Tuesday, January 29, 2008

அன்பின் மாதம் ஆரம்பம்

பிப்ரவரி மாதம் 14ஆம் தேதியை காதலர் தினமின்னு சொன்னாலும் சொன்னாங்க எந்த கடைக்குப் போனாலும் சிவப்பு கலரில் விதவிதமான பொம்மைகளும், இதயமும் தான். கடந்த வருடம் என்னோட அமெரிக்க நண்பர்களிடம் இது குறித்து விவாதித்த போது அவங்க சொன்னது என்னான்னா... இந்த தினத்தில் நம் அன்பை (காதலை மட்டுமல்லாது) நம் பெற்றோருக்கும், தோழ தோழிகளுக்கும். சகோதர சகோதிரிகளுக்கும் தெரிவித்துக் கொள்ளலாம். காதலர் மட்டுமென்று எடுத்துக் கொள்ளக் கூடாதுன்னு. அப்படியா? அன்பை பரிமாற தனியாக ஒரு தினம் வேண்டுமா? சொல்லுங்க மக்களே. இந்த கேள்விக்கும், இந்த பதிவிற்கும், இந்த தலைப்பிற்கும் சம்பந்தம் கிடையாது. எனினும், ஒருவரை ஒருவர் அன்பு செய்து இந்த அன்பின் மாதத்திலும் வாழ்வோம்.

இப்போ கதைக்கு வருவோம். பறவைகளை கவனிக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்ச பொழுது போக்கு. காலைல எழுந்ததும் கீச் கீச் கேட்கும் போது ஒரு புத்துணர்ச்சி வரும் பாருங்க. அனுபவிச்சவங்களுக்கு நான் சொல்லுறது புரியும். (நானெல்லாம் இந்த கீச் கீச் கேட்டுட்டே அடுத்த ரவுண்டு தூங்கிருவேன். உண்மையை சொல்லிட்டேனப்பா). பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதமின்னு பாட்டு கேட்டிருக்கிறோம். அது எத்தனை உண்மைன்னு அவங்களை உன்னிப்பா கவனிச்சா புரியும். அவைகள் நமக்கு கற்று தரும் பாடங்கள் ஏராளம். கலர் கலரா, வித விதமான சைஸ், ஷேப்களில், கூக் கூக் சத்தங்களிலும் வித விதமாய். அப்பப்பா... தூரமா இருந்து பார்க்கும் போது அவைகளும் நம்மை கவனிக்காத மாதிரி இருக்கும். அவர்கள் கண்ணுக்கெட்டும் தூரத்தில் இருக்கும் போது ஒருவித காப்புணர்ச்சியுடன் இருப்பது தெரியும். பக்கத்தில் போனா என்ன ஆகுமின்னு நான் சொல்ல வேண்டியதில்லை.

ராபின்ன்னு ஒரு பறவை நம்மூரு ஊர்க்குருவி மாதிரி ஆனா கொஞ்சம் பெருசா இருக்கும். சிறு தானிய வகைகள் கொடுத்தால் தினம் நம் வீட்டின் முன் ஆஜர் ஆகி விடும். அதே பறவை தான் தினம் வருமான்னு எனக்கு தெரியாது. ஆனா அவற்றை பார்க்கும் போது உற்சாகம் வருவது உண்மை.

ஸ்டார்லிங்-ன்னு ஒரு பறவை. பெரும் கூட்டமா தான் இருக்கும். சர் சர்ன்னு எங்கேயோ திரும்பி 2 முறை பறந்துவிட்டு அப்புறமா வேறு திசையில் பறந்து போயே போயிரும். எதுக்காக அப்படி செய்துன்னு எனக்கு புரியல. காத்திருந்து பார்ப்பவர்களை ஏமாற்றுகிறதோ?

கார்டினல் பத்தி பேசலைன்னா இந்த பதிவு முழுமை பெறாது. அவ்ளோ அழகு. அருமையான குரல். இது தான் தினமும் என்னை எழுப்பும் அலாரம்.

பறவைகள் பத்தி பேசினா பேசிக் கொண்டே போகலாம். அதனால இதோ உங்கள் பார்வைக்காக சிறு விடியோ.

21 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

பறவைகள் உலகம் தனி.

நம்மூட்டுலே பண்ணும் அட்டகாசத்தைப் பார்க்கணுமே:-)))))

நானும் பர்ட்ஸ் ஆஃப் நியூஸின்னு ஒண்ணு எழுதிக்கிட்டு இருக்கேன்.
போனவருசம் ஆரம்பிச்சது. இன்னும் முடிக்கும் வேளை வரலை(-:

said...

பறவைகள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒருவிதம்...!
படிக்கவும், பார்க்கவும், கேட்கவும் பிடிக்க வைத்த பதிவு!
எங்கள் வீட்டுத் தேட்டத்தில், கார்டினல் நிறைய வரும். இப்போ உணவு வைத்தபின் மற்ற சின்னச்சின்ன குருவிகளும் வருகின்றன. அவற்றைப் பார்த்து மகிழ்வது ஒரு அலாதி ஆனந்தம்!

said...

