Tuesday, February 12, 2008

களைதல்


களைதல்

சுயம் அறிய சுயம் இழக்க
சுயம் தாங்கி சுயமாய்
சுயம் இழந்து சுயம் பெற
அலைபாயும் மனதுடன் ஒரு பயணம்

பிளக்கும் வெயிலில்
வரண்ட நாவும்
வெடித்த உதடுமாய்
திரு அண்ணலின் வலம்

தேய்ந்த கால்மிதியில்
மரத்த உள்ளத்தில்
கிழிந்த சதையில்
உயிர்ப்புடன் வழியும் குருதி

காயும் பருப்பு சோறும்
களியும் கோள உருண்டையும்
திரு ஓடு ஏந்தி தினம்
பிச்சை சாப்பாடு

ஊடுருவும் மெல்லிய இசையில்
பித்து பிடித்து வெளி ஆட
ஆடி அடங்கிப் போனது
உளமென்னும் குரங்கு

ஓலைப் பாயின் கிழிசலில்
பிண்டமொன்று உடன் உறங்க
வெட்டியான் ஓலத்தில்
ஒடுங்கிப் போனது நாடி

மேலோங்கிய நெருப்பில்
விரைத்து எழும் பிணம்
வெட்டியின் அடியில்
உள் வாங்கும்

உறுத்துக் கண்ட மனம்
வலியில் கழண்ட மேனி
சுயமாய் சுயம் களைந்தது
எல்லாம் புரிந்து தான் போனது

கிழிந்து விழுந்த முக மூடி
பித்து நீங்கிய சித்தம்
சிவனில் கலந்த சக்தி
தொலைத்ததால் புரிந்ததோ தேடலின் பொருள்


விரிந்த விழியில் விரிந்து போனது உலகம்!

26 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

எத்தனை அடர்த்தியான வரிகள்....பிரித்து மேய்ந்து விட்டு வருகிறேன்...

ம்ம்ம்ம்ம்ம்.....

said...

செம கலக்கல் ..என்னாச்சி திடீர்னு :)
புத்தகம் லாம் வீட்டுக்கு வந்திடுச்சா?

said...

அம்மா நல்ல நாளில் என்ன இது இப்படி எல்லாம்..

said...

ஆஹா...போட்டாச்சா....

தாயே...நான் எல்லாம் உங்க கூட சேர்ந்து பதிவு எழுதறதே பெருசு.. ஹ்ம்ம்ம்..

said...

40 சின்ன வரிகள், அதை படித்து உள் வாங்கிக் கொள்வதற்கு 15 நிமிடம் ஆகிவிட்டது. படமும் நன்றாகத் தான் உள்ளது.

said...

காயும் பருப்பு சோறும்
களியும் கோள உருண்டையும்
திரு ஓடு ஏந்தி தினம்
பிச்சை சாப்பாடு//

ஆறு,

சில வரிகள் சற்றே அப்படியே அமர்ந்து அச் சுழலில் தான் அமர்ந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற நிகழ்கால சுழற்சிக்கு ஆட் படுத்தியது எனை என்பது உண்மை... மேலே குறிப்பிட்ட ஒரு சூழலில் நம்மிள் எத்தனைப் பேருக்கு அந்தச் துணிச்சல் இருக்கும் தன்னை அதன்பால் இட்டு உள்ளதை உள்ளதாக பார்த்துணர்வதற்கு...

ஆகமொத்தத்தில் அந்தப் பிராயணத்தில் நானும் கலந்து கொண்டதாக உணர முடிகிறது.

said...

கவிதை எனக்கு உணர்த்தியது...

"கண்டவர் விண்டதில்லை விண்டவர் கண்டதில்லை"

said...

இன்னிக்கு ஒங்களுக்கு பொறந்த நாளாமே....சொல்லவே இல்ல...

நல்லாருங்க தாயீ...நல்லாருப்பீங்க...வாழ்த்துகள்....

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;))


கவிதை - ;(

said...

//சுயமாய் சுயம் களைந்தது
எல்லாம் புரிந்து தான் போனது//

எவ்வளவு கஷ்டமான ஒன்று..

ஆழ்ந்து எழுதப்பட்ட கவிதை வரிகள்...

வாழ்த்துகள் காட்டாறு..கவிதைக்கும், பிறந்த நாளுக்கும்..

said...

ம்ம்ம்... வர வர கமல் மாதிரி ஆயிட்டீங்க..
ஜாலியா ஒரு பதிவு ... அடுத்து சீரியசா ஒண்ணு...

