Thursday, May 10, 2007

அத்தையின் மருமகன்


இரண்டு வருட இடைவெளியில் சந்திப்பு
அருமை மருமகன் எனைக் காண வருகிறான்
உள்ளம் உவகையாய் அவனின் வருகை காண
ஞாபகம் இருக்குமா இரு வயதில் களித்த அத்தையை?

உள்ளும் புறமும் தவிக்க
விமான நிலையம் தேய
இங்கும் அங்குமாய் நடை
கால்களும் பாரமாய்

ஆலாய் பறக்கும் மனம்
வந்துவிட மாட்டானா?
நொடிக்கு ஒருமுறை நோட்டம்
வாசல் கதவுகளும் தேய்ந்திருக்கும்

அடக்கி வைத்த சந்தோஷம்
பீறிடும் அபாயம்
நெஞ்சாங் கூட்டில்
அழகான வலி!

கொழுக் மொழுக் கன்னங்களுடன்
சிரித்த முகமாய்
துள்ளல் நடையுமாய்
தந்தையின் கைப் பற்றி!

ஓடி வந்து அணைத்தான்
நான் எதிர் பார்க்காத ஒன்று
திக்கு முக்காடித்தான் போனேன்
உடன் வெளிப்பட்ட பாசத்தால்!

நொடிக்கொருமுறை அத்தை என்பான்
தாயிடம் பேசிடினும்
தந்தையிடம் பேசிடினும்
அத்தை முகம் கண்டு பேசிடுவான்

யாருக்கும் புரியா
அளப்பறியா அவனின் பாசம்
அன்னியோன்னியம் கண்டு
வியந்தவர் பலர்; மருகியவர் சிலர்

குளிக்கும் போதும் நான் வேண்டும் என்பான்
ஊட்டி விட அடம் பிடிப்பான்
கைகளைப் பிடித்தே உறங்கிடுவான்
கண் விழித்ததும் தேடிடுவான்

அவன் அன்பு.....
ஈடேதும் உண்டோ?
வார்த்தைகளில் அடங்குமோ?
புரிய வைக்க முடியுமோ?

எண்ணினால் உள்ளம் பொங்கும்
கண்களில் நீர் தேங்கும்

-- காட்டாறு

28 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

நான் வந்துட்டேன்.. ஹாஹாஹா.. :-D

said...

காட்டாறுக்கு மருமகன் மீது இவ்வளவு பாசமா? உங்க மகளுக்கு அவந்தான் வருங்கால கணவன்? ஹீஹீஹீ..

said...

அழகான பதிவு அக்கா! :-)

said...

//குளிக்கும் போதும் நான் வேண்டும் என்பான்
ஊட்டி விட அடம் பிடிப்பான்
கைகளைப் பிடித்தே உறங்கிடுவான்
கண் விழித்ததும் தேடிடுவான்//

இந்த இடத்துல அத்தை எங்க இருக்காங்க...பெருமையாய் புலம்பும் அம்மாதானே தெரிகிறாள்...

கலக்றீங்கோ அம்மனி...

said...

இப்படி ஆரம்பிச்சிட்டு...

/அடக்கி வைத்த சந்தோஷம்
பீறிடும் அபாயம்
நெஞ்சாங் கூட்டில்
அழகான வலி!
/

இப்படி முடிச்சிட்டீங்களே... !?

/ஊட்டி விட அடம் பிடிப்பான்
கைகளைப் பிடித்தே உறங்கிடுவான்
கண் விழித்ததும் தேடிடுவான்
/

ம்ம்ம்.. இப்படி அத்தை கிடைக்க குடுத்து வைச்சிருக்கணும்... ;)

said...

innum ninga than kulipaatti satham akodukiringala? nalla athai! nalla marumakan!

said...

காட்டாறு,

அசத்தலா இருக்குங்க..... :)

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
காட்டாறுக்கு மருமகன் மீது இவ்வளவு பாசமா? உங்க மகளுக்கு அவந்தான் வருங்கால கணவன்? ஹீஹீஹீ.. //

அடடே.... என்னே கண்டுபிடிப்பு. அவருன்னு மரியாதையா சொல்லம்மா.

said...

