Sunday, August 12, 2007

கலையாமல் கலைந்தேன் கண்மணி

கண்மணி யக்கோவ்...... இந்த பதிவு உங்களைப் பத்தியது இல்ல. பயப்பட வேண்டாம். இது ச்ச்சும்மா ச்ச்சும்மா...... :-)
நண்பன் ஒருவன் இதை வாசித்து விட்டு, இருவர் படத்தில் வரும் பிரகாஷ் ராஜ் போல் சொல்லிப் பார்த்தேன்; அருமையாக இருந்தது என்றான். ஏதோ அவன் போறாத காலம் நான் எழுதும் அனைத்தும் வாசிக்க வேண்டிய கட்டாயம். ஆனாப் பாவம் நீங்க. அவன் என்னடாவென்றால் ஞான் பெற்ற இன்பம், தமிழ்மணமும் பெறட்டும் என்கிறான். இதோ என் அருமைத் தோழனின் விருப்பத்திற்கிணங்க, உங்களையும் கஷ்டப் படுத்தியாற்று. ;-)

கலையாமல் கலைந்தேன்

கலையாத உன் தூக்கத்தில்
கலைந்த உன் குங்குமத்தில்
கலைந்தது என் மனம்
கலையாமல் என்னிடம்
வந்துவிடு என் கண்மணி
கலைந்து கிடக்கும் என்
மனம் புரிந்துவிடு கண்மணி

குவிந்து உன் உதடு
என்னைக் காதலிப்பதாய் முணுமுணுத்தது
அது கண்டு
என் மனம் விரிந்து குவிந்தது
என் தொண்டைக்குழியில் ஏறிய பரவசம்
வயிறு வரப் பாய்ந்தது
நாபி அடைந்த்து ஊணுடல் கலந்தது

கலையாது என் கை எடுத்து
உன் மேனி வைத்தாய்
என் மேனி கழன்றது
என்னுள் நடக்கும் மாற்றம்
அறிவாயா என் கண்மணி
கலையாமல் நீ நடத்தும் நாடகத்தில்
கலைந்து போனேன் கண்மணி

புரியுமா என் கண்மணி
கனவிலும் உனைப் பிரியேன் என்று!

-- காட்டாறு

31 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

சிஸ், கவிதையில ஒரு சொற்குற்றம் இருக்கு. நாமதான் ஸ்டிக்கர் பொட்டுக்கு மாறியாச்சே. இதுல கலைந்த குங்கும எங்கிட்டு வந்துச்சு :-)

said...

காலங்கார்த்தால ஆப்பீஸ் வந்து உக்காந்தா....இப்படி காதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட வைக்கறீங்களே ஆத்தா.....

தெரியாமத்தான் கேக்றேன்....இதை நீங்களே எழுதுனீங்களா....இல்லை மண்டபத்துல யாராச்சும் எழுதிக் கொடுத்ததா.....ஏன் கேக்றேன்னா கவித அம்புட்டு ஸூப்பரு....

said...

ம்ம்ம்ம்ம்., நான் இன்னும் குங்குமம் தான். ஸ்டிக்கர் எல்லாம் நம்ம தோலுக்கும் சரி, மனதுக்கும் சரி ஒத்துக்காது! :D அதனாலே சொற்குற்றம், பொருட்குற்றம் ஒண்ணும் இல்லை. நல்ல அருமையான கவிதை! எப்படிங்க இப்படி எல்லாம் எழுத வருது? சீச்சீ, புகை எல்லாம் ஒண்ணும் இல்லை. :P நான் போன ஜென்மத்தில் நக்கீரன் ஆக்கும்! அதான் இப்போ கவிதையே எழுதறது இல்லை!

said...

ஹிஹிஹி, மண்டபத்திலே எழுதினதா? வாபஸ், வாபஸ் வாபஸ், பங்காளி, ரொம்ப ரொம்ப டாங்க்ஸு, உண்மையை உரக்கச் சொன்னதுக்கு! :))))))))

said...

ஆஹா...நல்லா இருக்கு...

ஆமா அது என்ன...மண்டபத்துல எழுதனுன்னு சொல்றாங்க...

ஒரு வார்த்தை சொல்லு தங்கமே..

:-))

said...

//ramachandranusha said...
சிஸ், கவிதையில ஒரு சொற்குற்றம் இருக்கு. நாமதான் ஸ்டிக்கர் பொட்டுக்கு மாறியாச்சே. இதுல கலைந்த குங்கும எங்கிட்டு வந்துச்சு :-)
//

உஷாக்கா... நாம இன்னும் குங்குமம் தானுங்கோவ். ;-)

said...