//கிழிந்து விழுந்த முக மூடி
பித்து நீங்கிய சித்தம்
சிவனில் கலந்த சக்தி
தொலைத்ததால் புரிந்ததோ தேடலின் பொருள்//

பக்க பக்கமா எழுத வேண்டியதை நாலு வரியில் சொல்லிட்டீங்க..

said...

சுயமாய் சுயம் களைந்தது
எல்லாம் புரிந்து தான் போனது

ஏதோ சித்தர் சொல்லுகிற மாதிரி இருக்கு.

said...

// இரண்டாம் சொக்கன் said...
எத்தனை அடர்த்தியான வரிகள்....பிரித்து மேய்ந்து விட்டு வருகிறேன்...
//

ம்ம்... அனுபவம் அடர்த்தியான வார்த்தைகளை கொண்டு வருமோ? எனக்கும் புரியல

said...

// அய்யனார் said...
செம கலக்கல் ..என்னாச்சி திடீர்னு :)
புத்தகம் லாம் வீட்டுக்கு வந்திடுச்சா?
//

புத்தகம் இன்னும் வரலப்பா... வந்துரும். நம்புவோம். :)

said...

// கயல்விழி முத்துலெட்சுமி said...
அம்மா நல்ல நாளில் என்ன இது இப்படி எல்லாம்..
//
ஹா ஹா ஹா.. எல்லாமே நல்ல நாள் தானே. பின்ன எப்போ..... லெஸ் டென்ஷன் ப்ளீஸ்... ;-)

said...

// மங்கை said...
ஆஹா...போட்டாச்சா....

தாயே...நான் எல்லாம் உங்க கூட சேர்ந்து பதிவு எழுதறதே பெருசு.. ஹ்ம்ம்ம்..
//

ஆமா மங்கை... ஆசைப் பட்டுட்டீங்க.. போட்டுற வேண்டியது தானே.

said...

// தமிழ் பிரியன் said...
40 சின்ன வரிகள், அதை படித்து உள் வாங்கிக் கொள்வதற்கு 15 நிமிடம் ஆகிவிட்டது. படமும் நன்றாகத் தான் உள்ளது.
//

தமிழ்பிரியன்.. சரியா காலெடுத்து வச்சிருக்கீங்க நம்ம வீட்டுல. 15 நிமிஷத்தில் புரிஞ்சிருச்சா... நல்லது. 40 வரிகளா? ஹா ஹா ஹா... வாவ்.

said...

சக்தியில்லையேல்
சிவம் சவம் தான்.
'க்' ல் அங்கு ஒரு புள்ளி தான் உயிர். பிராணன்.
அந்த பிராணனே உத்கீதம். ஓங்காரம்.
இந்த புத்தி இல்லையேல் அந்த‌
சக்தியும் சகதி தான்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
பி.கு: நல்ல நாளும் அதுவுமா ஏன் இந்த ஆன்மீக விசாரம் எல்லாம்?
பேசாம கொஞ்ச நேரம் கண்ணனும் ராதையும் கொண்டாடிய‌
வேலன்டீன் டே பார்த்திட, கேட்டிட,
வாருங்கள்
http://movieraghas.blogspot.com

said...

//சுயம் அறிய சுயம் இழக்க
சுயம் தாங்கி சுயமாய்
சுயம் இழந்து சுயம் பெற//

ஒன்றைப் பெற ஒன்றை இழக்கத்தான் வேண்டும்.
மனம் அழியும்போதுதான் = தன் உடலே
கனமாகி ப்பின் பிணமாகி உயிரைக்
களையும்போதுதான், ஆன்மா தன்
உள் ஒளியைப் பெற விழைகறது.

//சுயமாய் சுயம் களைந்தது
எல்லாம் புரிந்து தான் போனது//

எது உனது அல்லவோ அதை உனது என்று எத்துணை காலம் கடத்துவாய்?
வந்தது எல்லாமே உனதல்ல மாயை தானே !
உனைக் கேளாமலே களைந்துபோனதில் கேள்வி என்ன?

//சிவனில் கலந்த சக்தி
தொலைத்ததால் புரிந்ததோ தேடலின் பொருள்//

முன்னும் பின்னும் பார்த்து உணர்ந்தவர்
இன்னும் ஏன் நடுவில் வந்ததின் மேல் நாட்டம் கொள்கிறார்?
பொருள் புரிந்தபின் தேடலும் ஏனோ ?

இன்னமும் களையவில்லை. அதுதான் பொருள்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
தங்கள் அழைப்புக்கு நன்றி.
http://meenasury.googlepages.com/home
LOOK INWARD

said...

