அறுபதில், அறுபதிலிருந்து பேசலாமா?
அறுபதாம் சுதந்திர தினம். இந்த நன்னாளில், எனக்கு பரிச்சயமான, நான் பின்பற்றுகிற ஒன்னு; எல்லோரும் அப்படியிருந்தால் நல்லா இருக்குமேன்னு நான் தினம் நினைக்கிற ஒன்னை உங்களுக்கும் சொல்லலாமின்னு தான் இந்த பதிவு. குழந்தையும் தெய்வமும் ஒன்னு. ஏன்னா அவங்க என்ன எப்போ நெனைக்கிறாங்கன்னு சொல்ல முடியாது. :-) அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களும் தெய்வங்கள் தான். ஏன்னா, அவங்களும் குழந்தைகளும் ஒன்னாச்சே. அறுவதில் அறுவதைப் பற்றி பேசுவது சரியாயிருக்குமின்னு தோணுது. அய்ய… நான் என் வயசை சொல்லலப்பா…..
நம்ம தலைவர் ஆறிலிருந்து அறுபது வரை சொல்லிட்டுப் போய்ட்டார். நம்ம அறுபதிலிருந்து எதுவரை பத்தி சொன்னாலென்னன்னு தோணிய எண்ணங்கள் தாம் இவை. அவரைப் போல முடியலைன்னாலும், ஓரளவுக்கு எனக்கு(!) புரியிற மாதிரி, சுவாரசியமா (எனக்கு தான்) எழுத முயற்சிக்கிறேன்.
அறுபதுக்கு மேல குழந்தை போல் ஆயிருவாங்கன்னு கேள்வி பட்டிருக்கோம். ஏன்… நாமளே சொல்லுவோம். ஆனால் உண்மையிலே குழந்தை தானே என எண்ணி வழிவிட்டிருக்கோமா என்றால், பதில் கேள்விக்குறிதான். நம்ம என்ன செய்யிறோம், எப்படி நடந்துக்குறோமின்னு நான் சொல்ல வரல. அவங்க, அதாவது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், குணம் எப்படி குழந்தை குணமா இருக்குதுன்னு பார்க்கலாம். சரியா? 15 வயது வரை குழந்தைகள் என்பது என்னுடைய கருத்து. அதனால ஒப்பீடு 15 வயதுக்குள் மட்டும் தான். எழுதியிருக்கிற அத்தனை கருத்துக்களும் என்னோட கருத்து தான். சண்டைக்கு வந்தாலும், ஈன்னு சிரிச்சிட்டு போயிருவேன். ஏன்னா நானும் குழந்தை தான். ;-) 15 வயசுன்னா குழந்தை தானே.
இங்கே சின்ன குழந்தை 15 வயதுக்குட்பட்டவர்கள். பெரிய குழந்தை 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
தூக்கம்: 1 வயதுக்குள்
சின்ன குழந்தை: நமக்கு தூக்கம் வரும் போது இவங்களுக்கு தூக்கம் வராது. அவங்களுக்கு தூக்கம் வரும் போது, நாம் அன்றாட கடமைகளை செய்ய வேண்டியதாயிருக்கும். 2 அல்லது 3 மணி நேரம் தான் தூங்குவாங்க. அவங்களுக்கு தூக்கம் வரும் போது தூங்க விடலைன்னா…… வ்வீச் வ்வீச் தான்.
பெரிய குழந்தை: கோழித்தூக்கம் போடுவாங்க. கேட்டா, தூங்கவேயில்லைன்பாங்க. சும்மா வாய கிளறுனோமோ, குதறிருவாங்க.
மற்றவரைப் போல் செய்தல்: 1-2 வயதுக்குள்
சின்ன குழந்தை: கூட இருக்குறவங்க என்ன செய்தாலும் அதே போல செய்வாங்க. சொல்லிக் கொடுத்தவுடனே செய்வாங்கன்னு சொல்ல முடியாது. ஆனா, நாம நெனைக்காத தருணத்தில செய்து காண்பித்து ஆச்சரியத்தில் ஆழ்த்திருவாங்க.
பெரிய குழந்தை: அவங்க எடத்துல இருக்குறவரைக்கும் எதுவும் புதுசா கத்துக்கனுமின்னு அவசியம் இருக்காது அல்லவா. புதுசா கத்துக்க வேண்டிய கட்டாயம் வந்தால், நாம சொல்லிக்கொடுத்தா, எனக்கு எல்லாம் தெரியும். உன்னை படிக்க வச்சி ஆளாக்குனதுக்கு, நீ எனக்கு சொல்லித் தர்றீயான்னு ஒரு பார்வை…. இல்லை சொலல் இருக்கும். ஆனா, டக்குன்னு புடிச்சிப்பாங்க. என்ன புரிஞ்சிச்சோன்னு நெனைக்கிற போது, அழகா செய்து அசத்திருவாங்க.
நிறைவு: 2-4 வயதுக்குள்
சின்ன குழந்தை: வயிறு நெறஞ்சியிருந்தா, ரொம்ப தெம்பா ஓடியாடி விளையாடுவாங்க. சள சளன்னு பேசுவாங்க. நமக்கு புரிஞ்சா, அவங்க நடையில ஒரு துள்ளல் இருக்கும். புரியலைன்னா, வேற கதை பேச ஆரம்பிச்சிருவாங்க
பெரிய குழந்தை: அவங்க மனசு நெறஞ்சியிருந்தா, அவங்களப் போல் நக்கல் பண்ண யாராலும் முடியாது. பழகி பார்த்தவங்களுக்கு அது புரியும். உடம்புல தெம்பு இல்லைன்னாலும், மனசுல தெம்பு வந்துதுன்னா, ஒரு துள்ளல் நடையிருக்கும் அவங்க பேச்சில. பேசிட்டே இருப்பாங்க; கேட்க ஆளிருந்தால்.
