Tuesday, July 03, 2007

காதலித்துப் பார்

காதலித்துப் பார்
இயற்கை அவளாவாள்; நீ அடிமையாவாய்

காதலித்துப் பார்
கண்ணுக்குள் நிழழாடுவாள்; நெஞ்சில் நடை பயிலுவாள்

காதலித்துப் பார்
அவள் கண்ணசைவில் பிரளயம் நடக்கும்; மீண்டும் பிறப்பாய்

காதலித்துப் பார்
சருகும் உயிர் பெறும்; அசையும் எப்பொருளும் அவளாவாள்

காதலித்துப் பார்
அழுகையும் சிரிப்பும் சேர்ந்து வரும்; இரண்டும் அவளிடம் மட்டும் வரும்

காதலித்துப் பார்
மொத்த அழகும் அவளாவாள்; இயற்கையும் சிறுமையாகும்

காதலித்துப் பார்
வயிற்றில் மின்னலடிக்கும்; நா வரளும்

காதலித்துப் பார்
அவளாசை உன்னாசையாகும்; உன் தேவை மறந்து போகும்

காதலித்துப் பார்
சொல்லெல்லாம் கவிதையாம்; சொல்லே அவள் வாய் மொழி தாம்

காதலித்துப் பார்
பேனா கிறுகிறுக்கும்; நீயும் தான்

காதலித்துப் பார்
உலகே உயர்வானதாகும்; எல்லாரும் நல்லவராவர்

காதலித்துப் பார்
நெஞ்சின் வலியும் அழகாகும்; காயமே மருந்தாகும்

காதலித்துப் பார்
எனக்குள்ள வேதனை உனக்கு புரியும்; நான் பெற்ற இன்பம் உனக்கு தெரியும்

காதலித்துப் பார்
மோட்சமடைவாய்; இறப்பாய்; மீண்டும் பிறப்பாய்
-- காட்டாறு

24 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

இனிமே எனக்கு அதுக்கெல்லாம் சான்சே இல்லை! பூரிக்கட்டை அடியெல்லாம் நமக்கு இப்ப ஒத்துக்க மாட்டங்குது உடம்புக்கு!

said...

அபி அப்பா, இப்பிடி ஒரு ஆசை எட்டிக் கூட பார்க்கப் படாது. அபி பாப்பா உங்களுக்கு போட்டியா பதிவு போட ஆரம்பிச்சாச்சி... Sooooooo.... என்ன சொல்ல வர்றேன்னா.... வயசாச்சிங்கோவ் உங்களுக்கு... ஹீ ஹீ ஹீ.... கும்மி குடும்பம்.... சாரி ... சாரி... பாசக்கார குடும்பம் கும்முறதுக்கு முந்தி நான் escape.

said...

தத்துவம்.நம்பர் ---
\\காதலித்துப் பார்
எனக்குள்ள வேதனை உனக்கு புரியும்; நான் பெற்ற இன்பம் உனக்கு தெரியும்//


அடப்பாவமே இப்படி தானே மாட்டிக்கிட்டு வாங்கறதுன்னு ஆரம்பிச்சிட்டாரே அபி அப்பா...கைப்புள்ள இடத்துக்கு ஆசைப்படரார் போல..

said...

/கைப்புள்ள இடத்துக்கு ஆசைப்படரார் போல.. /

பாசக்கார குடும்ப கைப்ஸ் இவர்தான் தெரியாதா? நாங்க எல்லாம் தல ன்னு தான கூப்பிடுறோம்

காட்டாறு கவித பயங்கரம் பாருங்க வயசானவங்களயெல்லாம் மீண்டும் காதலிக்க தூண்டுதாம் :)

said...

தெரியாதனமா ஒரு ஆர்வத்துல வயச சொல்லிட்டேன்ப்பா! உங்களுக்கு கும்மிக்கு வசதியா போச்சு! ஆனா நான் இன்னும் 22 தான் மனசளவில்!:-))

said...

பிள்ளைங்க எல்லாம் கவி பாடுங்க...நாங்க படித்து ரசிக்கிறோம். ஹ்ம்ம் அந்த நாள் ஞாபகம்ம்ம்:)))

said...

இத்தன பேருக்கு நான் எங்க போவேன்...

அட கஷ்டமே..

ஹி..ஹி...ஹி...

(காட்டாறு...கலக்றிங்கோவ்...தொடர்ந்து கலக்குங்கோவ்)

said...

