பெண்ணின் நிலை
என் நண்பனிடமிருந்து ஈமெயில். 82 வயதான மூதாட்டியார் தில்லி மாநகரில் கற்பழிக்கப் பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு, 2 நாளில் இறந்து போனார். இது 2 வருடங்களுக்கு முந்தைய செய்தி. இது கேட்டதும் என் கண்களில் நீர். மனதில் குடைச்சல். நாம் மனிதர்கள் தானா? ஆறறிவு படைத்தவர்கள் தானா? வேலை செய்ய மனமில்லாமல், வீட்டுக்குள் ஓடி ஒளிந்தேன். என்ன ஆச்சி நம்ம மக்களுக்கு? ஏனிந்த புத்தி பேதலிப்பு? மூதாட்டியாரின் மன நிலை எவ்வாறு இருந்திருக்கும்? கேள்வி மேல் கேள்வி. மன உளச்சல்.
என் கண்முன் பற்பல காட்சிகள் வந்து போகின்றன. பல வருடங்களுக்கு முன் நடந்த கதையிது. ஆந்திராவில் நடந்தது இது. அங்கு கொத்தடிமை என்பது சர்வ சாதரணம். பல கிராமங்களில் பெண்களின் நிலை ஆண்களால் (தகப்பன் - மகள், தனையன் - தங்கை என்ற பாகுபாடின்றி) எச்சூழ்நிலையில், எவ்வாறெல்லாம் சூறாடப்படுகிறது என்பது பற்றியும், அதை ஒரு பொருட்டாக கருதாத அம்மக்கள் பற்றியும் ஒரு ஆய்வு நடத்தப் பட்டது. நான் பணி செய்த இடத்தில், ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, எங்களை குழுக்களாக பிரித்து, பெண்களிடன் பேசி, அவர்களின் மன புழுக்கத்தை வெளிக் கொணரவும், தற்காப்பு முறைகள் பற்றி விளக்கவும் அனுப்பினார்கள். அவர்கள் சொன்னவையாவும் பதிவில் இடமுடியாதவை. ஆனால் 82 வயது பாட்டியின் செய்தி, இந்த கிராமத்து நிலையை என் கண்முன் கொண்டு வந்ததை மறுக்க முடியாது. அப்போது இருந்த என் உள்ள வெளிப்பாடு தான் இந்த கிறுக்கல்கள்.
சமீபத்தில் என் நண்பன் 2 வயது பச்சிளம் குழந்தையை தகப்பனே கற்பழித்த கொடுமையை கூறினான். மற்றுமொரு நண்பனிடம் இது குறித்து பேசிக்கொண்டிருக்கையில், நான் அன்று (பல வருடங்களுக்கு முன்) எழுதிய மனக் குமுறலை பதிவில் எழுதும் படி பல முறை வேண்டிக் கொண்டான். அந்நண்பன் தூண்டுதலால், இன்று அவனுக்காக இப்பதிவு…… முடிந்தால் வாசிக்கவும்.
=============================================
அழுத்திப் பிடித்து கண்ணத்தில்
முத்தம் தருவார் அடுத்த வீட்டு அண்ணா
கழுத்து துவங்கி புட்டம் வரைத் தடவி
தன் அன்பை தெரிவிப்பார் சித்தப்பா
எப்போதும் மடியிருத்தி
அணைத்துக் கொள்வார் மாமா
அடி பம்பு தண்ணியில் குளிக்கும் சாக்கில்
இடுப்புத் துணி நழுவ விடுவார் தோழியின் தந்தை
பேச்சின் நடுவில் உதட்டின் குவியலை குறிவைப்பார்
புதிதாய் திருமணமான பக்கத்து வீட்டு அக்காளின் கணவன்
முலை தடவுவதில் முன்னுரிமை
கொடுப்பார் பக்கத்து வீட்டு தாத்தா
சைக்கிள் ரிக்ஷாவிலிருந்து அக்குளுடன்
முலையழுத்தி இறக்கி விடுவார் ரிக்ஷாக்காரர்
இருட்டின் வெளிச்சத்தில் சன்னலோரம்
தூக்கி நிலா காண்பிப்பார் டியூசன் வாத்தியார்
இயலாத நிலையிலும்
யோனி கிழிக்க முற்படுவார் மருத்துவர்
நிலைப் படியில் பயணிப்பினும்
புட்டம் பிடிப்பர் இடி மன்னர்கள்
வேலையின் நடுவில் மார் நடுவை
அளவெடுப்பார் மானேஜர்
இது இன்றும் என்றும் தொடர் கதை
இந்த மண்ணில் பிறந்த பெண்ணின் நிலை
ஆம்! இம்மண்ணில் பெண்ணாய் பிறக்க
மாதவம் செய்ய வேண்டும்!!!!
