Thursday, March 22, 2007

யூக்கலிப்டஸ் மர்மம் - கவனம் தேவை

யூக்கலிப்டஸ்-ன்னு சொன்னதும் உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வரும்ன்னு எனக்கு தெரியாது. எனக்கு தலைசுற்றல் தான் ஞாபகத்துக்கு வரும். ஒழுங்கா திரும்பவும் முந்தய வரியை படித்துக் கொள்ளவும். கதையில்லாமல் கருத்து சொன்னா, என்ன மாதிரி சின்ன பிள்ளைகளுக்கு(??!!??) புரியாது. ஆதலினால், கருத்து பறிமாறலுக்கு(?) அப்புறமா சிறுகதை(?) உண்டு.

ஒரு ஊருல......... ச்ச்ச.... கருத்துக்கு எதுக்கு ஒரு ஊருல...... யூக்கலிப்டஸ் பற்றி எது தெரியுமோ இல்லையோ யூக்கலிப்டுஸ் சளிக்கு நல்ல மருந்து என்பது எல்லாருக்கும் தெரியுமுன்னு நம்புறேன். ஆனால் மலேரியாவ ஒழிக்க முடியுமுன்னு தெரியுமா? ஆம்! தண்ணி அடிப்பதில்(?) யூக்கலிப்டஸ் மரத்தை மிஞ்ச ஆளில்லை என்றே சொல்லலாம். மலேரியா கொசுவினால் வருது. கொசு... தண்ணீர் தேங்கியிருப்பதால் பலுகி பெறுகுகிறது. ஒரு யூக்கலிப்டஸ் மரத்தை நட்டு வையுங்க அந்த இடத்துல. அது சர சரன்னு தேங்கியிருக்கும் நீரை உறுஞ்சி மள மளன்னு வளரும். அப்புறம் இல்ல கொசு தொல்ல.

அட நீங்க குளிர் பிரதேசத்தில் இருப்பவரா? சமைக்கும் போது சன்னலை திறக்க முடியாதும், சரியான காற்றோட்ட வசதியற்ற வீட்டில் இருப்பவரா நீங்கள்? சமையல் வாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாசம் வீட்டில் சுற்றி சுற்றி வருகிறதா? கவலைய விடுங்க. இருக்கவே இருக்கிறார் யூக்கலிப்டஸ் எண்ணெய். சிறு குப்பியில் சிறிது நீரில் 2 சொட்டு யூக்கலிப்டஸ் எண்ணெய் விட்டு வீட்டின் பரந்த இடத்தில் வைக்கவும். போயே போச் சமையல் வாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாசம்.

மீன் பிடிப்பதில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? அமெரிக்கா வாசியென்றால், சால்மன் மீன் பிடிக்க சீசன் தவறாது செல்பவரா? இந்தியா வாசியென்றால், அதுவும் கிராமத்து வாசியென்றால், ஆத்தோரமோ, கம்மா கரையோரமோ தூண்டில் (மேனகா காந்திக்கு தெரியாமதாங்க) போடுபவரா? மீன் உங்களை தேடி வர இதோ அருமையான யோசனை. யூக்கலிப்டஸ் இலையை நீரில் போடவும். மீன் அண்ணார் ஒரு சில வினாடிகள் ஸ்தம்பித்து விடுவார். அப்புறம் உங்கள் திறமை.

ஊரையே எரிக்கணுமா? ஐயா மன்னிச்சுக்கோங்க. சொல்லித்தான் ஆகனுமுங்க. ஊரையே எரிக்க யூக்கலிப்டஸ் மரம் வளர்த்தால் போதும்ன்னு அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாநகரம் சொல்லுது. கலிபோர்னியா அண்ணாச்சி, அக்கா, தம்பி, தங்கைகளே இக்கூற்றை நீங்கள் தான் ஊர்ஜிதம் செய்ய வேண்டும்.

எல்லோரும் யூக்கலிப்டஸ் மரம் வளர்க்க தயாராகிட்டீங்களா? நான் இந்த விளையாட்டுக்கு வரலப்பா. என் சோக கத இப்போ ஆரம்பமாக போகுது. இதயம் பலவீனமானவங்க படிப்பதை இத்தோடு நிறுத்திக்குங்க.

