Tuesday, February 05, 2008

தலைகீழா தொங்க விட்டுட்டாங்க டோய்


பயம் என்பது மனிதனை ஆட்டிப் படைக்கும் ஆட்கொல்லி. பயத்தை போக்க பயம். இதை வாழ்க்கையின் மையமாக வைத்தே நெறையா மக்க மனுசங்க வாழ்ந்துட்டு இருக்காங்க…. எதுக்காக பயம் வருதுன்னு ஒவ்வொருத்தரையும் கேட்டுப் பாருங்களேன். சரியா பதில் சொல்லத் தெரியாது. எங்க வீட்டு 12 வயது சொல்லியது எனக்கு பேய் கதை கேட்டால் பயமின்னு. 4 வயது சொல்லியது நான் பந்தை உடைத்தால் அப்பா அடிப்பாரேன்னு பயம். 25 வயது சொல்லியது அவள் என்னை மறுத்துவிடுவாளோன்னு பயம். 40 சொல்லியது பக்கத்து வீட்டு தங்கமணியை ரசிக்கிறது எங்கூட்டு தங்கமணிக்கு தெரிஞ்சிருமோன்னு பயம். 64 சொல்லியது என்னோட கடேசி மகனின் திருமணத்தை பார்க்காமலே செத்துப் போயிருவேனோன்னு பயம். 89 சொல்லியது நான் செத்துப் போனா உனக்கு சொல்லியனுப்பாம போயிருவாங்களோன்னு பயம். இப்படியே எதுக்கெடுத்தாலும் பயம். அட எதுக்கப்பா இப்படியெல்லாம் பயப்படனுமின்னு எனக்கு தோணும். சரி… அது நாம். :-) இப்போ எதுக்கு இப்படி நீட்டி முழக்கிட்டு இருக்கேன்னு கேக்குறீங்களா… ஊரிலிருந்து வந்த என் தோழிக்கு நம்ம தெனாலியை விட ரொம்ப ரொம்ப பயம். அவுங்க முன்னாடி நின்னுட்டே… ப்ப்பன்னு சொன்னோமின்னாலும் திடுக்கிடுவாங்க…. இவங்க வந்து ஒரு அபாயகரமான (?) அனுபவத்தை/நினைவுகளைத் தூண்டி விட்டுப் போனாங்க. எனக்கும் அதை பதிவா தர ஆசை வரவே… உங்க கழுத்தை அறுக்க கிளம்பிட்டேன்.

8 ஆண்டுகளுக்கு முன்……. டண் டண் டண் டண் டைங்க்…. 7 தோழ தோழியர்கள் சேர்ந்து பன்ஜி ஜம்பிங் (bunjee jumping) போகலாமின்னு கிளம்பினோம். 1 மாதத்துக்கு முன்ன புக் செய்து….. அதோ இதோன்னு எதிர்பார்த்த நாளும் வந்திருச்சி. வீர தீரமா கிளம்பியாச்சி. ஆனா மனசு திக் திக்குனு அடிக்குது. ஓவர் ரவுசு பண்ணுறவங்க கூட அமைதியா வர்றாங்க. நாங்க இருந்த இடத்திலிருந்து 2 மணி நேரப் பயணம். அந்த இரண்டு மணி நேரமும், எப்போதும் ஊர்சுற்றும் போது இருக்கும் துடிதுடிப்போ, கொள கொளா வளவளா பேச்சோ இல்லாமல் காரின் வேகத்துக்கு ஈடு கொடுத்து மனசு துடிச்சிட்டு இருக்குது. எப்படா ஊர் வந்து சேருமின்னு இருக்குது. கை காலெல்லாம் ஜில்லுன்னு இருக்குற மாதிரி தோணுது. இத்தனைக்கும் நாங்க போனது கோடை காலத்திலே.

