Friday, March 30, 2007

இரயில் பயணம்

வலைப்பதிவில், சென்னை பறக்கும்/மின்சார இரயிலில் வேலைக்கு செல்பவர் எத்தனை பேர் உள்ளனர்? இது சுமார் 13 வருடங்களுக்கு முன் நான் எழுதியது. இப்போது சென்னை வெகுவாக மாறியுள்ளது. இக்காலகட்டத்தில் நான் 13 வருடத்திற்கு முன் உணர்ந்து எழுதிய என் கருத்து இன்று மாறிவிட்டதா என்று அறிய இவ்வருட துவக்கத்தில் ஒரு முறை சென்னையில் இரயில் பயணம் மேற்கொண்டேன். மாற்றம் எதுவும் இருந்ததாக எனக்குப் படவில்லை. ஒரு முறை சென்றதை கொண்டு இன்றும் அப்படித்தான் என்று கூறுவது சரியில்லை என்று பட்டது. எனவே, உங்கள் முன் இக்கவிதையை வைக்கிறேன். மாற்றுக் கருத்து இருந்தால் கூறவும்.


இரயில் பயணம்
தயிர் சாத சட்டியுடன் கொளுத்து வேலைக் கும்பல்
கேலியும் கூத்துமாய் ஒரு நோட்டை கையில் சுழற்சியவாறு கல்லூரிக் கும்பல்
புத்தக சுமையோடு சந்தாஷ சிரிப்புடன் சிறுவர் சிறுமியர் கும்பல்
முண்டியடித்து இடம் கிடைத்த நிறைவுடன் அலுவலகக் கும்பல்
இடம் கிடைக்காத எரிச்சலுடன் ஒரு கும்பல்
--
வயதானவர்கள் வர எழுந்து இடம் கொடுக்கும் தியாக செம்மல்கள்
தன் குறை மறந்து ஜோடியாக பாடி வரும் கவிக்குயில்கள்
எக்காள சிரிப்புடன் இடி மன்னர்கள் ஒரு புறம்
இத்தனை நெருக்கடியிலும்
சுரண்டுவதே தொழிலாய் கொண்ட வக்ர புத்திக்காரர் ஒரு புறம்
--
அவரவர் இடம் வர விசுக்கென்று இறங்கும் மனிதர்கள்
அவசர கதியில் இயங்கும் நம் வாழ்வு
அலுவல் நோக்கி தினம் தினம் பயணம்
இலக்கின்றி நகரும் நம் வாழ்வில்
விலகி நிற்கும் மனித நேயம்
--
தோழமையுமின்றி பகைமையுமின்றி
சிறு புன்னகையுடன் நகரும்
நெருடல் இரயில் பயணம் நன் இன்றைய வாழ்க்கை!
-- காட்டாறு

14 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

//முண்டியடித்து இடம் கிடைத்த நிரைவுடன் //

நிரைவுடன் = நிறைவுடன்

மற்றபடி இப்பவும் நிலமை இப்படித்தான் இருக்கணும்.
ஆனா மக்கள்ஸ் முகம் மாறி இருக்கும்:-)

said...

துளசி அவர்களே, நன்றி வந்தமைக்கு. திருத்திவிட்டேன் பிழையை.

//ஆனா மக்கள்ஸ் முகம் மாறி இருக்கும்:-) //

லொள்ளு தாங்க உங்களுக்கு. ;-)

said...

அருமையான கவிதை ;-)

இரண்டு வருடம் இரயில் பயணம் தான். கடந்த வருடம் ஊருக்கு போன போது கூட எனக்கும் அப்படி ஒன்னும் பெரிய மாற்றம் இருந்ததாக தெரியவில்லை.

இரயில்கள் மட்டும் தான் மாறியுள்ளது ;-)

said...

சுரண்டுவதே தொழிலாய்
பிக்பாக்கெட்டா?
ஒரு தடவை எவன் பர்சோ என் கையில் திணிக்கப்பட்டுவிட்டது.
சொல்ல மற்நதுவிட்டேன் -- காலி பர்ஸ்.

said...

//வலைப்பதிவில், சென்னை பறக்கும்/மின்சார இரயிலில் வேலைக்கு செல்பவர் எத்தனை பேர் உள்ளனர்? //

நான் இல்லை நான் இல்லை..

நான் Putra LRT, Star LRT, KTM or KLIA Transit-இல்தான் ஏறுவேன்.. ;-)

Anonymous said...

Good. college naatkalai nyabaga paduthiviteergal :) 6 varudam munbu ippadi thaan irunthathu :)

Anonymous said...

//
நான் Putra LRT, Star LRT, KTM or KLIA Transit-இல்தான் ஏறுவேன்.. ;-) //

மைஃபிரண்ட் என்னை விட்டு இதுல எல்லாம் ஏறி பார்த்துட்டீங்களா :((

எனக்கு mrt மட்டும்தான் தெரியும்.

Anonymous said...

ஏறக்குறைய எனது இரயில் பயணம் மாதிரிதான் இருக்கின்றது :)

said...

//நான் Putra LRT, Star LRT, KTM or KLIA Transit-இல்தான் ஏறுவேன்.. ;-) //

மை ப்ரெண்டு, அப்படின்னா என்னங்கோ? புரியாத மொழியில சொல்லிட்டீக.

said...

நன்றி கோபிநாத். இரயில்களும் (மின்சார இரயில சொல்றேன்)மாறவில்லை என்பது என் கருத்து.

said...

//ஒரு தடவை எவன் பர்சோ என் கையில் திணிக்கப்பட்டுவிட்டது.
//
குமார் அண்ணாச்சி, பர்ஸ் நீங்க தான் அடிச்சி, பின் காலி பர்ஸ் பாத்து ஏமாந்தீங்கன்னு சுத்து வட்டாரத்தில் சொல்லிக்கிட்டாங்க.

said...

அனானிமஸ், எல்லாருக்கும் மலரும் நினைவுகளா இருந்தது ரொம்ப சந்தாஷம்.

said...

நல்லா இருக்குங்க....

கவிதை மாதிரி எனக்கு தெரியல, அதான் படிச்சு புரிஞ்சுக்க முடிந்தது....

கவுஜு நமக்கு ஆவாது...

அது என்னமோ சென்னையின் இந்த மின்சார ரெயில் பயணமும், மாநகர பேருந்து பயணமும் நமக்கு அப்படி ஒரு அலர்ஜி. முடிந்த அளவு தவிர்க்க பார்ப்பேன்....

said...

நாகை சிவா... உங்க பாராட்டுக்கு நன்றிங்க.