டீக்கடைக்காரன்
காபிக் கடை
நடுநிசி
நிர்ச்சலனமான இரவு
கேலியும் கிண்டலுமாய்
மாணவர்க் கும்பல்
சர் சர் என்று
இரு கைகளுக்கிடையில்
மாறி மாறி ஓடும் டீ
தன்னிலை மறந்தவனாய்
கடமையே கர்மமாய்
காவியமாய்
அக்கணத்தில்
தெய்வமானான் அவன்!
– காட்டாறு
காபிக் கடை
நடுநிசி
நிர்ச்சலனமான இரவு
கேலியும் கிண்டலுமாய்
மாணவர்க் கும்பல்
சர் சர் என்று
இரு கைகளுக்கிடையில்
மாறி மாறி ஓடும் டீ
தன்னிலை மறந்தவனாய்
கடமையே கர்மமாய்
காவியமாய்
அக்கணத்தில்
தெய்வமானான் அவன்!
கலக்கியவர் காட்டாறு கலக்கிய நேரம் 6/15/2007 11:31:00 PM
தலைப்பு வகை: கவிதை
“What is conventionally called "love" is an ego strategy to avoid surrender. The ego singles someone out and makes them special. It uses that person to cover up the constant underlying feeling of discontent, of "not enough," of anger and hate, which are closely related.” - Eckart Tolle
28 பேர் மறுமொழிந்துள்ளனர்:
யக்கா டீக்கடைக்காரன் பத்தி நல்ல feel பண்ணி எழுது இருக்கீங்க...புதுமையான கவிதை...என்ன உங்களை ரொம்ப நாளாக ஆளை காணோம்?
//துர்கா|†hµrgåh said...
யக்கா டீக்கடைக்காரன் பத்தி நல்ல feel பண்ணி எழுது இருக்கீங்க...புதுமையான கவிதை...
//
தங்கச்சியோவ்.... உங்களுக்கு புரிஞ்சா சரிதானுங்க...
//என்ன உங்களை ரொம்ப நாளாக ஆளை காணோம்? //
வேலைன்னும் சொல்லலாம்
நல்ல கவிதை!!
ஒரு சின்ன டவுட்்!
///டீக்கடையா? காபிக்கடையா?
///கடமை? கர்மம்?
//குட்டிபிசாசு said...
நல்ல கவிதை!!
ஒரு சின்ன டவுட்்!
///டீக்கடையா? காபிக்கடையா?
///கடமை? கர்மம்?
//
முதல் முறை வந்துள்ள குட்டிப் பிசாசுக்கு சூடா ஒரு டீ போடுப்பா... கடவுள்ன்னு சொன்னதும் சிலிர்த்துக்குது பாரு....;-)
எனக்கு மசாலா டீ...
/எனக்கு மசாலா டீ.../
எனக்கொன்னு....
ஏதோ ஒரு சிலையைப் பார்த்த மாதிரி இருக்கு காட்டாறு.
உண்மையாவே இரு துளி மழைச்சாரல் இருந்தால் டீ வாடையும் அடிக்கும் இங்கே.
காட்டாறு ஏன்பா...
குட்டிபிசாசு சரியான கேள்வி
கேட்டும் பதில் சொல்லாம பேச்சை
மாத்திட்டியே...டீக்கடைக்காரன்..
ஏன் காபிக்கடைக்கு ப் போய் டீ ஆத்தறான்...
ஏனுங்கோ, எங்க ஊர்ல காபிக்கடையும், டீக்கடையும் ஒன்னு தாங்க.... கண்டுபிடிச்சி கொடுத்த குட்டிப் பிசாசுக்கும், முத்திலெட்சுமி யக்காவுக்கும், ஒர் பெரிய கும்பிடு!
யாரங்கே... ஒரு பெசல் டீ போடுப்பா மங்கையக்காவுக்கும், தென்றல் அண்ணாச்சிக்கும்.