Just read a inspiring poem that is possibly in tune with what u wrote.
I thought of sharing the same with u. Perhaps you are in the same wavelength or not, I do not know.

Silent Within
Lyrics by Steve Vai

Endless time is arriving in this lost and found
What is now was always but never seemed to be
In the breath of a heartbeat the walls tumble down
An elusive light and sound enraptured me

But I remain in my body
Words fail to describe what we feel when we die inside

God only knows what we're feeling
when the lights grow dim
Is there really a voice inside
in the silent within

Torn apart by a twister of greed lust and pride
When I bleed it's a need to be one with you
Why is anger so hungry and love so blind
Why do we hurt when we cry

Well God only knows what we're dreaming
in our ultimate sin
Do we really hide anything
in the silent within
Silent within, within

Ohh hide in your darkness
And I'm dreaming today
Only for a moment would you hear
Oh slow me down
Run away
God only knows and He ain't talkin'
In the sound and the light and the life

There's no end to the bottom when we start to fall,
There's no top to the high when we want to climb
And this heart is a prison bound by chains of gold
Wherein lies the keys

God only knows how we're falling
While reaching for Him
In this vacuum of time and space
in the silent within
God only knows
within

It's a drop from the ocean
A star from the sky
A grain of sand from the earth
A tear from an eye

When the light is before us
And shines in our life
In the silent within
God only knows

Sury
thanjai.

said...

// Thekkikattan|தெகா said...
சில வரிகள் சற்றே அப்படியே அமர்ந்து அச் சுழலில் தான் அமர்ந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற நிகழ்கால சுழற்சிக்கு ஆட் படுத்தியது எனை என்பது உண்மை... மேலே குறிப்பிட்ட ஒரு சூழலில் நம்மிள் எத்தனைப் பேருக்கு அந்தச் துணிச்சல் இருக்கும் தன்னை அதன்பால் இட்டு உள்ளதை உள்ளதாக பார்த்துணர்வதற்கு...

ஆகமொத்தத்தில் அந்தப் பிராயணத்தில் நானும் கலந்து கொண்டதாக உணர முடிகிறது.
//
நீங்க சொல்வது உண்மை தான் தெகா. துணிவும் பயம் சார்ந்ததே. பயம் நீங்கின், துணிச்சல் வந்து ஒட்டிக் கொள்ளும்.

பயணத்தில் சேரவும் துணிவு வேண்டுமே. :)

said...

// இரண்டாம் சொக்கன் said...
கவிதை எனக்கு உணர்த்தியது...

"கண்டவர் விண்டதில்லை விண்டவர் கண்டதில்லை"
//
ம்ம்ம்.. சரி தான் சொக்கரே.


//இன்னிக்கு ஒங்களுக்கு பொறந்த நாளாமே....சொல்லவே இல்ல...

நல்லாருங்க தாயீ...நல்லாருப்பீங்க...வாழ்த்துகள்....
//
சந்தோசமா இருக்கும் எல்லா நாளுமே கொண்டாட வேண்டிய நாள் தானே. பிறந்த நாளென்று சிறப்பா கொண்டாடுறதில்ல. ஆனாலும் வாழ்த்துக்கு நன்றிங்க்.

said...

// கோபிநாத் said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;))


கவிதை - ;(
//

ஹா ஹா ஹா..... என்னாச்சி கோபி? சோக முகம் ஏன்?

said...

// பாச மலர் said...
//சுயமாய் சுயம் களைந்தது
எல்லாம் புரிந்து தான் போனது//

எவ்வளவு கஷ்டமான ஒன்று..

//

நமக்குள் இருக்கும் நம்மை வெளிக் கொணர என்ன கஷ்டம்? நம்ம முகமூடி படுத்தும் பாடு தானே இதெல்லாம்.

said...

// தென்றல் said...
ம்ம்ம்... வர வர கமல் மாதிரி ஆயிட்டீங்க..
ஜாலியா ஒரு பதிவு ... அடுத்து சீரியசா ஒண்ணு...
//

அண்ணா வேணாங்கண்ணா.... ஆள வுடுங்க. உங்களுக்கு வர வர குசும்பு ஜாஸ்தியாகி போச்சி. தங்கமணி ஊருக்குப் போனதாலா?

said...

// வடுவூர் குமார் said...
சுயமாய் சுயம் களைந்தது
எல்லாம் புரிந்து தான் போனது
ஏதோ சித்தர் சொல்லுகிற மாதிரி இருக்கு.

//

ஹா ஹா ஹா....