Sunday, April 22, 2007

என் தேவதை

என் பிள்ளை சொக்க தங்கம்
என்று அம்மா அடிக்கடி சொல்வார்
என் பிள்ளை பட்டை தீட்டிய வைரம்
என்று மார் தட்டுவார் தந்தை

உச்சி முகர்ந்து செல்லக் குட்டி
என்று அணைத்திடுவார் தாத்தா
அவள் வயதொத்த தோழிகளிடம்
என் பேத்தி என பெருமிதபடுத்திடுவார் பாட்டி

தங்கையுடன் பேசினால்
மன நிறைவு என்பாள் தமக்கை
எது கேட்டாலும் வாங்கி தருவாள்
என் அக்கா என இன்முகம் காட்டுவான் தம்பி

என் வீட்டு கதவு திறந்ததும்
பாய்ந்தோடி, மேல் விழுந்து
நாவால் நக்கி தன் அன்பை வெளிப்படுத்தும்
எங்கள் வீட்டு பொமரேனியன் குட்டி

இப்படி,
எல்லாரும் என் மீது உயிரே வைத்திருக்கும் போது
நீ மட்டும் .....
நீ மட்டும் .....

என்னை பார்ப்பது கூட
கேவலம் என எண்ணும்
உன்னைப் பற்றி மட்டுமே
கவிதை எழுத எப்படி முடிகிறது என்னால் !!

-- காட்டாறு

101 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

நான் தான் பஸ்ட்:-)...இது தான் தவறி போய் அவந்திகா பதிவுல விழுந்துடுச்சு:-))

said...

ஹா ஹா ஹா....

நாங்க இத நம்பனுமாக்கும்...

said...

//என்னை பார்ப்பது கூட
கேவலம் என எண்ணும்
உன்னைப் பற்றி மட்டுமே
கவிதை எழுத எப்படி முடிகிறது என்னால் !!//

அதிகமா கண்ணாடி பாத்தா இப்டிதான் ஆகும்:-))

said...

//அதிகமா கண்ணாடி பாத்தா இப்டிதான் ஆகும்:-))//

ரிப்ப்பீட்டே..........

said...

யக்கோவ்... இது நாயமா....உங்க வகுப்புல உக்கார்ந்து... ராப்பகல் பாக்காம கண்ணு முழிச்சி படிச்சேனே... இப்படி சொல்லிப்பூட்டிகளே...

அபி அப்பா, கலகத்த ஆரம்பிக்க தான் நான் பஸ்ட் சொன்னீங்களா? தெரியாம போச்சே...

said...

//அபி அப்பா said...
அதிகமா கண்ணாடி பாத்தா இப்டிதான் ஆகும்:-)) //

ராசா.... சொன்னீயே ஒரு சொல்லு... நெத்தியடிப்பா அபிப்பா :)

said...

எங்கியோ இடிக்குதே...ம்ம்ம்ம்

ஏனுங்க அம்மனி....அப்டி கிப்டி ஏதாவது....டெவலப்மெண்ட்ஸ்....

நம்ம கைல மட்டும் சொல்லுங்க ரகசியமா வச்சிக்கிறேன்...ஹி..ஹி...

said...

////அபி அப்பா said...
அதிகமா கண்ணாடி பாத்தா இப்டிதான் ஆகும்:-)) //

ராசா.... சொன்னீயே ஒரு சொல்லு... நெத்தியடிப்பா அபிப்பா :)//

இப்படி திடீர்ன்னு படிஞ்சு போய்ட்டா எப்படி கலகம் செய்ய முடியும், சண்டை போட வேணாமா?

said...

//பங்காளி... said...
எங்கியோ இடிக்குதே...ம்ம்ம்ம்
ஏனுங்க அம்மனி....அப்டி கிப்டி ஏதாவது....டெவலப்மெண்ட்ஸ்....
நம்ம கைல மட்டும் சொல்லுங்க ரகசியமா வச்சிக்கிறேன்...ஹி..ஹி...
//

பங்காளிட்ட சொல்லாமயா? இது கவிஜப்பா... நெசமில்ல...

said...

@அபி அப்பா said...

//நான் தான் பஸ்ட்:-)...இது தான் தவறி போய் அவந்திகா பதிவுல விழுந்துடுச்சு:-))//

எல்லாம் நான் வந்து ஃபர்ஸ்டு கமேண்ட் போட்டுடுவேன் என்று பயந்து அவசர அவசரமாக போட்டுட்டீங்களோ?