ஒரு வழியா ஊர் வந்து சேர்ந்தோம். அங்கே கூடி இருந்த மக்கள் எல்லாருமே கொஞ்சம் அமைதியா இருக்குற மாதிரி தெரிஞ்சது. என்னோட மன ப்ரம்மையா கூட இருக்கலாம். ஏற்கனவே வலைகளில் தேடிப் பிடித்து பன் ஜி ஜம்பிங் படித்திருந்தாலும், இப்போ நேர்ல பார்க்கும் போது அப்படியே இதயமே வெளில வந்துவிடுமோன்னு ஓவர் ஃபிலிங்க்ஸ். இதிலே 2 பேரு காசு போனாலும் பரவாயில்லைன்னு வரமாட்டேன்னு அடம் பிடிச்சிட்டாங்க. அவங்களை சமாதன படுத்துற மனநிலைல யாரு அங்கே இருந்தாங்க? அதான் எல்லாருக்குமே மனசு எகிறி குதிச்சிட்டு தானே இருக்குது. எங்கள் முறை வந்தது. வீராதி வீரன் எங்கள் குழுவிலே சின்னவன் நான் முதல்ல போறேன்னு ஜம்பமா கிளம்பினான். பிறகு தான் தெரிஞ்சது பயத்திலே அப்படி உணர்ச்சி வசப் பட்டுட்டானாம். இடுப்பிலே பட்டையா ஒரு கயித்தை கட்டினாங்க. அப்புறம் அந்த கயிற்றின் ஒரு முனை தொடையை சுற்றி கெண்டைக்காலில் முடிந்திருந்தது. மற்றொரு முனை நீள கயிற்றில் மாட்டிவிடுவதற்காக சற்று லூசாக இருக்குது. நம் முறை வந்ததும், ஒரு அக்கா (அழகான பெண்மணின்னு சொல்லியிருக்கனுமோ) நம் இடுப்பில், கெண்டைக்காலில் கட்டிய முடிச்சிகள் சரியாக இருக்குதான்னு பாக்குறாங்க. அப்புறம் க்ரேன் வந்து பக்கத்தில் நிக்குது. அதுக்குள்ள தள்ளி விடுறாங்க. க்ரேனில் இரண்டு ஹண்ட்சம்ஸ் இருக்குறாங்க. அரைக்கால் உடுப்பில் கையில்லாத சட்டையில், பச்சை குத்திய புஜங்களை காண்பித்துக் கொண்டு சிரிப்புடன் உள்ளே வரவேற்றார்கள். க்ரேன் கீழிருந்து 300 அடி மேலே செல்லும் வரை நம்மிடம் பேச்சு கொடுத்துக் கொண்டும், விளக்கங்கள் (நாம் கேட்காமலே) சொல்லிக் கொண்டும் வருகின்றனர். இன்னக்கி வரை என்ன பேசினாங்கன்னு முழுசா எனக்கு தெரியாது. முதல் முறையா உங்களுக்கு அப்படின்னு அவங்க கேட்டதும், பூம்பூம் மாடு மாதிரி கண்கள் உருட்டியது மட்டும் ஞாபகம் இருக்குது. சின்ன சின்ன தகவல்கள் ஞாபகம் இருக்குது. மத்தமடி எல்லாமே காற்றோடு காற்றாய்…

முதலாமவன் குதித்தாயிற்று. அதற்குள் எனக்கு முன்னால் நின்ற நண்பனும், நானும் ரெடியா இருக்கோம். எனக்கப்புறம் இன்னும் இருவர் எங்கள் நண்பர்கள். எப்படி தப்பிப்போமின்னு இது வரை கணக்கு போட்டுட்டு இருந்த மனம், இப்போது எப்படா முடியுமின்னு கணக்குப் போட ஆரம்பிச்சிருச்சி. இரண்டாவதாக குதித்தவன் சரியாக(?) விழாததால், வானத்தில் குட்டிக் கரணம் அடித்துக் கொண்டிருக்கிறான். கயிறு வேகமாக சுற்றுகிறது. எனக்கு முன்னால் போனவனுக்கா இந்த நிலமை வரணும். அதைப் பார்த்ததும் என்னோட கால் கையெல்லாம் கழண்டு தனித் தனியா விழுற மாதிரி கொள கொளன்னு இருக்குது. தலை ஒரு பக்கமும், கீழே ஒரு பக்கமும் பிளந்து நிக்கிற மாதிரி இருக்குது. நாபிலேயிருந்து என்னவோ உருண்டு அப்படியே வாய் வழியா வெளில வருவது மாதிரி இருக்குது. பின்மண்டைல யாரோ சம்மட்டியால அடிக்கிற மாதிரி இருக்குது. முன்மண்டைல யாரோ குடையிற மாதிரி இருக்குது. கண்ணெல்லாம் பிதுங்கி வெளில வந்துருமோன்னு இருக்குது. முன்னால் இருந்தவன் எப்போ இறங்கினான், நான் எப்போ க்ரேனில் ஏறினேன்னு தெரியல. ஏதோ தள்ளிக் கொண்டு போய் விட்ட மாதிரி இருக்குது. ட்ராகன் பச்சை குத்தியவன், என் கைகளை எடுத்து தன் கைகளில் அடக்கிக் கொண்டு, தைரியம் சொல்ல ஆரம்பித்தான். நானும் ஏதேதோ உளறிக் கொண்டே தான் இருந்தேன். 300 அடி மேலே மெல்ல ஊர்ந்து வந்த க்ரேன் போலவே என் மனசும் மெல்ல மெல்ல பயம் தெளிந்து புது அனுபவத்திற்கு தயாராகியது. பயத்தை நாம் வெல்லும் வரை தானே பயத்திற்கு மரியாதை. வென்றதும் இருந்த இடம் தெரியாமல் சென்றுவிடுமல்லவா. அது போல 300 அடி உயரத்திலிருந்து கீழே விழுகையில் சிறு கயிறு மட்டும் தாங்கிக் கொள்ளும் நம்மை என்ற தைரியத்துடன் குதிக்க நான் ரெடி. அப்போ நீங்க?