//பங்காளி... said...
தெரியாமத்தான் கேக்றேன்....இதை நீங்களே எழுதுனீங்களா....இல்லை மண்டபத்துல யாராச்சும் எழுதிக் கொடுத்ததா.....ஏன் கேக்றேன்னா கவித அம்புட்டு ஸூப்பரு....
//

ராசாத்தீ... இது என்ன கொடுமை... நீங்களுமா....புகழ்வது போல் பழித்தல் என்ற கொடுமை இங்கேயுமா?

said...

//கீதா சாம்பசிவம் said...
ம்ம்ம்ம்ம்., நான் இன்னும் குங்குமம் தான். ஸ்டிக்கர் எல்லாம் நம்ம தோலுக்கும் சரி, மனதுக்கும் சரி ஒத்துக்காது! :D அதனாலே சொற்குற்றம், பொருட்குற்றம் ஒண்ணும் இல்லை. நல்ல அருமையான கவிதை! எப்படிங்க இப்படி எல்லாம் எழுத வருது? சீச்சீ, புகை எல்லாம் ஒண்ணும் இல்லை. :P நான் போன ஜென்மத்தில் நக்கீரன் ஆக்கும்! அதான் இப்போ கவிதையே எழுதறது இல்லை!

//

அம்மையாரே.... பாராட்டுக்கு நன்றி. கவிதை ஒத்துக்கிட்டீங்களே. ;-)

said...

//கீதா சாம்பசிவம் said...
ஹிஹிஹி, மண்டபத்திலே எழுதினதா? வாபஸ், வாபஸ் வாபஸ், பங்காளி, ரொம்ப ரொம்ப டாங்க்ஸு, உண்மையை உரக்கச் சொன்னதுக்கு! :))))))))
//

க்க்க்க்க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... ராசாத்தீ... நீங்களுமா? :-(

said...

யக்கோவ்...
கண்மணி அக்காவை தான் கலாய்ச்சி இருக்கிங்கன்னு ஆசை ஆசையாக ஓடிவந்தால் இப்படி காதல் கவிதை எழுதி கவுத்திட்டிங்களே ;-(

said...

\\இதோ என் அருமைத் தோழனின் விருப்பத்திற்கிணங்க, உங்களையும் கஷ்டப் படுத்தியாற்று. ;-)\\\

அக்கா
நானும் ஒரு கவிதை கேட்டுயிருந்தேன்...

said...

இது நிஜத்தில் நடக்க சாத்தியமா? அருமையாக இருந்தது...

said...

கவிதை அருமை!

மங்கை, நீங்க இன்னும் திருவிளையாடல் படம் பார்க்கலையா? ;)

கோபிநாத்...உங்கள் (நல்ல) எண்ணம் வாழ்க...!!!

said...

ஆத்தா இப்பவாச்சும் என் ஞாபகம் இருக்கே ஆத்தா

said...

//மங்கை said...
ஆஹா...நல்லா இருக்கு...

ஆமா அது என்ன...மண்டபத்துல எழுதனுன்னு சொல்றாங்க...

ஒரு வார்த்தை சொல்லு தங்கமே..

:-))

//

வாங்க மங்கையக்கா... நீங்களாவது எடுத்து சொல்லுங்க. நாம மண்டபம் பக்கத்துல கூட போனதில்லிங்கோவ்!

said...

//கோபிநாத் said...
யக்கோவ்...
கண்மணி அக்காவை தான் கலாய்ச்சி இருக்கிங்கன்னு ஆசை ஆசையாக ஓடிவந்தால் இப்படி காதல் கவிதை எழுதி கவுத்திட்டிங்களே ;-(
//

அடப்பாவி! பதிவை வாசிக்கலையா? அதான் முதல் வாசகமே கண்மணியக்காவை பத்தினது இல்லைன்னு சொல்லிட்டேனப்பா.

கவுத்திட்டேன்னு சொல்லி கால வாரிட்டீகளே! :-(

said...

//கோபிநாத் said...
அக்கா
நானும் ஒரு கவிதை கேட்டுயிருந்தேன்...
//

சந்தடில சிந்து பாடிட்டீங்களே தம்பீ.... நேயரின் விருப்பத்தை நிறைவேத்தலாமின்னு நெனச்சா... உங்க முந்திய மறுமொழில கவுத்திட்டீங்களே. அதனால அசுக்கு, புசுக்கு.

said...

//Thekkikattan|தெகா said...
இது நிஜத்தில் நடக்க சாத்தியமா? அருமையாக இருந்தது...
//

நீங்க எப்பவும் வித்தியாசமா எழுதுவீங்களாமே.... அதுக்காக மறுமொழியிலேயுமா? ;-)

said...

//தென்றல் said...
கவிதை அருமை!

மங்கை, நீங்க இன்னும் திருவிளையாடல் படம் பார்க்கலையா? ;)
//

பாராட்டுக்கு நன்றி தென்றல். நானும் பார்க்கல.

said...

