Monday, March 19, 2007

கருமை

கடவுளின் இருப்பிடம்
கருமை கர்ப்பகிரஹம்

உறவின் தொடக்கம்
இரவின் கருமையில்

உயிரின் தொடக்கம்
அன்னையின் கருவறை

விவசாயிக்கு கொண்டாட்டம்
வானம் கருமைகொண்டால்

பூமி செழிப்பது
கார் மேகத்தால்

நிலத்தில் விளையும்
வைரமும் கருமையே

சுட்டெரிக்கும் சூரிய வெயிலில்
கண்ணைக் காக்கும் கருப்புக் கண்ணாடி

திருஷ்டி கழிக்க
குழந்தையின் கன்னத்தில் கருப்பு மை

கருமை தான் தொடக்கம்
நிறங்கள் அதிலிருந்து வந்தவை

நமை என்றும் பிரியா
நிழலும் கருமையே

கலப்பிடமில்லா கற்புடைய நிறமும்
கலவையில்லா கருப்பு ஒன்றே

பறவைகள் பல இருப்பினும்
ஒற்றுமை புகட்டும் காகமும் கருமை

இனிய குரலில்
இவ்வுலகை மயக்கும் கரிய குயில்

கருமை ஒரு எளிமை
சிறுமை இல்லை அன்பே

ஆயிரம் பெருமைகள் இவ்வண்ணத்திற்கு இருந்தாலும்
சிகரமாய் என்னுள் எழுந்தருளிய கருமை
என் தம்பி அது உன் நிறமாதலால்!

-- காட்டாறு

5 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

//கருமை ஒரு எளிமை
சிறுமை இல்லை அன்பே
//

உண்மைதான்!

ஆனால் ஆவி என்றால் எல்லோரும் உடனே வெண்ணிறத்தில் கற்பனை செய்கிறார்கள்!

said...

//கருமை ஒரு எளிமை
சிறுமை இல்லை அன்பே
//

உண்மைதான்!

ஆனால் ஆவி என்றால் எல்லோரும் உடனே வெண்ணிறத்தில் கற்பனை செய்கிறார்கள்!

said...

இரவில் மட்டும் தான் ஆவியார் தெரிவார் என்பதாலோ? எனக்கு மட்டும் நீங்கள் பகலில் அல்லவா நேசக் கரம் நீட்டினீர்கள். இதைப் பற்றி ஒரு கட்டுரையே எழுதலாம் போல அல்லவே.

said...

வெல்கம் காட்டாறு.உங்கள் சுழலில் எங்களைப் போல்பலரை காணாமல் செய்து விடாதீர்கள்.[செய்ய வாழ்த்துக்கள்]உங்க புரொபைல் எங்கெ?

said...

//வெல்கம் காட்டாறு.உங்கள் சுழலில் எங்களைப் போல்பலரை காணாமல் செய்து விடாதீர்கள்.[செய்ய வாழ்த்துக்கள்]//

கண்மணி, நீங்க பெரியவுக, அப்படி சொல்லலாமா..... நீங்கள் சொன்னதை வாழ்த்தாக எடுத்துக்கொள்கிறேன். காட்டாறு தன்னுடன் கொண்ட பொருளின் தன்மையை அடைவது மட்டுமில்லாது, தன் தனித்தன்மையையும் அத்துடன் இணைத்துக் கொள்ளும். ஆகவே, சுழலில் நீங்கள் காணாமல் போக மாட்டீர்கள். மாறாக நான் தமிழ்மணத்தில் ஒன்றாக வாய்ப்பு இருக்கிறது.

//உங்க புரொபைல் எங்கெ? //
ப்ரோபைல் எனக்கு தெரியுதே. சரி பாத்துட்டு திரும்ப சொல்லுறீங்களா?.