உங்களுக்கு வேணும்ன்னா நான் விட்டுக்கொடுக்க மாட்டேனா? ம்ம்.. ஜமாய்ங்க.. :-D

said...

@காட்டாறு said...

//ஹா ஹா ஹா....

நாங்க இத நம்பனுமாக்கும்... //

நீங்க நம்பிதான் ஆகணும் காட்டாறு.. இவரு இப்படித்தான். காமெடில கெட்டிக்காரரு.. :-P

said...

@அபி அப்பா said...

//அதிகமா கண்ணாடி பாத்தா இப்டிதான் ஆகும்:-)) //

ஆஹா.. சூப்பர் அபி அப்பா..

(நான் இன்னும் பதிவே படிக்கலை.. :-P

பின்னூங்கள் படிச்சுமுடிச்சுட்டுதான் பபதிவு படிக்கலாம்ன்னு இருக்கேன், ;-)
)

said...

@அபி அப்பா said...

//இப்படி திடீர்ன்னு படிஞ்சு போய்ட்டா எப்படி கலகம் செய்ய முடியும், சண்டை போட வேணாமா?
//

அபிப்பா, புரியுது புரியுது!!

இன்னைக்கு நீங்க இங்க தனியாளா நின்னு கும்மியடிக்க போறீங்க.. அதானே??? ;-)

வாழ்த்துக்கள்! :-)

said...

அது எப்படிங்க மை ஃப்ரெண்ட்? பதிவ படிக்காம... சூப்பர் அபி அப்பான்னு சொன்னீங்க...

அடடே... இப்போ தானே வெளக்கமா புரியுது... எல்லாரும் கூட்டு சேந்து வந்துட்டிகளே....

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
நீங்க நம்பிதான் ஆகணும் காட்டாறு.. இவரு இப்படித்தான். காமெடில கெட்டிக்காரரு.. :-P //

அபி அப்பா, மை ஃப்ரெண்டுக்கு என்ன இடை சொருகல் கொடுத்தீங்க... இந்த சப்பக் கட்டு கட்டுறாக....


மை ஃபிரண்ட், நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்

said...

//என் பிள்ளை சொக்க தங்கம்
என்று அம்மா அடிக்கடி சொல்வார்
என் பிள்ளை பட்டை தீட்டிய வைரம்
என்று மார் தட்டுவார் தந்தை//

அம்மணி, உண்மைய சொல்லுங்க.. எல்லாமே கனவுதானே??? ;-)

said...

//என்னை பார்ப்பது கூட
கேவலம் என எண்ணும்
உன்னைப் பற்றி மட்டுமே
கவிதை எழுத எப்படி முடிகிறது என்னால் !!//

ஆஹா.. இப்பத்தான் புரியுது.. அபி அப்பா ஏன் கண்ணாடின்னு பதில் கொடுத்தார் என்று.. ரிப்பீட்டே!!!

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
//என் பிள்ளை சொக்க தங்கம்
என்று அம்மா அடிக்கடி சொல்வார்
என் பிள்ளை பட்டை தீட்டிய வைரம்
என்று மார் தட்டுவார் தந்தை//

அம்மணி, உண்மைய சொல்லுங்க.. எல்லாமே கனவுதானே??? ;-)

//

ராசாத்தீ, புத்திசாலிடா நீ... எப்படி கண்டுபிடிச்ச...
சரி சரி யார்ட்டையும் சொல்லாத என்ன.

said...

//மை ஃபிரண்ட், நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் //

அடடா.. என் மேலே என்ன நம்பிக்கை.. :-)

said...

தங்கச்சி வந்துட்டியாம்மா! இன்னிக்கு நம்ம குடும்ப கும்மி இங்கியா, ஹய்யோ கொஞ்சம் ஆணி பிடுங்க வேண்டியிருக்கே, சர் அப்பப்ப வந்து அடிச்சு ஆடுவோம்:-))

said...

//ராசாத்தீ, புத்திசாலிடா நீ... எப்படி கண்டுபிடிச்ச...
சரி சரி யார்ட்டையும் சொல்லாத என்ன. //

யார் கிட்டயும் சொல்லாதீங்கன்னு சொல்லிடு இப்படி பப்ளிக்ல போட்டு ஒடச்சிட்டீங்களே!! இப்போ அபி அப்பாவுக்கு தெரிஞ்சதுன்னா ஒரு உலகத்துக்கே டமாரம் அடிச்சிடுவாரே!!!

:-P

said...

