Friday, July 18, 2008

பிள்ளையார் சுழி


எல்லோருக்கும் வணக்கம். கொஞ்ச நாள் இந்த பக்கம் தலை வைக்கலையே…. சரி என்ன தான் நடக்குதுன்னு எட்டிப் பார்க்கலாமின்னா தமிழ்மண டெம்ளேட் மாறிப் போச். சரியான வலைக்குள் தான் வந்திருக்கேனான்னு எனக்கே சந்தேகம் வந்துருச்சி. மாறி ரொம்ப நாளாச்சோ? வராததற்கு பெருசா காரணம் ஒன்றுமில்லையப்பா…. நேரமில்லைன்னு நழுவலாம் தான்…. அது முற்றிலும் உண்மையில்லையே.

எல்லாம் சரிதான்…. இப்போ என்ன இந்தப்பக்கமின்னு யாரோ முணுமுணுக்குறது கேக்குதுப்பா….. இதோ வந்திட்டேன். எல்லாரும் என்னாச்சி ஏதாச்சி நல்லாயிருக்கீகளான்னு கேக்குறாங்க. முத்தக்கா ஒரு படி மேலே போயி… உங்களையெல்லாம் யாரு எழுத வர சொன்னா. வந்தது வந்தீக… ஒழுங்கா எழுதலாமில்ல… என்ன நெனச்சிட்டு இருக்கீங்கன்னு செல்லக் கோபம் காமிச்சாங்க. சரி.. என்னா எழுதுறதுன்னு மண்டைய பிச்சிக்காம…. துளசி டீச்சர் பயண கட்டுரையெல்லாம் எழுதி நமக்கும் சொல்லிக் கொடுத்தாங்களே.. அதையே நாம பின்பற்றலாமின்னு மண்டைக்குள்ள ங்கொய்யுன்னு கொடையுது. அதையே செய்யலாமின்னு இதோ வந்திட்டேன்.

எங்கே பயணம்? எத்தனை நாள்? என்ன கொடுமையிது சரவணான்னு சொல்ல வைக்கும் லூட்டி. என்ன இது சின்னபுள்ளத்தனமால்ல இருக்குன்னு சொல்ல வைக்கும் கொழுப்பெடுத்த வேலைகள். அதிரடி 10 நாள் செம ஜாலி. இதெல்லாம் கொஞ்சமா சொல்லலாமின்னு தோணுது. கண்டிப்பா துளசி டீச்சர் போலவோ, யாத்ரீகன் போலவோ அழகா கோர்வையா, படம் போட்டு சொல்லத் தெரியாதப்பா. ஏதோ எனக்கு தெரிஞ்ச அரைகுறை ஸ்டைல்ல சொல்லப் போறேன். உங்களுக்கு போர் அடிச்சா சொல்லிருங்க. நிறுத்திறலாம். சரியா? ஆங்… எங்கே போனோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்… அடுத்த பதிவில் சொல்லட்டா?

18 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

என்னது எல்லோரும் தேடினாங்களா? அடக் கொடுமையே :-)).

எனக்கு இப்பவே எரிச்சலா இருக்கு இருக்கிற ஜாலி மூட் தொடக்கத்தப் பார்த்தா எங்கெங்கே போனீங்களோ, என்னன்ன லூட்டி அடிச்சீங்களோ. சரி, சரி தொடர்ந்து எழுதணும், அல்சர் வராம இருந்தா தொடர்ந்து படிக்கிறேன் இல்லேன்னா நான் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... ;-).

வெல்கம் பேக்!

said...

ஓ வந்தாச்சா? மிரட்டினாத்தான் சில பிள்ளைங்க கேட்குது என்ன செய்ய?

பின்ன திட்டமாட்டாங்களா? எதயாச்சும் செய்ய ஆரம்பிச்சா அத ஒழுங்கா செய்யனும் பாதில நிறுத்தினா கேக்கமாட்டமா? சும்மா போகமுடியுமா என்ன?

said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
எதயாச்சும் செய்ய ஆரம்பிச்சா அத ஒழுங்கா செய்யனும் பாதில நிறுத்தினா கேக்கமாட்டமா? சும்மா போகமுடியுமா என்ன?
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய் :))

said...

// Thekkikattan|தெகா said...
என்னது எல்லோரும் தேடினாங்களா? அடக் கொடுமையே :-)).
//

இதெல்லாம் கண்டுக்காதீங்க.. பில்டப்புன்னு உட்டுபுடிங்க. ;-)

//எனக்கு இப்பவே எரிச்சலா இருக்கு இருக்கிற ஜாலி மூட் தொடக்கத்தப் பார்த்தா //
கண்டிப்பா உங்களுக்கு அல்சர் தான். நான் கியாரண்டி.

said...

// கயல்விழி முத்துலெட்சுமி said...
ஓ வந்தாச்சா? மிரட்டினாத்தான் சில பிள்ளைங்க கேட்குது என்ன செய்ய?
//
அடப்பாவி! சிறுசுங்க லிஸ்ட்லயா நான். :-(

said...

சரி கிழவின்னு சொல்லிடட்டுமா? அப்ப

said...

