Monday, July 28, 2008

சரியா போச்சிப் போ



வேக வேகமா ரிசர்வ் செய்ய வேண்டிய வேலைகளை ஆரம்பித்தாகிவிட்டது. கழுதை எட்டி உதைத்து விட்டது. குதிரையோ எங்களை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. ஏமாற்றத்தை உதறிவிட்டு ஹுலப்பாய்க்கு தொலைபேசினால், 18 மாதத்திற்க்கு முன்னரே ரிசர்வ் செய்திருக்க வேண்டும். அப்பப்போ தொலை பேசுங்கள். எவராவது கான்செல் செய்தால், அந்த அறையை உங்களுக்கு தரலாம் என கடுப்படிக்கிறார்கள். சரி இந்த இரு நாட்களை சரி செய்ய என்ன செய்யலாமின்னு யோசித்து வான நடை (Sky Walk in Grand Canyon) பயிலலாமின்னு முடிவு செய்தாச்சி. நண்பர் அடுத்து என்ன செய்யலாம் என்ன செய்யக் கூடாதுன்னு பட்டியல் போடலாமின்னு சொல்லுறார். நான் போர் கொடி தூக்குனது வலைக்கும், கைப் பேசிக்கும் மட்டும் தான். இந்த ரெண்டும் வேண்டாமின்னு சொன்னேன். ஒரு முறை முறைத்தவர் பெரிய மனசு பண்ணி தொலைஞ்சி போன்னு ரெண்டுக்கும் நோ நோ சொல்லியாச்சி. காட்டில் (?) தான் தங்கனுமின்னு சொல்லியாச்சி. அது சூப்பர். அப்போ மறந்துறாம அந்த டாய்லட் டிஷ்யூ எடுத்து வச்சிரும்மான்னு கட்டளை வேற. சின்ன மாறுதல் எங்களுடைய ப்ளானில். எல்லாம் முடித்தாகிவிட்டது. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ன்னு உட்கார முடியல.

சின்ன குக்கர், பயண சைஸ் எலெக்ட்ரிக் ப்ர்னர், சின்ன சின்ன பாத்திரங்கள் இரண்டு எனவும், மத்தபடி ஒருமுறை உபயோகித்து தூக்கி எறிவார் போல் தட்டு, கரண்டி எல்லாம் எடுத்துக் கொண்டாச்சி. கொஞ்சம் அரிசி, ரவை, பாசிப்பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு, மிளகு, கடலைப் பருப்பு, நிலக்கடலை எடுத்தாச்சி. அங்கே போனதும், தண்ணீர், சமையல் எண்ணெய், பால், மோர் வாங்கிக் கொள்ள கடை பார்த்தாயிற்று.

நெடும்நடைப் பயணம் அல்லவா? அதுக்கு ஏத்த மாதிரி காலணி, தார்குச்சி (Trekking poles), தொப்பி எல்லாத்தையும் தூசி தட்டி எடுத்து வெளியே வச்சாச்சி. தினமும் நடை பழகனுமின்னு திட்டமும் தீட்டியாச்சி.

இதுக்கிடையில் நண்பர் இந்தியாவிலேருந்து தொலைபேசுறார். வேலை விஷயமாக 3 மாதம் அமெரிக்கா வருவதாய் சொல்ல, நானும் அதி சந்தோஷமாய் எங்களின் திட்டத்தை சொல்ல, அவர் நானும் வருகிறேன் என்றார். ஒரே குஷியாப் போச்சி. சில மாற்றங்கள் ப்ளானில். ஏனெனில், நண்பருக்கு உயரம் பயம். எனக்கு ஓவர் சோகமா போச்சி. அய்யோ பல திட்டங்கள் மாறிவிடுமோன்னு. அவரோ.. கவலைப்படாதே அடித்து விளையாடலாமின்னு தைரியமா குரலில் நடுக்கத்தோட சொல்லுறார். இப்போ மறுபடியும் அடுத்த ரவுண்டு ரிசர்வேஷன். ரீவிசிட் அடிச்சாச்சி.

தினம் மாலை 1 மணி நேரம் காணும் இடங்களை பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வதற்கு நேரம் ஒதுக்கியாச்சி. வேலை வட்டத்தில் ஆவலாக கதை கேட்டவர்கள் ஏராளம். தாரளாமாய் சந்தோஷத்தை காண்பிக்க, பொறாமைப் பட்டவர்கள் சிலர். நம்மை பயம் காண்பிக்கவும் தயங்கவில்லை அவர்கள். 100 F வெயிலாச்சே. எப்படி சமாளிப்பாய்? மறந்துறாம ஜாக்கெட் எடுத்துக்கோ. மாலையானால் குளிரும் அப்படின்னும் சொல்லுறாங்க. பீக் சீசன் அதனால நீ நினைக்கிற அளவுக்கு அனுபவிக்க முடியுமா? இந்த சமயத்தில் போய் போறியே. அப்படின்னு ஏகப்பட்ட டிஸ்கரேஜ்மெண்ட். அதெல்லாம் நாம் கண்டுக்க முடியுமா? ப்பூன்னு ஊதித் தள்ளினாலும் 100F வெயில் கொஞ்சம் மனசை அசைத்து பார்த்ததென்னவோ உண்மை.