//அபி அப்பா said...
தங்கச்சி வந்துட்டியாம்மா! இன்னிக்கு நம்ம குடும்ப கும்மி இங்கியா, ஹய்யோ கொஞ்சம் ஆணி பிடுங்க வேண்டியிருக்கே, சர் அப்பப்ப வந்து அடிச்சு ஆடுவோம்:-))

//
தூக்கமும் கண்களை தழுவுதேன்னு நான் பாடி ஓடிற மாட்டோமாக்கும்... எங்களுக்கு இன்னும் இனிய நாள் பிறக்கலையாக்கும்.

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
யார் கிட்டயும் சொல்லாதீங்கன்னு சொல்லிடு இப்படி பப்ளிக்ல போட்டு ஒடச்சிட்டீங்களே!! இப்போ அபி அப்பாவுக்கு தெரிஞ்சதுன்னா ஒரு உலகத்துக்கே டமாரம் அடிச்சிடுவாரே!!!

:-P

//
அபி அப்பா ஆணி பிடிங்கிட்டு திரும்புறதுக்குள்ள அழிச்சி கிழிச்சி மறு ஆட்டம் ஆடிறலாம்

said...

@அபி அப்பா said...

//தங்கச்சி வந்துட்டியாம்மா! இன்னிக்கு நம்ம குடும்ப கும்மி இங்கியா, //

ஹாஹா.. முடிவே ஆச்சா!! இன்னைக்கு காட்டாறை தமிழ்மணத்துல இருந்து தூக்குறதுதான் நம் பாசக்கார குடும்பத்ததோட இன்றைய லட்சியம். :-)

//ஹய்யோ கொஞ்சம் ஆணி பிடுங்க வேண்டியிருக்கே, சர் அப்பப்ப வந்து அடிச்சு ஆடுவோம்:-)) //

சரி.. அப்ப்பபோ புகுந்து விளயாடிடுவோம். :-)

said...

//அபி அப்பா said...
தங்கச்சி வந்துட்டியாம்மா! இன்னிக்கு நம்ம குடும்ப கும்மி இங்கியா, ஹய்யோ கொஞ்சம் ஆணி பிடுங்க வேண்டியிருக்கே, சர் அப்பப்ப வந்து அடிச்சு ஆடுவோம்:-))
//

அடப் பாவிங்களா.... எத்தனைப் பேரு கிளம்பியிருக்கீங்க இப்படி..... அபி அப்பா, குரங்கு ராதா கதை படிச்சதிலெருந்து பயந்து போயிருக்கிறேன்.... நீங்க புகுந்து ஆடுறீங்க :)

said...

//அடப் பாவிங்களா.... எத்தனைப் பேரு கிளம்பியிருக்கீங்க //

இப்போதைக்கு ரெண்டு பேருதான்.. மத்தவங்க பின்னால லாரியில வந்துக்கிட்டு இருக்காய்ங்க.. :-D

said...

//எங்களுக்கு இன்னும் இனிய நாள் பிறக்கலையாக்கும்.//

கவலை வேண்டாம், சீக்கிரம் பிறக்கும், வாழ்த்துக்கள்!!

said...

எங்க குடும்ப கும்மியோட பவர் என்னன்னு இங்க போய் பாருங்க http://imsaiarasi.blogspot.com/2007/04/blog-post_21.html

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said... இப்போதைக்கு ரெண்டு பேருதான்.. மத்தவங்க பின்னால லாரியில வந்துக்கிட்டு இருக்காய்ங்க.. :-D
//

லாரிலேயா..... குடும்பம்ன்னு சொன்னீங்க.. ஒரு கிராமத்தையே கொண்டு வருவீங்க போலயே...

said...

//அபி அப்பா said...
எங்க குடும்ப கும்மியோட பவர் என்னன்னு இங்க போய் பாருங்க //

பவரு பவரு தான் ....

டாப் என்னன்னா... கும்மிக்கு பதிவ படிக்கனும்ன்னு தேவையில்லை ஒரு போடு போட்டுருக்கீங்கள குடும்பத்தில உள்ளவங்க... அது தான்.

அதனால நான் ஜகா வாங்கிக்கிறேன்.

வணக்கம்; வந்தனம்;

யாருப்பா அங்கே திரைய மூடு... அபி அப்பா மேலெ ஒரு கண்ணு இருக்கட்டும்... என்னோட மூக்கு முழியெல்லாம் பேத்துறப் போறாரு...

said...

//லாரிலேயா..... குடும்பம்ன்னு சொன்னீங்க.. ஒரு கிராமத்தையே கொண்டு வருவீங்க போலயே... //

ஹி ஹி கொஞ்சம் பெரிய குடும்பம்:-))

said...