//CVR said...
அழகான பதிவு அக்கா! :-) //

உங்களுக்கும் அக்கா ஆகிவிட்டேனா? சரி தான். பாராட்டுக்கு நன்றி CVR

said...

//பங்காளி... said...
இந்த இடத்துல அத்தை எங்க இருக்காங்க...பெருமையாய் புலம்பும் அம்மாதானே தெரிகிறாள்...

கலக்றீங்கோ அம்மனி...
//

சரியா சொன்னீங்க பங்காளி. அவனோட இருக்கும் போது ஒரு கவுரதையாத்தேன் இருக்கும்.

பாராட்டுக்கு நன்றிங்கோவ்!

said...

@காட்டாறு said...

//அடடே.... என்னே கண்டுபிடிப்பு. அவருன்னு மரியாதையா சொல்லம்மா.//

அவரு அவரு அவரு.. (கொஞ்சம் echo கேட்குது.. கண்டுகாதீங்க)..

இப்போ சரிதானே? ;-)))

வாழ்த்துக்கள்.. :-D

said...

// தென்றல் said...
இப்படி ஆரம்பிச்சிட்டு...

/அடக்கி வைத்த சந்தோஷம்
பீறிடும் அபாயம்
நெஞ்சாங் கூட்டில்
அழகான வலி!
/

இப்படி முடிச்சிட்டீங்களே... !?

/ஊட்டி விட அடம் பிடிப்பான்
கைகளைப் பிடித்தே உறங்கிடுவான்
கண் விழித்ததும் தேடிடுவான்
/

ம்ம்ம்.. இப்படி அத்தை கிடைக்க குடுத்து வைச்சிருக்கணும்... ;) //

ஏனுங்கோ தென்றல் அய்யா (அய்யா தானே?), எப்படி ஆரம்பிச்சி எப்படி முடிச்சோம்ன்னு தெளிவா இல்லிங்கோ.

அப்படி ஒரு மருமகன் கிடைக்கத்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

said...

//கீதா சாம்பசிவம் said...
innum ninga than kulipaatti satham akodukiringala? nalla athai! nalla marumakan! //

கீதாம்மா, இன்னும் சாதம் ஊட்டும் கதை நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் நடக்கத்தான் செய்கிறது.
;-)

said...

//இராம் said...
காட்டாறு,

அசத்தலா இருக்குங்க..... :) //

நன்றி இராம். உங்களுக்கும் இது போல் அனுபவம் இருந்திருக்கனுமே. ;-)

said...

//நன்றி இராம். உங்களுக்கும் இது போல் அனுபவம் இருந்திருக்கனுமே. ;-)//

ஹ்ம்ம் இருக்கு.... ஆனா எனக்கு அக்கா பையன்...


அவன் பண்ணின குறும்புகளை வைச்சி சிறுகதை எழுதிருந்தேன். தேன்கூடு பரிசுப்போட்டியிலே நாலாவது பரிசு வாங்குச்சு :)

ஹி ஹி இலவச விளம்பரம் சொல்லிக்க அனுமதித்துக்கு நன்றி

said...

00 nice.!

said...

காட்டாறு அசத்திட்டீங்க.
அத்தை மடி மெத்தையடி பாட்டு உண்டா?:-)

said...

//இராம் said...
அவன் பண்ணின குறும்புகளை வைச்சி சிறுகதை எழுதிருந்தேன். தேன்கூடு பரிசுப்போட்டியிலே நாலாவது பரிசு வாங்குச்சு :) //

:---)))))))

said...

//நளாயினி said...
00 nice.! //

நன்றி நளாயினி!

//வல்லிசிம்ஹன் said...
காட்டாறு அசத்திட்டீங்க.
அத்தை மடி மெத்தையடி பாட்டு உண்டா?:-) //

அந்த அளவுக்கு அவனை டார்ச்சர் பண்ண மனசில்லை எனக்கு. ;-)

said...