//வல்லிசிம்ஹன் said...
ஏதோ ஒரு சிலையைப் பார்த்த மாதிரி இருக்கு காட்டாறு.
//
வல்லியம்மா, உங்களுக்கும் கிண்டலா?
//முத்துலெட்சுமி said...
காட்டாறு ஏன்பா...
குட்டிபிசாசு சரியான கேள்வி
கேட்டும் பதில் சொல்லாம பேச்சை
மாத்திட்டியே...டீக்கடைக்காரன்..
ஏன் காபிக்கடைக்கு ப் போய் டீ ஆத்தறான்...
//
யக்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... தமிழ்நாட்டு மண்ணை மிதிச்சிட்டு வந்ததும் குசும்பா?
//டீக்கடைக்காரன்..
ஏன் காபிக்கடைக்கு ப் போய் டீ ஆத்தறான்...
//
எனக்கும் இந்த சந்தேகம் இருக்குது. காபிக்கடைன்னு போர்டு வச்சிருப்பான்... ஆனா டீயும் கிடைக்கும். டீ ஸ்டால்ன்னு போர்டு வச்சிருப்பான்... ஆனா காபியும் கிடைக்கும். ;-)
எனக்கொரு டீ பார்சல் :)
ஏனுங்க அம்மனி...
காட்டாறுன்னு பேரு வச்சா திடீர் திடீர்னு வர்றதும் அப்புறம் கானாமப்போறதும்னு ஏதாவது இருக்கா!
சீரான இடைவெளியில அப்பப்ப 'உள்ளேன் ஐயா'ன்னு சொல்லுங்க தாயீ....
அப்புறம் டீக்கடைக்காரனுக்கெல்லாம் யார் கவிதை எழுதப்போறாங்கற குறைய தீர்த்துவச்ச காட்டாறுக்கு நன்றி..நன்றி...நன்றி...
காட்டாறு, எட்டு அனுபவம் ,சாதனை பற்றி எட்டு விளையாட்டுக்கு உங்களை அழைக்கிறேன். வரமுடியுமா.பிளீஸ் சரினு சொல்லிடுங்க.
ஆண் இனத்தின் பெருமையைக் காப்பாற்றிய அந்த டீக்கடைக்கார தெய்வம் வாழ்க..
உண்மையாவே நல்லா இருக்குனு சொன்னேன்பா.
கவிதை ஓவியம்னுஎழுதத் தெரியல.:-)
//அய்யனார் said...
எனக்கொரு டீ பார்சல் :)
//
பார்சல் வந்ததா?
//பங்காளி... said...
ஏனுங்க அம்மனி...
காட்டாறுன்னு பேரு வச்சா திடீர் திடீர்னு வர்றதும் அப்புறம் கானாமப்போறதும்னு ஏதாவது இருக்கா!
சீரான இடைவெளியில அப்பப்ப 'உள்ளேன் ஐயா'ன்னு சொல்லுங்க தாயீ....
//
அண்ணாச்சீ.... அம்மா வந்திருக்காங்க... அவங்க கூட அதிக நேரம் செலவிடுகிறேன். நண்பர்கள் புரிந்து கொண்டு திரும்பி வரும் போது ஏற்றுக் கொள்வாங்கன்ற நம்பிக்கை தான். அதுக்காக பதிவெல்லாம் வாசிக்கலைன்னு நெனைக்காதீங்க. கூகிள் ரீடர் எதுக்கு இருக்குறாரு... முழு மூச்சில மதிய இடைவேளைல வேலையில் வாசிச்சிருவோமில்ல... ;-)
இப்போ நீங்க சொல்லிட்டீங்கல்ல..... இனிமே 'உள்ளேன் ஐயா' கண்டிப்பா உண்டு.
//பங்காளி... said...
அப்புறம் டீக்கடைக்காரனுக்கெல்லாம் யார் கவிதை எழுதப்போறாங்கற குறைய தீர்த்துவச்ச காட்டாறுக்கு நன்றி..நன்றி...நன்றி...
