Thursday, June 25, 2009

இனியும் நான் என்ன செய்யவேண்டும்இன்னும் நீ என்ன செய்ய
வேண்டும் எங்களை
இனியும் யாம் என்ன செய்ய
வேண்டும் உனக்கு

எம் தாயை அழித்து
எங்கள் தந்தையை நடை பிணமாக்கினாய்
எம் தந்தையைக் கொன்று
எங்கள் தாயை பேதலிக்க செய்தாய்

எம் சகோதரிகளை சீரழித்து
எங்கள் சகோதர்களை உசுப்பேத்தினாய்
எம் சகோதர்களைக் காயப்படுத்தி
எங்கள் சகோதிரிகளை வெறுப்பேத்தினாய்

இன்னும் நீ என்ன செய்ய
வேண்டும் எங்களை
இனியும் யாம் என்ன செய்ய
வேண்டும் உனக்கு

ஆட்டு மந்தையை விட
கேவலமாய் நடத்தினாய்
சொந்த நாட்டில் எம்மை
அவமான சின்னங்களாக்கினாய்

ஒரு வேளை சோற்றுக்கும்
சொரணை இழந்து
கேவலமாய் கையேந்தும்
அடிமைகளாக்கினாய்

இன்னும் நீ என்ன செய்ய
வேண்டும் எங்களை
இனியும் யாம் என்ன செய்ய
வேண்டும் உனக்கு

தட்டும் கதவொலியும்
பீரங்கி இடியாய்
மனதை திடுக்கிட
வைக்கும் அவலம்

சுளீரென பதற வைக்கும்
குழந்தையின் உரசலும்
திடுக்கிட்டு திரும்பி
மேனியை தகிக்க வைக்கும்

இன்னும் நீ என்ன செய்ய
வேண்டும் எங்களை
இனியும் யாம் என்ன செய்ய
வேண்டும் உனக்கு

உன் உ--பு
எம் பெண்டீர் வாய் கிழிக்கும்
உன் துப்பாக்கி
எம் பெண்டீர் -- கிழிக்கும்

எமது ஓலம்
தேனாய் பாயுது உன்னுள்
எங்களின் கூக்குரல்
கொண்டாட வைக்குது உன் --யை

இன்னும் நீ என்ன செய்ய
வேண்டும் எங்களை
இனியும் யாம் என்ன செய்ய
வேண்டும் உனக்கு

வெடிக்கும் துப்பாக்கியும்
துளைக்கும் பீரங்கியும்
குண்டு மழையும்
எம் காதுகளை செவிடாக்குது

எம் சீவன் அழித்தாய்
இனியும் அவமானப் பட
இருக்கிறதா ஏதுவும்
எம்மிடம்

இன்னும் நீ என்ன செய்ய
வேண்டும் எங்களை
இனியும் யாம் என்ன செய்ய
வேண்டும் உனக்கு

வடிந்து ஓடும் எம்மவர் குருதி
எம் கண்ணீரை வற்ற வைக்கும் முன்
உன் மிருக செயல்கள்
எம்மை நீசனாக்கும் முன்

எம்மை யாம் மறக்கும் முன்
உன் குல மக்களுக்கும்
எம் மக்களின் நிலை வரும் முன்
காத்துக் கொள் உன்னை

எம் குலம் தழைக்க
எம் மொழி நிலைக்க
எம் நாடு எமக்கே தர
சுதந்திரமாய் வாழ

இனி நீ என்ன செய்ய
வேண்டும்
நாங்கள் என்ன செய்ய
வேண்டும்
என நீயே தீர்மானி!

13 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

:-(

said...

///உன் குல பெண்டீருக்கும்
எம் பெண்டீர் நிலை வரும் முன்//

இந்த சிந்தனை வேண்டாம்!
நமக்கு மிருக குணம் நமக்கு வராது!
எந்த குல பெண்டிராக இருந்தாலும்
அவர்களை போற்றும் மாண்பு நம்முடையது!!

said...

ரொம்ப நாள் கழிச்சு வந்திருந்தாலும், ஒரு முடிவோட வந்திருக்கீங்க...

