Tuesday, July 22, 2008

பள்ளத்தாக்கு போட்டுத் தாக்கு


எங்கே போனோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்….. அதை ஒரு வரில சொல்லனுமின்னா நானெல்லாம் இப்பிரமாண்டத்திற்கு முன் யாருன்னு கேக்க வைக்கும் இடம். தன்னையும் என்னையும் இணைக்க போராடாமல் வெல்லும் இடம். என்னாங்க சொல்ல வாரீங்கன்னு கேக்குறீங்களா? இருங்க இருங்க வந்துட்டேன்.

அருமையான மார்ச் மாத சில்லென்ற குளிரை அனுபவிக்க விடாது வேலைப் பளு குனிந்த தலை நிமிர விடாமல் அழுத்த, வேலை வேலை வேலைன்னு ஓடிட்டு இருக்கேன். ஏப்ரல் மாதத்தில் மனசும் உடம்பும் போதுமடா சாமின்னு சோர்வடைய, மே மாத ரிசல்ட் சூப்பர். அப்பாட….. ஒரு வழியா நமக்கும் விடிவுகாலமின்னு மனசு தைய தக்கா ஆரம்பிக்குது. ஜூன் மாதத்திலே 5 நாளு லீவு எடுத்துக்கலாமின்னு அதிகாரி சிரிப்புடன் சொல்ல, அன்றைய இரவே எங்கே போகலாமின்னு முடிவு செய்ய முடிவு செய்தாச்சி. குழப்பமா இருக்கா…. இருக்கனுமில்ல….அப்படி என்ன தான் செய்ய போறேனோ…. மனசு துள்ளுது. நடை துள்ளுது. பரந்த நிலத்திலே வான்னோக்கி நின்னு ஓ-ன்னு கத்த ஆசை வருது. அட…. எங்கே போறோம்? புரிஞ்சிப் போச்சி. உலக (இயற்கை) அதிசயத்தில் ஒன்றான க்ராண்ட் கான்யன் என்ற பள்ளத்தாக்கில் உருண்டு புரள போகலாமின்னு முடிவு செய்ததும் உற்சாகம் கரை புரண்டு ஓடத்துவங்கியது.

மலையேறி 6 வருடமாச்சே. வயசாச்சே. உடம்பு ஒத்துழைக்குமா? நம்மால முடியுமா? அப்பப்ப கேள்விகள் வந்து போகுது. பின்ன…. ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும் வீட்டுப் பெரியவர்கள் வந்துவிடவே நம் ஆவலை தள்ளி வைக்க வேண்டியதாகிவிட்டது. இந்த வருடம் அவங்களுக்கு அமெரிக்கா போரடித்துப் போகவே, நம் ஆவல் மெல்ல எட்டிப் பார்த்தது. ஏற்கனவே போன இடம் தான். ஆனால் செய்ய முடியாத, மிச்சம் வைத்திருந்த ட்ரெயில்ஸ் இந்த முறை முடித்தால் என்ன என தோணவே, அதற்கான ஏற்பாடு செய்ய ஆரம்பித்தாச்சி.

முடிவு செய்தா மட்டும் போதுமா? விடுமுறை கிடைத்த நாளே, கூகிள் ஆண்டவர் உதவியால எங்கே போகலாமின்னு ஒரு நோட்ஸ் எடுத்து, எந்த தேதியில எங்கே என்ன பண்ணலாம், எங்கே எத்தனை நாள் தங்கலாம் என்பதெல்லாம் மளமளன்னு கிறுக்கி வச்சாச்சி. கழுதைல ஏறி, கீழிறங்கவா? குதிரையில் ஏறி கீழிறங்கவா? இல்லை கால் நடையா கீழிறங்கி, பறவை மீதேறி மேல் வரவா? அப்பப்பா… என்னவெல்லாம் யோசிக்க வேண்டியிருக்குது. முன்னர் போனப்போ, கழுத மேல ஏற ஆசையா போய் கேட்டப்போ, அதுக்கெல்லாம் 18 மாசத்துக்கு முன்னாடி ரிசர்வ் பண்ணனுமின்னு சொன்னது ஞாபத்துக்கு வந்தது. ம்ம்… ரிசர்வேஷன் கிடைக்குமான்னு கவலை புதுசா வந்து தோள் மீது ஏறிக் கொண்டது இப்போது. என்னவானாலும் சரி தான். ஊர் சுத்துறதுன்னு முடிவு பண்ணியாச்சி. இனி அதில் மாற்றமில்லைன்னு மனசுல பதிய வச்சிட்டு, சனி, ஞாயிறு முழுசா(?) உட்கார்ந்து ஒவ்வொரு இடமா புக் செய்யும் வேலை ஆரம்பமாகியது. அப்பப்பா… ஏக கலக்கல் போங்க.