அடப்பாவி! சிறுசுங்க லிஸ்ட்லயா நான். :-(//

இல்ல, இல்ல இது வேற மாதிரி லிஸ்ட்ல, அதுக்கும் ஹெர்டிங்(herding) தேவைப்படும் :)).

said...

யக்கோவ்,
உங்களுக்கு அழைக்க முயற்சி செய்தேன். ஏனோ ரீச் ஆகலை.. உங்க எண் கொஞ்சம் அனுப்பி வைங்க..

said...

வெல்கம் பேக் :))

//முத்தக்கா ஒரு படி மேலே போயி… உங்களையெல்லாம் யாரு எழுத வர சொன்னா. வந்தது வந்தீக… ஒழுங்கா எழுதலாமில்ல… என்ன நெனச்சிட்டு இருக்கீங்கன்னு செல்லக் கோபம் காமிச்சாங்க. //

:))

said...

பயணக்கட்டுரையில் கண்டிப்பாக கவிதைகள் வரவேண்டும்... :))

said...

வணக்கமுங்க...

நான் ஒங்களோட எழுத்துக்கு பெரிய விசிறிங்கோ, நீங்க பாட்டுக்கு சொல்லாம கொள்ளாம காணாம போய்ட்டீங்கன்னு கோவந்தான்...

இப்ப எல்லாஞ்சரியா போய்ருச்சி...தயவு செஞ்சி தொடர்ச்சியா எழுதுங்க தாயீ!

அப்பால கவிதன்னு ஒன்னு எளுதுவீங்களே அதையும் அப்பப்ப போட்டீகன்னா சந்தோசப்படுவேன்.

said...

யட்சன் காட்டாறு திடீர் திடீர்ன்னு தான் வரும்.. சிலர் அப்படி திடீர்திடீர்ன்னு கூடுவிட்டு கூடு பாயறாங்க.எல்லாம் எங்க நேரம்.. :(

said...

யட்சன்! புச்சா இருக்குப்பா. எழுத்துல இருந்து இது நம்ம பங்காளியான ஆயிரத்தில் ஒருவன், மக்களின் நாயகன், சொக்கா நீதாம்பான்னு தெரியுது. யட்சன்னா என்னாப்பா?

said...

// சென்ஷி said...
பயணக்கட்டுரையில் கண்டிப்பாக கவிதைகள் வரவேண்டும்... :))
//

பயணமே கவிதை தானேப்பா. ;-)

said...

// கயல்விழி முத்துலெட்சுமி said...
யட்சன் காட்டாறு திடீர் திடீர்ன்னு தான் வரும்.. சிலர் அப்படி திடீர்திடீர்ன்னு கூடுவிட்டு கூடு பாயறாங்க.எல்லாம் எங்க நேரம்.. :(
//

யக்கோவ்... பெயருக்கு ஏத்தமாதிரி வாழனுமின்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. அதான். காட்டாறு எப்போதும் வந்தால் அழிவுதான். ;-)

said...

// பொன்ஸ்~~Poorna said...
யக்கோவ்,
உங்களுக்கு அழைக்க முயற்சி செய்தேன். ஏனோ ரீச் ஆகலை.. உங்க எண் கொஞ்சம் அனுப்பி வைங்க..
//

நாமத்தான் ரீச் ஆகாத எடத்துக்கு போய் வந்தோமில்ல. அதனால இருக்கலாம். அதே கைப் பேசி எண் தான். (வாய் தானே பேசுது? அப்புறம் ஏன் கைப் பேசி?)

said...

காட்டாறு..வெள்ளம் பாயலையேன்னு பாத்தேன்...யாரேனும் அணைகட்டி
தேக்கிடாங்களோன்னும் பாத்தேன்.
கட்சிகளிடையே அதற்கான மோதலையும் காணோம். சரி வத்தலை. இனி சப்பு சவறு கண்டது கழியதுகளையெல்லாம் இழுத்துக்கொண்டு பாயட்டும். அதுவும் தடங்கலில்லாமல். சேரியா?

said...

// நானானி said...
காட்டாறு..வெள்ளம் பாயலையேன்னு பாத்தேன்...யாரேனும் அணைகட்டி
தேக்கிடாங்களோன்னும் பாத்தேன்.
கட்சிகளிடையே அதற்கான மோதலையும் காணோம். சரி வத்தலை. இனி சப்பு சவறு கண்டது கழியதுகளையெல்லாம் இழுத்துக்கொண்டு பாயட்டும். அதுவும் தடங்கலில்லாமல். சேரியா?
//
நானானி, நமக்கும் அந்த கவலை இருந்துச்சி தான். எங்கே அணை கட்ட விடுவாங்க? அதான் நம்ம முத்தக்கா, கண்மணியக்கா, மங்கைக்கா, தங்கைமார், தம்பிமார், அக்காமார், பாட்டிமார், தாத்தாமார், நண்பர்கள்மார் எல்லாரும் தட்டிபூடுவாகல்ல.

நீங்க சொன்ன மாதிரியே செய்துருவம். படிக்கிறது நம்ம மக்கள் தானே. அட்சீஸ் பண்ணி மூக்கைப் பொத்திகிட்டாவது படிச்சிருவாங்கன்னு நெனச்சிப்போம்.