Tuesday, April 17, 2007

வந்தாரு..... வந்தாரு..... தாய்மையுடன் வந்தாரு!

வந்துட்டார்........... வந்துட்டார்........... வந்துட்டார்........... இந்த தண்டோரா போடாம வர முடியாதான்னு ஓரத்துல உக்காந்திருப்பவங்க மொனகக் கூடாது... ஆமா. காட்டாறு வர்றத சொல்லலைன்னா உங்களுக்குத் தான் திண்டாட்டம். கொஞ்ச நாள் சந்தோஷமா இருந்திருப்பீங்க. அழகு பத்தி சங்கிலித் தொடர் வர்றத சொன்னேன். ஆளாளுக்கு தாய்மை பத்தி சொல்லுறாங்களே......... நாம ஒரு மொக்கைப் போடலாம்ன்னு நெனச்சா....... முடிஞ்சா தானே. சரி, நமக்கு தெரிஞ்சத, தெரிஞ்ச மாதிரி எழுதுவோம். அது தான் நம்மால முடிந்ததுன்னு முடிவுக்கு வர்றதுக்குள்ள, நாளும், கிழமையும் ஓடிப்போச்சி!

எல்லாரும் தாய்மை பத்தி அழகுச் சங்கிலில எழுதினதும் எனக்கு ஒரு நிகழ்ச்சி ஞாபகம் வந்தது. உங்க கிட்ட சொல்லாம யாரு கிட்ட சொல்லப் போகிறேன் நான்? கண்கலங்காதீங்க பதிவாளர்களே (அது என்னவோ தெரியலைங்க பதிவாளர்ன்னு எழுதுறப்போ, ஒரு தனி கவுரதையா இருக்குது பாத்தீங்களா). வந்தேன் கதைக்கு.

என் தோழி கருவுற்றாள். முதல் குழந்தை. சந்தோஷம் திக்குமுக்காட வைத்தது. வேலைக்கு செல்லும் பெண்ணிவள். அதனால ஜாலி லாலா ஜிம்கானான்னு பாடிட்டு திரிய முடியாது. ஆனாலும் சுத்தி இருக்கிற எங்களை படுத்தி எடுத்துட்டா. அதாவது சந்தோஷத்த பகிர்ந்து கிட்டா. அம்மாவுடன் இருந்தா எப்படி இருக்கும்ன்னு நெனச்சவளுக்கு புசுக்குன்னு மனசு சோகமாச்சி. இருக்காதா பின்ன. அமெரிக்காவுலல்ல இருக்கிறா. ஊருல இருக்கிற அம்மாவ எப்படி கூப்பிடுறது. கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசைன்ற மாதிரி, தன் குழந்தை அமெரிக்கை பிரஜையாக்கனும் ஆசை; தன் தாயுடன் இருக்கவும் ஆசை. விருந்தாளியா வந்தாங்க அம்மா. நமக்குத்தான் பெரியவங்கள்ளாம் தோஸ்த் ஆகிருவாங்கன்னு வியர்டிருக்கிறேன்ல. மனம் திறந்து நிறைய கதை பேசினோம். அவங்க டீச்சரா இருந்து, மேல மேல படித்தது மட்டும் இல்லாமல், குழந்தைகளையும் தானே கவனித்து வளர்த்து ஆளாக்கியதை பெருமையா சொன்னாங்க. ஒரு சுப முகூர்த்தத்தில் அழகு பெட்டகமாய் ஒரு குட்டி தேவதை பிறந்தாள். கதை குழந்தைய பத்தினது இல்லாததால, ஆசை இருந்தாலும் ரொம்ப விவரிக்கல. சரியா?

தோழிக்கு விடுப்பு முடிந்தது. வேலை செல்ல ஆரம்பித்தாள். அப்போ இந்த தாய் வடித்த கண்ணீர் இன்னமும் என் கண்களை விட்டு நீங்கவில்லை. தன் மகளின் கஷ்டம் காண முடியவில்லை அந்த தாய்க்கு. கீழ்வரும் வரிகள் அனைத்தும் அவருக்குச் சமர்ப்பணம். இது போல் கவலைப் பட்ட அம்மாக்கள், அப்பாக்கள் (தாய்மை இருபாலாருக்கும் பொது என அழகுச்சங்கிலியில் சொன்னது ஞாபகம் இருக்கா?) உலகம் முழுவதும் உண்டு. அவர்களையும் சேர்த்துக் கொள்கிறேன்.


தாய்மையின் உண்மை

உருவானாள் கருவாய்
ஆனந்தக் கூத்தாடியது மனம்
கருவானவள் உயிரானாள்
இப்பூவுலகில் உதித்தாள்

பூவாய் சிரித்தாள்
தத்தி நடந்தாள்
மழலையில் கொஞ்சினாள்
ஆனந்தக் கூத்தாடியது மனம்!

