Friday, July 20, 2007

என்னை சேர்த்துக்க மாட்டேன்னுட்டாங்கப்பா

புகைப்பட போட்டின்னு நம்ம நட்சத்திர பதிவாளர் முத்துலெட்சுமி பதிவைப் பார்த்து தான் தெரிஞ்சிகிட்டேன். உடனே கோதவில் இறங்க எங்கே நேரம். அதனால சமீபத்தில் எடுத்த படங்களை உங்களுக்காக இங்கே. 50 பேரு தான் பங்கேற்க முடியுமாமே.... அதனால என்ன... கலந்து கொண்டேன்னு பேர் பண்ணிக்கலாமின்னு...... ஹீ ஹீ ஹீ.




அண்ணாத்தை வீட்டின் பின்புறம் உள்ள காட்டில் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். கிளிக்கிட்டேன். உதறல் கொஞ்சம் இருந்தாலும், அவரை இவ்வளவு பக்கத்தில் பார்த்த பெருமிதத்திலும் தைரியமா பக்கத்தில் போய் எடுத்த படம். கொஞ்மும் டச்சப் செய்யாமல் எடுத்தது போலவே தந்துள்ளேன். Camera -- Sony DSC F717





ஒரு மழை நாள் வீட்டு ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே டீ குடித்துக் கொண்டிருந்தேன். மரங்கள் அசைவதும், இலைகள் பட படப்பதும் கவிதைத்துவமாக் இருந்தது. வீட்டின் முன்னுள்ள செடியில் பூத்திருந்த லில்லி மலர்கள் தேனில் தோய்த்தெடுத்த பலா பழத்தை நினைவு படுத்தின. கிடைத்த தாளில் என் கிறுக்கல்களை கிறுக்கி விட்டு, அக்கணத்தை கிளிக்கினேன். மழையாக இருந்ததால், Light effect சரியாக இல்லை. Level increase மட்டும் செய்ய வேண்டியதாகி போச்சி. வேறொரு மாற்றமும் செய்யவில்லை. Camera -- Sony DSC F717.

இன்னும் படம் வேணுமா, இதுவே போதுமா?

21 பேர் மறுமொழிந்துள்ளனர்:

Osai Chella said...

அட ஙொப்புறானா... இவ்வளவு சுப்பர் படமெல்லாம் வச்சுக்கிட்டு இவ்ளோ லேட்டா.. வுடுங்க மக்கா... அடுத்த மாதம் நீங்க கலக்குறீங்க! என் பெட் நீங்க தான்... ஆனா நான் அடுத்த மாதமும் நடுவர் இல்லீங்கோ!

Thanks and I really loved the Top Snake image. THough it required guts , timing and rarity of the event... it is SUPER!

Osai Chella said...

உண்மையைச் சொன்னால் ஒரு நல்ல புகைப்படத்தை இப்போட்டியை நடத்தும் நாங்கள் தான் மிஸ் பண்ணிவிட்டோம்! இருக்கட்டும்... "இயற்கை" முடிந்தாலும் ..."விலங்குகள்" வரும் பொழுது நீங்கள் ஜமாய்ப்பீர்கள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

செல்லா சொன்னமாதிரி அந்த மேலுல்ள் படத்தை எடுக்க ரொம்ப கஷ்டம்..

கீழுள்ளதும் அருமை.

50 பேரும் வந்தப்புறம் வந்தீங்களாக்கும்.
மாதமாதம் இருக்கே கலக்குங்க..

துளசி கோபால் said...

பாம்பர்( ஒரு மரியாதைதான்) சூப்பர்.

பலாச்சுளையும் சுவையா இருக்கு.

இன்னும் படம் வேணும்................

Osai Chella said...

என் நண்பனிடம் பெரிய படத்தைக் காண்பித்தபோது அவன் சொன கமெண்ட்.."காட்டாறூ பெரிய ஆளுயா.. படமெடுக்கறவரையே (snake) படமெடுத்துட்டான்யா.. சூப்பர்"

வெற்றி said...

முதலாவதாக இருக்கும் படத்தை எந்த நாட்டில் எடுத்தீர்கள்? தமிழகத்திலா?

/* அண்ணாத்தை வீட்டின் பின்புறம் உள்ள */

ஐயோ, எப்பிடி இந்த வீட்டிலை பயமில்லாமல் இருக்கிறீங்கள்? நானென்றால் இப்ப ஊரை விட்டே ஓடியிருப்பேன்... பாம்பென்றால் அவ்வளவு பயம்...