கடைசி பாரா தான் செம் டச்.
கவித கவித..

said...

முத்துலெட்சுமி said...
//கடைசி பாரா தான் செம் டச்.
கவித கவித..
//

இது யாரு? கும்மிக்கு சம்பந்தமே இல்லாம பின்னூட்டம் போடுறது!!!! :-P

said...

//முத்துலெட்சுமி said...
கடைசி பாரா தான் செம் டச்.
கவித கவித.. //

நக்கல் ஒன்னும் இல்லிங்களே... நமக்கு இன்னைக்கு நேரம் சரியில்லைன்னு வாத்தியார் சொல்லிட்டாராம்... பாசக்கார குடும்பம் லாரி வந்து கவுக்கப் பார்க்கறாங்க... அதனால கேட்டு தெரிஞ்சிக்க வேண்டிய நிலமை வந்திருச்சி

said...

//லாரிலேயா..... குடும்பம்ன்னு சொன்னீங்க.. ஒரு கிராமத்தையே கொண்டு வருவீங்க போலயே... //

கொஞ்சமே பெரிய குடும்பம். ஹீஹீ..

அங்கே இம்சையக்கா கும்மியில வந்திருக்கரவங்க ஒரு ட்ரேயிலர்தான். மேயின் பிச்சர் நீங்க இன்னும் பார்க்கலை.. ;-)

said...

//டாப் என்னன்னா... கும்மிக்கு பதிவ படிக்கனும்ன்னு தேவையில்லை ஒரு போடு போட்டுருக்கீங்கள குடும்பத்தில உள்ளவங்க... அது தான்.//

இன்னைக்கு நீங்க புதுசா ஒரு பாடம் கத்துக்கிட்டீங்க.. வாழ்த்துக்கள். :-)

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
இன்னைக்கு நீங்க புதுசா ஒரு பாடம் கத்துக்கிட்டீங்க.. வாழ்த்துக்கள். :-)
//

கத்துக்குடுத்ததுக்கு நன்று மை ஃப்ரெண்ட்... நாங்க ஓடிப் போகலாங்களா இப்போ?

said...

//கத்துக்குடுத்ததுக்கு நன்று மை ஃப்ரெண்ட்... நாங்க ஓடிப் போகலாங்களா இப்போ? //

இருங்க இருங்க.. இன்னும் ரெண்டு பேலன்ஸ் இருக்கு! முடிச்சு போகலாம்ல.. :-D

said...

குடும்ப உறுப்பினர்களுக்கு காலை வணக்கம் இங்கதான் இன்னைக்கு கும்மியா???? சொல்லவேல்ல

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
கொஞ்சமே பெரிய குடும்பம். ஹீஹீ..

அங்கே இம்சையக்கா கும்மியில வந்திருக்கரவங்க ஒரு ட்ரேயிலர்தான். மேயின் பிச்சர் நீங்க இன்னும் பார்க்கலை.. ;-)
//

தங்கச்சீசீ.... நமக்கு ரெண்டு பேரையே சமாளிக்க முடியலையே.... தாங்காது தாயீ

said...

40 உள்ள போங்க:-))

said...

வாப்பா கோபிதம்பி! மத்தவங்களை எழுப்பிவிட்டியா, இங்க செம தீனி போடுறாங்க நம்ம காட்டாறு அக்கா:-)

said...

\\உச்சி முகர்ந்து செல்லக் குட்டி
என்று அணைத்திடுவார் தாத்தா
அவள் வயதொத்த தோழிகளிடம்
என் பேத்தி என பெருமிதபடுத்திடுவார் பாட்டி\\

ம்ம்ம்....கவிதையில் அனைத்து வரிகளும் அருமை ;-))))
இன்னும் அருமையான வரிகள்

said...

கோபிநாத் said...
//குடும்ப உறுப்பினர்களுக்கு காலை வணக்கம் இங்கதான் இன்னைக்கு கும்மியா???? சொல்லவேல்ல
//

ஹாஹாஹா.. ஆமா கோபி..


காடாறு,

பபாருங்க.. இன்னொரு பாசமலர் வந்து சேர்ந்தாச்சு! ;-)

said...

//அபி அப்பா said...
40 உள்ள போங்க:-))
//

ஐ... தமிழ்மணத்துல இன்னும் 36ன்னு தான் காமிக்குது...
உங்க குடும்பம் மாதிரி ஸ்பீடு இல்ல போல

said...

