Thursday, April 05, 2007

என் காதலி..... நிலா

ஒடிசலா.... இந்த பவுடர் நடிகர்... யாருப்பா அவரு... SJ சூர்யாவோட நடிச்சிதே.... ஒரு பொண்ணு.... நிலா... அத பத்தி எழுதப்போறேன்னு நெனச்சி இந்த பதிவுக்குள்ள வந்தீங்கன்னா...... அப்பிடியே ஜகா வாங்கிருங்கன்னு அசிங்கமா சொல்ல மாட்டேன். இருந்து வாசிச்சிட்டே போகலாம். வந்தமைக்கு நன்றி! இப்போ கதைக்கு வர்றேன்.

இயற்கையை காதலியா நினைக்கிறது எல்லாருக்கும், முக்கியமா கவிஞர்களுக்குப் பிடிக்கும். நிலா இல்லாது போனால்... இந்த கவிஞர்கள் பாடு ரொம்ப திண்டாட்டமா போயிடும். நிலா பத்தி கவிதை எழுதாத கவிஞர்களைப் பார்ப்பது ரொம்ப கஷ்டம். கவிதை பற்றி அரைகுறை ஞானம் உள்ள நானும் நிலாவ விட்டு வைக்கல. காதலுக்கும் நிலா தான், காதலியாகவும் நிலா தான், குழந்தைக்கு சோறுட்டவும் நிலா தான்னு ஆகிப் போச்சி. நிலாவ ஓவரா படுத்தி எடுத்துட்டாங்கன்னு ஒரே பீலிங் ஆகி போச்சி. ஒரு நக்கல் கவுஜ ஒன்னு, நிலா கவலையா பேசுற மாதிரி கைவசம் இருக்கு. அத அப்புறமா பதிவுல போடலாம். இப்போ எல்லாரையும் போல நாமளும் நிலாவ ரசிச்ச விதத்தை மட்டும் சொல்லிட்டு போகலாமுன்னு இருக்கேன். ஜூட்....

கண் கொட்டாமல் பார்க்கிறேன்
காதல் வழிய இரசிக்கிறேன்

அண்ணார்ந்து உனை மீண்டும் பார்க்கிறேன்
ஆயிரம் கோடி எண்ணங்கள்

மூச்சி முட்டுகிறது
ப்ஹா என்கிறது பெருமூச்சி

ஆசையாய் உனைத் தழுவி நிற்கிறேன்
உன்னிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் மனதில்

வடித்தெடுத்து சமர்ப்பிக்க ஆசை
நான் கவிஞன் அல்லவே

என்ணங்களில் காதல் வழிகிறது
இரசித்து இரசித்து வரிந்தெடுக்க முனைகிறேன்

மின்னும் நட்சத்திரங்கள்
உன் கூந்தலை அலங்கரிக்கும் பூக்களோ

கூட்டமென செல்லும் வெண் மேகங்கள்
நீ கண் துயில அரவணைக்கும் தலையணைகளோ

வளைந்து வரவேற்கும் வானவில்
உன்னைக் காக்கும் அரணோ

உன் கண்ணத்து மச்சம் போல்
உன்னருகில் இருக்கும் நட்சத்திரம் உன்னவனோ

நீ தேய்வதும் வளர்வதும்
உன்னவனிடம் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டமோ

உன்னில் தெரியும் வடிவம்
உன்னவனை உன்னில் கொண்டதாலோ

மூன்றம் பிறை
உன் சிரிப்பின் வெளிப்பாடோ

முழு னிலவாய் பிரகாசிப்பது
உன்னவனை குழந்தையாக்கும் என்னமோ

பளிச்சென நீ வெளிப்படுவது
உன்னவனின் வருகையை எதிர்ப்பார்த்தோ

சட்டென மனம் தடுமாறுகிறது
ஒரு வித ஏக்கம்

என் காதலியாய் வந்து போகிறாய் நீ
மனதில் இரணம்

என்னருகில் இல்லா என் காதலி
என் நிலாப் பெண்!