காதலித்துப் பார்
இயற்கை அவளாவாள்; நீ அடிமையாவாய்
காதலித்துப் பார்
வயிற்றில் மின்னலடிக்கும்; நா வரளும்
காதலித்துப் பார்
அவளாசை உன்னாசையாகும்; உன் தேவை மறந்து போகும்


காதலித்துப் பார்
உலகே உயர்வானதாகும்; எல்லாரும் நல்லவராவர
காதலித்துப் பார்
மோட்சமடைவாய்; இறப்பாய்; மீண்டும் பிறப்பாய்

unmai unmai unmai

said...

இம்புட்டு பிரளியம் நடக்குமா....

நல்ல வேளை நான் காதலிக்கல....

அப்பாடானு இருக்கு.....

புரிய வைத்தற்கு நன்றிங்கோ...

said...

//பங்காளி... said...
இத்தன பேருக்கு நான் எங்க போவேன்...
//

ராசாத்தீ..... அது சரி...ஒரு படிமேல போய்ட்டீக... கீழ வாங்க. :-)

said...

//நளாயினி said...
unmai unmai unmai
//

நளாயினி, அடிச்சி சொல்லுற வேகத்தைப் பார்த்தாஆஆஆ....
;-)

said...

//நாகை சிவா said...
இம்புட்டு பிரளியம் நடக்குமா....

நல்ல வேளை நான் காதலிக்கல....

அப்பாடானு இருக்கு.....

புரிய வைத்தற்கு நன்றிங்கோ...
//

ஏனுங்க சிவா, இந்த காதுல பூவுன்னு சொல்லுவாங்களே அது இது தானுங்களா? காதலிக்காத ஆணும் இல்லை. காதல் வயப்படாத பெண்ணும் இல்லை. காதலை புரிய வைக்க முடியாதுங்கோவ்.

said...

//ஏனுங்க சிவா, இந்த காதுல பூவுன்னு சொல்லுவாங்களே அது இது தானுங்களா?//

ஆக என்னய நீங்க நம்பல...

//காதலிக்காத ஆணும் இல்லை. காதல் வயப்படாத பெண்ணும் இல்லை.//

அய்யோ.... அப்ப காதல் கட்டாயமா...

//காதலை புரிய வைக்க முடியாதுங்கோவ். //

அது உங்க கவிதைய படிச்சப்பவே புரிஞ்சு போச்சுங்க.. நமக்கு கவுஜும் புரியாது, காதல் புரியாதுனு... ;-))))

said...

//நாகை சிவா said...
ஆக என்னய நீங்க நம்பல...
//

அடடே... இப்பிடி தாக்குனா எப்படி? உங்கள நம்பாம வேற யாரைன்னு ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா ச்ச்ச்ச்ச்ச்சும்மா சொல்லி வைக்கிறேன். ;-)

//நாகை சிவா said...
அய்யோ.... அப்ப காதல் கட்டாயமா...
//
கட்டாயம் இல்ல ராசாத்தீ.... நீங்க வவவா-ஆக இருக்கங்க ;-)

//நாகை சிவா said...
அது உங்க கவிதைய படிச்சப்பவே புரிஞ்சு போச்சுங்க.. நமக்கு கவுஜும் புரியாது, காதல் புரியாதுனு... ;-))))
//
ஐயாஆஆஆ... நான் ஜகா வாங்கிக்கிறேன்.

ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க போல.

said...

காட்டாறுக்கா...வணக்கம்

வழக்கம் போல கவிதை சூப்பர் ;))

said...

\\காட்டாறு said...
அபி அப்பா, இப்பிடி ஒரு ஆசை எட்டிக் கூட பார்க்கப் படாது. அபி பாப்பா உங்களுக்கு போட்டியா பதிவு போட ஆரம்பிச்சாச்சி... Sooooooo.... என்ன சொல்ல வர்றேன்னா.... வயசாச்சிங்கோவ் உங்களுக்கு... ஹீ ஹீ ஹீ.... கும்மி குடும்பம்.... சாரி ... சாரி... பாசக்கார குடும்பம் கும்முறதுக்கு முந்தி நான் \\

யாரை பார்த்து வயசாச்சின்னு சொல்லிட்டிங்க. இதை படிங்க

"அபி அப்பா ; இன்னிக்கு அய்யா புது ஜீன்ஸ், புது சட்டை புது லேப்டாப், சும்மா மீசை எடுத்துட்டு ஆள பார்த்தாலே ஆபீஸ் அதிருதுல்ல!!"

இவரை போயி வயசாச்சின்னு சொல்லிக்கிட்டு ;))

said...

