காதல் மீன்களும் தலாய் லாமாவும்
இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல. என்னதான் தலைப்பு வைக்கிறதுன்னு இல்லாம போச்சப்பா.... ஜனவரி புகைப்பட போட்டில கலந்துக்கலாமின்னு சுட்டுத் தள்ளுனதுல மிஞ்சினது இதுதாம்பா... ஒவ்வொரு படமும் எடுக்குறது முக்கியமில்ல... அதன் பிற்தயாரிப்பு ரொம்ப முக்கியமின்னு ஆசிரியர்கள் சொன்னாங்க. அதுக்கு அழகான உதாரணமா நம்ம ஐஸ்ஸையும் சொன்னாங்க. அப்படி இருந்தாலும் இந்த சிறுமூளைக்கு இன்னும் பிற்தயாரிப்பிலே ஆர்வம் வரல. அதனால எடுத்ததை அப்படியே உங்கள்ட்ட கொடுத்துட்டேன். :-) சோம்பேறிப் படுபாவின்னு திட்டாதிங்க. காதிலே விழுது. முதல் படம் தவிர மத்ததெல்லாம் நேத்து எடுத்தது தான். முதல் இரு படங்களும் போட்டிக்கு. மத்தெல்லாம் உங்களுக்கு. எனக்கும் தான். ;-)
எனக்கு ரொம்ப பிடிச்ச படம். Paper Weight. உள்ளே டால்ஃபின் மீனினக் குடும்பம். அழகா இதயத்தின் வழியே குதிக்கிறாப் போல் இருக்கும். அரை இருட்டு அறையில், பேப்பர் வெயிட்டின் கீழே ஊதா வெளிச்சத்தை பாய்ச்சி எடுத்தது. மார்ச் மாதத்திலே ஒரு சுட்டிக் குழந்தையுடன் விளையாடும் போது எடுத்தது இந்த படம். உள்ளே 2 டால்பின்கள். ஒரு கோணத்தில் (angle) 2 மீன்கள் நான்காய் தெரியும். அதை கரெக்டா பிடிக்குறதுக்குள்ளே... அப்பப்பா... நாம கரெக்டா எல்லாம் இருக்குதுன்னு கிளிக்கப் போகும் போது.... ம்ம்ம்.... அந்த சுட்டி, லைட்டை படக்குன்னு ஆஃப் செய்துரும். அப்போ ஜாலியா தான் இருந்துச்சி. இப்போ இன்னும் ஜோரா இருக்குது. மலரும் நினைவுகள். :-)
இந்த படமும் எனக்கு பிடிச்சது. இதில் தலாய் லாமா புன்முறுவலோடு உலக உருண்டையைப் பார்க்கிற மாதிரி இருக்கும். One of the cherishable books by Dalai Lama (The Universe in a Single Atom: The Convergence of Science and Spirituality). புத்தக தலைப்பிற்கு ஏற்றார் போல் படம் வந்த மாதிரி எனக்கொரு ப்ரம்மை. உங்களுக்கு? ஆனா ப்ளான் எதுவும் பண்ணி எடுக்கல.
23 பேர் மறுமொழிந்துள்ளனர்:
\\ Paper Weight. உள்ளே டால்ஃபின் மீனினக் குடும்பம். \\
சூப்பர் படம்
ஆமா கடைசி படம் எல்லாம் நீங்க படிச்ச புக்ஸா!?
முதல் இரண்டு படங்களும் அசத்தல், குட் டேஸ்ட்! :-) தலாய் லாமா பூமிப் பந்தை அப்படிப் பார்த்ததை நீங்க பார்த்தது நல்லாவே இருக்குங்க.
அடே சாமீ எம்பூட்டு இங்கிலி'பீஸ் புத்தகங்கள் :-P, எல்லாரும் கலந்து கட்டி உட்கார்ந்திருக்காங்க.
அதில 'காதல் ரேகை'யும் உட்கார்ந்திருக்கு பாவமா...
ஆஹா...
எல்லாம் நைட் எஃபெக்ட்டா...நைஸ்...
அப்பாலிக்கா இந்த புக்ஸெல்லாம் நம்பளதுங்களா...?
புத்தகம் மட்டும் அத்தனை
கைப்பை மட்டும் ஏன்
இரண்டே இரண்டு? - I mean,
புகைப்படத்தில்...
நல்ல இரசனை...முதல் இரண்டு படங்களும்!