இளைஞர்கள் ஆல் த பெஸ்ட் சொல்லி முதுகில் சின்ன புஷ். க்ரேனில் இருக்கும் போது சின்ன சின்ன தகவல்கள் சொல்லியிருந்தாங்க. அவங்க லேசா தள்ளியதும், நான் தலை குப்புற விழ ஆரம்பித்தேன். விழும் போது கண்களை அகலத் திறந்து சுற்றியுள்ளவற்றைப் பார்த்தாலும், ஒன்னுமே பார்க்கவில்லை. :-) படக்குன்னு சுண்டி விட்ட மாதிரி ஒரு லெவல் வந்ததும் கயிறு நின்னு வலமும் புறமும் ஆட ஆரம்பிச்சது. அதே நேரத்திலே பயமும் அறவே போயிருச்சி. நான் தலைகீழாக தொங்க, இப்போது கயிறு வலமும் இடமுமாக ஆடுகிறேன். பெண்டுலம் போல இருக்குது. நான் கைகள் இரண்டையும் விரித்தவாறு மெல்ல பறப்பது போல் இருந்தது. என்னில் உள்ளுறுப்பு, வெளியிறுப்பு என்ற நிலை மாறி விட்டது. கயிறு ஒரு நிலைப்பட்டதும், காற்றிலே இரண்டறக் கலந்த மாதிரியும், நானும் இயற்கையும் வேறல்ல மாதிரியும், ஒருவித லகு தன்மை தொற்றிக் கொண்டது. எதுவுமே பாரமா இல்ல. மனசு லேசா இருக்குது. உடல் லேசா இருக்குது. காற்றாய் நான் மாறிவிட்டேன். 37 செகண்டு தான் இந்நிலை இருக்குமின்னு சொன்னாங்க. ஆனா எனக்கு ஒரு யுகமே கழிந்த மாதிரி இருந்தது. நான் அன்று அனுபவித்த அக்கணங்கள்…. அன்று என்னுடன் இருந்த ஏகாந்த நிலை….. ம்ம்ம்…. இன்று அழியா நினைவுகள் ஆகிவிட்டன.

கயிறு அசைவது நின்றதும், தலைகீழாக தரைக்கு வந்ததும், வாழ்த்தி அனுப்பிய பெண்மணி என்னிடம் வாஞ்சையுடன் கதை கேட்டதும், மேல் கட்டியிருந்த கயிறு அவிழ்க்கும் வரை மனதில் கொண்ட அமைதியை பிடித்து வைத்திருந்ததும், தன் நிலை வர 20 நிமிடங்கள் ஆகியதும், எனக்கு அப்புறம் செல்ல வேண்டிய 2 நண்பர்களும் ஓடி ஒளிந்து கொண்டதும் விவரிக்க ஆரம்பித்தால் பதிவு பெருசா ஆயிரும். அதனால இப்போ வீடியோ பாருங்க.

http://youtube.com/watch?v=lVBcCvsQ8bM&feature=related
http://youtube.com/watch?v=Y1soPMxNCLE
http://youtube.com/watch?v=nj8mumkOY78&feature=related

பின்குறிப்பு:
விளையாட நெறையா செலவு செய்ததால, வீடியோவுக்கு அந்த அளவு பணம் கொடுக்க வசதியில்லாமல் போயிருச்சி. அதனால இரவலா யாரோ ஒருவர் செய்த பயணத்தை யூ ட்யூபில் கடன் வாங்கி உங்களுக்கு தருகிறேன் மக்களே. ஏமாத்திட்டேன்னு நெனக்காதிங்க.

42 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

ஆஹா....என்ன ஒரு அனுபவம்..சூப்பர் ;))

பதிவை படிக்கும் போதும் முதலில் பயம்.. பிறகு பயம் போயிடுற மாதிரி இருக்கு...;))

நன்றாக எழுதியிருக்கிங்க ;)

said...

ஒரு வீர விளையாட்டை பயத்தில் ஆரம்பித்து, ஆனந்தத்தில் முடித்த தங்களின் சாகசம் பாராட்டத்தக்கது. வாழ்த்துகள். விவரித்திருக்கும் விதம் அருமை.

said...

சூப்பரு!!
அப்படியே நாங்க எல்லோரும் அங்கே நின்றுக்கொண்டிருந்தது போன்ற உண்ர்வை தந்துவிட்டீர்கள்!!
வாழ்த்துக்கள்!! B-)

said...

வாவ்! படிக்கும் போதே காலெல்லாம் வேர்க்க ஆரம்பித்துவிட்டது.
இதை ஒரு தடவையாவது செய்து பார்க்கவேண்டும்.பயம் இல்லை,சிங்கையில் இல்லை.

said...

நல்ல தைரியம் உங்களுக்கு...வீராங்கனைதான்..
பாராட்டுகள்...

said...

பொறுமையா படிச்சிட்டு வர்றேன்....