தலைப்பை பார்த்ததும் கதையோ கவிதையோன்னு வந்தேன்.

பறவைகள் எல்லாம் இங்கே எங்க இருக்கு..:(

\\இது தான் தினமும் என்னை எழுப்பும் அலாரம்.\\

செலவே இல்ல போல..;))

said...

கோபி சொல்ற மாதிரி இங்கேயும் பறவைகள் இல்லை..அன்பு மாத வாழ்த்துகள்

said...

இங்கே காலையில புறாக்கள் கூட்டம் கூட்டமாக உணவருந்த வருவது அழகான காட்சி..இதற்காக்வே சோளம் வாங்கி வச்சு, அது தண்ணி குடிக்க ஒரு தனியா தட்டு வச்சுக்கறது.. காலியில் முதல் புறாகளுக்கு உணவளிப்பது தான் வேலை..தலையை ஆட்டி ஆட்டி மேல பார்த்து சுத்தி முத்தியும் பார்த்து, பக் பக் னு சாப்பிடறே அழகே அழகு...

said...

நானும் பறவை ரசிகன்தான்......தனியா தூரமா நின்னு பறவைகளுக்கு தொல்லையில்லாம மானாவாரியா ரசிப்பேன்.

எனக்கென்னவோ சென்னைய விட மதுரை பறவைகள்தான் நல்லாருக்கு...

நான் பறவைகளை பற்றிதான் சொல்லீருக்கேன்பா...ஆரும் டபுள் மீனிங்ல எடுத்துக்கப்டாது...ஹி..ஹி..ம்ம்ம்ம்ம்

said...

//நான் பறவைகளை பற்றிதான் சொல்லீருக்கேன்பா...ஆரும் டபுள் மீனிங்ல எடுத்துக்கப்டாது...ஹி..ஹி.ம்ம்

எனக்கு என்னமோ இப்ப ஒரு பழமொழி நியாபகம் வருது...:-))

அது இன்னா பழமொழின்னு சொல்ல மாட்டேன்..

said...

// துளசி கோபால் said...
பறவைகள் உலகம் தனி.
//

அவர்களோடு நம் உலகம் தனின்னு சொல்லுங்க. அதை தான் சொல்ல வந்தீங்கன்னு நெனைக்கிறேன். ஆமா...

//
நம்மூட்டுலே பண்ணும் அட்டகாசத்தைப் பார்க்கணுமே:-)))))
//
ம்ம்ம்... பல சமயத்திலே அவர்களுக்காக நாம் காத்திருக்கிறோமா... இல்லை நமக்காக அவர்கள் காத்திருக்கிறார்களான்னு சந்தேகம் வரும். ஏன்னா.... நம்மை பார்த்ததும் அட்டகாசம் செய்றாப் போல இருக்கும். :-)

//
நானும் பர்ட்ஸ் ஆஃப் நியூஸின்னு ஒண்ணு எழுதிக்கிட்டு இருக்கேன்.
போனவருசம் ஆரம்பிச்சது. இன்னும் முடிக்கும் வேளை வரலை(-:
//

நானும் வலையுலகத்துள் வரும் போது (2007 துவக்கத்தில்) மிச்சிகனில் உள்ள பறவைகள் பத்தி எழுத ஆரம்பிச்சேன். வீடியோ அன்றே ரெடியானது. பதிவு மட்டும் இன்னும் ரெடியாகல. உங்க பதிவுக்காக காத்திருக்கிறேன். சீக்கிரமா எழுதுங்க. :-)

said...

// ஜீவா (Jeeva Venkataraman) said...
பறவைகள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒருவிதம்...!
படிக்கவும், பார்க்கவும், கேட்கவும் பிடிக்க வைத்த பதிவு!
//

நன்றி ஜீவா!

//
எங்கள் வீட்டுத் தேட்டத்தில், கார்டினல் நிறைய வரும். இப்போ உணவு வைத்தபின் மற்ற சின்னச்சின்ன குருவிகளும் வருகின்றன. அவற்றைப் பார்த்து மகிழ்வது ஒரு அலாதி ஆனந்தம்!
//
ஓ... கொடுத்து வைத்தவர்ன்னு சொல்லுங்க. பறவைகள் தொந்திரவுன்னு நெனைக்கிறவங்க மத்தியிலே உணவிட்டு மகிழும் நீங்கள்!

said...

// கோபிநாத் said...
தலைப்பை பார்த்ததும் கதையோ கவிதையோன்னு வந்தேன்.
//
அச்சச்சோ.. ஏமாந்திட்டீங்களா? இன்னும் ஏப்ரல் மாதம் வர நாளிருக்கிறதே. :-P

//
பறவைகள் எல்லாம் இங்கே எங்க இருக்கு..:(
//
சோகம் வேண்டாம் கோபி. காகம் கூடவா கிடையாது? புறாக்கள் இருக்கனுமே.