//தங்கச்சீசீ.... நமக்கு ரெண்டு பேரையே சமாளிக்க முடியலையே.... தாங்காது தாயீ //

இப்படி பய்படுறீங்க.. சின்ன புள்ள தனமால இருக்கு!!!!

said...

//அபி அப்பா said...
வாப்பா கோபிதம்பி! மத்தவங்களை எழுப்பிவிட்டியா, இங்க செம தீனி போடுறாங்க நம்ம காட்டாறு அக்கா:-)
//

இன்னைக்கு கோழி மட்டனோட மதிய உணவு இங்கேதான்.. வாங்க வாங்க.. :-D

said...

\\காட்டாறு said...
//அபி அப்பா said...
40 உள்ள போங்க:-))
//

ஐ... தமிழ்மணத்துல இன்னும் 36ன்னு தான் காமிக்குது...
உங்க குடும்பம் மாதிரி ஸ்பீடு இல்ல போல\\

இது எங்கள் குடும்பத்திற்கு விடப்பட்டு இருக்கும் சவால் ;-))) பாசமலர்களே.....ம்ம்ம்....கும்மி வேகமாக அடியுங்கள்

said...

//கோபிநாத் said...
\\உச்சி முகர்ந்து செல்லக் குட்டி
என்று அணைத்திடுவார் தாத்தா
அவள் வயதொத்த தோழிகளிடம்
என் பேத்தி என பெருமிதபடுத்திடுவார் பாட்டி\\

ம்ம்ம்....கவிதையில் அனைத்து வரிகளும் அருமை ;-))))
இன்னும் அருமையான வரிகள்

//
வாங்க கோபி... பாராட்டுகளுக்கு நன்றி. தாத்தாக்கும் பாட்டிக்கும் ஒன்னு பேரன் பேத்திப் பத்தி பேசனும், இல்லைன்னா எங்க காலத்துலன்னு ஆரம்பிச்சு பேசனும்.. இல்லையா?

said...

50 நான் தான்

said...

தம்பி கோபி... நீயுமா? You too Brutus!

said...

//கோபிநாத் said...
50 நான் தான்
//

அடப் பாவி! இப்படி ஒரு அல்ப ஆசையா?

said...

\\வாங்க கோபி... பாராட்டுகளுக்கு நன்றி. தாத்தாக்கும் பாட்டிக்கும் ஒன்னு பேரன் பேத்திப் பத்தி பேசனும், இல்லைன்னா எங்க காலத்துலன்னு ஆரம்பிச்சு பேசனும்.. இல்லையா?\\

உண்மை.....உண்மை....இன்னும் எங்க பாட்டி அப்படி தான் பேசிக்கிட்டு இருக்கு ;-)))

said...

//இது எங்கள் குடும்பத்திற்கு விடப்பட்டு இருக்கும் சவால் ;-))) பாசமலர்களே.....ம்ம்ம்....கும்மி வேகமாக அடியுங்கள் //

ஸ்பீடு.. ம்ம்.. இதை இதைதான் எதிர்ப்பார்த்தேண்.. :-D

(தல ஸ்டைல்ல..) அது!!!!!!!!

said...

\\காட்டாறு said...
தம்பி கோபி... நீயுமா? You too Brutus!\\

அக்காவ் தமிழ்மணத்துல எதுக்கு ஆங்கிலம் எல்லாம் ;-)))

said...

//காட்டாறு said...
//கோபிநாத் said...
50 நான் தான்
//

அடப் பாவி! இப்படி ஒரு அல்ப ஆசையா?
//

இது அல்ப ஆசை இல்லைங்க.. இது ஒரு கேம்மு.. 1, 100, 20.. இப்படி கணக்கு பண்ணி அடிப்போம்.. நீங்களும் செய்து பாருங்க.. அப்போதுததான் புரியும்.. என்ன சொல்றீங்க பாசமலர்களா???

said...

//காட்டாறு said...
தம்பி கோபி... நீயுமா? You too Brutus! //

எங்கள் குடும்ப உறுப்பினர் திட்டப்பட்டார், நேத்து 358 ஸ்கோர் அடித்து விட்டு அசந்து தூங்கும் தங்கை இம்சையை எழூப்பவா, இல்லை மை பிரண்ட் தங்கச்சி நீங்க மாத்திரமே போதுமா?

said...