ஹி..ஹி...ஒரே டென்சனப்ப்பா...மார்க்கெட் இப்பத்தான் துவங்கியிருக்கு...

said...

ஒரு பக்கம் மார்க்கெட் சர்ர்ரிய சர்ரிய இன்னொரு பக்கம் நீங்க குப்றிக்கா குதிச்சத படிச்சப்போது...ஹி..ஹி...என்னவோ நானே கீழ வுளுந்துட்ட மாதிரி ஒரு ஃபீலிங்க்....

ஆனாலும் உங்களுக்கு நெம்ப தைரியந்தான்....

ஏனுங்க...குறுதி அழுத்தம் இருக்கறவுகள குதிக்க வுடுவாகளா...கொஞ்சம் வெவரம் கேட்டுச் சொல்லுங்க தாயீ....

said...

ஒரு பக்கம் மார்க்கெட் சர்ர்ரிய சர்ரிய இன்னொரு பக்கம் நீங்க குப்றிக்கா குதிச்சத படிச்சப்போது...ஹி..ஹி...என்னவோ நானே கீழ வுளுந்துட்ட மாதிரி ஒரு ஃபீலிங்க்....

ஆனாலும் உங்களுக்கு நெம்ப தைரியந்தான்....

ஏனுங்க...குறுதி அழுத்தம் இருக்கறவுகள குதிக்க வுடுவாகளா...கொஞ்சம் வெவரம் கேட்டுச் சொல்லுங்க தாயீ....

said...

அஹா சூப்பெர் போங்க......ரொம்ப ரசிச்சு படிச்சேன்...:):) முYஅர்ச்சி பண்ணனும்ன்னு நினைக்கரேன்...:):)

said...

பயங்கர தைரியசாலிதான் போங்க!!
படிக்கும் போது நானே தலகீழா தொங்கற மாதிரி ஒரு ஃபீலிங்!!

said...

பயங்கர தைரியசாலிதான் போங்க!!
படிக்கும் போது நானே தலகீழா தொங்கற மாதிரி ஒரு ஃபீலிங்!!

said...

நாங்கள்ளாம் கயரே கட்டாம உயரமான தென்னை மரத்திலிருந்து கிணற்றில் குதிப்போம். ஏனோ என்றும் நாங்கள் உயரத்தை கண்டு பயந்தது இல்லை. ஒரு தடவை ஓவரா உணர்ச்சிவசப்பட்டு கிணற்றில் உள்ள ஒரு திட்டில் குதித்து காலை ஒடித்துக்கொண்ட அனுபவமும் இருக்கிறது!!

said...

கோபி, சீனா, CVR, பாசமலர் நன்றிங்கங்க.... நீங்களும் சான்ஸ் கிடைச்சா முயற்சி செய்யுங்க. அருமையான அனுபவம்.

said...

// வடுவூர் குமார் said...
வாவ்! படிக்கும் போதே காலெல்லாம் வேர்க்க ஆரம்பித்துவிட்டது.
இதை ஒரு தடவையாவது செய்து பார்க்கவேண்டும்.பயம் இல்லை,சிங்கையில் இல்லை.
//

குமார், கண்டிப்பா செய்யுங்க. வீட்டுல சொன்னீங்கன்னா விட மாட்டாங்க. நான் எங்க வீட்டிலே செய்து முடித்த பின்னர் சொன்னதற்கே, ஏகப்பட்ட டென்ஷன் ஆகி, கலாட்டா செய்தது இன்னும் பசுமையா நினைவிருக்குது. :-)

said...

//......என்னில் உள்ளுறுப்பு, வெளியிறுப்பு என்ற நிலை மாறி விட்டது. கயிறு ஒரு நிலைப்பட்டதும், காற்றிலே இரண்டறக் கலந்த மாதிரியும், நானும் இயற்கையும் வேறல்ல மாதிரியும், ஒருவித லகு தன்மை தொற்றிக் கொண்டது. எதுவுமே பாரமா இல்ல. மனசு லேசா இருக்குது. உடல் லேசா இருக்குது. காற்றாய் நான் மாறிவிட்டேன்.......//

ச்சான்ஸே இல்லை!...எத்தனை லாவகமான நடை...நானுந்தான் எழுதுறேன்...ம்ம்ம்ம்ம்

said...

// PAISAPOWER said...
ஒரு பக்கம் மார்க்கெட் சர்ர்ரிய சர்ரிய இன்னொரு பக்கம் நீங்க குப்றிக்கா குதிச்சத படிச்சப்போது...ஹி..ஹி...என்னவோ நானே கீழ வுளுந்துட்ட மாதிரி ஒரு ஃபீலிங்க்....
//
இதெல்லாம் சகஜமப்பான்னு விழுந்து எழுந்துக்க வேண்டியது தான். ஜோரா கைத்தட்டி உற்சாக படுத்த ஒரு பதிவு ஒன்னும் எழுதி பின்குறிப்பும் போட்டீங்கன்னா.. முடிஞ்சி போச்சி... என்ன சொக்கரே... சரிதானே?

