Wednesday, March 21, 2007

!முத்துலெட்சுமி அவர்களே கவனிக்கவும்!

முத்துலெட்சுமி அவர்களே,

இது எனக்கு மட்டும் தான் நடக்குதா? இல்லை என்னைப்போல் பலரும் மறுமொழி கொடுக்க முடியாது தத்தளிக்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை. உங்கள் வலைப்பதிவில் மறுமொழி கொடுக்கவோ, வேறு பதியங்களைப் படிக்கவோ இயலவில்லை. வேறு பதிவிலிருந்து உங்கள் பதிவிற்கு வந்தால் அந்த பதியத்தை காண இயலுகிறது. உதாரணத்திற்கு நான் http://blogintamil.blogspot.com/2007/03/blog-post_21.html இருந்து வித்தியாசமாய் செய் (http://sirumuyarchi.blogspot.com/2007/03/blog-post_3577.html) சுட்டினேன். படித்தேன். முன்னம் எழுதியவைகளுக்கு செல்ல முடியவில்லை. கலங்கி நிற்கும் எனக்கு பதில் சொல்வீர்களா?

அன்புடன்,
காட்டாறு

9 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

எனக்கும் அதே!! பின்னூட்டம் இட முடிவதில்லை. அவங்களோட தோசை பதிவுக்கு மட்டும் பின்னூட்ட முடிஞ்சது.சீக்கரம கவனிப்பாங்கன்னு நினக்கரேன்

said...

எனக்கும் தான்.
அவுங்க டெம்பிளேட்டில் ஏதோ மாற்றப்போய்,இந்த மாதிரி ஆகியிருக்கும் அல்லது பின்னூட்டம் அனுமதிப்பதில்லை எனபதை தேர்வு செய்திருந்தாலும் கூட இந்த மாதிரி போவதற்கு வாய்புள்ளது.
இதில் என்ன பிரச்சனை என்றால் இதை அவருக்கு எப்படி தெரியப்படுத்துவது??
நீங்கள் செய்துள்ளீர்களே இந்த மாதிரி தான். :-))

said...

ராதா சொன்னாங்க முதல்ல . பலபேர் அதற்கப்பறமும் பின்னூட்டம் போட்டதால பிரச்சனை சரியாயிடுச்சோன்னு நினைச்சிட்டேன்.எப்போலேர்ந்து இது தெரியலையே ,
ஆனா இப்படி எல்லாம் பதிவு போட்டு ....தமிழ்மணத்துல நுழைஞ்சதும் பயமுறுத்தீட்டீங்கப்பா .
என்ன தப்பா எதுவும் எழுதி நம்மள திட்டறாங்களோன்னு .
பார்க்கறேன் என்னன்னு..முடியலன்னா
பொன்ஸ் கிட்ட தான் போகனும்.

said...

இப்ப சரியா தெரியுதா? கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்களேன்..

said...

யக்கா... யக்கா... அழுகையா வருதுங்க யக்கா. அது எப்படிங்க உங்களுக்கு தெரிந்தது நான் சாப்பாட்டு ராமின்னு. என்னால் சாப்பாடிலுள்ள எல்லா பதிவுகளுக்கும் செல்லவும், பின்னூட்டமிடவும் முடிகிறது. சிறு முயற்சி மட்டும் சோதிக்குது. உங்களின் சிறு முயற்சி உங்களை பெறு முயற்சி பண்ண வைக்கும் சிறு விளையாட்டை பார்த்தீர்களா? முயற்சி திருவினையாக்கும். திரும்ப சரி செய்ய பாருங்களேன். ஒரு சுயநலம் தான் எனக்கு!

பின்குறிப்பு:
அழுகைல உணர்ச்சிவசபட்டு யக்கா என்று அழைத்தது தவறென்றால் மன்னிக்கவும்.

பின்குறிப்புக்கு பின்குறிப்பு:
இது மாதிரி பின்குறிப்பு எழுதியே, துண்டப் போடுறாங்கப்போ!

உங்களப் போய் நானு ..... நானெல்லாம் இன்னக்கி வந்த பொடிசு...... நீங்க நேசக்கரம் நீட்டுனதே எனக்கு ஒரு தெய்வீக வழிகாட்டா (இன்ஸ்பிரேசனுங்கோ .... பார்க்க http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp) போச்சி.

said...

அக்கான்னு கூப்பிடறது பத்தி ஒன்னும்
இல்லீங்க...ஆனா புதுசுன்னுப் பார்த்தா
நானும் வலைப்பதிவுக்கு புதுசுப்பா...
பாவம் என்னப்பத்தி தெரியல அதான் இப்படி எல்லாம்.
என்ன வழிக்காட்டா ன்னா ஏம்பா
சும்மா கதை எல்லாம் விடக்கூடாது.

ஒபன் ஆகலன்னா மேல சிறுமுயற்சி அப்படின்கற பெரிய டைட்டில் இருக்கே அங்க கிளிக் பண்ணுங்க . அப்புரம் உள்ளபோய் எத்தன கமெண்ட் இருக்குன்னு இருக்கரது கிளிக் பண்னுங்க பின்னூட்டம் போட வரும். அப்பா எனக்கு பின்னூட்டம் போட இவ்வளவு ஆசையா ...இல்லாட்டி வந்து என்ன எழுதற நீ சரியில்லன்னு சொல்லறதுக்கா...என்னவோ போங்க..ரொம்ப நன்றிங்க.

said...

காட்டாறு,
முத்துலட்சுமி பதிவை என்னால், சுலபமாக பார்க்கவும், பின்னூட்டமிடவும் முடிகிறது. உங்களால் முடியவில்லை என்றால், நீங்கள் இருக்கும் நேரத்தில் இதைச் சரி செய்து பார்க்கலாம்.. எந்த நேரம் உங்களுக்கு வசதிப் படும் என்று சொன்னால் நன்றாக இருக்குமே.. :)

said...

முத்துலெட்சுமி யக்கா:
ஊருப்பக்கம் எல்லா பெண்களும் யக்கா தான். எல்லா ஆண்களும் அண்ணாச்சி தான். வயது வித்தியாசமெல்லாம் கிடையாது. உங்கள திட்ட முடியுமா? இன்னும் முயற்சி வெற்றியடையவில்லை. அடைந்துவிடும். நம்பிக்கை தான் வாழ்க்கை. பொன்ஸ் யக்கா வந்த தைரியத்துல எழுதுறேன்.

பொன்ஸ் யக்கா:
என்னை அறிமுகப் படுத்திய அன்று, உங்கள் வலைப்பதிவிலுள்ள ஒரு சில பகுதிகளை வாசித்தேன். கலக்குறீங்க. அதில முத்துலெட்சுமி யக்கா அவர்களால் சரி செய்ய முடியவில்லைன்னா நீங்கள் தான் சரி செய்வதில் வல்லவர் என்பது மாதிரி ஒரு பிம்பம் கொடுத்துவிட்டு சென்றார். உங்கள் வரவை எதிர்நோக்கி காத்திருந்தேன். அருள் பாலித்தமைக்கு நன்றி. நான் EST. ஆனால், உங்கள் வசதி சொன்னால், நான் அதற்கேற்றார் போல் காத்திருப்பேன். நான் அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் மாநிலத்தில் உள்ளேன்.

said...

பாப் அப் சரி செய்துவிட்டேன் (என்று நினைக்கிறேன்) முத்துலெட்சுமி. மீண்டும் ஒரு முறை மறுமொழியிட்டு பார்க்கவும்.