நான் பாட்டியுடன் வளர்ந்த செல்லக் கிளியாக்கும். என் தந்தையின் சகோதிரி கன்னிகாஸ்திரி. அவர் வருடம் ஒரு முறை எங்களுடன் வந்து 1 வார காலம் தங்குவார். ஒவ்வொரு முறை வரும் போதும் புதியதாக ஏதோ ஒன்று கொண்டு வருவார். நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது (என்னடா இவ நாலா கிளாசுன்றா, ரண்டாம் கிளாசுன்றா, அதுக்கு மேல படிக்கலையான்னு சந்தேகம் வருவது நியாயம் தான். என்ன செய்றது. உங்கள் போறாத காலம். ஏதுக்கும் உங்கள் நல்ல நேரத்தை நம்ம தளத்து சோதிடத்திலகம் அண்ணன் VR சுப்பையா அவர்களிடம் (http://classroom2007.blogspot.com/), சுவனப்பிரியன் அறியாமல் (http://suvanappiriyan.blogspot.com/2007/02/blog-post_24.html) கேட்டு தெரிந்து கொள்வது நல்லது), எனக்கு எமனாய் வந்து புடியும் என்று தெரியாமலே (தெரிந்து தான் கொண்டு வந்திருப்பாரோ?) யூக்கலிப்ட்ஸ் தைலம் ஒரு சிறு பாட்டில் நிறைய கொண்டு வந்திருந்தார். என் பாட்டியிடம் அதை கொடுத்து, சளிக்கு கொடுத்தால் நல்லது என்றும் கூறிச் சென்றார்.

அவர் சென்று ஒரு வாரத்தில் எனக்கு சளி (சனியும் சேர்ந்து தான்) பிடிக்க, என் பாட்டி பள்ளிக்கு செல்லுமுன் வெறும் வயிற்றில் ஒரு பாட்டில் யூக்கலிப்டஸ் மருந்தையும் குடிக்கக் கொடுத்தார். நானும் சமர்த்துவா குடிச்சிட்டு பள்ளிக்கு போய் உட்கார்ந்தா...... உட்கார்ந்தா தானே. காற்றில் அல்லவா மிதப்பது போலிருந்தது. மிதந்து போய் (ஆவியாக அல்ல) கணக்கு வகுப்பில் உட்கார, வீட்டுப்பாடம் செய்யாதது ஞாபகம் வர, வாத்தியாரம்மாவிடம் போய், என் புரியா நிலைமையை விளக்க, அவரோ நான் திருட்டுதனம் பண்ணுவதாக பாழாப்போன தலையில குட்டு வைக்க, அத்தோட கீழ விழுந்தவ தான். கண் முழிச்சா, என்ன சுத்தி அம்மா, அப்பா, அக்கா, அத்தைன்னு ஒரே கூட்டம். புரியாம பேந்த பேந்த (அப்படி தான் முழிக்கனும்னு ஒரு கட்டாயம் இருப்பதால எழுதிட்ட்டேன்) முழிக்க, ஒரு ஓர்மா பம்மி போய் உட்கார்ந்திருந்த என் பாட்டி, எ ராசாத்தின்னு கூப்பாடு போட, அப்புறம் என்ன.... எனக்கு ராச உபசாரம் தான்.

பின்னொரு நாளில் இது பத்தி என் தந்தையிடம் கேட்ட போது, 2 நாள் கழித்து நான் கண் விழித்தாதாக சொன்னார்கள். ஆர்ப்பாட்டத்தின் அர்த்தம் அப்போது தான் புரிந்தது. ஆகவே மக்களே, தூங்க வேண்டுமா? இருக்கிறது ஒரு பாட்டில் யூக்கலிப்டஸ் தைலம்.

6 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

யூகலிப்டஸ் இலையை கையால் நசுக்கினாலே அந்த வாசம் கிடைக்கும்.அப்படியே முகர்ந்தால் அட்டகாசமாக இருக்கும்.
பல நலன்களை சொல்லியுள்ளீர்கள்.
இப்ப இருக்கிற வீட்டில் மீன்/இரால் போட்டு ஆளையே தூக்கி அடிக்கிறாங்க.நீங்க சொல்லியுள்ள மாதிரி ஒரு கப்பில் கொஞ்சம் விட்டு வைத்துப்பார்க்க வேண்டும்.

said...