//
ஆனாலும் உங்களுக்கு நெம்ப தைரியந்தான்....
//
பயமறியாமலே வளர்ந்துட்டேன்... ஹி ஹி ஹி..

//
ஏனுங்க...குறுதி அழுத்தம் இருக்கறவுகள குதிக்க வுடுவாகளா...கொஞ்சம் வெவரம் கேட்டுச் சொல்லுங்க தாயீ....
//
குதிக்கிறது ரெடியானதும் சொல்லியனுப்புங்க. உங்க இரத்த அழுத்தம் ஏறாமல் பார்த்துக்கறது என்னோட வேலை. மத்தபடி நெம்ப கவலைப் பட வேண்டாம். குதிக்கிறது முன்னர் தான் படபடப்பு எல்லாம். அப்புறம் சூப்பரா இருக்கும். அழுத்தமெல்லாம் காணாமல் போயிரும். :-)

said...

// Radha Sriram said...
அஹா சூப்பெர் போங்க......ரொம்ப ரசிச்சு படிச்சேன்...:):) முYஅர்ச்சி பண்ணனும்ன்னு நினைக்கரேன்...:):)
//

ராதா கண்டிப்பா முயற்சி செய்யுங்க. இப்போல்லாம் இண்டோர் சிமிலேஷன் முறை வந்துருச்சி. பரந்த வெளில குதிக்க பயமா இருந்திச்சின்னா, சிமிலேடட் ரைட் போய் வாங்க. என்ன இருந்தாலும் ஒரிஜினல் மாதிரி இருக்காது தான். :-)

said...

// சந்தனமுல்லை said...
பயங்கர தைரியசாலிதான் போங்க!!
படிக்கும் போது நானே தலகீழா தொங்கற மாதிரி ஒரு ஃபீலிங்!!
//

முல்லை, எழுதும் போது எனக்கும் திரும்ப தலைகீழா தொங்குன ஃபீலிங்க்ப்பா... நெசமாவே அந்த கணங்களில் வாழ்ந்த மாதிரி இருந்தது. Mind can trick into anything அப்படின்னு சொல்லுறது நூத்துக்கு நூறு உண்மை தான்.

said...

// கருப்பன்/Karuppan said...
நாங்கள்ளாம் கயரே கட்டாம உயரமான தென்னை மரத்திலிருந்து கிணற்றில் குதிப்போம். ஏனோ என்றும் நாங்கள் உயரத்தை கண்டு பயந்தது இல்லை. ஒரு தடவை ஓவரா உணர்ச்சிவசப்பட்டு கிணற்றில் உள்ள ஒரு திட்டில் குதித்து காலை ஒடித்துக்கொண்ட அனுபவமும் இருக்கிறது!!
//
கருப்பன், நீங்க சொல்லுறது சரிதான். எனக்கும் எங்க பாட்டியம்மா வீட்டுக்கு போகும் போது வாய்க்காலின் மேல் அமைந்த பிரிட்ஜிலிருந்து மாமாவின் முதுகு பற்றி குதித்த அனுபவமும், தனியாக வட்டக் கிணற்றில் குதித்த அனுபவமும், கடலில் இரண்டு பனை ஆழத்திலே போட்டிலிருந்து குதித்த அனுபவமும் இருக்குது. ஆனா பாருங்க... இந்த படபடன்னு மனசு அடிச்சிக்கிறது மட்டும் இன்னும் நிக்கல. ஒவ்வொரு முறை குதிக்கையிலும் புதுமையா, முதல் முறை குதிக்கிற மாதிரி தான் இருக்குது. :-) அது தானே வேணும், இல்லையா? அடுத்து 1300 அடி குதிக்க ஒரு ப்ளான் இருக்குது. பார்ப்போம்.

said...

//......என்னில் உள்ளுறுப்பு, வெளியிறுப்பு என்ற நிலை மாறி விட்டது. கயிறு ஒரு நிலைப்பட்டதும், காற்றிலே இரண்டறக் கலந்த மாதிரியும், நானும் இயற்கையும் வேறல்ல மாதிரியும், ஒருவித லகு தன்மை தொற்றிக் கொண்டது. எதுவுமே பாரமா இல்ல. மனசு லேசா இருக்குது. உடல் லேசா இருக்குது. காற்றாய் நான் மாறிவிட்டேன்.......//

இது எதுக்கோ ""முன்னோட்டம்"" பார்த்த மாதிரி தெரியுதே... :))

எப்படியோ பரவச நிலையை ருசிச்சிருந்தா சரிதான்... என்னது நான் பண்ணணுமா, அதுக்கெல்லாம் எங்களுக்கு வேற மருந்து இருக்கு சும்மா போட்டா ஆகாசத்திலயே இருந்துட்டு வருவோம்ல...

said...

கண்ணே...

இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா..கலக்கறீங்களே..எழுதின விதம் நானே குபிடீர்னு விழுந்துட்டேனே...எங்களை எல்லாம் பறக்க வச்சுட்டீங்களே

said...

சொல்ல விட்டுப் போச்சு..

படத்துல நீங்க அழகு...அதுவும் அந்த பல்லு அழகோ அழகு...:-)))

said...

//
பயத்தை நாம் வெல்லும் வரை தானே பயத்திற்கு மரியாதை
//

சூப்பரா சொன்னீங்க.

நல்லா எழுதியிருக்கீங்க. வீடியோ இனிமேதான் பாக்கணும்.

said...

//Fear prevents us from fullness of life and make us afraid of all the ecstatic experiences one could have in this beautiful world. Fear makes us dull and incapable of thinking straight. ///

அருமை டா... ஒவ்வொவு பதிவேலேயும் இப்ப கோட் மாத்தீட்டு வரீங்க...இதுவும் சொல்ல விட்டுப் போச்சு..சூப்பர்

said...

//
மங்கை said...
சொல்ல விட்டுப் போச்சு..

படத்துல நீங்க அழகு...அதுவும் அந்த பல்லு அழகோ அழகு...:-)))
//
ரெட்டை ஜடை!?!?

Kavitha said...

ஹா...வாவ்...அம்மாடி...வேற என்னத்த சொல்ல? நீங்க தைரியசாலினுத் தெரியும். ஆனா இம்புட்டு தைரியமா? வாழ்த்துக்கள்..

Anonymous said...

வவ்வால வச்சு ஒண்ணும் காமெடி கீமடி பண்ணலையே?

தலைப்பை மட்டும் படிப்போர் சங்கம்

said...

//பயம் என்பது மனிதனை ஆட்டிப் படைக்கும்

ஆட்கொல்லி. பயத்தை போக்க பயம். இதை வாழ்க்கையின்

மையமாக வைத்தே நெறையா மக்க மனுசங்க வாழ்ந்துட்டு

இருக்காங்க…. எதுக்காக பயம் வருதுன்னு

ஒவ்வொருத்தரையும் கேட்டுப் பாருங்களேன். சரியா பதில்

சொல்லத் தெரியாது.//

பயம் என்பது மூளையின் ஒரு இயற்கையான மற்றும்

தேவையான உணர்வுதான். அஞ்சுவது அஞ்சாமை பேதமை

என்பார் சான்றோர்.
பயம் ஏன் வருகிறது ? அதன் துவக்க நிலை மூளையில்

எந்த இடம்? என்ன ஹார்மோன் அதிகமாக பயம் ஏற்படும்

போது சுரக்கிறது ? இப்படிப்பட்ட ஏகப்பட்ட சமாசாரங்கள்

fright and flight responses
in brain physiology
எல்லாம் சொல்லி உங்களை பயமுறுத்தப்போவதில்லை.

ஆனாலும் ஒன்றே ஒன்று சொல்லித்தான் ஆகவேண்டும்.
எதைப்பற்றி நாம் ஆரம்பித்தில் பயப்படுகிறோமோ, அது

(அல்லது அவர்) நாளடைவில் நம்மைப்பார்த்து

பயப்படுகிறது (றார்).
திருமணம் ஆன புதிதில் மாமியாரைக் கண்டு

பயப்படுகிறாள் மருமகள்.
நாளடைவில் மாமியார் மருமகளைக்கண்டு பயப்படுகிறாள். (ungal case eppadiyo?)
இதைத்தான் in lay man's language குளிர் விட்டுப்போதல்

என்கிறோம்.(secretion of adrenaline getting adjusted to

emotional behavioural patterns .)
ஆமாம். இந்த jumping பெரிய விஷயமாக்கும் ! நான்

இதுவரை பத்து தடவை குதித்துவிட்டேன் என்கிறார்

என்னுடைய நண்பரின் பாட்டி (இப்போது 83 வயது). அவர்

சொன்ன கதை இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. குதிக்க

உயரே போகும்போது ஒரு தரம் அவரது வைட் தாங்காமல்,

க்ரேன் அந்தரத்திலிருந்து முறிந்து விழுந்து விட்டதாம்.

இது எப்படி இருக்கு !

அது இருக்கட்டும். உங்கள் சாதனையைக் கேட்டு, கல்பனா,

சுனீதா வில்லியம்ஸ் க்கு அடுத்தபடியாக,
உங்கள் பெயர் short list செய்யப்பட்டுள்ளதாமே ?

உண்மையாவா ?

மேனகா சுப்புரத்தினம்.
தஞ்சை.
பின் குறிப்பு:
சாகசம் இல்லாத வாழ்க்கையில் என்ன பயன்? adventurous

sport
முக்கியமாக தேவைதான். ஆயினும் சாகசம் இணைந்த
ஆக்கபூர்வமான விளையாட்டுகளும் இருக்கின்றன்.
How to live creatively every moment
என்பது பற்றி படித்திட‌
வருகை தாருங்கள்.
http://meenasury.googlepages.com/livecreativelyeverymome

nt

said...