///உன் குல பெண்டீருக்கும்
எம் பெண்டீர் நிலை வரும் முன்//

அது.... அது... நல்ல வேலை நமது சகோதரி ஒருத்தியை வன்புணர்ந்து கொண்டிருப்பவனுக்கு முன்னால் காந்தி படத்தை நீங்களும் காட்டிக் கொண்டு இருக்கிற மாதிரி "ஏமாத்திக்கலை."

said...

கோபம்..வருத்தம்..ஆதங்கம்...இயலாமை
எல்லாம் ஒரு சேர ஒரே மூச்சுல சொல்லிட்டே...ஹ்ம்ம்ம்:-(

said...

:(

said...

நம் மக்களை கொள்பவனை கொள்வோம் என்று கோபத்தில் சொல்லுங்கள் , பரவாய் இல்லை.

பெண்களை கற்பிழக்கச் செய்ய செய்யும் விடயத்தை அழித்து விடுங்க்கள்.

எதிரிகளால் கூட கற்பழிப்பு பழி சுமத்தப்படாத இனம் நம் இனம்.
பதிலாக கற்பழித்தவனை பழி தீர்ப்பேன் என்று எழுதுங்கள் .

பதிலுக்குப் பதில் வெடி இருக்கிறோம், குத்தி இருக்கிறோம் , கொலை செய்திருக்கிறோம்.
ஆனால் கற்பழிக்கவில்லை.

புரிந்து கொள்ளுங்கள்.

said...

:((

said...

மயாதி, நீங்கள் சொன்னதும் தான் எனக்கும் உறைத்தது. மேலே பெண்கள் படும் பாடு வந்ததால் அவ்வாறு எண்ணத் தோன்றியிருக்கலாம். இல்லை, அதன் வீரியம் அதிகமானதால் அவ்வாறு தோன்றி இருக்கலாம். நீங்கள் மட்டுமல்லாது, ஜீவனும் அதை மேற்கோளிட்டுச் சொல்வதாலும், எல்லாரும் அக்கொடுமையை மட்டும் மனதில் கொள்வார்கள் என எண்ணியதாலும், இக்கணமே மாற்றி எழுதுகிறேன்.

said...

ஜீவன், அந்த சிந்தனை வேண்டாம் தான். எல்லாரும் நல்லா இருக்கணும் தான். அதெல்லாம் ஒத்துக்குறேன்.

ஆனா, நீங்க சொன்ன ஒன்னு உதைக்குது.

//எந்த குல பெண்டிராக இருந்தாலும்
அவர்களை போற்றும் மாண்பு நம்முடையது!! //
எத்தனை நாள் இதுபோல் சொல்லித்திரிவோம். இது எங்கே நடக்குதுன்னு சொல்லுங்க. அந்த உதாரண புருஷரை உலகுக்கு காண்பிப்போம். இதெல்லாம் மாயை அப்பா; ஏட்டு சுரைக்காய். இது உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். நடைமுறையில் எந்த அளவுக்கு உண்மை? வேணாம் அய்யா. அங்கே போக வேண்டாம். அப்புறம் நெறையா நம்ம பதிவர்கள் போட்ட பல பதிவுகளை இங்கே லிங்க் போட வேண்டி வரும். நானும் என் அனுபவங்களை மேற்கோள் காட்ட வேண்டி வரும். அது தனியா பேச வேண்டிய பதிவு. இன்னும் இது போல் மாயைகளை கிளப்ப வேண்டாமே. அதற்கு பதிலா திரைகளை கிழிக்க வழி செய்வோமே.

said...

அய்யோ என்னங்க கலங்க அடிச்சுட்டீங்க!

said...

என்ன சொல்வது...என்ன செய்வது...
கலங்க வைக்கும் உண்மைகள் முன் செயலற்றுக் கிடக்க வேண்டிய சூழல்..

said...

ரொம்ப லேட்டா வந்திருக்கீங்க... அருமையான கவிதை.. கோபம், ஆதங்கம்... ஆனாலும் எனக்கு இதில் மறுபட்ட கருத்துக்கள்... கவிதை அருமை...

said...

அட்ரஸ் மாறி வந்துட்டேனா....?

ஏன் இப்படியெல்லாம் எழுதுறீங்க....?

பயமா இருக்கு....

நல்ல வைத்தியரா பார்த்து மந்திரிக்கனும்...

யாருக்குன்னு கேக்காதீங்க ...

ஹி..ஹி...ம்ம்ம்ம்