பட்டியல் போட்ட இடங்கள்
1) கிராண்ட் கான்யன் (பார்க்க)
2) சயான் கான்யன் (பள்ளத்தாக்கு இறங்க)
3) ப்ரைஸ் கான்யன் (பள்ளத்தாக்கு இறங்க)
4) அண்ட்டிலோப் கான்யன் (புகைப்படம் எடுக்க)
5) சரல் பாதையில், காட்டு வழி பாதையில், பாதையில்லா பாதையில், 4 கால் வண்டியில் (அதாங்க.. காரில்) 60 மைலுக்கு பள்ளத்தாக்கு (கான்யன் சுற்றி) வலம்.
6) பறக்கும் பறவையில் (அதாங்க ஹெலிகாப்டர்) 40 நிமிடம் கான்யன் வலம்
7) தண்ணீர் மிதவையில் காட்டுமாட்டுப் பயணம் (அதாங்க ஒயிட் வாட்டர் ராஃப்ட்டிங்)
8) ஹுலபாய் கிராமத்துக்கு 10 மையில் கரடு முரடு பாதையில் பள்ளத்தாக்கில் நடை
9) கழுதை ஏற்றம்
10) குதிரை ஏற்றம் இறக்கத்தில் (!)
11) ………..


அம்மாடியோவ்… இன்னும் பட்டியல் நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டு கொண்டே போகுது. இத்தனையும் எப்படி 10 நாளில் செய்ய முடியுமின்னு குழப்பம் இருக்கத்தான் செய்தது. என்ன? 5 நாள் எப்படி 10 ஆச்சின்னு பாக்குறீங்களா? சொல்றேன் சொல்றேன். என்னவெல்லாம் பார்த்தோம், எங்கேயெல்லாம் போனோமின்னு இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிஞ்சிரும். பொறுத்துக்கோங்க மக்களே!

16 பேர் மறுமொழிந்துள்ளனர்:

Anonymous said...

It could widen my imagination towards the things that you are posting.

said...

:( = that one even before reading the post ;-).

said...

//ன்னவெல்லாம் பார்த்தோம், எங்கேயெல்லாம் போனோமின்னு இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிஞ்சிரும். பொறுத்துக்கோங்க மக்களே!//

காத்திருக்கிறோம் அக்கா :))

said...

சொல்லுங்க சொல்லுங்க
காத்திருக்கோம்.

said...

9)கழுதை ஏற்றம்
10) குதிரை ஏற்றம் இறக்கத்தில் (!)//

இதுக ரெண்டும் என்ன பாவம் பண்ணுச்சுகளோ.

இப்பத்தான் தெரியுது ஒரு ஊருக்கு, நாட்டிற்கு வந்தா அங்கேயே நிரந்தறமா டெண்ட் அடிக்கக் கூடாதுன்னு, எங்கயுமே போக முடியாம இங்கினிதானே இருக்கும் பார்த்துக்குவோம், பார்த்துக்குவோமின்னு தள்ளிப் போட்டு, தள்ளிப் போட்டு கடைசி வரைக்கும் பார்க்காமயே போய்ச் சேர்ந்திட மாதிரி இல்லாம உங்க மாதிரி ஆட்கள்தான்யா ரூல்ஸ் த வேர்ல்ட்... புகையுது உள்ளர :-)) நல்லாருங்க.

மிச்சத்தையும் போடுங்க, படிடிடிடிப்போம்....

said...

