வந்ததும் பேசுவேன் என்றாளே!
வெகு நேரமாகியும் என்னவளைக் காணவில்லை
இன்னும் வரவில்லையோ? வந்தும் பேசவில்லையோ?
வந்ததும் பேசுவேன் என்றாளே
வேலை அதிகமோ? வேனிற் அதிகமோ?
தலை வலியோ? "தலை"யின் வலியோ?
வந்ததும் பேசுவேன் என்றாளே
என்னை மறந்தாளோ? எங்கும் விழுந்தாளோ?
என்னை நீங்கினாளோ? என்னுடன் நீங்கினாளோ?
வந்ததும் பேசுவேன் என்றாளே
என்னுயிர் என்றாளே; என்னில் பாதி என்றாளே
பாதி தவிக்கிறதே; அலைப்பாய்கிறதே; அறிவாளோ?
வந்ததும் பேசுவேன் என்றாளே
நான் உன் கண்மணி என்றாளே; கண்ணின் வலி அறிவாளோ?
அறிந்தும் அமைதி காப்பாளோ? என்ன ஆனது அவளுக்கு?
வந்ததும் பேசுவேன் என்றாளே
அவள் மனம் வேதனைப் படுகிறதோ? ஏன் என் மனம் வலிக்கிறது?
நான் வீணாய் கவலைப் படுகிறேனோ?கற்பனன செய்கிறேனோ?
வந்ததும் பேசுவேன் என்றாளே
என்னைப் பைத்தியமாக்குவதில் சுகமோ?
அறியாமல் செய்கிறாளா? அறிந்து தான் செய்கிறாளா?
வந்ததும் பேசுவேன் என்றாளே
புலம்புகிறேனோ? இது தான் காதலோ?
அவள் பேசியதும் என் புலம்பல் நின்று விடுமோ?
வந்ததும் பேசுவேன் என்றாளே
பேசியதும் கோபம் வருமோ? சந்தோஷம் வருமோ?
கண்ணில் நீர் வழியுமோ? ஆனந்தத்தில் அமைதியாவேனோ?

-- காட்டாறு
7 பேர் மறுமொழிந்துள்ளனர்:
எப்பவுமே... (அதிகம்) பொண்ணுங்கதான் 'feel' பண்றமாதிரி இருக்கும்..!
இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு ;)!
நல்ல உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை! எங்கே ரொம்ப நாளாக் காணோம்?
//தென்றல் said...
எப்பவுமே... (அதிகம்) பொண்ணுங்கதான் 'feel' பண்றமாதிரி இருக்கும்..!
//
அப்படியா? வீடு நெறையா பசங்களுடன் இருந்து பாருங்க. இது sample தான். ;-)
//கீதா சாம்பசிவம் said...
நல்ல உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை! எங்கே ரொம்ப நாளாக் காணோம்?
//
நன்றி கீதா! கணனி முன் உட்கார நேரம் கிடைப்பதில்லை இப்போதெல்லாம். வேறேதும் இல்லை.
அதான் கேள்வி கேட்டு அம்மணியே பதிலும் குடுத்திட்டியே
:-)))
//மங்கை said...
அதான் கேள்வி கேட்டு அம்மணியே பதிலும் குடுத்திட்டியே
:-)))
//
ஏனுங்கோவ்வ்வ்... உங்களுக்கு தலைவனின் புலம்பல் சிரிப்பு வருகிறதோ... ;-)
இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு ;)!
ரிப்பீட்டேய்.
Post a Comment