-- காட்டாறு

10 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

இன்றைய தேதியில் சூர்யாவை வென்ற பவுடர் நடிகராக சிவாஜி ரஜனியை கல்லூரி மட்டத்தில் பேசிக்கொள்கிறார்களாம்.

பி.கு நாடோடி படம் பார்த்தீர்களா? அதில் நல்லதொரு மறக்கமுடியாத நிலவுப்பாடல் இருக்கிறது.படம் இணையத்தில் கிடைக்கிறது.

//நீ தேய்வதும் வளர்வதும்
உன்னவனிடம் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டமோ//

நல்ல கற்பனை!

said...

நிலவை நிலவழகால் நித்தம் நினைந்துருகும்
புலவர் பலருண்டு பூமியில் - நிலவட்டும்
பாட்டு பலவைத்து பாட்டாறாய்ப் பாயுமிக்
காட்டாறு கற்ற கவி.

said...

தீவு,
//இன்றைய தேதியில் சூர்யாவை வென்ற பவுடர் நடிகராக சிவாஜி ரஜனியை கல்லூரி மட்டத்தில் பேசிக்கொள்கிறார்களாம்.
//
அச்சச்சோ.... தலைவர இப்படி போட்டு ஒடச்சிட்டீங்களே....

//நாடோடி படம் பார்த்தீர்களா?//
இல்லையே. தேடிப் பாத்துட்டா போச்சி.

நன்றி உங்க பாராட்டுக்கும், வருகைக்கும்.

said...

புளோரைபுயல் அவர்களே, தங்கள் வருகைக்கு நன்றி பல. பாட்டுக்கு பாட்டு போல், கவிக்கு கவியாலே கவி புனைந்தமைக்கு நன்றி கோடி. தங்கள் புலமையைக் கண்டு களிப்புற்றோம்.

said...

http://sirumuyarchi.blogspot.com/2007/04/blog-post_4176.html

பாருங்க...உங்களை விளையாட்டுல
சேர்த்து இருக்கேன்.நன்றி.

said...

//முத்துலெட்சுமி said...
http://sirumuyarchi.blogspot.com/2007/04/blog-post_4176.html

பாருங்க...உங்களை விளையாட்டுல
சேர்த்து இருக்கேன்.நன்றி.
//
உங்க பதிவப் பார்த்துட்டு கண்டிப்பா விளையாட்டுல சேர்ந்துக்கிறேன்.

said...

நிலா
நிலா
ஓடிவா..

நில்லாமல்
ஓடிவா..

கவுஜ சூப்பரா இருக்கா? ;-)

said...

//நிலா
நிலா
ஓடிவா..

நில்லாமல்
ஓடிவா..

கவுஜ சூப்பரா இருக்கா? ;-)//

மைஃபிரண்ட், இதோட காப்பி ரைட் என்கிட்டதான் இடுக்கு, கேஸ் போடவா உங்க மேல:-))

காட்டாறு! நல்லா கவிதை எழுதறீங்க, வாழ்த்துக்கள்!:-)

said...

//கவுஜ சூப்பரா இருக்கா? ;-) //
கலக்கிட்டீங்களே மை ப்ரெண்ட். எப்படிங்க.... அது எப்படிங்க.... நீங்க கண்ணுல தண்ணி தளும்ப கவுஜ எழுதுறீங்க.

said...

//மைஃபிரண்ட், இதோட காப்பி ரைட் என்கிட்டதான் இடுக்கு, கேஸ் போடவா உங்க மேல:-))//
அபி அப்பா, எதுக்கு தான் காப்பி ரைட் கேட்கனும்ன்னு இல்லாம போச்சா... அமெரிக்கா காரன் போல ஆயிட்டீங்க.


//காட்டாறு! நல்லா கவிதை எழுதறீங்க, வாழ்த்துக்கள்!:-) //
பாராட்டுக்கு நன்றி!