ம்...நல்லாருக்கு...என் மகளும் என் நாத்தனாரும் ஒட்டிக்கொண்டே இருப்பார்கள் ..என்
மகளை நினைத்து என் நாத்தனார் இப்படித்தான் ஏங்கிக்கொண்டிருக்கிறாள்.
வெளிநாட்டில் இருக்கும் அவள் என் மகனை பிறந்ததிலிருந்தே நேரில்
பார்க்கவில்லை.அவளின் இரண்டாவது மகளை இன்னும் நா ன் நேரில்
பார்க்கவில்லை. எல்லாம் வீடியோ கான்பிரன்ஸ் தான் நேரில் பார்த்தால் எப்படி இருக்குமோ...ஹ்ம்..

said...

ஆஹா...அருமையான அத்தை கவிதை ;-))

கவிதை படித்தவுடன் என் அத்தைகளின் ஞாபகம் தான்

\\ நொடிக்கொருமுறை அத்தை என்பான்
தாயிடம் பேசிடினும்
தந்தையிடம் பேசிடினும்
அத்தை முகம் கண்டு பேசிடுவான்\\

உண்மை தான்...அத்தைகளை கிண்டல் செய்வதே ஒரு ஜாலி தான் ;-)

said...

/ஏனுங்கோ தென்றல் அய்யா (அய்யா தானே?), .../
ஒரு 10 வயசை கூட்டி என்னை கூப்பிடுறதுல உங்களுக்கு ஒரு சந்தோஷமா...?! ம்ம்ம்..

/எப்படி ஆரம்பிச்சி எப்படி முடிச்சோம்ன்னு தெளிவா இல்லிங்கோ./

/துள்ளல் நடையுமாய்
தந்தையின் கைப் பற்றி!/
இந்த வரிகளை படிக்கும் வரை
'தமிழ் பட கதாநாயகன் entry' மாதிரி இருக்கும்-னு நினைத்தேன்... ;)

said...

//முத்துலெட்சுமி said...
ம்...நல்லாருக்கு...என் மகளும் என் நாத்தனாரும் ஒட்டிக்கொண்டே இருப்பார்கள் ..என்
மகளை நினைத்து என் நாத்தனார் இப்படித்தான் ஏங்கிக்கொண்டிருக்கிறாள்.
//

பழைய நினைவுகளை கிளறி விட்டேனா?

அனுபவித்தவர்களுக்கு இந்த ஏக்கம் மறுமுறை காணும் வரை இருக்கும். :)

said...

//கோபிநாத் said...
ஆஹா...அருமையான அத்தை கவிதை ;-))

கவிதை படித்தவுடன் என் அத்தைகளின் ஞாபகம் தான்
//

பழைய ஞாபகம் வர வைப்பது எங்கள் (அத்தைமார்களின்) கடமையல்லவா. ;-)

//உண்மை தான்...அத்தைகளை கிண்டல் செய்வதே ஒரு ஜாலி தான் ;-)
//

சரியாகச் சொன்னீர்கள் கோபிநாத். ஜாலியோ ஜாலிதான்!

said...

//தென்றல் said...
/துள்ளல் நடையுமாய்
தந்தையின் கைப் பற்றி!/
இந்த வரிகளை படிக்கும் வரை
'தமிழ் பட கதாநாயகன் entry' மாதிரி இருக்கும்-னு நினைத்தேன்... ;)
//

அவ்வளவு தானே... அடுத்த முறை ப்ளேடு போட்டுவிடலாம்.

said...

//யாருக்கும் புரியா
அளப்பறியா அவனின் பாசம்
அன்னியோன்னியம் கண்டு
வியந்தவர் பலர்; மருகியவர் சிலர்//

ஹ்ம்ம்..நல்லா இருக்குப்பா...

said...

நல்லா எழுதறீங்க கட்டாறு.. வாழ்த்துக்கள். :)

said...

சில்லுன்னு வந்து சொல்லிட்டு போயிட்டீங்க சில்வண்டு. நன்றி பாராட்டுக்கு!