Sunday, May 06, 2007

சில்லென காதல் கதை

ரொம்ப நாள் காணாம போனதால ஜில்லுனு ஒரு காதல் கதைல ஆரம்பிக்கலாம்ன்னு தோணியது. சரி... நம்ம காதல் ஜோடிய பார்த்து வரலாமென்று காலையில கெளம்பிப் போனா... அவங்க சரியான ஜோடியா இருப்பாங்க போல. காதல், கல்யாணத்தில முடிஞ்சி, குழந்தைகளோட சந்தோஷமா இருக்குறத பார்த்ததும், நாம ரொம்ப லேட்டுன்னு தோணியது. அவங்களோட காதல் கதைய அவங்க சம்மதத்தோட உங்களுக்க்கு தரலாமென்று இருக்கிறேன்.

படத்தின் விளக்கம் கீழே.


மனதில் ஒரு தேடல்
என்னுயிர் எங்கே என்று
உயிருக்கு உருவம் இல்லையோ
தேடல் தொடருமோ
என்னுடல் ஊணுடலாய் மறையுமோ
குமுறியது நெஞ்சம்
தேடல் உயிருள்ளவரை தொடருமோ
புழுங்கியது புரியாது

=========================================

கண்டேன் என்னவரை
சட்டென்று மின்னல்
கண்டதும் உணர்ந்தேன்
என்னுயிர் அவரே என்று
காதல் கொண்டேன் உடன்
கனிந்து நின்றேன்
என்னுயிர் அவரானால்
என் சுவாசம் அவரானால்
என் வாழ்வு அவரானால்
என் எல்லாமும் அவரானால்?

வயதிற்குரிய நாணம்
பட படத்தது மனம்
சொல்லாமல் போவேனொ
அவர் மனம் திறந்தால் தான் என்ன
மருகியது என் நெஞ்சம்!

=============================

என் துடிப்பு அறியாரோ
எண்ணும் கணம்
என்னருகில் அவர்
வந்தவர் மனம் திறந்தார்
ஒவ்வொரு சொல்லும்
மணி மணியாய்!

பல கோடி கவிதைகள்
கட கடவென பூத்தன
ஒவ்வொரு சொல்லிலும் அவரின் மணம்
பட்பட்டென மாறும் காட்சிகள்
பகல் சொப்பனம் போல்
அவருடன் ஒன்றி வாழ்ந்த
பரவச நிலை!
====================================


காதலர் கணவனானார்
நான் நாம் ஆனோம்
கண்ணின் மணியாக்கினார்
கண நேரம் பிரிந்திடார்!
சுவாசமாய் தாங்கிய என்னுயிரே!
நேற்று போல் தெரியும் உன் அணைப்பு
மாற்றம் ஏதும் இல்லை அதன் அழகில்
உன் மடி வந்து உறங்கிடுவேன்
மரணம் வரை உன்னுள் உறைந்திடுவேன்
ஜென்ம ஜென்மமாய்
உன்னுயிர் கலந்திடுவேன்!

================================
உறவின் சாட்சியாய்


சீண்டலும் கோபமுமாய்
கிண்டலும் நாணமுமாய்
ஊடலும் கூடலுமுமாய்
கேலியும் கூத்துமாய்
தினம் தினம்நாடகம் நிறைவேறும்
கூத்துப் பட்டறை
எங்கள் குடும்பம்




(குட்டியும் குருமலுமாய் நீந்தி விளையாடிய குஞ்சிகளைக் கண்டு மனம் துள்ளி விளையாடியது. உங்களிடம் பகிர்ந்து கொள்ள எண்ணியது. விளைவு தான் இது!)

36 பேர் மறுமொழிந்துள்ளனர்:

ஷைலஜா said...

வா(ழ்)த்து)கள் காட்டாறு! காதலில் ஆரம்பித்து குடும்பம்குட்டியோட முடியும் கவிதைகள் படத்துக்குப் பொருத்தமாய்....ம்ம்ம்.அசத்தல்தான்!

