Tuesday, March 20, 2007

நண்பனுக்காய் ஒரு கவிதை

கவிதை எழுத ஆசைப்பட்டேன் என் நண்பனுக்காக
என்ன எழுதுவது

நேற்று சாயும் வேளையில் இரண்டு குருவிகளின் கீச்சு கீச்சுகளையா
பசுமையான நிலப்பரப்பை கண்டதும் எழுந்த மகிழ்ச்சியையா
கால்ஃப் கோர்ஸில் கூட்டமாக நின்ற கனட நாட்டிலிருந்து வந்த அன்ன பட்சிகளை
விரட்டிய நாயின் விளையாட்டினால் எனக்குள் பெருகிய சந்தோஷத்தையா

வீட்டு பின்புறத்தில் துள்ளி விளையாடிடும் அணில் குஞ்சுகளையா
காலை நேர பரபரப்பில் மனதில் துளிர்த்த வார்த்தைகளையா
யாரோ எழுதிய இமெயிலில் என் உள்ளத்தில் வந்த சிந்தனைகளையா
இன்று வேலையினிமித்தம் குழுமிய போது வந்த வெட்டி பேச்சின் நடுவே மின்னலென எழுந்த வரிகளையா

மறந்து விட்டேன் என்னுள் எழுந்த நீர் வீழ்ச்சியை
மன்னிப்பு கேட்க வேண்டும் அவனிடம்
என் உள்ளக்கிடக்கை காட்ட விரும்பாத என் மனநிலைக்கு

கருவிலே மரித்த, உருவாகாத கவிதையைத் தேடி தர அவன் உதவுவானா
தொலைந்து போன நான் எழுதாத கவிதையை கண்டுபிடிக்க உதவுவாயா நண்பா

-- காட்டாறு

2 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

கவிதை நன்றாக இருக்கிறது!

வாழ்த்துக்கள்!

ஆனால்

கருவிலே மரித்த,
உருவாகாத
கவிதையைத்
தேடி தர அவன்
உதவுவானா
தொலைந்து போன
நான் எழுதாத
கவிதையை
கண்டுபிடிக்க
உதவுவாயா
நண்பா

என்று இருக்க வேண்டும்!

said...

ஆவி அம்மணிக்கு என் கவிதை பிடித்திருப்பதில் எனக்கு பயம் கலந்த மகிழ்சி. எனக்கு ஒரு சந்தேகமுங்க. ஆவியிலும் ஆண், பெண் பேதெமெல்லாம் உண்டோ?