Monday, March 19, 2007

நானும் கர்ப்பஸ்திரி தான்

எனக்குள் நீ வந்தாய்
கலைத்துவிட மனதில்லை
உன் நினைவுகளை சுமந்தேன்
உரம் போட்டு வளர்த்தேன்
என்னுயிர் கொடுத்தேன்
உன் துடிப்பில் நான் மகிழ்ந்தேன்
ஜனிக்கும் நாள் பார்த்து தவமிருந்தேன்
கனிக்க மருத்துவரில்லை
கேலி செய்யும் நண்பர்களுண்டு
விடாது உன்னை சுமந்தேன்
காலமெல்லாம் சுமந்தாலும் கனமாக தெரியாதது ஏனோ
அடக்கி அடக்கி வைத்த உன் நினைவுகள்
முட்டி மோதும் போது உன்னை வெளியில் விட நினைத்ததுண்டு

மூடி மூடி வைத்தாலும் முடியவில்லை பெண்ணே
நீயாக நீ வரும் நாளை சொல்லிவிடு
ஜென்ம ஜென்மமாக காத்திருப்பேன்
நிரந்தர கர்ப்பிணியாக என்னை விட்டு விடாதே கண்ணே!

-- காட்டாறு

10 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

More Abstract!!! and More Worthy!!!Gr8 Poem!

said...

நன்றி ப்ரீ. உங்கள் profile photo (நயகரா) அருமை.

said...

ரொம்ப அழகாயிருக்குங்க :)))

said...

நன்றி அரசியாரே!

said...

யானை கர்ப்பமா?

அதான் நீண்ட நாளாம்.

( எதுக்கும் கொஞ்சம் ஸ்மைலி போட்டுக்கறேன்)

:-))))))))))))))))))

said...

அதானே... எழுதும் போது தோணல பாத்தீங்களா?

:-)))))))))))))))))))

said...

காட்டாறு,
நல்லதொரு கவிதைக்கு வாழ்த்துகள்.

said...

காட்டாறு , உங்களையும்
கதம்பமாலையில் இணைய அழைப்பு விடுத்திருக்கிறேன்.

ஏற்றுக் கொண்டால் இன்னும் மணம் சேரும்.

said...

பாராட்டுக்கு நன்றி வல்லியம்மா. இது நான் தமிழ்மணத்துல சேர்றதுக்கு முந்தி எழுதியது. இம்சை அரசி இது போல ஒரு கவிதை எழுதப் போக, அவங்களுக்கு இந்த லிங்க் கொடுக்க, இப்போ, இதுக்கு பின்னூட்டம் வருது. ஒரு வகைல சந்தோசமாத்தான் இருக்குது.

said...

சுமப்பவரின் எண்ணம் சுகம் காணும் இதை படித்தால்.. நல்ல கவிதை.