பொருத்தமா கவிதையும் போட்டுருந்தா நல்லா இருந்திருக்குமே!!
அசத்தல் போட்டோஸ் போட்டிக்கு அனுப்பும் ரெண்டுமே... வாழ்த்துக்கள் காட்டாறு.
கோபி, தெகா, சொக்கரே,
எல்லாமே நம்மூட்டு புத்தகங்கள் தான். இன்னும் கொஞ்சம் அடுத்த புத்தக அலமாரில இருக்குது. அதையும் சேர்த்து போட்டோ எடுத்தா.. நீங்க பயந்துருவீங்க. :)
//இரண்டாம் சொக்கன் said...
ஆஹா...
எல்லாம் நைட் எஃபெக்ட்டா...நைஸ்...
//
முதல் படம் தவிர மத்தது எல்லாமே மாலை 7 மணிக்கு மேல எடுத்தது. முதல் படம் மதியம் எடுத்தது; அறையை அரை இருட்டாக்கி. :)
// ஜீவா (Jeeva Venkataraman) said...
புத்தகம் மட்டும் அத்தனை
கைப்பை மட்டும் ஏன்
இரண்டே இரண்டு? - I mean,
புகைப்படத்தில்...
//
ஜீவா... புத்தகத்தின் மேல் காதல். அதனால நெறையா. கைப்பை தேவைக்கு தானே. ;-)
// தென்றல் said...
பொருத்தமா கவிதையும் போட்டுருந்தா நல்லா இருந்திருக்குமே!!
//
என்னவோ கங்கணம் கட்டிட்டு அலையிறிங்கன்னு நெனைக்கிறேன். ராசாத்தீ.. வோணாம்... சொல்லிப்புட்டேன்.
போட்டோ அசத்தல்ன்னு சொன்ன, சொல்லப்போற (;-)) எல்லோருக்கும் நன்றிங்கோவ்... பரிசு எனக்கு கிடைச்சிருச்சி. :)
தலாய்லாமா படம் சூப்பர்...பரிசு உங்களுக்குதான்...நான் சொல்றேன்..
:-))
என்னப்பா, அசத்திட்டீங்க!!
புத்தக அலமாரியைப் பார்த்தாலே
தெரியுது...
ரெண்டு கைப்பை போறாதுன்னு.
தலாய் லாமா சூப்பர்.
மணிரத்னம் அஸ்ஸிச்டண்டா போக சரியான ஆளு:))
ரொம்ப அழகா இருக்குப்பா படங்கள்.
நம்ம விளையாட்டுக்கும் வாங்க ஆத்தா
உங்க பெஸ்ட் எது?
http://kouthami.blogspot.com/2008/01/blog-post_12.html
Have you ever had a thought about the fondness which you have developed towards the color "BROWN"?
டால்பின் படம்..சூப்பருங்கோ..
தலாய் லாமா பு(ப)டிக்கிறீங்க!பெரிய ஆளாத்தான் இருப்பீங்க.
// வல்லிசிம்ஹன் said...
மணிரத்னம் அஸ்ஸிச்டண்டா போக சரியான ஆளு:))
//
இதைத்தான் வடிவேலு உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பெல்லாம் ரணகளாமா இருக்குன்னு சொல்லுவாரோ? ;-)
// நட்டு said...
தலாய் லாமா பு(ப)டிக்கிறீங்க!பெரிய ஆளாத்தான் இருப்பீங்க.
//
தலாய் லாமா புத்தகம் படிக்கிறவங்களெல்லாம் பெரிய ஆளா இருக்க முடியுமா? ;-)
முதன்முதல்ல வந்திருக்கீங்க... வாங்க வாங்க
அத்தனை படங்களும் அருமை. ஊதா நிறத்தில் டால்பின் இதயத்தினுள் தாவும் காட்சி அருமை. விளையாடிட்டீங்க
பாராட்டுகள்
//J said...
Have you ever had a thought about the fondness which you have developed towards the color "BROWN"?
//
அப்படியா? என்னவோ சொல்லுறீங்க... போங்க. :-)
// cheena (சீனா) said...
அத்தனை படங்களும் அருமை. ஊதா நிறத்தில் டால்பின் இதயத்தினுள் தாவும் காட்சி அருமை. விளையாடிட்டீங்க
பாராட்டுகள்
//
நன்றிங்க! நன்றி! பாசக்கார மீன்களாச்சே.
Post a Comment