Thursday, April 12, 2007

ராணித் தேனியை காணவில்லை! பணித் தேனீக்கள் பரிதவிப்பு! சன்மானம் அறிவிப்பு!

டும் டும் டும் டும் டும்..... டும் டும் டும் டும் டும்..... டும் டும் டும் டும் டும்..... இதனால யாவருக்கும் அறிவிப்பது என்னவேன்றால், ராணித்தேனியைக் காணவில்லை. கண்டுபிடித்து கொடுப்பவருக்கு தகுந்த சன்மானம் தரப்படும். டும் டும் டும் டும் டும்..... டும் டும் டும் டும் டும்..... டும் டும் டும் டும் டும்.....

ராணித் தேனியை காலத்தின் மாற்றத்திற்கேற்ப மாற சொல்லி (அதாவது உழைக்கச் சொல்லி) அழகு மணங்கள் (பணித்தேனீக்கள்) ஆர்ப்பாட்டம் செய்ய, அரசி தப்பி ஓடியது மட்டுமல்லாது, எங்கோ ஒளிந்து கொண்டார். அவரைக் காணாது தடுமாறிய பணித் தேனிகள், தேன் எடுக்கும் வேலையை மறந்து, ரீரீரீரீரீரீரீரீரீரீரீரீ என்று ரீங்காரமிட்டவாறு அங்குமிங்கும் அல்லாடும் பரிதாப காட்சியைக் காண சகிக்காத மூத்த தேனீக்கள் சோகமயமாக காட்சியளிக்கின்றன. எதிரணி குழுவில்லுள்ள வண்டுகள், தேனீக்களின் இந்நிலைக் கண்டு எக்களித்து உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் எக்காள கூச்சலிடுகின்றன. எப்போதும் ஒற்றுமையுடன் பணி புரிந்து வந்த தேனீக்களின் நிலை கண்டு, பூக்கள் யாவும் தன் நிலையிழந்து மகரந்தம் பறிமார மறந்தன. தேன் உண்ண வந்த வண்ணத்துப் பூச்சிகளும், அதுவரை எக்காள சிரிப்புடன் வலம் வந்த வண்டுகளும், தன்னிலை மறந்த பூக்களைப் பரிதாபமாக கெஞ்ச ஆரம்பித்தன. (பசி வந்தால் பத்தும் பறக்கும் போது, வண்டுகள் பறக்காத என்ன?). பூக்களோ ராணித்தேனியை எண்ணி வாடி வதங்கின. பூக்களின் வதங்கிய நிலை கண்டு மானிடர்கள் பித்துப் பிடித்துப் போய் செய்வதறியாது துடித்தனர்.

உலகமே செயலிழந்து நிற்பதைக் கண்ட அழகான, புத்திசாலி தேனி ஒன்று, ராணித்தேனியைக் கண்டு பிடித்து தருபவருக்கு தகுந்த சன்மானம் தருவதாக அறிவித்தால், உலகமே தேட ஆரம்பிக்கும்; ராணி வந்தபின், உலக நிலை மாற்றம் கூறி அவரை வேலை வாங்கிவிடலாம் என்று யோசனை ஒன்று சொன்னார் (கொத்திவிட்டு சென்றார்). அது தான் சரியெனப் பட, மூத்த தேனீக்கள் நிருபர்களைக் கூப்பிட்டு சன்மான தருவதாக சொல்ல நான், நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு தேட ஆரம்பித்தனர் ராணி தேனியை. ராணியோ ஒளிந்துள்ள இடத்திலிருந்து வெளிவரவில்லை இது வரை. மடிந்து போகும் நிலையிலுள்ள பூக்களின் நிலை கண்டாவது ராணித்தேனி வெளி வந்து பணித்தேனீக்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டு UN சம்மன் ஒன்று அனுப்பியுள்ளது.

பின்குறிப்பு:
ராணி தேனி - பின்னூட்டம் மட்டும் இடும் சேதுக்கரசியார்
பணித்தேனீக்கள், வண்டுகள், பட்டாம் பூச்சிகள், மானிடர்கள், UN - தமிழ்மண பதிவர்கள்
தேன் - பதிவு
உழைப்பு - பதிவு இடுவது
அழகான, புத்திசாலி தேனி - அழகுச் சங்கிலித் துவங்கி வைத்த இலவசக் கொத்தனார்
சன்மானம் - 2 சாக்லெட்

பின்னுமொரு பின்குறிப்பு:
நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற

உங்களுக்கு கேக்குதா..... எனக்கு கேக்குது. பொருமாதீங்க. சேதுக்கரசிய கண்டுபிடிக்க வேற வழி தெரியல. உங்களுக்கு தெரிஞ்சா எங்கிட்ட மட்டும் சொன்னீங்கன்னா... கிடைக்கிற சாக்லேட்ல பாதி (ஒன்னுல பாதி) உங்களுக்கு!