-- காட்டாறு
20 பேர் மறுமொழிந்துள்ளனர்:
என்ன சொல்வதென்றே தெரியவில்லை, காட்டாறு. விக்கித்து நிற்கிறேன்.
ஒன்னும் சொல்லறதுக்கு இல்லக்கா ;(
உண்மை நிலையை புட்டு புட்டு வச்சிட்டே....இது அன்றாடம் நன் குழந்தைகள் அனுபவிக்கும் கொடுமை..
பிறந்த குழந்தைக்கும் பாதுகாப்பு இல்லை....வயதான மூதாட்டிக்கும் மரியதை இல்லை...
இதோ இங்கு நேற்று..ஒரு பெண்ணும் இரண்டு ஆன்களும் ஒரு 10 வயது சிறுமியை கடத்திக் கொண்டு போய் விட்டார்கள்...பள்ளிக்கு செல்ல பஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த பெண்
என்ன சொல்ல
கேடு கெட்ட ஜென்மங்கள்
காலங்கார்த்தால இப்படி நெஞ்ச கவ்வீட்டீங்களே ஆத்தா...
மனசு பாரமாய்டுச்சி...ம்ம்ம்ம்ம்
நம்ம அடிப்படையில் நெறய தப்பிருக்கு....ம்ம்ம்ம்...
இதுல பாரு தாயி, சில பருப்புக இந்திய பண்பாடும் கலாச்சரமும் உலகத்திலே சிறந்ததுன்னு சொல்லிகிட்டு அலையுதுங்க.
நம்மகிட்ட வக்கிர புத்தியை நீக்க முடியாத டுபாக்கூர் பண்பாடுதான் இருக்குது
இந்தியப்பண்பாட்டுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. உலகெங்கும் நடக்குது.
இங்கே மூதாட்டியின் வயது 76.
குழந்தையின் வயது வெறும் 6.
குழந்தையைக் கெடுத்துக் கொன்னு கடாசியவனை 21 வருஷத்துக்கப்புறம்
ஜாமீன்லே விடலாமான்னு அரசு கேக்குது. பொதுமக்கள் எல்லாருமே அவனை
வெளியே விட்டால் ஆபத்துன்னு சொல்றாங்க.
மூதாட்டிக்கு இப்ப கவுன்சிலிங் நடக்குது.
i usually avoid disturbing posts!!
i started reading on some instinct.
skimmed thru the intro(half gone already)
couldnt read after the first 2 lines of your poem.
God knows how long it will take for me to get back to normalcy!!
I can only pray,that i get my sleep soon today (if i ever will,today)
காட்டாறு அவர்களுக்கு வணக்கம்,
சமூகத்தில் பெண்களுக்கு காலங்காலமாக நடக்கும் அவலத்தை சற்றும் விரசம் இன்றி கவிதையாக வடித்துள்ளீர்,
பெண்ணை வெரும் போதை பொருளாக போக பொருளாக பார்க்கும் பார்வை மாறாமல் இத்தகைய கொடுமைகள் தீராது.
பெண்ணை சமூகத்தின் பாதியாக, தங்கலை போல் உணர்வுள்ள ஜீவன் என்று பார்க்க வேன்டும்,
இத்தகைய பார்வை மாறுதலை, சி ந்தணை மாறுதலை உங்களை போன்றோரின் கட்டுரை கள் உருவாக்கும்..
உங்கள் பதிவுகள் வாசிப்பு, கருத்துக்களுக்கு ஒத்துழைப்பு தொடரும்
மகளே,
யதார்தமான பதிவு,உண்மை உணர்ச்சியின் வெளிப்பாடு.
மகளைத் தாயாய்ப் போற்றும் தந்தையும் உண்டு,அன்னிய மாதை அன்னையாய் மதிக்கும் ஆண்களும் உண்டு.
அதனால்தான் ஆண் வர்கத்தை
ஆண்டவனன் விட்டு வைத்தார் போலும்.