\\காட்டாறு said...
//கோபிநாத் said...
50 நான் தான்
//

அடப் பாவி! இப்படி ஒரு அல்ப ஆசையா?\\

ஏன்க்கா நீங்க அடிக்கணும்ன்னு ஆசை பட்டிங்களா??? இது எல்லாம் அல்ப ஆசையில்லைக்கா.....வெறி ஒரு கொலை வெறி ;)

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said... இது அல்ப ஆசை இல்லைங்க.. இது ஒரு கேம்மு.. 1, 100, 20.. இப்படி கணக்கு பண்ணி அடிப்போம்.. நீங்களும் செய்து பாருங்க.. அப்போதுததான் புரியும்.. என்ன சொல்றீங்க பாசமலர்களா???
//

ஆள வுடுங்க சாமீகளா.... நீங்க அடிச்சி விளையாடுங்க...மீ கோயிங்

said...

ஒரு நல்ல கவிதையை எப்படி நாறடிச்சோம்...இல்லடா தங்கச்சி:-))

said...

வெற்றி.. வெற்றி.. வெற்றி..


தமிழ்மணத்துல இருந்து தூக்கியாச்சு! :-D

said...

\\இது அல்ப ஆசை இல்லைங்க.. இது ஒரு கேம்மு.. 1, 100, 20.. இப்படி கணக்கு பண்ணி அடிப்போம்.. நீங்களும் செய்து பாருங்க.. அப்போதுததான் புரியும்.. என்ன சொல்றீங்க பாசமலர்களா???\\\


இன்னைக்கு எவ்வளவு??? காட்டாறுக்கா சொல்லுங்க ;)

said...

//எங்கள் குடும்ப உறுப்பினர் திட்டப்பட்டார், நேத்து 358 ஸ்கோர் அடித்து விட்டு அசந்து தூங்கும் தங்கை இம்சையை எழூப்பவா, இல்லை மை பிரண்ட் தங்கச்சி நீங்க மாத்திரமே போதுமா? //

தூங்கிட்டு இருக்கும் சிங்கத்தை எழுப்புங்க.. தீ மோர் தீ மெர்ரியர்.. :-D

said...

சரிப்பா காட்டாறுக்கு அணை போட்டாச்சு, தங்கச்சி, கோபிதம்பி வாங்க வேற வீடு பாப்போம்:-))

said...

//ஆள வுடுங்க சாமீகளா.... நீங்க அடிச்சி விளையாடுங்க...மீ கோயிங்//

விளயாடும்போது ஓனர் இங்கே இருக்கனுமே!!!

அப்புறம் விளாட்டு சூடு பிடிக்காது!!!!

said...

//அபி அப்பா said...
சரிப்பா காட்டாறுக்கு அணை போட்டாச்சு, தங்கச்சி, கோபிதம்பி வாங்க வேற வீடு பாப்போம்:-))
//

அண்ணன் சொல்லியாச்சு.. வாங்க கிளம்புங்க.. அடுத்த ஆட்டம் எங்அன்னு சொல்லியனுப்புங்க பாசங்களா!!!

காட்டாறு, இன்னைக்கு விருந்துக்கு ரொம்ப நன்றி.. வவர்ர்ர்ர்ட்ட்ட்டாடாடா!!!!

said...

\\அபி அப்பா said...
சரிப்பா காட்டாறுக்கு அணை போட்டாச்சு, தங்கச்சி, கோபிதம்பி வாங்க வேற வீடு பாப்போம்:-))\\

ஓகே....;-)))

அய்யனார் said...

எச்சூஸ் மி எனி கும்மி கோயிங் இயர்

:)

said...
This comment has been removed by the author.
said...

mmmmmm, ellarum ani pidungirathunu solrathu ithana?:P

Anonymous said...

நான் வந்துட்டேன்.late but latest.போய் படித்துவிட்டு வருகின்றேன்

Anonymous said...

மொத்தில் நீங்க ரொம்ப நல்ல புள்ளைன்னு சொல்லுறீங்க.எல்லாரும் பாச மழையாக பொழிகின்றார்கள் ;-)

said...

கவிதைய படிச்சிட்டு ... (குறிப்பா அந்த கடைசி வரிகள்) நம்ம காட்டாறுக்கு சீரியஷா ஒரு பின்னுட்டம் போடலாமே-னு வந்தா.... அபிஅப்பாவும் 'குடும்பத்தினரும்' அடிச்சி ஆடுறத பார்த்துட்டு ... சிரிச்சி சிரிச்சி .....

சாரிங்கோவ் ....!

said...

எச்சூஸ்டு அய்யனாரே... நோ மோர் கும்மி. ;-)

said...

