வணக்கோமுங்க வணக்கோமுங்க வணக்கோமுங்க
வணக்கோமுங்க! வணக்கோமுங்க! வணக்கோமுங்க! தமிழ்மணத்துல மணம் வீசுற, மணம் வீச போற, அண்ணாச்சிக்கும், அக்காவுக்கும், தம்பிக்கும், தங்கைக்கும் வணக்கோமுங்க! வலைப்பதிவு ஞானம் கம்மிங்கோ நமக்கு. அதிலேயும் ப்ளாக்கிங்கு நமக்கு ரொம்ப ரொம்பப் புதுசுங்கோ. ஆனா வலைப்பதிவுல தமிழ் பேச, தமிழ் பேசத்தெரிஞ்சவங்க கிட்ட பேச, பேசி அறுக்க, ரொம்ப ரொம்ப புடிக்குங்கோ. நம்புங்கோ. நண்பன் வழியா இப்பிடி ஒரு விஷயம் (தமிழ்ல உலக முழுதும் இருக்குற தமிழ் நெஞ்கள்ட்ட பேசுறது) ரொம்ப சாதாரணமா வலைப்பதிவுல இருக்குன்னு கேள்வி பட்டதும், நீங்கோ மாட்டிடிங்கோ. வந்து சில நாளாச்சிங்கோ. ஆனா என்ன முறையா அறிமுகப் படுத்துதல்ல தாமதமாச்சுங்கோ. தலைவர் ஸ்டைலுல சொல்லப்போனா லேட்டா வந்தாலும் ..... சரி... சரி... சொல்லல.
மொத மொதல்ல அப்பிடின்னு ஆரம்பிக்க நெனைச்சேன். ஆனா எந்த மொதல்லன்னு மறந்திரிச்சி. அதனால இப்போ என்ன சொல்ல வாரேனா, என்னை பற்றி பகிர, உங்களைப் பற்றி அறிய வாய்ப்பு கெடச்சதற்கு நன்றி! வணக்கம்! வந்தனம்!
வரவேற்பிங்கன்னு நெனைக்கிறேன். வரவேற்பிங்க. நம்புறேன்.
12 பேர் மறுமொழிந்துள்ளனர்:
வாழ்த்துக்கள்!
வருக வருக!
வாங்க... வாங்க....
அதுக்குள்ள ஆவி அம்மணி வந்து வாழ்த்து சொல்லிடிச்சு பாத்தீங்கள்ல...
பின்னாலேயே, ஆன்லைன் ஆவிகள் வந்து வாழ்த்து சொல்லும் பாருங்க ;)))))
//பின்னாலேயே, ஆன்லைன் ஆவிகள் வந்து வாழ்த்து சொல்லும் பாருங்க//
பூசாரி ஜீ அவர்களை வழிமொழிகிறோம்!
வாழ்த்துக்கள்!
(அதுக்காக ஆன்லைன் ஆவிகள் டீமுல அண்ணன் ஜீயும் இருக்காரான்னெல்லாம் துப்பறியக் கூடாது சொல்லிட்டோம்)
காட்டாறுக்கு எங்களை கைகாட்டி அழைத்து வந்த அண்ணன் ஜீ அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!
வாழ்த்துக்கள்!
தங்களின் பதிவுலக வருகைக்கு ஆவியுலகினரின் வாழ்த்துக்களும் வரவேற்பும்!
வாங்க வாங்க!
இருக்கோமே நாங்க!
அது சரி. எல்லோரும் கங்கணம் கட்டிட்டு தான் வந்து வரவேற்கிறீங்கன்னு நெனைக்கிறேன். ஈரக்கொல நடு நடுங்கிறிச்சில்ல. சப்த நாடியும் அடங்கிறிச்சில்ல. ஆனாலும் ஒங்களெல்லாம் கண்ணுக்கு தெரியாத தெய்வங்களா நெனச்சி சந்தோஷத்தோட தொடங்குகிறேன் என் பங்களிப்பு பணியை. ஹீ ஹீ ஹீ.....
//சப்த நாடியும் அடங்கிறிச்சில்ல.//
அதனாலதான் நாங்க ஆவியா அலையறோம்!
வாழ்த்தி வரவேற்த (வியர்க்க வைத்த) ஆவியுலக அண்ணாச்சிகளுக்கும், அவர்களை இவ்விடம் வரவைத்த ஜி-க்கும், (கொட்டாவி வந்த எனக்கும்) நன்றி!
காட்டாறு கன்னா பின்னா பின்னாவென ஓட வாழ்த்துக்கள்
//தம்பி said...
காட்டாறு கன்னா பின்னா பின்னாவென ஓட வாழ்த்துக்கள் //
தம்பி சொன்னதையே நானும் கூவிக்கிறேனுங்கோ:-))
வாழ்த்திய தம்பி மற்றும் அபி அப்பாவுக்கு நன்றி. என்னுடன் சேர்ந்து ஓடுவதற்கு தயார இருப்பீங்கன்னா கன்னா பின்னான்னு ஓட நான் ரெடி.
Post a Comment