Tuesday, June 05, 2007

வலைப் பதிவு நண்பர்களுக்கு சொல்ல மறந்த கதை

பழையன கழிதலும் பத்தி வேலை செய்யுமிடத்தில் பேசப் போய்..... ஓடோடி.... ஓடோடி... ஓடோடி..... வந்திட்டேன் பதிவெழுத. என்னடா சம்பந்தமில்லாமல் எழுதியிருக்கிறாளே.... இவளுக்கு கழண்டுகிச்சான்னு சுத்தியும் ஆணியும் எடுத்துக் கொண்டு, ஆவலுடன் கையோங்கி வரும் என் அருமை நண்பர்களே... சற்றே பொறுங்கள். உங்கள் அன்பு கண்ணில் நீர் வர வைக்கிறது. (கை ஓங்கியவுடன் அழும் குழந்தைக்கு அடி கிடைக்காதுன்னு எனக்கு தெரியாதா என்ன? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......).

நான் சொல்ல வந்தது என்னன்னா... வேலை பார்க்கும் இடத்தில் சொன்னாங்க.... தரவுகள்(data) பத்தியும், தரவு வகைகளைப் பத்தியும் தளத்தகைத் திட்டம் (strategic plan) தீட்ட சொன்னார்கள். பழைய ஆவணங்களைத் தூக்கி பரணுல எறிய சொல்லிட்டாங்க. ஆவணங்கள் படைக்கும் போது, அது வாழ்ந்து கொண்டிருக்கும் படைப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில், மறந்து விடுவார்கள் என்று சொன்னதும்..... எலேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்................ வலைப் பதிவில எழுதுறதை கொஞ்ச நாள் விட்டுப்போட்டோமே..... மறுமொழி கூட எழுத நேரமில்லைன்னு இருந்து போட்டோமே............ மனுச மக்கள நெனைக்காம போய்ட்டோமே..... (என்னவொரு பாசமிருந்தா வேலை நேரத்தில கூட உங்க நெனைப்பு வந்திருக்குமின்னு பாத்துக்கோங்க!)................. கொஞ்ச நாள் பேசலைன்னா (எழுதலைன்னா), எப்படி தவித்திருப்பீங்கன்னு பொய் சொல்லாம..... நம்மள மறந்து போகாமலிருக்க (ஹி ஹி ஹி), நம்ம பாசக்கார குடும்பம் வந்து கும்மியடிக்க ஒரு பதிவை ஒன்ன எழுதிப் போட்டுறலாமின்னு ஓடி வந்ததுல....


டி


டி


டி
.
.
.
.


ந்

து

..... அட..... இருங்கப்பா.......... மூச்சி வாங்குதப்பா..... இப்பிடி மூச்சி வாங்க அதிரடியாக ஓடி வந்து சொல்ல வந்த விஷயத்த மறந்து போனதுனால..... திரும்பவும் புறப்பட்ட இடத்துக்கு ஓடிப் போய்.... ஞாபகம் வருதான்னு இல்லாத, இருக்குற மூளையத் திருகிப் பார்த்தா.... சும்மா ஒரு மொக்கைப் பதிவுப் போடத்தான் இந்த அவசர ஓட்டமின்னு தெரிஞ்சதும்..... அனாவசியமா ஓடி உடற்பயிற்சி செய்தோமேன்னு..... என்னையே நொந்துட்டு, உங்க கிட்டையும் வசவுகள வாங்கிட்டு..... பம்மிப் போய் உட்கார்ந்திருக்கும் அப்பாவியான நான்!

21 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

ஆஹா....தேவையா மங்கை..இது உனக்கு தேவையா...அந்த வாய் இருக்கே வாய்..அதுக்கு பூட்டு போட்டு தான் வைக்கனும்...இனி பொலம்பி என்ன பிரயோசனம்..

ராசாத்தி..நல்லாரு..நல்லாரு...ரொம்ப தேறீட்ட...இதுக்குத்தான் ஆள் இல்லைன்னு பார்த்துட்டு இருந்தாங்க...

said...

நீ

மாதி
வா

இருக்கே!

said...

என்ன....என்ன இதெல்லாம்...?

ஏன் இத்தனை ஃபீலிங்க்ஸ் ஆஃப் இந்தியா....நாங்க எங்க போய்ட போறோம்.....

said...

அதானே...........நாங்க எங்க போயிடப்போறோம்?

க.கெ.கு.சுவர் அந்தக் காலம். இப்பக் காலம்
மாறிந்தி:-)

க.கெ.த.ம.:-)))))

said...

/நம்ம பாசக்கார குடும்பம் வந்து கும்மியடிக்க ஒரு பதிவை ஒன்ன எழுதிப் போட்டுறலாமின்னு ஓடி வந்ததுல../
..
எங்க மேல நீங்க வச்சிருக்க பாசத்த நெனச்சா அழுகாச்சி அழுகாச்சி யா வருது..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

கதவு ஏற்கனவே திறந்தாச்சா :)

said...

நான் தனியா வரவா குடும்பத்தோட வரவா?

Anonymous said...

