இந்த வருடம் குளிர் கொன்னு எடுத்திருச்சி. :-)
// கோபிநாத் said...
யப்பா..!!! சூப்பர் காருங்க எல்லாம்..;))
//
பார்க்க மட்டும் தான் சூப்பர் கோபி. விலையைப் பார்த்தா.. ஓடியே போயிருவோம். நானெல்லாம் அந்த பக்கம் திரும்பியே பார்க்கலையே. ;-)
// சேதுக்கரசி said...
எங்க ஊர் தேர் திருவிழான்னு படிச்சிட்டேன்.. ஹிஹி.. பின்ன உங்க ஊர்ல கார் தானே தேர் :-)
//
ஆமா அரசியாரே... இங்கே எல்லாமே காரும் கார் சம்பந்தப்பட்ட பொருட்களுமே தான். அதனால தான் பப்ளிக் ட்ரான்ஸ்போர்டேஷன் கூட கிடையாது. :-(
போன வருஷத்தை விட இந்த வருஷம் குளிரு கம்மியாதானே இருக்கு!! :-)
படங்கள் எல்லாம் இணையத்தில் இல்லை!
எப்பயாச்சும் வலையேற்றினா சொல்லுறேன்!! :-)
namma ella orey oorla than irukkom pola...
nice to c u....
Post a Comment