Thursday, August 02, 2007

பழசு தான்... ஆனாலும் புதுசு

இந்த மாத போட்டிக்கு டாண்ணு வந்துடோம்மில்ல..... ராசாத்தீகளா.... காட்டாறுன்னு ஓடிப்புடாதீக..... பார்த்து, இரசித்து மகிழுங்க.

2 வருடங்களுக்கு முன்பு எடுத்தப் படங்கள் தான் இவை. ஆனாலும் போட்டிக்குப் புதுசு. ;-) குழந்தைகளை புகைப் படம் பிடிப்பது என்பது ஒரு தனி கலை தான். அவங்க பண்ற சேட்டைகளை நாம் இரசித்து கொண்டு இருக்கும் போது, புகைப் படம் எடுக்க மறந்து விடும். புகைப் படம் எடுக்க நாம் ரெடியா இருக்கும் போது, குழந்தைகள் நமக்கு அல்வா கொடுத்துருவாங்க. நான் எடுத்ததில் எனக்கு மிகவும் பிடித்த 4 புகைப்படங்கள். முதல் இரண்டும் போட்டிக்கு. மற்ற இரண்டும் எனக்காக. ;-)

(எல்லா படங்களும் Camera - Sony DSC F717 ஆல் எடுக்கப்பட்டவை. )




எங்க அத்தை வாங்கி வந்த சாக்லெட். ம்ம்ம்ம்ம்.......... நல்லா இருக்கு. எங்க அத்தை என்னை சாக்லேட் பேபின்னு கூப்புடுவாங்க. பேரு நல்லா இருக்கா?



அத்தை நல்லா சிரிப்பு காமிப்பாங்க. எப்படி சிரிக்கிறேன்னு பாத்தீங்களா? அத்தைக்கு போட்டோ எடுக்குறது புடிக்கும். ஒரு அத்தை சிரிப்பு காமிச்சாங்க, இன்னொரு அத்தை போட்டோ எடுத்தாங்க. அத்தைங்க ரெண்டு பேரும் வந்தாலே ஜாலி தான்.




இங்கே அழுறது பாட்டியா இல்லை பேத்தியா? அவங்க அழுததில் இன்னும் இரண்டு குழந்தைகள் அழுதது தான் ஹைலைட்டே.



அடொரேஷன் என்பது சிறு வயதிலே வந்துருது பாருங்க. அப்பாவை இந்த குழந்தை இரசிக்கிறது எவ்வளவு அழகா இருக்குதில்ல. அப்பாவை இரசித்த பாப்பாவையும், பாப்பாவை இரசித்த அப்பாவையும் இரசித்து அத்தை எடுத்த புகைப்படம் இது.

17 பேர் மறுமொழிந்துள்ளனர்:

பங்காளி... said...

நம்ம ச்சாய்ஸ் நாலாவதுதான்....

கள்ளம் கபடமற்ற இந்த நிலைதான் தெய்வீகம்....

என்னவோ போங்க...ப்பெரிய்ய்ய்ய லெவல்ல படங்காட்றீங்க....ஹி..ஹி...நல்லாருக்கு காட்டாறு.....

மங்கை said...

எத்தன கூர்ந்து கவனம் சிதராம வெகுளியார் அந்த பார்வை, முகம்...ஹ்ம்ம்..பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கு...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட்டகாசமான படங்களாக இருக்கிறது எல்லாமே...அசத்துங்க காட்டாறு...வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

அதி சூப்பர்!

Osai Chella said...

ungapadangala vaichu oru pathivee pottachu... Click Here

கோபிநாத் said...

அத்தையக்கோவ்....எல்லா குழந்தைகளும் சும்மா சூப்பர இருக்கு ;-))

கலக்குறிங்க....வாழ்த்துக்கள் ;-))

கோபிநாத் said...

\\அப்பாவை இரசித்த பாப்பாவையும், பாப்பாவை இரசித்த அப்பாவையும் இரசித்து அத்தை எடுத்த புகைப்படம் இது.\\

யக்கா...இதை வச்சி (கடைசி படத்தை வச்சி) ஒரு கவிதை எழுதுங்களேன். அட்டகாசமாக இருக்கும்...நேயர் விருப்பம் ;-))

இராம்/Raam said...

சூப்பரு....

காட்டாறு said...

//கோபிநாத் said...
யக்கா...இதை வச்சி (கடைசி படத்தை வச்சி) ஒரு கவிதை எழுதுங்களேன். அட்டகாசமாக இருக்கும்...நேயர் விருப்பம் ;-))
//

அண்ணாச்சி, உள்குத்து எதுவும் இல்லையே? ;-)

காட்டாறு said...

//OSAI Chella said...
ungapadangala vaichu oru pathivee pottachu... Click Here
//

அண்ணாச்சீ... கலக்கிட்டீங்க. போட்டிக்குள் போட்டியா? சூப்பர்.

காட்டாறு said...

எல்லா போட்டோவும் அம்மாவின் சாய்ஸ். அதான் டச் பண்ணாம ஒரிஜினல் போட வேண்டியிருந்தது. 4 வது போட்டோ வீட்டிற்கு வர்றவங்களையும் கவர்ந்திழுக்கிறது. எனக்கும் ரொம்ப பிடிச்ச படம்.

வந்து மகிழ்ந்தவங்களுக்கு நன்றி!

Sud Gopal said...

ரெண்டும் மூணும் நல்லா இருக்கு...

கோபிநாத் said...

\காட்டாறு said...
//கோபிநாத் said...
யக்கா...இதை வச்சி (கடைசி படத்தை வச்சி) ஒரு கவிதை எழுதுங்களேன். அட்டகாசமாக இருக்கும்...நேயர் விருப்பம் ;-))
//

அண்ணாச்சி, உள்குத்து எதுவும் இல்லையே? ;-) \\

என்ன கொடுமை சார் இது ;(( ஒரு குத்தும் இல்லை...

Geetha Sambasivam said...

எல்லாப் படங்களுமே நல்லா வந்திருக்கு. போட்டிக்கா இவை எல்லாம்? அருமை!

தென்றல் said...

ஒவ்வொரு படங்களும் அழகு! குறிப்பாக நீங்கள் கொடுத்த 'வர்ணனை'யுடன்....

பி.கு:
போட்டியின் முடிவு தெரியுமா?

Chandravathanaa said...

எல்லாம் அருமை.

வடுவூர் குமார் said...

என்னை மாதிரி பதிவிலேயே படத்தை பார்த்திடாதீங்க.. அதன் மேல் சொடுக்கி பாருங்க அதன் விரீயம் தெரியும்.
என் சாய்ஸ் 4 வது.