படிக்கிறப்ப செம திரில்லா இருந்துச்சு !!!! :)

said...

ரொம்பத்தான் தைரியம் உங்களுக்கு!!

நான் பாலியில், கடைசி நிமிடத்தில் பயந்து வெளியேறி விட்டேன் :)

மேலும், பல சாகசங்கள் செய்ய வாழ்த்துக்கள்!!

said...

// இரண்டாம் சொக்கன்...! said...
ச்சான்ஸே இல்லை!...எத்தனை லாவகமான நடை...நானுந்தான் எழுதுறேன்...ம்ம்ம்ம்ம்
//

இது தான் அக்கரைக்கு இக்கரை பச்சைன்னு சொல்லுவாங்களோ? :-)

said...

// Thekkikattan|தெகா said...
எப்படியோ பரவச நிலையை ருசிச்சிருந்தா சரிதான்... என்னது நான் பண்ணணுமா, அதுக்கெல்லாம் எங்களுக்கு வேற மருந்து இருக்கு சும்மா போட்டா ஆகாசத்திலயே இருந்துட்டு வருவோம்ல...
//

அண்ணே... அதெல்லாம் எனக்கு சொல்லித் தர வேணாம். நான் பூமியிலே கொஞ்ச நாளு இருக்கோணும். அம்புட்டு தான் சொல்லுவேன்.

said...

// மங்கை said...
இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா..கலக்கறீங்களே..எழுதின விதம் நானே குபிடீர்னு விழுந்துட்டேனே...எங்களை எல்லாம் பறக்க வச்சுட்டீங்களே
//
இப்போ தானே ஆரம்பிச்சிருக்கோம். ஒன்னு ஒன்னா சொல்லுவோம். ;-)

// படத்துல நீங்க அழகு...அதுவும் அந்த பல்லு அழகோ அழகு...:-)))
//
ஹி ஹி ஹி.. இதை பார்த்ததும் எனக்கு கல்யாண ராமன் கமல் தான் ஞாபகத்துக்கு வந்தாரு... அழேகா இருக்கேன்ல.

//
அருமை டா... ஒவ்வொவு பதிவேலேயும் இப்ப கோட் மாத்தீட்டு வரீங்க...இதுவும் சொல்ல விட்டுப் போச்சு..சூப்பர்
//
கவனிச்சிட்டீங்களா? நன்றிங்க்... ஆமா... புதுசா ஒரு யோசனை தோணிச்சி. அதான். சின்ன மூளைக்கு தெரிந்த, புரிந்த வாசகங்கள் எழுதலாமின்னு.

said...

// மங்களூர் சிவா said...
சூப்பரா சொன்னீங்க.

நல்லா எழுதியிருக்கீங்க. வீடியோ இனிமேதான் பாக்கணும்.

//

சிவா, வந்ததுக்கு நன்றி. வீடியோ இரவல். ஹி ஹி ஹி.... நம்மூட்டுது இல்ல.

said...

// Kavitha said...
ஹா...வாவ்...அம்மாடி...வேற என்னத்த சொல்ல? நீங்க தைரியசாலினுத் தெரியும். ஆனா இம்புட்டு தைரியமா? வாழ்த்துக்கள்..
//

கவிதா.. வாங்க வாங்க வாங்க.. முதல் முதல்ல வந்திருக்கீங்க.. பயம் தெளிந்து போங்க. நம்ம தைரியம் உங்களுக்கும் தெரிஞ்சி போயிருச்சா.. சரிதான். :-)

said...

// Anonymous said...
வவ்வால வச்சு ஒண்ணும் காமெடி கீமடி பண்ணலையே?

தலைப்பை மட்டும் படிப்போர் சங்கம்
//

அனானி, வம்புல மாட்டிவிடுவோர் சங்கத்திலேயும் இருக்கீங்களா? ஹா ஹா ஹா...

said...

இந்த வெள்ளாட்டைக் கண்டுபிடிச்சது நம்ம நியூஸி ஆளுங்கதான்.பேசாம எல்லாரும் கிளம்பி இங்கே வாங்க.

படுபாதாலத்துலே இருக்கும் ஆத்துக்குமேலே ரெண்டு மலைகளுக்கு நடுவில் இருக்கும் பாலத்திலிருந்து தள்ளி விடுவாங்க.

ஜோரா இருக்கும் பார்க்க.

வீடியோ, ஃஃபோட்டோ. டி ஷர்ட் எல்லாம் தருவாங்க. டிக்கெட் விலையில் எல்லாம் 'அடக்கம்'

கமான்............

said...

// பொன்வண்டு said...
படிக்கிறப்ப செம திரில்லா இருந்துச்சு !!!! :)

//

வாங்க பொன்வண்டு. உங்க ப்ரோஃபைல் பாப்பா சூப்பர். நீங்க பொன்வண்டு சோப்பு விளம்பரதாரர் கிடையாதே?

said...