///நம்ம பாசக்கார குடும்பம் வந்து கும்மியடிக்க ஒரு பதிவை ஒன்ன எழுதிப் போட்டுறலாமின்னு ஓடி வந்ததுல../
..
எங்க மேல நீங்க வச்சிருக்க பாசத்த நெனச்சா அழுகாச்சி அழுகாச்சி யா வருது..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//


repeatuu...

akka ungaluku enga mela imbuthu paasama?

said...

இப்போவாச்சி ஞானோதயம் வந்ததே!!!

அது சரி!! நீங்க யாரு??? :-P

said...

ஏன் இந்த கொலை வெறி உங்களுக்கு?

"பாசக்கார குடும்பம்" சும்மா இருந்தாலும் நீங்க சும்மா இருக்கவிடமாட்டீங்க....பாருங்க எப்படி உணர்ச்சிவசபடுறாங்கனு?

said...

//மங்கை said...
ஆஹா....தேவையா மங்கை..இது உனக்கு தேவையா...அந்த வாய் இருக்கே வாய்..அதுக்கு பூட்டு போட்டு தான் வைக்கனும்...இனி பொலம்பி என்ன பிரயோசனம்..
//

ஏனுங்கோவ்... நீங்களே பொலம்பி பிரயோசனம் இல்லைன்னு சொன்னப் பிறகு நான் ஏதுங்க சொல்லப் போறேன்.

//மங்கை said...
ராசாத்தி..நல்லாரு..நல்லாரு...ரொம்ப தேறீட்ட...இதுக்குத்தான் ஆள் இல்லைன்னு பார்த்துட்டு இருந்தாங்க...//

ஏதோ பெரியவங்க ஆசி.
அது சரிங்கோவ் யக்கா... ஆரு ஆளு தேடுனதுன்னு சொன்னிகள்ன்னா... அப்பிளிகேசன் போட்டுருவோமில்ல....
;-)

said...

//வடுவூர் குமார் said...
நீ

மாதி
வா

இருக்கே!
//

நன்றி அண்ணாச்சி! மிக நீளப் பதிவு போடலாமின்னு தான் நெனச்சேன். அடக்கி வாசிச்சிட்டேன். தன்னடக்கம் சாஸ்தி பாருங்க.

said...

//பங்காளி... said...
என்ன....என்ன இதெல்லாம்...?

ஏன் இத்தனை ஃபீலிங்க்ஸ் ஆஃப் இந்தியா....நாங்க எங்க போய்ட போறோம்.....
//

பங்காளி அய்யா.... நீங்க சொல்லிப்பூட்டீக.... சாதாரணமா.... நமக்குத்தேன் மனசு கேக்கல.... ஃபீலிங்ஸ் ஆஃப் அமெரிக்கா ஆயிருச்சி. ;-)

said...

//துளசி கோபால் said...
அதானே...........நாங்க எங்க போயிடப்போறோம்?

க.கெ.கு.சுவர் அந்தக் காலம். இப்பக் காலம்
மாறிந்தி:-)

க.கெ.த.ம.:-)))))
//

டீச்சர்... எதுக்கு என் மேல இந்த காட்டம். ஒத்த எழுத்துல கவுத்திட்டீகளே! ஒன்னுமே பிரியல... :(

said...

//அய்யனார் said...
எங்க மேல நீங்க வச்சிருக்க பாசத்த நெனச்சா அழுகாச்சி அழுகாச்சி யா வருது..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//

"எங்க மேலயா?" அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யயயா அய்யனாரே... என்னையிலிருந்து பாசக்கார குடும்பத்துல ஐக்கியமானீக?
Out dated ஆகிட்டேனா?

said...

//அபி அப்பா said...
நான் தனியா வரவா குடும்பத்தோட வரவா?
//

தனியா நடக்குறது அழகல்லவே.... குடும்பத்தோட வாங்க.

//துர்கா|†hµrgåh said...
akka ungaluku enga mela imbuthu paasama?
//
என்ன தங்கச்சியோவ்... இப்பிடி சொல்லிட்டீக... பொங்குனதப் பாத்தீகல்ல.

said...

//CVR said...
இப்போவாச்சி ஞானோதயம் வந்ததே!!!

அது சரி!! நீங்க யாரு??? :-P
//
CVR அண்ணாச்சி! இப்பிடி மறந்துட்டீயளே.... நாயமா... உங்க மறதியப் போக்குறதுக்கு இன்னுமொரு மொக்கைக்கு ஏற்பாடு பண்ணுறேன்.
;)

said...

//தென்றல் said...
ஏன் இந்த கொலை வெறி உங்களுக்கு?
//

அன்போட தழுவும் தென்றலுக்கு என்ன ஆச்சி???? புயலா எழுதியிருக்கீக...
நல்லாயிருந்தியப்பா 30 நாளுக்கு முன்னால. அதுக்குள்ள யாரு இப்பிடி எழுத சொல்லிக் கொடுத்தா உங்களுக்கு? வாண்டாப்பா உங்களுக்கு... உட்டுடுங்கோவ்.

said...

வாம்மா மின்னல்!

said...


ந்


மொ
க்
கை

போ

த்
தா
ன்


டி
.
.


டி
.
.


ந்
தீ
ங்

ளா
?

said...

நா
ங்

ளு
ம்

பி
ன்
னூ
ட்


மொ
க்
கை

போ
டு
வோ
மா
க்
கு
ம்

:D