கேள்விக் கணைகள் தொடுத்தாள்
உலகை அறிய முனைந்தாள்
உவகையாய் சிரித்தாள்
மெய்மறந்து திரிந்தது மனம்!

பூவையானாள்
பூப் பூவாய் மலர்ந்தாள்
செவ்வனே இல்வாழ்க்கை
கற்றுக்கொடுத்தது யாரோ; பூரித்தது மனம்!

கருவை சுமந்தாள்
உயிருக்கு உயிர் கொடுத்தாள்
ஒளிர்வாய் துலங்கினாள்
பெருமிதமாய் எண்ணியது மனம்!

பணி அழைத்தது
பகலில் வேலை; இரவில் குழந்தை
தூக்கம் மறந்து ஓடினாள்
பொறுத்துக் கொள்ள முடியா தவித்தது மனம்!

பெற்ற என் மனம் கலங்கியது!
பெற்றதால் அவள் மனம் குளிர்ந்தது!

-- காட்டாறு

31 பேர் மறுமொழிந்துள்ளனர்:

துளசி கோபால் said...

//தன் மகளின் கஷ்டம் காண முடியவில்லை அந்த தாய்க்கு. //

அப்புறம்? பேசாம அங்கியே தங்கிட்டாங்களா குழந்தையைப் பார்த்துக்கறதுக்கு?

காட்டாறு said...

புஷ் வந்து கெஞ்சி நீங்க இந்தியாவுக்கு போயிருங்க... நீங்க இல்லாம அங்க எல்லாரும் திண்டாடுறாங்கன்னு சொல்லு அனுப்பி வச்சாரு. ஏனுங்க நீங்க.

வடுவூர் குமார் said...

பின்னூட்டம் அல்ல.
நீங்கள் அங்கு கேட்ட கேள்விக்கு இங்கு பதில்
என்னுடைய புதிய பதிவு இங்கே.
நேரம் கிடைக்கும் போது வரவும்.
நன்றி

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பெற்ற என் மனம் கலங்கியது!
பெற்றதால் அவள் மனம் குளிர்ந்தது!//

முத்தாய்ப்பான வரிகள்!
குழந்தையின் குழந்தை என்று எண்ணிய தாயின் தவிப்பு!

நாகை சிவா said...

////பெற்ற என் மனம் கலங்கியது!
பெற்றதால் அவள் மனம் குளிர்ந்தது!//

முத்தாய்ப்பான வரிகள்!
குழந்தையின் குழந்தை என்று எண்ணிய தாயின் தவிப்பு! //

ரீப்பிட்டு....

கவுஜு... ரொம்ப நேரம் ஆச்சு புரிய...:-(

காட்டாறு said...

டெல்ஃபின், முதல் முறையா வந்திருக்கீங்க. உங்கள் வருகைக்கு நன்றி!

காட்டாறு said...

//முத்தாய்ப்பான வரிகள்!
குழந்தையின் குழந்தை என்று எண்ணிய தாயின் தவிப்பு! //
ரவி, நாகை சிவா, உங்க இருவரின் பாராட்டிற்கும் நன்றி!


//கவுஜு... ரொம்ப நேரம் ஆச்சு புரிய...:-( //
சிவா, உங்களுக்காக தானே ஒரு பெரிய பில்டப் குடுத்துட்டு அப்புறமா கவுஜ எழுதியிருக்கிறேன். :)

காட்டாறு said...

வடுவூர் குமார், உங்க புதிய பதிவை எனக்கு தெரிவித்தமைக்கு நன்றிங்க!

வல்லிசிம்ஹன் said...

உலக முச்சூடும் இதே கதையா.
சாமி. ஒண்ணுமே கவலை இல்லாமல் குழந்தை பெற்று வளர்த்த எங்க காலம் என்னா ஆச்சு.
இப்ப எல்லாமே கவலைதான்.

வல்லிசிம்ஹன் said...

காட்டாறு,
கதம்பமாலைக்கு உங்களால் போக முடிந்ததானு தேரியலை.
லின்க் இதோ.
http://kathambamaalai.wordoress.com/

காட்டாறு said...

//கதம்பமாலைக்கு உங்களால் போக முடிந்ததானு தேரியலை.//

அப்ளிகேஷன் போட்டாச்சி வல்லியம்மா!

காட்டாறு said...

