Wednesday, March 28, 2007

தலைப்பு செய்தி: பூனைகளின் ஆர்ப்பாட்டம். துளசி டீச்சர் திண்டாட்டம்


முன்குறிப்பு:
காட்டாற்றுக்கும் இந்த பூனைகளின் நடுவுலைமைத்தவறா எண்ணங்களுக்கும் சம்பந்தம் இல்லை.



வீட்டுல பம்முது பூனைக்குட்டி!

கண்டீரா கண்டீரா
பூனை ஒன்னு கண்டீரா
எங்க போனது கண்டீரா
செல்லமா வளர்ந்தது கண்டீரா


கண்டேனே கண்டேனே
வீட்டு பரணுல பம்முறதக் கண்டேனே
வயசான பூனை ஒன்னு
அதன் பின் குட்டி ஒன்னு

செல்வங்களே வாங்க
காரணம் சொல்லிப் போங்க
பரண் கோழைக்கு சொந்தம்
வீறு கொண்டு வாங்க

தமிழ்மணத்துல
மியாவ் மியாவ்
துளசி டீச்சர் ஒருவர்
மியாவ் மியாவ்

பூனைக்கு பாடம் சொல்ல
மியாவ் மியாவ்
கேட்டேன் நானும்
மியாவ் மியாவ்

வயசான காலத்துல
மியாவ் மியாவ்
எனக்கெதுக்கு டீச்சர்
மியாவ் மியாவ்

போதும் இந்த டார்ச்சர்
மியாவ் மியாவ்
துளசி டீச்சருக்கு மணி கட்டுறது யாரு
மியாவ் மியாவ்

கண்டீரா கண்டீரா
பூனை ஒன்னு கண்டீரா
எங்க போனது கண்டீரா
செல்லமா வளர்ந்தது கண்டீரா

கண்டேனே கண்டேனே
கூட்டமா போறத கண்டேனே
நாட்டாம பண்றத கண்டேனே
மணியுடன் பூனைக்குட்டி ஒன்னு
எடுப்பா நிக்கிறத கண்டேனே!

6 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

மிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யாவ்..................

என்ன நடக்குது இங்கே?

மிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யாவ்...........

said...

அதானே மியாவ்வ்வ்வ்வ்வ்வ்.
ஒண்ணும் புரியலையே:-(

said...

சந்தேகம் போக்க ஓடோ டி வந்துவிட்டேன். அது ஒன்னுமில்லிங்க துளசி, வல்லி சிம்ஹன். துளசி வியர்டுவாக பூனையிடம் பேசுவதை சொல்லியிருந்தாங்களா.... நம்ம மண்டைக்குள்ள ஒரே கொடச்சல். பூனைகளெல்லாம் மாநாடு போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணிற மாதிரி ஒரு கற்பனை பண்ணிப்பாத்தேன்.... ஹி ஹி ஹி...... அவ்வளவுதான் மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .....................

இப்போ தான் ஒவ்வொருத்தரோட வியர்ட் கதைகள் பார்த்துட்டு வாரேன். நாம வியர்டு இல்லன்னு சொல்ற அளவுக்கு கலக்குறாங்க அப்போவ்....

said...

அப்பாடி காட்டாறு. நிஜமாவே நீங்க காட்டாறுதான்.
கலக்கிட்டீங்க.

said...

எனக்கும் இந்த இடுகைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன் மியாவ்வ்வ்வ்வ்....

said...

குறும்பன், அப்படி நழுவ ஆரம்பிச்சா எப்படி? நீங்க தானே மணிக்கட்டுறதுக்கு ரெடியானிங்க..... ஒரு பழமொழி தான் ஞாபகத்துக்கு வருது (எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல....). கைல துப்பாக்கி வச்சுட்டு போட்டோ வுக்கு போஸ் குடுத்ததை துளசி அக்காக்கு சொல்ல மாட்டேன்