23 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

தெரிஞ்சா சொல்லுங்க:-)

said...

இப்படியொரு மொக்கையா? கொடுமைடா சாமீ!!

said...

கொத்தனார் வந்து கொத்திவிட்டுப் போனதன் சுட்டியைத் தரவும். பதிவுகள் பக்கம் அடிக்கடி வருவேனென்றாலும் நான் வலைப்பதிவுகளில் குடியிருப்பதில்லை ;-) எனவே அதை மிஸ் செய்திருப்பேன் போலும்.

said...

கா வுட்டுடாதீங்க தேவியாரே(தேவனோ).... உங்களை நான் தான் அழகைப் பத்தி எழுத அழைத்தேன். காண்க: http://kaattaaru.blogspot.com/2007/04/blog-post_11.html

இந்த மொக்கைக்கு காரணம், உங்களின் ஆழ்ந்த மெளனம் தான்! மெளனம் கலைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்குதுன்ன்னு பாருங்க....
வல்லியம்மா கூட வந்து உங்கள் வரவைச் சொல்லுங்கன்னு சொல்லியிருக்காங்க பாருங்க...

தயவு கூற மாட்டீரா? ரசிக பெருமக்களின் ஆசையை தீர்த்து வைக்க வேண்டும்,
-- காட்டாறு
--- கொத்தனார்
--- அய்யனார்
--- இன்னும் பல பக்த கோ(கே)டிகள்

said...

//இன்னும் பல பக்த கோ(கே)டிகள்//

பக்தகேடிகளுக்கு வணக்கம்.

"அழகு", "வியர்டு", இப்படியெல்லாம் பதிவுத் தலைப்பில் வந்தா அதைப் படிக்கிறதில்லைன்னு வச்சிருக்கேன்.

ஆறு விளையாட்டு, வியர்டு விளையாட்டு, அது இதுன்னு பதிவுகளில் தடுக்கி விழுந்தா வர்ற தொடர் விளையாட்டெல்லாம் படிக்கிறதில்ல.. அதையெல்லாம் விடாம படிச்சிட்டிருந்தா மனுசனுக்கு வேற எதுக்கும் நேரமிருக்காது போலிருக்கே? ;-)

ஆனாலும் உங்க அழகுப் பதிவில் போய்ப் பின்னூட்டமிடவேண்டிய கடமையை உணர்த்தீட்டீங்க.. செய்யறேன்.. வர்ட்டா.

said...

சேதுக்கரசியாருக்கு தொடரோட்டம் படிப்பதற்கு நேரமில்லையாம். ஆகவே..... அன்பார்ந்த பக்த கோ(கே)டிகளே, அவரை துன்புறுத்துவது பாவம் என எனக்குப் படுவதால், அவரை அழகு விளையாட்டிலிருந்து நீக்குகிறேன்.

பின்குறிப்பு:
இவர யாருங்க தொடர வாசிக்க சொன்னாங்க? ஒரு பதிவை இடத்தானே சொன்னாங்க!

பின்னுமொரு பின்குறிப்பு:
ராணித் தேனி என்றுமே ராணி தான். பணித்தேனீக்கள் போல் வேலை செய்யமாட்டார். அவருக்கென்று ஒரு வேலை உண்டு. அதைச் செவ்வனே செய்வார்!

said...

எம்புட்டு நம்பிக்கை இருந்தா ரெண்டு சாக்லேட் தரேன்னு சொல்லி இருப்பேன். ஹிஹி...

said...

mmmmm, romba nalla mokkai. athaan kantham izukkiRappala namma pakkam vanthuddiingga. Welcome.

said...

//எம்புட்டு நம்பிக்கை இருந்தா ரெண்டு சாக்லேட் தரேன்னு சொல்லி இருப்பேன். ஹிஹி... //

கட்டாயப் படுத்தி அழகை பத்தி எழுத சொல்ல எனக்கு மனது வரவில்லை.

said...

//mmmmm, romba nalla mokkai. athaan kantham izukkiRappala namma pakkam vanthuddiingga. Welcome.//

நீங்க பெரிய ஆளுங்க. நாமெல்லாம் இப்போ வந்த பொடிசு. நீங்க எழுதப் போறீங்கன்னு தெரிஞ்சாலே, தமிழ்மணம் தலை வணங்கி(ஸ்தம்பித்து) நிக்குது.....

ஆனாலும் தலைவி வந்து வரவேற்கிறத தட்ட முடியுமா?
வந்தேன் தலைவி! வந்துட்டேன் தலைவி!

said...

//இவர யாருங்க தொடர வாசிக்க சொன்னாங்க? ஒரு பதிவை இடத்தானே சொன்னாங்க!//

:-)

//அவருக்கென்று ஒரு வேலை உண்டு. அதைச் செவ்வனே செய்வார்!//

ஊருக்குப் புதுசுன்னாலும் நம்மளப் பத்தி நல்லாத் தெரிஞ்சு வச்சிருக்கீங்க.. நன்றி.

said...