//உலக முச்சூடும் இதே கதையா.
சாமி. ஒண்ணுமே கவலை இல்லாமல் குழந்தை பெற்று வளர்த்த எங்க காலம் என்னா ஆச்சு.
இப்ப எல்லாமே கவலைதான். //

இங்கு வர்ற அம்மாக்கள் வடிக்கும் கண்ணீர். அவங்க பொண்ணு வேலைக்கும் போய்ட்டு, குழந்தையையும் பார்த்திட்டு இருப்பது, கவலப்பட வைக்குதுன்னு நெனைக்கிறேன். ஆனா பாருங்க, பொண்ணுங்க தைரியமா, இதை எதிர் கொள்றாங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குழந்தை பிறந்து கொஞ்சம் வளரும் பருவத்தில் அவங்களை விட அவங்களை பெற்ற பச்சை உடம்புன்னு சொல்லுவாங்களே (மத்தசமயத்தில என்ன கலரோ) அப்ப மட்டும் அம்மாக்களுக்கு பெத்த பொண்னு மேல அன்பு பொத்துக்கும், அப்பத்தானே பின்னாடி ஓடியாடி வேலை செய்யமுடியும். அப்புறம் எல்லாம் பேரம்பேத்தி மேல தான் அக்கறை எல்லாம்... சும்மா வல்லிம்மா கோச்சுக்காதீங்க. :)

Geetha Sambasivam said...

mmmm the answer you gave to Thulasi seems to be sort of ULKUTHU to somebody else? Who is that?
hehehe I am also a mother. You are also or may be or in future may be a mother. appovum ithe thana?
Kavithai nalla irukku.
pathivu mokkainu sonningga illai/ athan inge vanthu pinnutta mokkai podaren. ithu eppadi irukku? :P

காட்டாறு said...

நீங்க சொல்லுறத ஏத்துக்க மாட்டேங்க முத்துலெட்சுமி... பாசம் வேணா பகிர்ந்தளிக்கப் பட்டிருக்கும். ஆனா பாருங்க, அவங்க மகள ஏதாவது இந்த சிறு பிள்ளைகள் எதிர்த்து சொன்னாலோ, செய்தாலோ... ஒரு கோவம் வரும் பாருங்க...

எப்பவுமே தன் பிள்ளை தான் உயர்த்தி அம்மாவுக்கு. மறுப்பு உண்டா?

காட்டாறு said...

//mmmm the answer you gave to Thulasi seems to be sort of ULKUTHU to somebody else? Who is that?//
தாயீ.... சிண்டு மூட்டி விடாதம்மா... ஏனுங்க நீங்க... உள்குத்தும் இல்லை, வெளிக்குத்தும் இல்லை.

//Kavithai nalla irukku//
பராட்டுக்கு நன்றி

//pathivu mokkainu sonningga illai/ athan inge vanthu pinnutta mokkai podaren. ithu eppadi irukku? :P //
ஏனுங்க உங்க பதிவ மொக்கைன்னு யாராவது சொல்ல முடியுமா? கூப்பிடுங்க அவங்கள நாம் பாத்துக்கெல்லாம்.... என்ன நெனக்கிறாங்க மனசுல...
ஏந்தாயீ... தப்பான இடத்துல வந்து.... தப்பா சொல்லிப்பூட்டீகளே..

நாகை சிவா said...

//சிவா, உங்களுக்காக தானே ஒரு பெரிய பில்டப் குடுத்துட்டு அப்புறமா கவுஜ எழுதியிருக்கிறேன். :) //

:-)

அந்த பில்டப்னால தான் கவுஜு படிக்க நேர்ந்தது

MyFriend said...

கவிதை நன்றாக இருக்கின்றது.. ஆனால் சில வரிகள் அடியேனுக்கு புரியவில்லை.. :-(

காட்டாறு said...

//கவிதை நன்றாக இருக்கின்றது.. ஆனால் சில வரிகள் அடியேனுக்கு புரியவில்லை.. :-( //

பாரட்டுக்கு நன்றி மை ப்ரண்ட்.

புரியாமல் இருப்பது தான் கவிதை அப்படின்னு ஷைலஜாக்கா சொலியிருக்காங்க ;-)

MyFriend said...

//புரியாமல் இருப்பது தான் கவிதை அப்படின்னு ஷைலஜாக்கா சொலியிருக்காங்க ;-)//

அப்போ இதெல்லாம் தெரிஞ்சேதான் பண்ணிட்டு இருக்கீங்களா???

காட்டாறு said...

//அப்போ இதெல்லாம் தெரிஞ்சேதான் பண்ணிட்டு இருக்கீங்களா???
//

என்ன மை ப்ரண்ட் நீங்க? எடக்கு மடக்கா கேள்வில்லாம் கேட்டுகிட்டு. இதெல்லாம் சிதம்பர ரகசியம்.

MyFriend said...

//என்ன மை ப்ரண்ட் நீங்க? எடக்கு மடக்கா கேள்வில்லாம் கேட்டுகிட்டு. இதெல்லாம் சிதம்பர ரகசியம்.//

அட.. இது எனக்கும் பிடிச்ச சீரியல்தான்.. :-P

வல்லிசிம்ஹன் said...