// தஞ்சாவூரான் said...
ரொம்பத்தான் தைரியம் உங்களுக்கு!!
//
நன்றிங்க்

//
நான் பாலியில், கடைசி நிமிடத்தில் பயந்து வெளியேறி விட்டேன் :)
//
ஓ... நீங்களும் அவுக கட்சியா? திரும்ப ஒருமுறை முயற்சித்துப் பாருங்க. வூட்டாண்ட சொல்லிட்டுப் போங்க. ;-)

//
மேலும், பல சாகசங்கள் செய்ய வாழ்த்துக்கள்!!
//
சொல்லிட்டீங்கல்ல.. செய்துருவோம். :-)

said...

// sury said...
இப்படிப்பட்ட ஏகப்பட்ட சமாசாரங்கள்

fright and flight responses
in brain physiology
எல்லாம் சொல்லி உங்களை பயமுறுத்தப்போவதில்லை.
//
அப்பாடா... :-)


//
ஆமாம். இந்த jumping பெரிய விஷயமாக்கும் ! நான்
இதுவரை பத்து தடவை குதித்துவிட்டேன் என்கிறார்
என்னுடைய நண்பரின் பாட்டி (இப்போது 83 வயது). அவர்
சொன்ன கதை இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. //
வாவ்... பாராட்ட பட வேண்டிய விஷயம் தான். இதற்கு உண்டாகும் செலவு தான் மறுபடி போக விடாமல் என்னை தடுக்கிறது. :-)

//
குதிக்க உயரே போகும்போது ஒரு தரம் அவரது வைட் தாங்காமல்,
க்ரேன் அந்தரத்திலிருந்து முறிந்து விழுந்து விட்டதாம்.
//
அய்யோ.. அப்படியா? வெயிட் லிமிட் எல்லாம் இருக்குமே... எப்படி அதையும் தாண்டி? ம்ம்ம்..


//
அது இருக்கட்டும். உங்கள் சாதனையைக் கேட்டு, கல்பனா,
சுனீதா வில்லியம்ஸ் க்கு அடுத்தபடியாக,
உங்கள் பெயர் short list செய்யப்பட்டுள்ளதாமே ?
//
என்னங்க அய்யா நீங்க? நீங்களும் என்னை கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டீர்களா? :-)

//
சாகசம் இல்லாத வாழ்க்கையில் என்ன பயன்?
//
சாகசம் செய்ய வேண்டும் என என் மனதில் தோன்றுவதைவிட, அனுபவங்கள் கிடைக்க வேண்டும் என நினைப்பவள். இவ்வுலகில் மரணம் தவிர எல்லாமே நாம் விரும்பினால் அனுபவிக்க முடியுமே. அதற்கு என்னாலான சிறு முயற்சி. இதில் கிடைக்கும் அனுபவம்... ம்ம்ம்ம்.. சிலவை சொல்ல வார்த்தைகள் கிடையாது

//adventurous sport
முக்கியமாக தேவைதான். ஆயினும் சாகசம் இணைந்த
ஆக்கபூர்வமான விளையாட்டுகளும் இருக்கின்றன்.
How to live creatively every moment என்பது பற்றி படித்திட‌
வருகை தாருங்கள்.
http://meenasury.googlepages.com/livecreativelyeverymoment
//
ம்ம்ம்....பார்த்தேன். உங்கள் கூகில் பேஜ் எல்லாமே நன்றாக உள்ளது. அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி.

said...

// துளசி கோபால் said...
இந்த வெள்ளாட்டைக் கண்டுபிடிச்சது நம்ம நியூஸி ஆளுங்கதான்.பேசாம எல்லாரும் கிளம்பி இங்கே வாங்க.
//
வந்துருவேன்... நீங்களும் என்னுடன் குதிக்க சம்மதித்தால்.

//
படுபாதாலத்துலே இருக்கும் ஆத்துக்குமேலே ரெண்டு மலைகளுக்கு நடுவில் இருக்கும் பாலத்திலிருந்து தள்ளி விடுவாங்க.

ஜோரா இருக்கும் பார்க்க.
//
பார்க்க மட்டும் தானா?

//
வீடியோ, ஃஃபோட்டோ. டி ஷர்ட் எல்லாம் தருவாங்க. டிக்கெட் விலையில் எல்லாம் 'அடக்கம்'
//
அடக்கத்திலிருக்கும் கோட்ஸ் அடி வயித்தை கலக்குதே டீச்சர்.

said...

நான் ரொம்ப நாளா குதிக்கனும் என நினைத்து கொண்டு இருக்கிறேன். துபாயில் festival ச்மயத்திலெ (இந்த மாதம்) உண்டு. இந்தமுறை எப்படியாவது குதிச்சுடுவேன். பார்ப்போம்!!!!

தலைப்பு படிச்சதுமே குபீர் சிரிப்பு:-))