தோழியின் மரணம்
எப்படியடி முடிந்தது உன்னால் மட்டும்!
அன்னையின் கருவறையிலிருந்து வெளி வர முடிந்தது
தடுமாறி எழுந்து பின் காலூன்றி நிற்க முடிந்தது
நடை பயிலும் போது விழுந்து மீண்டும் எழுந்து நடக்கத் தெரிந்தது
வாழ்க்கையின் சரிவுகளைத் தாண்டி முன்னேற முடிந்தது
வாழ்க்கைப் பட்ட இடத்தின் நெளிவு சுளிவுகளுக்கேற்ப மாற முடிந்தது
குழந்தை பிறப்பில் மரித்து உயிர்த்தாய்
கணவனின் கண்ணிமையாய் இருக்க முடிந்தது
கண்ணின் மணியாய் குழந்தையை வளர்க்க தெரிந்தது
பாழும் நீரில் விழுந்து எழ தெரியாது போனது ஏனோ
இன்று,
கட்டிய கணவன் துடிக்க,
கண்மணிக் குழந்தை சூழ்நிலை புரியாது விழிக்க,
தாயின் அழுகுரல் மேலோங்க,
தந்தையின் விழி வற்ற,
உற்றவரையும், மற்றவரையும் தவிக்க விட்டு,
அரணாய் கட்டி காத்த உன் இல்லம் விட்டு
சென்றாயடி, மனம் கொன்று வென்றாயடி
ஏக்கம் தீர வழியில்லையடி
உன் தூக்கம் கலைக்க ஒரு தாலாட்டு இல்லையடி
எப்படியடி முடிந்தது உன்னால் மட்டும்!
8 பேர் மறுமொழிந்துள்ளனர்:
சென்னையில், என் தோழி நீச்சல் கத்துக்க ஆசைப்பட்டு, சரியான காப்போன் (Guard) இல்லாமல், நீரில் இருக்கும் போது cramps வந்து, 5 அடி நீரில் அமிழ்ந்து இறந்து போனாள். அவள் பயிற்சிக்கு போகுமுன்னால் நான் தொலைபேசியில் பேசும் போது உங்க அண்ணாவுக்கு இன்னும் மிதக்க கூட தெரியவில்லை என்று தன் கணவனை கிண்டல் பேசி சென்றவள், திரும்பவில்லை. அவளின் நினைவாக......
//காட்டாறு said...
சென்னையில், என் தோழி நீச்சல் கத்துக்க ஆசைப்பட்டு, சரியான காப்போன் (Guard) இல்லாமல், நீரில் இருக்கும் போது cramps வந்து, 5 அடி நீரில் அமிழ்ந்து இறந்து போனாள். அவள் பயிற்சிக்கு போகுமுன்னால் நான் தொலைபேசியில் பேசும் போது உங்க அண்ணாவுக்கு இன்னும் மிதக்க கூட தெரியவில்லை என்று தன் கணவனை கிண்டல் பேசி சென்றவள், திரும்பவில்லை. அவளின் நினைவாக...... //
:(
ஒண்ணும் சொல்லத்தோணல.
-:(((
கவலை விடு தோழியரே/தோழரே...... சாவு என்பது மறு வாழ்வு........ நாம் விட்டுச் சென்ற மிச்சங்கள் இப்படித் தான் பேச வைக்கும். இனி கண்ணீருக்கு ஜோரா டாட்டா சொல்லுங்க பார்ப்போம்.
\காட்டாறு said...
கவலை விடு தோழியரே/தோழரே...... சாவு என்பது மறு வாழ்வு........ நாம் விட்டுச் சென்ற மிச்சங்கள் இப்படித் தான் பேச வைக்கும். இனி கண்ணீருக்கு ஜோரா டாட்டா சொல்லுங்க பார்ப்போம\\
டாட்டா...டாட்டா ;-(
ஆனாலும் மனதில் வலியுடன்
:(
இறந்த தோழி ஒருத்தி தான். அதனால் பிறந்த தோழ, தோழியர் பலர். தமிழ்மணத்துல கிடைத்த நண்பர்களைத்தான் சொல்கிறேன்.
கட்டாயம் தோழமை உண்டு.
பரிவு உண்டு.
உங்கள் தோழி வீட்டாராக்கும் உங்களுக்கும் ஆறுதல் கிடைக்கட்டும்.
//வல்லிசிம்ஹன் said...
கட்டாயம் தோழமை உண்டு.
பரிவு உண்டு.
உங்கள் தோழி வீட்டாராக்கும் உங்களுக்கும் ஆறுதல் கிடைக்கட்டும்.
//
நன்றி வல்லி. தோழமை பிரிவுத்துயர் ஆற்றும் அல்லவா. உங்கள் வார்த்தைகள் ஆறுதல் தருகின்றன.
Post a Comment