வயித்தெறிச்சல்னு சொல்லுவாங்களே...அப்படீன்னா என்ன?

said...

//வயசாச்சே. உடம்பு ஒத்துழைக்குமா? நம்மால முடியுமா? அப்பப்ப கேள்விகள் வந்து போகுது. //

:-))

said...

// gambling online said...
It could widen my imagination towards the things that you are posting.
//

வாருங்க அண்ணாச்சி... நமக்கு சூதாட்டத்துல நம்பிக்கை இல்லைங்கோ. உங்க பேரை சொன்னேன்.

said...

// Thekkikattan|தெகா said...
:( = that one even before reading the post ;-).

//

இம்பூட்டு புகையா? இதுவே உற்சாகம் அளிக்குதே. ;-)

said...

// சென்ஷி said...
காத்திருக்கிறோம் அக்கா :))
//
//
வடுவூர் குமார் said...
சொல்லுங்க சொல்லுங்க
காத்திருக்கோம்.

//

ரொம்ப காக்க வைக்கக் கூடாதுன்னு தான் நெனைக்கிறேன். எங்கே? டப்புன்னு சொதப்பல் சொக்கனாதனா ஆயிடுறேன். அப்புறம் திட்டு வாங்கினா தான் வண்டி உருளுது.

said...

// Thekkikattan|தெகா said...
9)கழுதை ஏற்றம்
10) குதிரை ஏற்றம் இறக்கத்தில் (!)//

இதுக ரெண்டும் என்ன பாவம் பண்ணுச்சுகளோ.
//

என்ன நக்கலா?

//
இப்பத்தான் தெரியுது ஒரு ஊருக்கு, நாட்டிற்கு வந்தா அங்கேயே நிரந்தறமா டெண்ட் அடிக்கக் கூடாதுன்னு, எங்கயுமே போக முடியாம இங்கினிதானே இருக்கும் பார்த்துக்குவோம், பார்த்துக்குவோமின்னு தள்ளிப் போட்டு, தள்ளிப் போட்டு கடைசி வரைக்கும் பார்க்காமயே போய்ச் சேர்ந்திட மாதிரி இல்லாம உங்க மாதிரி ஆட்கள்தான்யா ரூல்ஸ் த வேர்ல்ட்...
//
அப்பாட நம்மலால ஒரு படிப்பினை கத்துக்குடுக்க முடிஞ்சிதே. இனியாவது உலகை ஆளுங்க. போட்டிக்கு வந்துறாதீக அப்பூ.

//
புகையுது உள்ளர :-)) நல்லாருங்க.
//
அதுல தானே வெற்றி நமக்கு.

said...

// யட்சன்... said...
வயித்தெறிச்சல்னு சொல்லுவாங்களே...அப்படீன்னா என்ன?
//

யட்சகரே.... கட்டுரைய வாசிங்க... புரிஞ்சிருமப்பா.

said...

பொறாமைப்படக்கூடாதுன்னு தான் வந்தேன் ..ஆனாமுடியல

said...

வாங்க்கா.. ரீ என்ட்ரீ குடுத்தாச்சா...

//புரிஞ்சிப் போச்சி. உலக (இயற்கை) அதிசயத்தில் ஒன்றான க்ராண்ட் கான்யன் என்ற பள்ளத்தாக்கில் உருண்டு புரள போகலாமின்னு முடிவு செய்ததும் உற்சாகம் கரை புரண்டு ஓடத்துவங்கியது//

இதை படிச்சதும் எங்களுக்கும் உற்சாகம் ஒட்டிக்கிச்சு.... பழைய நியாபகங்கள்...ம்ம்ம்

said...

http://sandanamullai.blogspot.com/2008/07/alibaba-babycenter-chetana-sil-esnips.html

hi, tagged you on there...

thanks,
Mullai

said...

காட்டாறு எங்க போச்சோன்னு கேக்கணுமேன்னு யோசிச்சேன். இதோ இருக்கேன்னு பதிவு வந்திட்டது. க்ராண்ட் கான்யானா!!

நடத்துங்க...நடங்க:)

காத்திருக்கோம்.வாழ்த்துகள் காட்டாறு.