Absolutely right paa.
நாம வேணா நம்ம பெத்ததை என்ன வேணா சொல்லுவோம்.
அவளைக் கட்டினவரோ,இல்லை அவளேபெத்த பிள்ளையோ
ஏதாவது சொன்னா சும்மா பொங்கிர மட்டொம்:-)?
சொல்லாதீங்க,உங்க ஊரு வேலைய...
குழந்தையும், அதுக்கு முன்ன இருக்கிற குழந்தை,

சமையல், வாஷிங்,துணி மடிக்கணும், அயர்ன் பண்ணனும்..ஆளைவிடு.

இதுக்கு மேல இதுங்க என்ன செய்யுமோ நாமளும் ஊருக்குப் போயிட்டா.
இது ஒரு கவலை. நன்றி. ஒரு சௌண்ட்போர்ட் கிடைச்சது.

பங்காளி... said...

ஒரு கவித....

"குழந்தை...
கடவுள் தந்த பரிசு

தாய்...
பரிசாய் வந்த கடவுள்"

காட்டாறு said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
//என்ன மை ப்ரண்ட் நீங்க? எடக்கு மடக்கா கேள்வில்லாம் கேட்டுகிட்டு. இதெல்லாம் சிதம்பர ரகசியம்.//

அட.. இது எனக்கும் பிடிச்ச சீரியல்தான்.. :-P

//

மை ஃபிரண்ட், ரொம்ப ராங்க் காமிக்கிறீங்க... அப்புறம் அம்மாட்ட சொல்லுக்குடுத்துறுவேன்... ;-)
ஹீ ஹீ ஹீ ....

காட்டாறு said...

//நாம வேணா நம்ம பெத்ததை என்ன வேணா சொல்லுவோம்.
அவளைக் கட்டினவரோ,இல்லை அவளேபெத்த பிள்ளையோ
ஏதாவது சொன்னா சும்மா பொங்கிர மட்டொம்:-)? //

நெத்தியடியா சொல்லிட்டீங்க வல்லியம்மா...

//நன்றி. ஒரு சௌண்ட்போர்ட் கிடைச்சது. //

:-) (-:

காட்டாறு said...

//பங்காளி... said...
ஒரு கவித....

"குழந்தை...
கடவுள் தந்த பரிசு

தாய்...
பரிசாய் வந்த கடவுள்"
//

100க்கு 100 உண்மை பங்காளி. இத நாம உணர்ந்தா... முதியோர் இல்லங்கள் தேவையில்லை அல்லவா?

MyFriend said...

காட்டாறு said...

//மை ஃபிரண்ட், ரொம்ப ராங்க் காமிக்கிறீங்க... அப்புறம் அம்மாட்ட சொல்லுக்குடுத்துறுவேன்... ;-)
ஹீ ஹீ ஹீ ....//

ஹாஹாஹா.. இப்படி பதிவுக்கும் பின்னூட்டத்துக்கும் சம்பந்தம் இல்லாம இருக்கனும்ன்னு சொல்லிக் கொடுத்தததே அபி அப்பாதான். அவர் கிட்ட போய் கேளுங்கக்கா.. :-D

காட்டாறு said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
ஹாஹாஹா.. இப்படி பதிவுக்கும் பின்னூட்டத்துக்கும் சம்பந்தம் இல்லாம இருக்கனும்ன்னு சொல்லிக் கொடுத்தததே அபி அப்பாதான். அவர் கிட்ட போய் கேளுங்கக்கா.. :-D

//

அம்மாடி, இந்த பின்னூட்டம் இந்த பதிவுக்கு இல்லைன்னு தெரியும். ஆனா எந்த பதிவுக்குன்னு தெரியலையேயயயயய...

ஷைலஜா said...

//புரியாமல் இருப்பது தான் கவிதை அப்படின்னு ஷைலஜாக்கா சொலியிருக்காங்க ;-) //

ஆஹா காட்டாறு ! எப்போ யார்கிட்ட சொன்னேன்?:) சொல்லி இருப்பேன்(உளறுவது வழக்கமாச்சே?:)
உங்க கவிதை எனக்குப்புரியுது நல்லாருக்கு
ஷைலஜா

ஷைலஜா said...

//புரியாமல் இருப்பது தான் கவிதை அப்படின்னு ஷைலஜாக்கா சொலியிருக்காங்க ;-) //

ஆஹா காட்டாறு ! எப்போ யார்கிட்ட சொன்னேன்?:) சொல்லி இருப்பேன்(உளறுவது வழக்கமாச்சே?:)
உங்க கவிதை எனக்குப்புரியுது நல்லாருக்கு
ஷைலஜா