Wednesday, March 21, 2007

மழை

இரசித்து கண் கொட்டாமல் பார்த்தேன் ஜன்னல் வழியே
மெல்லிய தென்றல் மேனி தழுவியது
தூறல் முகத்தில் மோதியது
கதவில் தொங்கிய திரைச் சேலை படபடத்தது
நிதானமாக ஆரம்பித்த மழை வேகம் பிடித்தது

மெய் மறந்து நின்றேன்
நானும் மழையும் மட்டுமே அங்கு
என்ன ஒரு சப்தம்; என்ன ஒரு கம்பீரம்
சாரல் பட்டு சிலிர்க்கும் என் மேனி

காற்று வேகமாக அடித்தது
மழை சற்றே அலைக்கழிந்தது
பட்டென அறைந்து சாத்தியது ஜன்னல் கதவு
என் எண்ணம் இடமாறியது

சகதியாய் ஓடும் மழை நீர்
முகம் சுளித்து, அருவருப்புடன் அதில் நடக்கும் மனிதர்கள்
குடை ஒரு கையில்; சேலை பாவடையுடன் ஒரு கையில்
கைப்பையை இடுக்கில் அதக்கி செல்லும் பெண்மணிகள்
அறுந்த செருப்பையும், தன் நிலையையும் நொந்து
செருப்பை கையிலேந்தி செல்லும் பெரியவர்
கடை விரிக்க இயலாத ரோட்டோர முதலாளிகள்
கோணிப்பாய் தலைப்பாகையாய்
நா நீட்டி மழை சாரலை உட்கொள்ளும் சிறார்

கிண்கிணி மணியுடன் சைக்கிள் சவாரி
சேறு வாரி இறைத்து விரைந்து சென்று
கெட்ட வார்த்தையால் மழை தினம்
அர்ச்சனை வாங்கும் ஆட்டோ ரிக்க்ஷா
நெரிசலை விரக்தியாய் ஏற்றி வைத்த
கார் ஜன்னல் வழியே பார்க்கும் வித்தியாசமான மனிதர்கள்
டீக்கடை வாசலில் தம்மடித்து
கேலியும் கூத்துமாய் அமர்க்களப்படுத்தும் விடலை பயல்கள்

பார்க்க பார்க்க ஆனந்தம்
உடல் முழுதும் ஓடும் பரவசம்
வீட்டிலிருந்து கீழிறங்கினேன்
போகும் போது சொல்வதில்லையா என்ற கேள்விக் கணை
சுள்ளென வந்தது வீட்டு பெரியவரிடமிருந்து
சட்டென மறைந்து போகும் உள்ள வெளிப்பாடுகள்!

-- காட்டாறு

10 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

நண்பரே, இதில் பங்கேற்க வாருங்கள், உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்:

அன்புடன்
கவிதைப் போட்டி

ப்ரியன்
வலைப்பதிவில் தகவல்கள்


பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.

said...

மெளனத்தை கலைத்து எனக்கு உதவ வந்ததுமில்லாமல், வெற்றி பெற வாழ்த்துதலுடன் ஊக்கமும் கொடுத்தமைக்கு என் மனமார்ந்த நன்றி.

உங்க ஆச நிறைவேறும். என் ஆசயும் நிறைவேறுமா? அண்ணாச்சி/யக்கா சீக்கிரமா தூக்கம் களையனுங்கோ நீங்க. மெளனத்த தான் சொல்றேன். இது தான் என் ஆச.

said...

கூடிய சீக்கிரம்... மௌனம் கலைக்கப்படும்! :-)

said...

தமிழ்மணத்தில் மறுமொழி நிலவரம் தெரியற மாதிரி செய்யுங்க... கருவிப்பட்டை நிறுவணும்னு நினைக்கிறேன்.

said...

//கூடிய சீக்கிரம்... மௌனம் கலைக்கப்படும்! :-) //
நன்றி சேதுக்கரசி!

கருவிப்பட்டை நிறுவினேன் உங்கள் அறிவுரையெற்று. நன்றி. ஒரே ஒரு குறை. என் புதிய template எங்கோ போச்சி. ஆனாலும் கருவிப்பட்டை இணைச்சாச்சே. அதுல சந்தோஷம்தான்.

said...

\\சட்டென மறைந்து போகும் உள்ள வெளிப்பாடுகள்!//
நிறைய விஷயங்கள் இப்படித்தான்.
உடைக்கப்பட்ட நீர்க்குமிழி
போல.

பாப் அப் எடுத்ததற்கு நன்றி.

said...

முத்துலெட்சுமி, நீங்க சொல்லுறது கரெக்ட் தாங்க. அதுதானுங்களே வாழ்க்கை. அது casual-ஆ வாழ்க்கையை எடுத்துக்குற பக்குவத்தை கொடுக்குது இல்லையா.

Anonymous said...

நன்றாக எழுதுகிறீர் நண்பரே.. மனமார்ந்த பாராட்டுக்கள்

said...

கவிஞர் சேவியர் வந்து வாழ்த்து சொல்லியிருக்காரா.. சூப்பர் துவக்கம் தான் காட்டாறு :-)

said...

//கவிஞர் சேவியர் வந்து வாழ்த்து சொல்லியிருக்காரா.. சூப்பர் துவக்கம் தான் காட்டாறு :-) //

சேதுக்கரசியாரே, மீண்டும் வருகை தந்தமைக்கு நன்றி.