ஆபிஸில் வேலை வேலைன்னு திரும்பவும் திரும்ப முடியாம வேலை வர, தினமும் நடக்க வேண்டியது, வாரத்திற்கு இரண்டு முறையாக குறைந்தது. நாம கண்டுக்காம இருந்தாலும் நாட்கள் நகருவது நிற்குமா? கிளம்பும் நாளும் வந்தது. டண்டனக்கா டனக்கனக்கா.

ஓ… முக்கியமானது சொல்ல மறந்தாச்சே. நண்பர்கள் இருவரும் அவர்கள் பெயரை எழுதவேண்டாமின்னு கேட்டுக் கொண்டதால், நண்பர் 1 என அமெரிக்க நண்பருக்கும், நண்பர் 2 என இந்தியாவிலிருந்து வந்த நண்பருக்கும் பேர் வைத்துக் கொள்வோம். இவர்களோடு முக்கியமான புள்ளியும் சேர்ந்தார். அவர் தான் எங்களை வழி நடத்தி செல்பவர். அவர் பெயர் .....


12 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

சூப்ப்பர் சூப்பர்...

ஆனா அது என்ன சஸ்பென்ஸ்.. சீக்கிறம் சொல்லுங்க ஆத்தா... இன்னும் புறப்பாட்டிலேயே இருந்தா..

வயித்தெறிச்சல் உண்டாக்கனும்னே நிதானமா சொல்றீங்களோ..

said...

ம்..ம்ம்..பில்டப் நல்லாவே வந்துட்டுருக்கு ரொம்ப 'நேர இடைவெளி' கொடுத்து பதிவுகள் வாரதாலே கொஞ்சம் அல்சர் குணமாக சான்ஸ் இருக்கு ;-)...

படங்கள சீக்கிரம் போடுங்கப்பா...

said...

ஆமா இடைவெளி விட்டதால இப்ப.. நாங்க ஒரு நிலைக்கு சமமாகி ஓகே நாம போனா என்ன காட்டாறு போனா என்ன? அதால படிச்சு மகிழ்வோம் என்கிற ரேஞ்சுக்கு வந்துட்டோம்..

நல்லா இருக்கு ஏற்பாடுகள்..
காட்டாறு நண்பர்கள்ன்னு சொல்லிக்கறதுல நண்பர்களுக்கு என்ன ஒரு பயம் பாருங்கய்யா..

said...

ஆடி மாதம் ஆரம்பம்.
ஆடி வெள்ளம் ஓடி வரும்.
காட்டு வழியாக வரும்.
காட்டாறெனப் பெயர் கொள்ளும்.

வாடி இருக்கும் பயி்ரனையும்
நாடும் நல் நீர் நல்கும்
பாடும் பறவையினம் பலவும்
ஓடி வந்து கரை அமரும்.

காட்டாறு வருவாரென
கண் துஞ்சா நெஞ்சங்களும்
காவிரியாறு பெருகுமென
காத்திருப்போர் கவலைகளும்
ஒன்றே !

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://ceebrospark.blogspot.com
http://arthamullavalaipathivugal.blogspot.com1003

said...

போயிட்டு வந்தாட்டு இந்தப் பாட்டா. சீக்கிரம் சொல்லுங்கப்பா. படங்களைக் காணோமே!!

said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
ஆமா இடைவெளி விட்டதால இப்ப.. நாங்க ஒரு நிலைக்கு சமமாகி ஓகே நாம போனா என்ன காட்டாறு போனா என்ன? அதால படிச்சு மகிழ்வோம் என்கிற ரேஞ்சுக்கு வந்துட்டோம்..

நல்லா இருக்கு ஏற்பாடுகள்..
காட்டாறு நண்பர்கள்ன்னு சொல்லிக்கறதுல நண்பர்களுக்கு என்ன ஒரு பயம் பாருங்கய்யா..
///

ஹா..ஹா.. :))

அடுத்த பகுதி எப்ப?

said...

அடுத்த பகுதி எப்ப?

said...

காட்டாறு எங்கே?

said...

ஏன் அதிகமாக எழுதுவதில்லை?

said...

அக்கா என்னாச்சு.. ஏன் எழுதறதில்லை :((

said...

ட்ரெக்கிங் போலவா இது?
சரி சந்தோசமா போயிட்டு வாங்க !!!
நலமுடன் பயணம் அமையட்டும்!!

வாழ்த்துக்கள்!!

said...

காட்டாற்றுக்கு என்ன ஆச்சு? பதிவில் தொய்வு? பயணத்தில் களைப்பா? பயணிப்பில் களைப்பா? பயணித்ததால் களைப்பா? களைப்பு நீங்கி மாதம் ஒரு பதிவிட்டு செல்லுங்கள்.

அன்புடன், மடல்காரன்.