வாங்க..வாங்க..வாங்க...

லேட்டா வரவேற்பு குடுக்கறதுக்கு சாரிங்கோவ்...

நேத்து தான் உங்களைப் பத்தி கேள்விபட்டேன்..

கலக்குங்க....கலக்குங்க...

இன்னைக்கே உங்க prescription சோதனை செய்துடலாமானு பார்குறேன்..:-))..

Anonymous said...

யூக்கலிப்டஸ் வாசனை அமர்க்களமா வீசுது !

said...

வடுவூர்குமார் அண்ணாச்சிக்கு:
கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க. நான் வினிகர் வைத்து பார்த்தேன். மீனு, இறாலெல்லாம் வேற வேலயப் பாருன்னு வாசத்தோட இருந்தாங்க. யூகலிப்டஸ் பிரமாதமா வேல செய்றாங்க.

Mangaikku:
வரவேற்புக்கு நன்றி. தாமதமா வந்தாலும் மணத்தோட மனம் கொண்டு வந்தற்கு வந்தனம். தமிழ்மணத்தைப் பத்தி கேள்விப்பட்டதும், முதல்ல மணமான சமாச்சாரம் எழுதனுமுன்னு தோணிச்சி. அந்த முயற்சி தான் யூக்கலிப்டஸ். எழுதுன எல்லாம் internet-இல் கண்டெடுத்தவை; கடைசியில் உள்ள கதை தவிர. அந்த கதைக்கு சாட்சி இருக்கு, அது நானுதாங்கோ. எந்த prescription சோதனை பண்ண போறிங்க? மரம் வளர்க்கும் எண்ணம் இருந்தால் சொல்லவும். அதுக்கும் நம்ம கிட்ட (அட internet-ல தாங்க) பல யோசனைகள் இருக்குதுங்கோ. எத சோதனப் பண்ணிப் பார்க்க போறீங்கன்னு தெளிவா சொன்னீங்கன்னா, பக்க பலமா நான் கண்டிப்பா இருப்பேன்.

சேவியர் அண்ணாச்சிக்கு:
என்னை அறிமுகப் படுத்திய அன்று, உங்கள் வலைப்பதிவிலுள்ள அனைத்தையும் வாசித்தேன். மெய்யாலுமே. இன்னும் சிலரும் அதில் உண்டு. அதன் தாக்கம் தான் என்னோட தெரியாத்தனமா... பகுதி (http://kaattaaru.blogspot.com/2007/03/blog-post_3502.html). நீங்களே வந்து மறுமொழி கொடுத்துள்ளதை பார்த்ததும் கையும் ஓடல... காலும் ஓடல.... மனோரமா ஸ்டைல்ல என்னன்னவோ எண்ணங்கள் மனதில். ரொம்ப நன்றிங்க!

said...

எந்த பிரிஸ்கிரிப்ஷனா.. அது சரி

//ஆகவே மக்களே, தூங்க வேண்டுமா? இருக்கிறது ஒரு பாட்டில் யூக்கலிப்டஸ் தைலம்.//

இது யாருங் சொன்னது..:-))..

said...

மங்கைக்கா, வெவகாரமான ஆளா இருப்பீக போல இருக்கே. அப்பிடில்லாம் செய்துபுடாதீக. அந்த தூக்கம் நமக்கு வேண்டாம். அந்த தூக்கம் கும்பகர்ணனை மிஞ்சுருமில்ல. அப்புறம் ராணி மாதிரி வச்சிருந்த சொந்தெமெல்லாம் தூங்குமூஞ்சி வந்தூட்டாடின்னு வச பாடுமில்ல. வயசுல/அனுபவத்துல பெரியவுக நீங்க (எனக்கு முந்தி தமிழ்மணத்துக்கு வந்ததத்தான் சொல்ல வாரேன்).... கொஞ்ச பின் விளைவுகள யோசித்து முடிவெடுங்கன்னு சொல்ல வாரேன்.