//
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஆண் இனத்தின் பெருமையைக் காப்பாற்றிய அந்த டீக்கடைக்கார தெய்வம் வாழ்க..
//
அடடா.. இப்படியெல்லாம் யோசிக்க உங்களுக்கு உங்களுக்கு மட்டுந்தேன் தெரியும். ;-)
உண்மைத்தமிழா, முதல் முதலில் காலடி எடுத்து வச்சிருக்கீங்க.... நன்றிங்கோவ்!
//வல்லிசிம்ஹன் said...
காட்டாறு, எட்டு அனுபவம் ,சாதனை பற்றி எட்டு விளையாட்டுக்கு உங்களை அழைக்கிறேன். வரமுடியுமா.பிளீஸ் சரினு சொல்லிடுங்க.
//
வல்லியம்மா... சரின்னு சொல்ல முடியல... மன்னிச்சிக்கோங்க.... அம்மா வந்திருக்காங்க... குழந்தையை வீட்டுல விட்டுட்டு கணனியோட உட்கார்ந்திருக்க முடியுமா? சொல்லுங்க?
/தென்றல் அண்ணாச்சிக்கும்../
அண்ணாச்சி..யா?
ஏங்க இது உங்களுக்கே நல்லா இருக்கா.....
..... மேடம்...
.... அக்கா...
..... அம்மா!
[ம்ம்ம்.. இப்பதான் மனசு "கொஞ்சம்" ஆறுதலா இருக்கு! ;)]
\\[ம்ம்ம்.. இப்பதான் மனசு "கொஞ்சம்" ஆறுதலா இருக்கு! ;)]\\\
தென்றல்
எதுல எப்படியோ... இதுல மட்டும் நம்ம அண்ணாசிக எல்லாம் ஒரே மாதிரி..
(அப்பா... எனக்கும் இப்ப தான் ஆறுதலா இருக்கு:-)))
//மங்கை said...
\\[ம்ம்ம்.. இப்பதான் மனசு "கொஞ்சம்" ஆறுதலா இருக்கு! ;)]\\\
தென்றல்
எதுல எப்படியோ... இதுல மட்டும் நம்ம அண்ணாசிக எல்லாம் ஒரே மாதிரி..
(அப்பா... எனக்கும் இப்ப தான் ஆறுதலா இருக்கு:-)))
//
யக்கோவ்வ்வ்வ்.... எனக்கு சப்போர்ட்டா? இல்லை திட்டா?
//யக்கோவ்வ்வ்வ்.... எனக்கு சப்போர்ட்டா? இல்லை திட்டா? ///
ச்சே ச்சே..உன்னை நான் கலாய்பனாப்பா...
//மங்கை said...
//யக்கோவ்வ்வ்வ்.... எனக்கு சப்போர்ட்டா? இல்லை திட்டா? ///
ச்சே ச்சே..உன்னை நான் கலாய்பனாப்பா...
//
ஆத்தீ.... யார நம்புறதுன்னு தெரியலையே... சட்டுபுட்டுன்னு வேற மொக்கை போட்டுற வேண்டியது தான்.
//ஆத்தீ.... யார நம்புறதுன்னு தெரியலையே... சட்டுபுட்டுன்னு வேற மொக்கை போட்டுற வேண்டியது தான்.//
போடு போடு..நல்லதுக்கே காலம் இல்லை..கலிகாலமய்யா கலிகாலம்
/யக்கோவ்வ்வ்வ்.... எனக்கு சப்போர்ட்டா? இல்லை திட்டா?/
"யக்கோவ்வ்வ்வ்....", எனக்கும் அதே சந்தேகம்தான்...!
/நீங்க அண்ணாச்சி தானுங்களே? இல்லை யக்காவா? /
இதலாம் நல்லா இல்ல... வேண்டாம்.... அப்புறம் அழுதுருவேன்...
Post a Comment