Sunday, March 18, 2007

அநாதை

நானும் அநாதை தான்

பாலூட்ட தாயுண்டு
சிரித்து விளையாட சகோதரர்கள் உண்டு
மகிழ்சியை பகிர நண்பர்கள் கூட்டமுண்டு

ஆனால்,
ஆதரவாய் தோள் சாய தோழனில்லை
ஆம், துன்பம் வரும் போது நானும் அநாதைதான்!

காட்டாறு

6 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

wonderful writing it is an irony when in need we hardly get shoulders to comfort us

said...

நன்றி ஷர்மிளா. சில சமயங்களில் மட்டும் என்று நினைக்கிறேன். ஒரு வேளை நம் எதிர்பார்ப்பு எல்லை மீறி விடுவதாலோ என்று நினைக்கிறேன்.
ஏன் உங்கள் blog-இல் ஒன்றும் எழுதவில்லை?

said...

//மகிழ்சியை பகிர நண்பர்கள் கூட்டமுண்டு

ஆனால்,
ஆதரவாய் தோள் சாய தோழனில்லை//
அம்மணி இன்னைக்குத்தான் உங்க பேரையும் பதிவும் பார்த்தேன்.ஏன் இந்த ரெண்டு வரிகளுக்குள்ளேயே முரண்பாடு.நண்பன்னாலும்,தோழன்னாலும் ஒன்றுதானே.[ஒருவேளை .... ஹி..ஹி..வேறு ஏதாவது சொல்ல நினைச்சியா அம்மிணி.]

said...

அடடே.... மாட்டிக்கிட்டோ மே....... கண்மணிட்ட........ அப்படில்லாம் இல்லைங்க. Acquaintance-உம் நண்பர்கள் தான். அவரிகளிடம் மகிழ்ச்சியை பகிர முடியும். துக்கத்தை பகிர மனம் இடம் கொடுக்காது அல்லவால். Acquaintance எப்படி தமிழில் எழுதுவது என்று தெரியவில்லை. ஆகவே, நண்பர் என்றேன். தோளும் தோழனும் ரைமிங்கா இருப்பதால அப்படி எழுதினேன். தப்ப கரீட்டா கண்டிபிடிச்சிட்டீயேம்மா..... கவனமா இருக்கேன் இனி.

said...

கவிதை நல்லா இருக்கு காட்டாறு. நண்பர்கள்- தோழன் கண்மணி கரெக்டா புடிச்சிடாங்க போல.:))

said...

//நண்பர்கள்- தோழன் கண்மணி கரெக்டா புடிச்சிடாங்க போல.:))
//

குற்றம் கண்டுபிடிக்கவே...... (நாகேசு ஸ்டைலுல
சொல்லிப்பாருங்க)...... :))) சந்தோசு வம்புல மாட்டிவிடுற பாத்தியா.....

பரவாயில்லைங்க... யாரு சொன்னது நம்ம கண்மணி தானே..... அவங்க சொல்லி நான் திருத்திக்கிட்டேன்.... ( இது கண்மணிக்காக சும்மா டப்பாசுன்னு அவுகள்ட்ட சொல்லிறாதீக....)