Monday, March 26, 2007

தாரா தாரா வந்தாளாம்.. சங்கதி ஒன்னு சொன்னாளாம்

ஆத்தீ இது வாத்துக் கூட்டம்....

(உங்களுக்காகவே காத்திருக்கும் வாத்துக்களையும், தாராக்களையும் படத்தை சுட்டிப் பார்க்கவும்.)

இது கனட நாட்டிலிருந்து தாராக்கள் தெற்கு நோக்கி குடி பெயரும் காலம். நான் கனடா-அமெரிக்கா எல்லைக்கோட்டில் இருப்பதால், ஒவ்வொரு வருடமும் இது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத இன்பம் இது. சரி.. நான் பெற்ற இன்பத்தை பகிரலாமென்று ....... உங்களுக்காக உங்களுக்கே உங்களுக்காக இன்று சில போட்டோ க்கள் எடுத்தேன். சில வியக்கத்தக்க உன்மைகள் கீழே:

1) தாரா குஞ்சுகள் பிறக்கும் போது உள்ள நிறம் நாளாக நாளாக கருத்துவிடும். (எங்க பாட்டி பழமொழி பிரியை. அவர்கள் தாராக் குஞ்சியைப் பற்றி கேட்டிருந்தால்...... கழுதைக்குட்டி கூட பிறக்கும் போது அழகாகத் தான் இருக்கும் என்று கூறியிருப்பார்கள்)

2) தாரா பொதுவாக இனப்பெருக்கம் செய்யும் பருவம் வரும் போது தன் ஜோடியை கண்டு கொள்ளும். சில பறவைகள் ஒரே ஜோடியுடன் கடைசி வரை வாழும். ஒரு சில மட்டுமே ஜோடி மாற்றிக்கொள்ளும். (நாம் அவற்றிடமிருந்து கற்றுக்கொள்ளலாமோ?)

3) முட்டையிட ஏதுவான இடத்தை தேர்ந்தெடுப்பது பெண் தாராவின் வேலை. (அங்கேயும் அதே கதை தானா?) அதுமட்டும் அல்ல.... பல சமயங்களில் கூடு கட்டுவதும் அவரே பார்த்துக் கொள்வார். (ஆணை நம்பி காலம் கடத்துவதில் பிரயோஜனமில்லை என்று எண்ணிக் கொள்வார் போலும்.). அடை காப்பதும் அவரே என்று சொல்லத் தேவையில்லாமல் போய்விட்டது.

4) ஆணுக்கு வேலையில்லை என்று நினைத்துவிட வேண்டாம். அவர் தான் பகைவரிடமிருந்து தன் மனைவியையும் (?), முட்டைகளையும், கூட்டையும் பார்த்துக் கொள்ளவேண்டும். (இதை எதற்கு ஒப்பிடலாம்?)

5) குஞ்சு பொரிக்க 24 மணி நேரத்திலிருந்து 48 மணி நேரம் வரை ஆகலாம். (மனிதர்கள் தேவலாம் போலவே!)

6) குஞ்சுகளை பராமரிக்கும் கடமை ஆணுக்கும், பெண்ணுக்கும் முதல் குடி பெயரும் காலம் வரை. இது சராசரியாக ஒரு வருட காலமாகும். அதன் பின் குஞ்சுகள் தனியாகவோ, தன் பெற்றொருடனோ வாழ ஆரம்பித்து விடும். (தத்து கழியனும் போல!)

7) இந்த ஒரு வருட காலப் பருவத்தை தாண்டி விட்டால், இவை 24 வருடத்திலிருந்து 42 வருடம் வரை உயிர் வாழும். (அம்மாடியோவ்!)

அவ்வளவு தான் இன்றைய கதை. இனி உங்களுடைய நேரம். என்ன திட்டிடெழுத போகிறீர்கள்?

8 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

சங்கதி ஒண்ணுன்னு சொல்லிட்டு பல விஷயங்கள் வந்திருக்கே! நல்ல பதிவுங்க.

said...

கொத்தனாரே, நன்றிங்க உங்க பாராட்டுக்கு!

said...

காட்டாற்றுக் கவிதைகள் எதிர்பார்த்தேன். கட்டுரைகளுமா? நல்லாவே எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்!

said...

hmm. Naan Nayadharannu ninaichu vanthen.

said...

//காட்டாற்றுக் கவிதைகள் எதிர்பார்த்தேன். கட்டுரைகளுமா? நல்லாவே எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்!
//
பாராட்டுக்கு நன்றி சேதுக்கரசியாரே! நான் சின்னப்புள்ளையா இருந்தப்போ, எங்க அப்பா எப்பவும் சொல்லுவது...."உனக்கு தெரியாத தென்று ஒன்றுமில்லை. இத்தனை கோடி ஜனங்கள்ள யாருக்காவது உனக்கேற்ப் பட்ட அனுபவம் கிடைத்திருக்கும். ஒன்ரு அதிலிருந்து கற்றுக் கொள். இல்லையேல், அடிபட்டுக் கற்றுக் கொள். உன்னிடமிருந்து மற்றவரும் கற்றுக் கொள்ளட்டும்" என்பார். இப்படி கற்றுக் கொண்ட பாடங்கள் பல. ஒரு ஆல்ரவுண்டரா இருக்கலாம் பாருங்க! ;-)

said...

//hmm. Naan Nayadharannu ninaichu vanthen. //
நாமக்கல் சிபியாரே, நயன் பற்றி நான் எழுத என்ன இருக்கிறது. அதான் ஒரு பத்திரிக்கை விடாமல் எழுதி தீர்த்துவிட்டனரே!

said...

தாரா என்னும் பறவை வாத்து மாதிரியா?
நல்லா இருக்கு காட்டாறு.

said...

//வல்லிசிம்ஹன் said...
தாரா என்னும் பறவை வாத்து மாதிரியா?
நல்லா இருக்கு காட்டாறு
//
ஆமாங்க வல்லி! வாத்தைவிட பெரியதாக இருக்கும். புத்திசாலியா இருக்கிற மாதிரி இருக்கும். உதாரணத்திற்கு, சாலையை கடக்கும் போது, ஒரு தாரா குரல் கொடுத்துக் கொண்டே நகர, மற்றவை இங்கும் அங்கும் தலையைத் திருப்பி திருப்பி பார்த்தவாறு நடந்து செல்வதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.