படிக்கவே கூசுகிறது.
ம்ம்..... மங்கை சொன்னதுபோல்.... 'கேடு கெட்ட ஜென்மங்கள்'!
நீங்கள் குறிப்பிட்ட செய்தி ஒருபுறம். அந்த ''.... கெட்ட ஜென்மங்களுக்கு' கடுமையான தண்டனை கொடுக்கலாம்... கொடுக்க வேண்டும்.
மறுபுறம் நீங்கள் கவிதையில் குறிப்பிட்டது... அதற்கு என்ன செய்வது.....
'கொஞ்சம்' தைரியம், 'கொஞ்சம்' கல்வி, 'கொஞ்சம்' விசயங்கள் ....... இதனுடன் பெற்றோர்கள் அல்லது குடும்பத்தாரின் ஆதரவு...
இதலாம் இருந்தால் 'கொஞ்சமாவது' சரிவருமா?
தெரியவில்லை...
எல்லோருக்கும் நன்றி. உலகம் சுற்றும் வாலிபி சொன்னது முற்றிலும் உண்மை. எல்லா ஆண்களும் தவறு என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம். நானும் அண்ணன்களோடும், தம்பிகளோடும் இன்றும் சந்தோஷமாக வாழ்பவள் தான்.
என் கருத்து என்னவென்றால், மற்றவர்களை மாற்ற நினைப்பதை விட்டுவிட்டு, பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி அவசியம் என்று பெற்றோர் உணர்ந்து, பயிற்சி முறைகளை கட்டாய கல்வியாக்க வேண்டும். அது மட்டுமல்லாது 10 வயதிலிருந்து அவர்கள் உடற் கூறுகளைப் பற்றியும், அதன் அவசியம் பற்றியும் சொல்லிக் கொடுப்பது மிகவும் முக்கியம்.
குழந்தைகளையும், வயதானவர்களையும் சூறையாடும் சீமான்களை என்ன செய்யலாம்? வேகத்தில் பேசினால், உடனே மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பேன். விவேகமாக பேச மூளை மழுங்கிப் போய்விட்டதே.
தென்றலின் கேள்விக்கும், அறிவியல் பார்வையின் கருத்துக்கும் விரைவில் மற்றுமொரு பதிவில் உங்களுடன் திரும்பவும் பேசுகிறேன்.
Inniki rathri tookam pochu.
Oru pen engira muraiyilum chennai managara middle class pallavan busil poi valandaval engira muraiyilum..puriyudu..I can even picturise most of this. :(
"பெண்ணின் நிலை" - I never said this to anybody. I am saying now....with tears....I am one of those victims....I still don't have strength to say this with my real name....because when my mom came to know that I was misused by our neighbour and one of our relative....the first word she said was...'Intha vayasula aambala sugam ketkutha?' I can't share this to anybody as I am still fear that something is wrong on my side....I think I was in 2nd grade then. That relative guy stayed at our home and was helping in my dad's business. He's the one taking me to school, playing in the evening with me etc, etc. Sometimes, I feel that I am a little retard in that age...now I am seeing kids around that age are very alert..why I didn't.. why did I admit them to do that to me..why me... I was so depressed after that, can't beleive in anyone...still I am maintaining a circle around me...good thing I did was...I concentrated only on studies after that...with only one thought....I've to get out of here...my home, away from my parents, relatives...and now I am in US. I have this feeling...a hate against my mom...that she didn't protect me...ok...atleast she has to be supportive know...but she didn't....she discussed this matter with her sisters...one aunt called and chapped on my cheek ...still I feel ashamed to face my aunts...As now so many years passed by...no body is remembering atleast not talking this.....but sometimes....you know...today your kavithai....it just...i don't know how to say it. Now I am married to a good guy..he is so understanding..but still...I can't share this matter with him...sometimes I think what if he comes to know in some way....One thing for sure...if it happens, he won't say the same words from my mom. But I can't live after that..
This thing happened to me keeps me to not to go back to India...I am not saying it not safe...I just don't want to see their faces again...that neighbour guy attempted suicide a couple of years ago...for personal reasons...when I came to know about that I felt...eventhough I know that's wrong...very happy....the other guy...relative one...I saw him in one marriage during my last visit to India....my mom said to me'anna va kupidu'....avana patthu...I just saw my mom....I think she saw my hate in my eyes on that day....