'தம்பி' படத்தில் வரும் 'சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா
காதலித்துப் பார்... காதலித்துப் பார்..'
என்ற வைரமுத்தின் வரிகளென வந்து எட்டிப் பார்த்து ஏமாந்தேன் ;-)

உங்கள மாதிரியே கொஞ்ச நாட்களுக்கு முன்பு வந்தது இது:

http://xavi.wordpress.com/2007/02/08/kaathalithuppaar/

said...

அட அட அட..ஒருத்தர்க்கு இப்ப முடியாதாமா...
ஒருத்தர் பொண்ணுகளுக்கு எங்க போவேன்னு கேக்கரார்..
இன்னொருத்தர் பாவம் அப்பாவி போல,,,,நல்ல வேலை நான் காதலிக்கவில்லைங்கிறார்

என்ன..என்ன நடக்குது இங்க...

said...

//கோபிநாத் said...
காட்டாறுக்கா...வணக்கம்

வழக்கம் போல கவிதை சூப்பர் ;))
//

அண்ணாச்சி, பிரிஞ்சி தான் சொன்னீகளா??? ;-)

said...

//கோபிநாத் said...
யாரை பார்த்து வயசாச்சின்னு சொல்லிட்டிங்க. இதை படிங்க

"அபி அப்பா ; இன்னிக்கு அய்யா புது ஜீன்ஸ், புது சட்டை புது லேப்டாப், சும்மா மீசை எடுத்துட்டு ஆள பார்த்தாலே ஆபீஸ் அதிருதுல்ல!!"

இவரை போயி வயசாச்சின்னு சொல்லிக்கிட்டு ;))
//
நல்லா யோசிச்சி சொல்லுங்க... புதுத்துணி அபிதம்பிக்கு எடுத்துறுப்பாரு....

அச்சச்சோ... மீசைய எடுத்துட்டாரா?? எந்த போட்டில தோத்தாரு?

said...

//ஜெஸிலா said...
'தம்பி' படத்தில் வரும் 'சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா
காதலித்துப் பார்... காதலித்துப் பார்..'
என்ற வைரமுத்தின் வரிகளென வந்து எட்டிப் பார்த்து ஏமாந்தேன் ;-)
//

ஜெஸிலாக்கா... நம்மள மாட்டிவுடப் பார்க்குறீகளா?

இதெல்லாம் பழசுங்க... தம்பிங்களுக்கு திருமணமாகி ஆளாளுக்கு 2 குட்டிகள்... அவங்க புலம்பல அவன்களுக்கே எழுதுறது நம்ம பழக்கம். பங்காளி வேற நீங்க அடிக்கடி வந்து போங்கன்ன்னு சொன்னாறா... அதான்... தூசி தட்டி... அச் அச் அச்.... எழுதிட்டு இருக்கேன். ;-)

said...

//மங்கை said...
என்ன..என்ன நடக்குது இங்க...
//

அதானே... பெரியவங்க நீங்க... கேளுங்க.

said...

\\காட்டாறு said...
//கோபிநாத் said...
காட்டாறுக்கா...வணக்கம்

வழக்கம் போல கவிதை சூப்பர் ;))
//

அண்ணாச்சி, பிரிஞ்சி தான் சொன்னீகளா??? ;-)\\

யக்கா.....பிரிஞ்சதால் தான் இன்னும் அந்த பக்கத்துக்கு போகவில்லைக்கா ;))))

அப்புறம் இது என்ன புது பழகம் அண்ணாச்சின்னு சொல்லிக்கிட்டு......அப்புறம் நான் அவ்வ்வ்வ்வ்வ் ;(((

said...

ஒருத்தரை பலமுறை காதலிக்கிறதானலேயா...
இல்ல பலரை ஒருமுறை காதலிக்கிறதானலேயா...
கொ..ஞ்...ச...ம்.. குழப்பாவே இருக்கு...
(சரி..சரி... கோவிச்சிக்காதிங்க...!)

ம்ம்... எனக்கும் வைரமுத்தின் கவிதை (இது முதலில் வந்ததால்..) நினைவுக்கு வந்தது...

நல்லா இருக்குங்க... கவிதைமட்டும் இல்ல 'தலைவரு' மாதிரி 'பன்ஞ்' டயலாக்லாம் கூட ...

/காதலிக்காத ஆணும் இல்லை. காதல் வயப்படாத பெண்ணும் இல்லை...../

ம்ம்ம்.. ;)