துளசி கோபால் said...

படங்கள் அருமை.

மங்கை said...

ஹ்ம்ம்ம்..நல்லா இருக்குப்பா

வடுவூர் குமார் said...

அவர்கள் வாழ்கையை கவிதையாக 75% படத்துடன் பிடித்துவிடீர்கள்.

பங்காளி... said...

இத படங்காட்றதுன்னும் சொல்லுவாய்ங்க....ஹி..ஹி..ம்ம்ம்ம்

நல்லா வந்திருக்கு ஆத்தா...தொடருங்க.....

Geetha Sambasivam said...

nijamave ithana vishayam? namaba mudiyalai, sari paravayillai. kavithai ennamo super than. enakkum ezhuthanum pol asai vanthirukku, ippothan vethavoda kavithaiyai marupadi padichu parthuttu vanthen. parkirappo simple mathiri than irukku. mmmm parkalam.

MyFriend said...

கதைன்னு ஓடோடி வந்தா எல்லாம் கவிதையா இருக்கு??

பிறகு வந்து படிக்கிறேன். :-)

Radha Sriram said...

புசு புசுன்னு முடியோட அந்த குட்டிஸ்
சூப்பர் போங்க.....

CVR said...

நீங்க பேசாம சினிமா இயக்குனர் ஆகி விடுங்களேன்!!
எழுத்து ,பட்ட்ப்பிடிப்பு இரண்டும் அருமை!!
வாழ்த்துக்கள்!! :-)

காட்டாறு said...

//ஷைலஜா said...
வா(ழ்)த்து)கள் காட்டாறு!//

தாராக்களும் பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கின்றன.

காட்டாறு said...

துளசி, மங்கை பாராட்டுக்கு நன்றி.

//வடுவூர் குமார் said...
அவர்கள் வாழ்கையை கவிதையாக 75% படத்துடன் பிடித்துவிடீர்கள் //
அது என்னங்க 75% கணக்கு? நான் கணக்கை கணக்கு மணக்கு ஆமணக்கு என்று சொல்லும் வகையினரைச் சேர்ந்தவள்.

காட்டாறு said...

//பங்காளி... said...
இத படங்காட்றதுன்னும் சொல்லுவாய்ங்க....ஹி..ஹி..ம்ம்ம்ம்

நல்லா வந்திருக்கு ஆத்தா...தொடருங்க..... //

அய்யனே, நீங்க சொன்னா சரியாத்தேன் இருக்கும். பாராட்டுக்கு நன்றி பங்காளி.

காட்டாறு said...

//கீதா சாம்பசிவம் said...
nijamave ithana vishayam? namaba mudiyalai, sari paravayillai. //

ஏனுங்க... வேற ஏதாவது எதிர்பார்க்கிறீங்களா? சொல்லிப்போடுங்க.

//enakkum ezhuthanum pol asai vanthirukku, ippothan vethavoda kavithaiyai marupadi padichu parthuttu vanthen. parkirappo simple mathiri than irukku. mmmm parkalam. //

எழுதுங்க. வருமா வராதாங்குறது முக்கியமில்லை. எழுதுறது தான் முக்கியம். ஜோரா எழுதுவீங்க. இப்போ நேத்தாஜி பத்தி எழுதி கலக்கல. :)

காட்டாறு said...

//Radha Sriram said...
புசு புசுன்னு முடியோட அந்த குட்டிஸ்
சூப்பர் போங்க..... //

ஆமாங்க... அதுங்க ஒரு மாதிரி பச்சையும் மஞ்சளும் கலந்த நிறத்துல இருந்தது எனக்கு மேலும் ஆச்சர்யம். அதுலேயும் அதுங்க அம்மா அப்பா பின்னாடி ஓடி ஆடிட்டு இருந்தது கொள்ளை அழகு. ஒரு மணி நேரமா அப்படியே உட்கார்ந்து கண் கொட்டினேனான்னு தெரியாம பார்த்துட்டே இருந்தேன்.