//கண்மணி said...
ஆத்தா இப்பவாச்சும் என் ஞாபகம் இருக்கே ஆத்தா
//

கண்மணியக்கோவ்.... நீங்க இப்படி சொல்லலாமா? உங்களப் பத்தி ஞாபகம் வச்சா...... நினைவிருத்திக்கனும். என்ன சொல்லிட்டீக நீங்க. ஆத்தீ.. மனசு ஒடஞ்சி போச்சே. :-(

said...

காட்டாறு,

நீங்க எப்பவும் வித்தியாசமா எழுதுவீங்களாமே.... அதுக்காக மறுமொழியிலேயுமா? ;-) //

அப்படி என்ன எழுதிட்டேன்னு இப்படி கலாய்கிறீங்க என்னய இப்ப... :-P

said...

//காட்டாறு said...
...
நானும் பார்க்கல.//

ஓ.. அப்ப பங்காளி "தப்பிச்சிட்டாரு!!" ;)

said...

சுதந்திர தின வாழ்த்துக்கள்!

said...

தாயே...கோவிக்காதீக

ஹி..ஹி..அன்னிக்கு கவிதைய படிச்சிட்டு நான் ஃப்ளாட்...ஹி..ஹி..அம்புட்டு ஸூப்பர்...உலகத்தரம் வாய்ந்த கவிதை.

ஃபோனப் போட்டு அம்மணிகிட்ட கவிதை சொல்லலாமான்னு கூட யோசிச்சேன்...அப்புறம் காலைல போகும் போது நல்லாத்தானே போனான்னு அம்மனி டென்சனாய்டுவாங்களேன்னு...ஹி..ஹி....

மெய்யாலுமே சொல்றேன்...சமீபத்துல இம்புட்ட்டு பன்ச்சோட ஒரு கவிதய நான் படிக்கல...

ஆங்..ஒரு மேட்டர் வுட்டுட்டேனே...நீங்க திருவிளையாடல் பார்த்ததில்லையா....நாகேஷ் -நக்கீரர் உரையாடால்லதான் இந்த மண்டபம் மேட்டர் வரும்...ஹி..ஹி...

said...

நம்மூரு அரசியல்வாதிங்க இல்லேன்னா ஆமான்னுதான் அர்த்தம்.
நீங்க இல்லேன்னு சொல்றப்ப..........

said...

பங்காளி..... கவிதையைபோல உங்க மறுமொழியும்...
.......

[ம்ம்.. எனக்கு ஒரு "சின்ன" ஏமாற்றம்தான் ;( ]

said...

ஆஹா!!
கொஞ்சம் வெவகாரமாத்தான் இருக்கு கவிதை!!
ஆனா நல்லா இருக்கு!!
வாழ்த்துக்கள்!! :-)

said...

//பங்காளி... said...
தாயே...கோவிக்காதீக

ஹி..ஹி..அன்னிக்கு கவிதைய படிச்சிட்டு நான் ஃப்ளாட்...ஹி..ஹி..அம்புட்டு ஸூப்பர்...உலகத்தரம் வாய்ந்த கவிதை.
//

அப்படி போட்டுத் தாக்கு ராசாத்தீ.... அய்யா... நெம்ப நன்றிங்கைய்யா.... உச்சி குளிர்ந்து போச்சில்ல.

அப்புறம்.. திருவிளையாடல் பாக்காதவங்க இருக்க முடியுங்களா? சும்மா வம்பு பண்ணினேன். ;-)

said...

//siva gnanamji(#18100882083107547329) said...
நம்மூரு அரசியல்வாதிங்க இல்லேன்னா ஆமான்னுதான் அர்த்தம்.
நீங்க இல்லேன்னு சொல்றப்ப.....
//

ராசாத்தீ.... நமக்கு வ்ர வேண்டிய மறுமொழி தானா இது? நீங்க சொல்ல வர்றது சுத்தமா புரியலிங்கோவ். சுதந்திர தினத்தில யாரையாவது குழப்பனுமின்னு நேர்ச்சை ஒன்னுமில்லீயே....

said...

//தென்றல் said...
பங்காளி..... கவிதையைபோல உங்க மறுமொழியும்...
.......

[ம்ம்.. எனக்கு ஒரு "சின்ன" ஏமாற்றம்தான் ;( ]
//

எத்தனை பேருப்பா இது மாதிரி சுதந்திரமா திரியிரீங்க? :-(

said...

கீதாம்மா, சுதந்திர தினவிழா வாழ்த்துக்கு நன்றி.

//
CVR said...
ஆஹா!!
கொஞ்சம் வெவகாரமாத்தான் இருக்கு கவிதை!!
ஆனா நல்லா இருக்கு!!
வாழ்த்துக்கள்!! :-)
//
CVR, பாராட்டுக்கு நன்றி! வெவகாரம் ஒன்னுமில்லையப்போவ்.... விவரம் மட்டும் தான். ;-)