//கீதா சாம்பசிவம் said...
mmmmmm, ellarum ani pidungirathunu solrathu ithana?:P //

கீதாம்மா, எனக்கும் ஆணின்னா என்னன்னு தெரியாது. யாராவது வந்து ஒரு பதிவு போட்டு விளக்குனா, புதிதா வர்றவங்களுக்கும் வசதியா இருக்கும். ;-)

said...

//துர்கா|thurgah said...
மொத்தில் நீங்க ரொம்ப நல்ல புள்ளைன்னு சொல்லுறீங்க.எல்லாரும் பாச மழையாக பொழிகின்றார்கள் ;-) //

தாயீ... இந்த கவிதைக்கும் எனக்கும் சம்மதம் இல்லீங்கோ.

said...

//தென்றல் said...
கவிதைய படிச்சிட்டு ... (குறிப்பா அந்த கடைசி வரிகள்) நம்ம காட்டாறுக்கு சீரியஷா ஒரு பின்னுட்டம் போடலாமே-னு வந்தா.... அபிஅப்பாவும் 'குடும்பத்தினரும்' அடிச்சி ஆடுறத பார்த்துட்டு ... சிரிச்சி சிரிச்சி .....

சாரிங்கோவ் ....!
//
இந்த ஜோருல நான் நள்ளிரவு 4 மணிவரை என்சாய் பண்ணிட்டு இருந்தென்னா பாத்துக்கோங்க!

said...

காட்டாறு,
இதென்னப்பா.
கவித நல்லா இருக்கு,
எப்படிப்பா இவ்வளவு நல்லா எழுதரீங்க, கொஞ்சம் க்ளூ
கொடுங்கப்பானு கேக்கலாம்னு
திரும்பரதுக்குள்ள
வாவ்......
இதுக்குப் பேருதான் கும்மியா:-))))))))))))))))))
களை கட்டிருக்கு.

said...

//வல்லிசிம்ஹன் said...
காட்டாறு,
இதென்னப்பா.
கவித நல்லா இருக்கு,
எப்படிப்பா இவ்வளவு நல்லா எழுதரீங்க, கொஞ்சம் க்ளூ
கொடுங்கப்பானு கேக்கலாம்னு
திரும்பரதுக்குள்ள
வாவ்......
இதுக்குப் பேருதான் கும்மியா:-))))))))))))))))))
களை கட்டிருக்கு. //

வல்லியம்மா பாராட்டுக்கு நன்றி! ஆனாப் பாருங்க நல்லா எழுதுனது நான் என் சகோதரர்(ரி)களுக்கு தூது போன சமயத்துல தான். இது அந்த காலத்துல எழுதுனது தான். அவங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் அவங்க உணர்வுகளை புரிஞ்சி எழுதுறோம்ன்னு.... ஹா ஹா ஹா....

இது தான் கும்மின்னூ நேத்து தான் எனக்கும் தெரிய வந்தது. கும்மியோ கும்மி போங்க.

said...

@அய்யனார் said...
//எச்சூஸ் மி எனி கும்மி கோயிங் இயர்
//


நீங்க லேட்டு.. இந்த கும்மி முடிஞ்சாச்சு! அடுத்த கும்மியும் முடிச்சாச்சு! அடுத்து நாளைக்குதான்.. தகவல் சொல்லியனுப்புறோம். ஓகே வா?

said...

@துர்கா|thurgah said...

//நான் வந்துட்டேன்.late but latest.போய் படித்துவிட்டு வருகின்றேன்//

உங்களுக்கு மட்டும் தனியா சொல்லனுமாக்கும்.. கும்மி ஓவர்.. காட்டாறு கடை சாப்பாடு சூப்பர். ;-)

said...

கீதா சாம்பசிவம் said...

//mmmmmm, ellarum ani pidungirathunu solrathu ithana?:P//

கீதா மேடம்.. இது ஆணியில்லை.. அமுக்காணி. :-P

said...

@காட்டாறு said...

//கீதாம்மா, எனக்கும் ஆணின்னா என்னன்னு தெரியாது. யாராவது வந்து ஒரு பதிவு போட்டு விளக்குனா, புதிதா வர்றவங்களுக்கும் வசதியா இருக்கும். ;-)//

ஆணின்னா என்னனு தெரியாதா? இதுக்கூட தெரியாத பச்ச புள்ளயா இருக்கீயளே!! இதோ! எங்க அண்ணன் எழுதியது.. இதை பாருங்க:

http://chennaicutchery.blogspot.com/2007/03/blog-post_08.html

said...