காட்டாறு said...

//CVR said...
நீங்க பேசாம சினிமா இயக்குனர் ஆகி விடுங்களேன்!!
எழுத்து ,பட்ட்ப்பிடிப்பு இரண்டும் அருமை!!
வாழ்த்துக்கள்!! :-) //

CVR, உங்க வாழ்த்துக்கு நன்றி. இயக்குனரா வந்துட்டா போச்சுங்க. பார்த்து முன்னோட்டம், பின்னூட்டம் சொல்ல நீங்க் இருக்கீங்கன்ற தைரியத்துல கோதாவில இறங்கிற வேண்டியது தான்.

காட்டாறு said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
கதைன்னு ஓடோடி வந்தா எல்லாம் கவிதையா இருக்கு?? //

வாம்மா தாயீ. நிதானமாவே வாம்மா. ஓடி வந்து தாராக்களை விரட்டிவிடாதேம்மா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தனியா இருக்கும் போது கவலையா...
துணையோட போகும் போது கிராமத்து மனைவி கணவனுக்கு ஒரு அடி விட்டு அடக்கமா போறமாதிரி...
குழந்தைங்களோட குடும்பமான்னு படமெல்லாம் சூப்பர்..
கவிதைக்கதை அருமை.காட்டாறு என்ன பிசியோ ரொம்ப நாளா?

CVR said...

படமெல்லாம் நீங்க எடுத்தது தானா??

காட்டாறு said...

//CVR said...
படமெல்லாம் நீங்க எடுத்தது தானா?? //

ஆமாங்க. எல்லாம் எங்க வீட்டுப் பக்கத்துல உள்ள பூங்காவில் எடுத்தது. வீடியோவும் எடுத்துள்ளேன்.

காட்டாறு said...

//முத்துலெட்சுமி said...
தனியா இருக்கும் போது கவலையா...
துணையோட போகும் போது கிராமத்து மனைவி கணவனுக்கு ஒரு அடி விட்டு அடக்கமா போறமாதிரி...
குழந்தைங்களோட குடும்பமான்னு படமெல்லாம் சூப்பர்..
கவிதைக்கதை அருமை.//

அடடா, நீங்க எவ்வளவு அருமையா சொல்லிட்டீங்க. இதுக்கு தான் யக்கோவ் வேணும்றது.

//காட்டாறு என்ன பிசியோ ரொம்ப நாளா? //
வேலையினிமித்தம் 10 நாள் ஊர் சுற்றிவிட்டு வந்ததும் வீடியோவும் கையுமா, காமெராவும் பையுமா கிளம்பிட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

காட்டாறு,
கவிதை,குடும்பம் ரெண்டுமே நல்லா வந்திருக்கு.

உங்க ஊர்ரு பூரா இதுங்க சாலையைச் சொல்லையாக மாத்திக் கம்பீரமா நடக்குமே.
துளி பயம் கிடையாது இந்த (geese?) வாத்துகளுக்கு.
போஸ் வேற கொடுக்கும்.:-)

MyFriend said...

எத்தனை வருட கதைங்க இது?

MyFriend said...

தனியா இருந்து ஜோடி சேந்து புள்ள குட்டிங்களெல்லாம் வந்து.. பேரன் பேத்தியெல்லாம் பார்த்தாச்சா?

MyFriend said...

ஒரு தொடரா போட்டிருக்கலாம்ல.. சித்தி மாதிரி மெகாஆஆஆஆ தொடராஆஆஆ..... :-P

MyFriend said...

25 நானே போட்டாச்சு!!! :-D

காட்டாறு said...

//வல்லிசிம்ஹன் said...
காட்டாறு,
கவிதை,குடும்பம் ரெண்டுமே நல்லா வந்திருக்கு.