//எம்புட்டு நம்பிக்கை இருந்தா ரெண்டு சாக்லேட் தரேன்னு சொல்லி இருப்பேன். ஹிஹி...//

கொத்தனாருக்கு நல்லா தெரியும் போல.. அந்த ரெண்டு சாக்லெட்டுக்குக் கூட அவருக்கு செலவு வைக்கமாட்டேன்னு! (பேரு தான் இலவசம். சரியான கஞ்சூஸ் போலருக்கு.)

said...

mmmmm, theni kottiduchcho? athan innum onnumee illai. he he he :D may be too much of aani? :P

said...

//mmmmm, theni kottiduchcho? athan innum onnumee illai. he he he :D //
நாமெல்லாம்.... தேனி கொட்டி..... ??? ...... என்னங்க நீங்க....... இப்படி நெனச்சிட்டீங்க...... 3 நாள் 4 வயது குட்டி தேவதை வீட்டிற்கு வந்திருந்தாள். அப்புறம் எங்கே கம்யூட்டர் முன் உட்கார்வது?

may be too much of aani? :P //
ஆணின்னா என்னங்க? ஊருக்கு புதுசு பாத்தீங்களா? அதனால சில சிலாங் இன்னும் பிடி படல. இத பத்தி ஒரு மொக்கை போட்டுரலாமா?

said...

வாவ்.. சிம்ப்லீ சூப்பர்..

வி.வி.சி..
இனி ஏதாவது விஷயம் மக்களுக்கு தெரிய படுத்தணும்ன்னா மேட்டரை உங்க கிட்ட கொடுத்துடறேன்.. பப்லிசிட்டி உங்க பொறுப்பு. ஓகே வா?? ;-)

said...

நீங்க பதிவு போட்டதும், அரசி ஓடி வந்தாச்சு! என்னவொரு எஃபெக்டிவ்வான விளம்பரம்.. :-)

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
வாவ்.. சிம்ப்லீ சூப்பர்..

வி.வி.சி..
இனி ஏதாவது விஷயம் மக்களுக்கு தெரிய படுத்தணும்ன்னா மேட்டரை உங்க கிட்ட கொடுத்துடறேன்.. பப்லிசிட்டி உங்க பொறுப்பு. ஓகே வா?? ;-)

//
பாராட்டுக்கு நன்றி மை ப்ரண்ட் :(

பப்லிசிட்டி? ச்ச ச்ச... அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது..... தலமைப் பொறுப்பு இருந்தா கொடுங்க. ;-)

said...

ஆனால், உங்களைப்போல் விளம்பரம் கொடுக்குறதுக்கு ஆள் இல்லையே!!! :-(

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
நீங்க பதிவு போட்டதும், அரசி ஓடி வந்தாச்சு! என்னவொரு எஃபெக்டிவ்வான விளம்பரம்.. :-) //

அட நீங்க வேற.... தனியா அவங்க கால்ல விழுந்து, அம்மா, தாயே... கொஞ்சம் வந்து மறுமொழியாது கொடுத்துட்டு போ தேவீன்னு கெஞ்சுனது எனக்குத் தானே தெரியும். இப்போ உங்களுக்கும் தெரிஞ்சிரிச்சி. யாருட்டேயும் சொல்லிராதீங்க! ;-)

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
ஆனால், உங்களைப்போல் விளம்பரம் கொடுக்குறதுக்கு ஆள் இல்லையே!!! :-( //

ரொம்ப கால்ல விழாதீங்க... கால வாரிவிடவோன்னு எனக்கு பயம் வந்துரும்...

said...

//அட நீங்க வேற.... தனியா அவங்க கால்ல விழுந்து, அம்மா, தாயே... கொஞ்சம் வந்து மறுமொழியாது கொடுத்துட்டு போ தேவீன்னு கெஞ்சுனது எனக்குத் தானே தெரியும். இப்போ உங்களுக்கும் தெரிஞ்சிரிச்சி. யாருட்டேயும் சொல்லிராதீங்க! ;-)//

யப்பா.. கொஞ்ச நாள் பதிவுப் பக்கம் வரலைன்னா பிளேட்டையே திருப்பிப் போட்ருவீங்களே? உண்மையச் சொல்லுங்க.. நானாகத் தானே வந்தேன்???

said...

எச்சூச்மீ மே ஐ கம் இன்ஸைடுத கும்பி:-))

said...

//எச்சூச்மீ மே ஐ கம் இன்ஸைடுத கும்பி:-))//

thanks to தமிழ் பிளாக்ஸ்,

மொக்கைன்னா தெரியும்
கும்மின்னா தெரியும்
பி.க.ன்னா தெரியும்
பட்டைன்னாலும் தெரியும்
உள்குத்துன்னா தெரியும்

அதென்னது கும்பி???