//Anonymous said...
//
Dear Friend, I can understand your feelings. I used to counsel affected people as part of my job when I was India. Everyday you hear different stories. But the agony behind it... is the same.
புண் ஆறனுமின்னா, அதை திறந்து வைக்கனும். கட்டி வச்சி மேலும் ரணமாக்கக் கூடாது. புண்ணாக வைத்திருப்பதும், வடுவாக்கி விடுவதும் நம் கையில் மட்டும் தான்...
You can email me at kaattaaru@gmail.com if you are interested.
Take care.
என்ன கொடுமை ஆத்தா...!
இப்படி பழைய பதிவெல்லாம் தூசு தட்றீங்க.....
காட்டாறு, மேலே இருக்கிற அனானி சொன்னதை முழுமையாக படித்தேன். அப்படியே என் கூட வாழ்ந்த ஒருத்திக்கு நிகழ்ந்ததுதான் இவருக்கும் நிகழ்ந்திருக்கிறது. அவளுடன் நான் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டுமென்றுதான் மிகவும் மெனக்கெட்டேன்.
ஆனால், அவளோ "அந்த" ரணத்தை ஆறவிடாமல் நினைவுகள் அவ்வப்பொழுது அங்கே இட்டுச் சென்று பழையதையும், புதிதையும் போட்டுக் குழப்பிக் கொண்டு பின்னாலில் முழுமையாக திருமண "கம்மிட்"" பண்ண முடியாமல் குழப்ப நிலையிலேயே உறவையையும் முறித்துக் கொண்டால்.
அத்துடன் இந்த அனானியின் பயம்//. Now I am married to a good guy..he is so understanding..but still...I can't share this matter with him...sometimes I think what if he comes to know in some way...// என்னுடன் இருந்தவரின் பயத்தையொட்டியே இருப்பதால், உங்களுடன் தொடர்பு கொண்டு எப்படி அதனை பக்குவமாக கையாள வேண்டுமென்று பேசிக் கொள்வது மிக்க நலம் பயக்கும் எதிர்காலத்திற்கு.
ஒரு குழந்தைக்கு நேர்த்திக்கப்படும் துன்பத்திற்கு எப்படி ஒரு குழந்தை பொறுப்பாக முடியும்? அது அந்த அடல்டின் கேடு கெட்டத் தனத்திற்கு விட்டுச் செல்லாமல் அதனை இன்னமும் வளர்ந்த பிறகும் மனத்தில் 'கில்டி' உணர்வாக வளர்ப்பதில் எந்த நியாயமும் கிடையாது அனானி - அதனை முழுமையாக நம்புங்கள்.
அப்படியே இந்தப் பதிவையும் கொஞ்சம் படிச்சுப் பாருங்க...
http://thekkikattan.blogspot.com/2006/01/blog-post_08.html
For obvious reasons, I will also stay anony.
//Dear Friend, I can understand your feelings. I used to counsel affected people as part of my job when I was India. Everyday you hear different stories. But the agony behind it... is the same.
புண் ஆறனுமின்னா, அதை திறந்து வைக்கனும். கட்டி வச்சி மேலும் ரணமாக்கக் கூடாது. புண்ணாக வைத்திருப்பதும், வடுவாக்கி விடுவதும் நம் கையில் மட்டும் தான்...
//
Shared a similar fate. I am writing with tears in my eyes. But I was saved by God's grace before anything really bad happened to me. My parents do not know even now. I am also married to a wonderful guy who doesn't even care about these things - Thank God for those wonderful guys, right?
These #@$! things happen the world over. It is publicized more in westernized countries than countries like ours. The problem though, is like the "other Anony" lady says when the victim is made to feel guilty. My heart goes out to you sister!
பதைபதைத்து நிற்கிறேன்
உங்களின் இந்த பதிவை படித்துவிட்டு.
ஒண்ணுமே சொல்ல இயலவில்லை.
ஆனா பயம்மா இருக்கு எனக்கு.
மிக உண்மை..
அனுபவித்துள்ளோம் அனேக இடங்களில்..:(
அன்பின் அனானி ,
அது ஒரு விபத்து .. மறப்பதோடு அதே போன்ற பெண் குழந்தைக்கு உதவலாம்..
மனம் லேசாகும்.
Post a Comment