சரி, அடுத்த முறை போட்டி முடிவுத் திகதியை நினைவு வைச்சு படத்தை அனுப்புங்கள்.

Ayyanar Viswanath said...

பாம்பு படம் அட்டகாசம். தைரியமான படம் :)

பங்காளி... said...

தாயே...

இன்னிக்கு உங்க பாம்புக்குட்டிதான் நம்ம டெஸ்க்டாப்ல இருக்காப்ல....காப்பி ரைட், டீரைட்டுன்னு.....சொல்றாங்களே...அப்டீன்னா என்ன? :-)))

மங்கை said...

உன்ன போட்டியில சேர்த்துக்கலய்.. என்ன அநியாயம்...ஹ்ம்ம்

முதல் படம் அருமை..

ஆளாளுக்கு கலக்கறாங்க...நானும் இருக்கேன் தண்டத்துக்கு...

ஒப்பாரி said...

முதல் படம் தனித்துவமா இருக்கறதால நடுவர்களின் கவனத்தை கவர்ந்திருக்கும்.

இரண்டாவது படமும் நல்லா இருக்கு, அடுத்த மாசம் பார்த்துக்கலாம்.

காட்டாறு said...

அடடே அடடே.... டீச்சர் ஐயா, டீச்சர் அம்மாவும் வந்து கலக்குறதா சொல்லீட்டீக..... இனி கையும், காமெராவும் தான்.... இனி வரும் போட்டிக்கு எங்க போய் பாம்பைத்தேடுவேன். :-(

காட்டாறு said...

வந்த அல்லாருக்கும் நன்றிங்கோ! பாராட்டுக்கும் தான்!

காட்டாறு said...

பங்காளி அண்ணாச்சி.... உங்களுக்கு இல்லாததா.... புளங்காயிதம் அடஞ்சிட்டேன்ல... பாவம் மக்கள பயமுறுத்தாதீக ராசாத்தீ... அம்புட்டு தேன் சொல்லுவேன். 2MB படம் வேணுமின்னா அனுப்பிவைக்கிறேன். ;-)

காட்டாறு said...

ஒப்பாரி மொத மொத வந்திருக்கீக.... வாழ்த்தும் சொல்லிட்டீக... நன்னி. பாம்போட வரவேற்துட்டோமுல்ல...

காட்டாறு said...

//மங்கை said...
உன்ன போட்டியில சேர்த்துக்கலய்.. என்ன அநியாயம்...ஹ்ம்ம்
//

அப்படி கேளுங்க மங்கையக்கோவ்... நாயமா இதெல்லாம்.... ;-)

ஆனாப் பாருங்க நடுவரெல்லாம் நம்ம வீட்டுக்கே வந்துட்டாகல்ல... பெரிய மனசு பண்ணிருவம்.

Anonymous said...

யக்கவோவ் நீங்க தைரியசாலிதான் போங்க,!அந்த பூ படம் அழகு.நம்ப அக்காகிட்டே இவ்வளவு திறமையா?அடடா தங்கச்சிக்கு tears of joy :))

Thekkikattan|தெகா said...

பாம்பு"""" அது படம்...

SurveySan said...

good ones kaattaaru :)

கோபிநாத் said...

யக்கா....நீங்க படம் எல்லாம் எடுப்பிங்களா !!!!!! பெரிய ஆளு தான் போங்க......முதல் படம் அட்டகாசம். ஆனா ரெண்டாவது படம் தான் எனக்கு பிடிச்சிருக்கு ;))

ulagam sutrum valibi said...

மகளே
நாம் எதைச் செய்தாலும் நம் மன நிறைவுக்காய் செய்ய வேண்டும்.
மனிதருக்கு மனிதர் கண்ணோட்டம் வேறுபடும்,ஒருவருக்கு சிறந்ததாய் தெரிவது மற்றவருக்கு தெரியாமல் போகலாம்.என்னைக் கேட்டால் உண் முதல் நிழல் படம் ஒரு பொருள் உணர்த்துகிறது.

முள் வேலிக்குள் முடங்கி
கரந்துறையும் கருநாகமே!
நஞ்சை கொண்டதாலோ நீ
நாணி முடங்கினாய்?
நஞ்சினும் கொடிய விடம்
கொண்ட கொடியோர்
நானி முடங்க வில்லையே!!
கொடியவன் நான் என நீ
இனம் காட்டுவதால் தான்
நல்ல பாபானாயோ?

இராம்/Raam said...

காட்டாறு,

சூப்பருங்க... :)