//இந்த ஜோருல நான் நள்ளிரவு 4 மணிவரை என்சாய் பண்ணிட்டு இருந்தென்னா பாத்துக்கோங்க!//

இப்படி வழிக்கு வாங்க.. ஆக மொத்தத்துல எஞ்சாய் பண்ணினீங்கள்ள.. அதுதான் எங்களுகு வேணும்.. அடுத்து எங்கேயாவது குமி இருந்தா உங்களுக்கு அழைப்பு கட்டாயமா இருக்கு.. ஆனால், நீங்க எங்க குடும்பத்துல ஒருத்தரா இருப்பீங்களா இல்லை அய்யனார் சப்போர்ட்டான்னு முன்கூட்டியே சொல்லிடனும். ஓகே வா? ;-)

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
உங்களுக்கு மட்டும் தனியா சொல்லனுமாக்கும்.. கும்மி ஓவர்.. காட்டாறு கடை சாப்பாடு சூப்பர். ;-)
//

சாப்பாடு சூப்பரா இருந்ததற்கு காரணம் கும்மி குடும்பம்மாற்றே ;-)

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
ஆணின்னா என்னனு தெரியாதா? இதுக்கூட தெரியாத பச்ச புள்ளயா இருக்கீயளே!! இதோ! எங்க அண்ணன் எழுதியது.. இதை பாருங்க:

http://chennaicutchery.blogspot.com/2007/03/blog-post_08.html
//

ஹா ஹா ஹா.... இது தான் ஆணியா.... ரொம்ப ஜோர்! :)

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
இப்படி வழிக்கு வாங்க.. ஆக மொத்தத்துல எஞ்சாய் பண்ணினீங்கள்ள.. அதுதான் எங்களுகு வேணும்.. அடுத்து எங்கேயாவது குமி இருந்தா உங்களுக்கு அழைப்பு கட்டாயமா இருக்கு.. ஆனால், நீங்க எங்க குடும்பத்துல ஒருத்தரா இருப்பீங்களா இல்லை அய்யனார் சப்போர்ட்டான்னு முன்கூட்டியே சொல்லிடனும். ஓகே வா? ;-) //

ஆள விடு தாயீ... நம்மளால காலைல 4 மணி வரைக்கும் தூங்காம இருக்க முடியாதம்மா....

said...

//ஆள விடு தாயீ... நம்மளால காலைல 4 மணி வரைக்கும் தூங்காம இருக்க முடியாதம்மா....//

நாங்க இதுக்கெல்லாம் விடிய விடிய நின்னு ஆடியிருக்கோம்.. :-)

சரி, அதை விடுங்க..

புது போஸ்ட்டு போடுங்க..

இந்த போஸ்ட்டுல கமேண்டு நிறைஞ்சிடுச்சு.. ;-)

said...

அடடே, கமேண்டு மோடரேஷனை தூக்கிடீங்களா?

said...

காட்டாறு அணையை திறந்து விட்டுட்டாங்கப்பா... :-P

Anonymous said...

//உங்களுக்கு மட்டும் தனியா சொல்லனுமாக்கும்.. கும்மி ஓவர்.. காட்டாறு கடை சாப்பாடு சூப்பர். ;-) //

நான் படிக்க வந்த ஆளு அக்கா.கும்மியில் எனக்கு பங்கு இல்லை.அடுத்த கும்மி காட்டாறு அக்கா பதிவிலேயே அடிப்போம்...வாழ்க கும்மி வளர்க கும்மி கழகம் (அனு அக்கா புண்ணியத்தில் ;-))

Anonymous said...

காட்டாறு இது நிஜமா நீங்க இல்லையா?நான் கூட நீங்கதானோன்னு தப்பு கணக்கு போட்டுடேன் ;-)

Anonymous said...

93

Anonymous said...

94

Anonymous said...

95

Anonymous said...

96

Anonymous said...

97

Anonymous said...

98

Anonymous said...

99

Anonymous said...

100.எனக்கு கணக்கு சரியா வருதா?ஹி ஹி.100 இருந்தால்தான் நல்ல இருக்கும்.

said...

@துர்கா|thurgah said...

/நான் படிக்க வந்த ஆளு அக்கா.கும்மியில் எனக்கு பங்கு இல்லை.அடுத்த கும்மி காட்டாறு அக்கா பதிவிலேயே அடிப்போம்...வாழ்க கும்மி வளர்க கும்மி கழகம்
//

கும்மியடிக்க வரலைன்னு சொல்லிட்டு கணக்கு பண்ணி கில்லியாடியிருக்கீங்களே துர்கா.... இப்போ யாரு 100 அடிச்சா? இதுக்கு பேர் கும்மியில்லையா??? :-P