//
\\இது தான் தினமும் என்னை எழுப்பும் அலாரம்.\\
செலவே இல்ல போல..;))
//
நக்கலூ?

said...

கலக்கள் விடியோ. ஒரு படமெடுப்பதாக உள்ளோம் ஒளிப்பதிவாளர் நீங்கதான், பிடிங்க அட்வான்ஸ்-எ.

இதெல்லாம் எப்படி (இந்த எடிட்டீங், வலையேத்துறது...) செய்றதுன்னு ஒரு சிறு பதிவு போட்டா நாங்களும் தெரிஞ்சுக்குவோமில்ல...

said...

பின்னனி இசை அருமை! நல்ல தேர்வு!!

ஒளி-ஒலி, படதொகுப்பு பத்தி ஒரு வகுப்பு எடுத்தா எங்களுக்கும் உபயோகமா இருக்கும்ல!?

said...

// பாச மலர் said...
கோபி சொல்ற மாதிரி இங்கேயும் பறவைகள் இல்லை..அன்பு மாத வாழ்த்துகள்
//

அய்யோ நெசமாவேவா?

said...

// மங்கை said...
இங்கே காலையில புறாக்கள் கூட்டம் கூட்டமாக உணவருந்த வருவது அழகான காட்சி..//

அடடே கொசுவர்த்தியா! சூப்பர். நம்மூரு மாதிரி கோயில்களில், மற்றும் முக்கியமான(?) இடங்களில் எல்லாம் இங்கே புறாக்களை விடுவதில்லை. பலுகிப் பெருகிவிடுவதால். ;-)

said...

// இரண்டாம் சொக்கன்...! said...
நானும் பறவை ரசிகன்தான்......தனியா தூரமா நின்னு பறவைகளுக்கு தொல்லையில்லாம மானாவாரியா ரசிப்பேன்.
//
அது தனி சுகம்.. இல்லையா சொக்கரே.

//
எனக்கென்னவோ சென்னைய விட மதுரை பறவைகள்தான் நல்லாருக்கு...
//

எங்கேயிருந்தாலும் பறவைகள் பறவைகள் தானே? ;-)

//
நான் பறவைகளை பற்றிதான் சொல்லீருக்கேன்பா...ஆரும் டபுள் மீனிங்ல எடுத்துக்கப்டாது...ஹி..ஹி..ம்ம்ம்ம்ம்
//

ச்ச ச்ச.. அப்படியே நம்பிட்டேன்.

said...

ஓ அழகான பறவையெல்லாம் சொல்றீங்க மங்கை சொன்னமாதிரி இந்த ஊருல குருவிக்கு புறாவுக்கு சாப்பாடு வைக்க மண் தட்டு இல்லாத வீடே கிடையாது .. எங்கவீட்டுல மயில் தான் அலாரம் தெரியுமா..
மயில் கழுகு இதெல்லாம் நானும் போட்டோ வீடியோன்னு விதவிதமா எடுத்துவச்சிருக்கேன் ..

Anonymous said...

பறவை, மீன்னு எளுத நம்ம கையிலயும் ஒரு மேட்டர் இருக்கு...இன்னிக்கு எளுதீர்றேன்...

said...

// Thekkikattan|தெகா said...
கலக்கள் விடியோ. ஒரு படமெடுப்பதாக உள்ளோம் ஒளிப்பதிவாளர் நீங்கதான், பிடிங்க அட்வான்ஸ்-எ.
//
கொடுக்குறதை பணமா கொடுத்தீங்கன்னா வசதியா இருக்கும். எப்படி வசதி?

said...

// தென்றல் said...
பின்னனி இசை அருமை! நல்ல தேர்வு!!
//

இசை இளையராஜாவாச்சே. கேக்கவா வேணும். ;-) தேர்வு செய்தது நான் தான். பாஸாயிட்டேன் போல இருக்குதே. :)

said...

// முத்துலெட்சுமி said...
எங்கவீட்டுல மயில் தான் அலாரம் தெரியுமா..
மயில் கழுகு இதெல்லாம் நானும் போட்டோ வீடியோன்னு விதவிதமா எடுத்துவச்சிருக்கேன் ..
//

அட சொல்லிகிட்டு இருப்பாகளா... போட்டு விடுங்க. நாங்களும் பாப்போமில்ல.

said...

// இரண்டாம் சொக்கன் said...
பறவை, மீன்னு எளுத நம்ம கையிலயும் ஒரு மேட்டர் இருக்கு...இன்னிக்கு எளுதீர்றேன்...
//

அடே... சுப்பரப்பா... எழுதுங்க எழுதுங்க.. நமக்கு புடிச்ச மேட்டர் தான். :-)