உங்க ஊர்ரு பூரா இதுங்க சாலையைச் சொல்லையாக மாத்திக் கம்பீரமா நடக்குமே.
துளி பயம் கிடையாது இந்த (geese?) வாத்துகளுக்கு.
போஸ் வேற கொடுக்கும்.:-) //

சரியா சொன்னீங்க வல்லியம்மா. அதுங்க சாலையை கடக்கும் அழகை வர்ணிக்க முடியாது. தலைய தலைய ஆட்டிக்கிட்டு, இங்கும் அங்கும் திரும்பி கம்பீரமாய் கடக்கும் பாருங்க... பாத்துட்டே இருக்கலாம்.

காட்டாறு said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
ஒரு தொடரா போட்டிருக்கலாம்ல.. சித்தி மாதிரி மெகாஆஆஆஆ தொடராஆஆஆ..... :-P //

உங்கள மாதிரி ஒரு Personal advisor இல்லாம போய்ட்டாங்களே. அருமையான சந்தர்ப்பத்தை விட்டுட்டேனே. ;-(

காட்டாறு said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
25 நானே போட்டாச்சு!!! :-D //

வாலு.... இதுக்கு தான் 2 வரி ஹைக்கு மாதிரி பின்னூட்டமிட்டியா?

MyFriend said...

//வாலு.... இதுக்கு தான் 2 வரி ஹைக்கு மாதிரி பின்னூட்டமிட்டியா?//

இன்னைக்கும் 40க்கு மேலே போட்டு அடுத்த tabக்கு மாற்றலாம்ன்னு நினைச்சேன்..

ம்ம்.. ஆனால், பாசக்கார குடும்பத்துல நான் மட்டும்தான் ஆன்லை இப்போ..

MyFriend said...

வருவாங்க வருவாங்க..


நாங்கெல்லாம் கடமையைல கண்ணா காதா மூக்கா வாயா இருப்போம்ல..

MyFriend said...

//வாலு.... இதுக்கு தான் 2 வரி ஹைக்கு மாதிரி பின்னூட்டமிட்டியா?//

சரி, என் ஹைக்கு எப்படி இருக்கு?

ஹீஹீஹீ

MyFriend said...

//உங்கள மாதிரி ஒரு Personal advisor இல்லாம போய்ட்டாங்களே. அருமையான சந்தர்ப்பத்தை விட்டுட்டேனே. ;-( //

இதுக்கெல்லாம் கவலையே வேணாம்ங்க.. நீங்க என்னத்தான் கிறுக்கினாலும்.. மேலே பதிவுலே உள்ள மேட்டரை விட.. இங்கே பின்னூட்டத்துல என்ன மேட்டருன்னுதான் நாங்க முதல்ல பார்ப்போமாக்கும்.. ஆங்.. :-P

MyFriend said...

So, போடு தான்க்குங்க காட்டாறு.. அணையை உடைச்சிக்கிட்டு சீறி வாங்கோ.. வாங்கோ..

வந்ததுக்கு 33 போட்டாச்சு.. இன்னும் ஏழே ஏழுதான்.. :-D

காட்டாறு said...

//வந்ததுக்கு 33 போட்டாச்சு.. இன்னும் ஏழே ஏழுதான்.. :-D //

மை ஃப்ரெண்டு, என்ன கடமையுணர்வு உங்களுக்கு. கடமை வீரர் பட்டம் கொடுத்திட வேண்டியது தான் உங்களுக்கு.

//சரி, என் ஹைக்கு எப்படி இருக்கு?//

நல்லா இரு தாயீ.

தென்றல் said...

நல்லா இருக்குங்க...காட்டாறு!படங்களும்தான் ..;)

தென்றல் said...

சொல்ல மறந்துட்டேன்...
உங்க சேக்ஸ்பியர் அவதாரமும் நல்லா இருக்கு!

வாழ்த்துக்கள்!