செவிமடுத்தல்: 4-7 வயதுக்குள்
சின்ன குழந்தை: இது என்னப்பா/என்னம்மா அப்படிம்பாங்க. நாம விளக்க ஆரம்பிச்சா, எங்கேயோ இருக்கும் அவங்க கவனம். அரைகுறையா கவனிக்கிற மாதிரி இருக்கும். நாம சொல்லி முடிக்கிறதுக்குள்ள அடுத்த கேள்வியோட ரெடியாயிருவாங்க. எப்பவாது நாம் சொன்ன விளக்கத்தை நமக்கே சொல்லுவாங்க.
பெரிய குழந்தை: தெரியலைன்னாலும்/புரியலைன்னாலும் தானே வந்து கேட்க மட்டாங்க. ஆர்வமா பார்த்துட்டு இருப்பாங்க. நாம குறிப்பறிந்து விளக்கனும். அப்படி விளக்கும் போது, ஏதோ கண்டுக்காத மாதிரி இருக்கும். ஆனா உன்னிப்பா தான் கேப்பாங்க. மனசுல குறிச்சிக்குவாங்க. நாம விளங்குதா கேட்டா, கோபம் வந்துரும். “எனக்கெல்லாம் தெரியும்” அப்படின்னு ஒரு லுக்கு விடுவாங்க. ரொம்ப நேரம் விளக்கம் கொடுத்தா போரடிச்சிரும். டக்குனு வேற இடத்துக்கு மாறிருவாங்க.
தன்னையறிதல்: 7-9 வயதுக்குள்
சின்ன குழந்தை: அவங்க எண்ணங்கள் அவங்களைப் பத்தி மாத்திரம் தான் இருக்கும். சுத்தியிருப்பவங்க ….. அப்படி யாரும் இருக்குறதாவே அவங்களுக்கு தெரியாத பருவம் இது. அவங்க செய்ற குறும்புகளை நாம் எடுத்து சொல்லச் சொல்ல, மேலும் நம்மள கவருற மாதிரி நடந்துக்குவாங்க
பெரிய குழந்தை: நீங்க நல்லா சீராட்டி வச்சிருக்கீங்கன்னு வச்சிக்கோங்க, அப்போ அவங்க சின்ன வயசுல இழந்த சுகமெல்லாம் ஞாபகத்துக்கு வந்துரும். நான் எப்படியிருக்கிறேன், குண்டா இருக்கிறேனோ, மெலியனுமோ அப்படி இப்படின்னு அவங்களைப் பத்தியே கேள்வி கேட்டுட்டு இருப்பாங்க. அவங்க நமக்கு செய்த காரியங்களை நாம பெருமையா சொன்னோமின்னு வச்சிக்கோங்க, அப்படியே பகல் கனவுக்குள்ள போயிருவாங்க
லாஜிக் பார்ட்டி: 9-11 வயதுக்குள்
சின்ன குழந்தை: லாஜிக்கா யோசிக்க ஆரம்பிப்பாங்க. பேச ஆரம்பிப்பாங்க. எல்லாம் அவங்களுக்கு புரிஞ்ச மாதிரி நடந்துப்பாங்க. ஒழுங்கு படுத்தி பார்க்கத் தெரியும் இந்த ஸ்டேஜில். இப்படித்தான் இருக்குதுன்னு அழுத்தமான நம்பிக்கை ஒன்னை வச்சிட்டு தான் எதையும் ஆராய்வாங்க. அவங்க நெனச்ச மாதிரியே வந்தால், அடுத்த யோசிப்புக்கு போயிருவாங்க.
பெரிய குழந்தை: சிறு வட்டத்துக்குள் இருந்து பழகியவர்களானால், இவங்க இப்படி தான் என்று தனக்குள் வரையறுத்துக் கொண்டு, வருத்தப் பட்டுட்டு இருப்பாங்க. எந்த பிரச்சனைக்கும் ஒரு எல்லைக் கோடு போட்டுருவாங்க. அந்த கோட்டை விட்டு வெளிக் கொணருவது கடினம். அப்படி அவங்க நெனச்ச மாதிரி அந்த ஆளோ, பொருளோ இல்லைன்னு வச்சிக்கோங்க, ரொம்ப பாராட்டாம அடுத்த கவலைக்குள்ள போயிருவாங்க
கேள்விகள் உலகம்: 11-15 வயதுக்குள்
சின்ன குழந்தை: மனசுக்குள்ள கேள்வி கேட்டு தேடும் வயது இது. இப்படின்னா எப்படி இருக்கும். அப்படின்னா எப்படியிருக்குமின்னு கேள்வி மேல கேள்வியா அவங்களையே கேட்டுப்பாங்க. இந்த ஸ்டெஜில அவங்களுக்கு தேவை என்னன்னா பெற்றோர், சுத்தியிருப்போர் வழிகாட்டுதல். இந்த வயசுல புசுக்குன்னு கோபம், அழுகை எல்லாம் வரும்
பெரிய குழந்தை: இவங்க மனசுல ஏதாவது ஒன்னு குடைந்து கொண்டே இருக்கும். நல்லதோ கெட்டதோ, ரொம்ப யோசிப்பாங்க. தீர்வு அவங்க கைல இல்லைனாலும், குழப்பத்தின் உச்சத்தில் தான் இருப்பாங்க. இப்படி செய்தா எப்படி, அப்படி செய்தா எப்படின்னு. அவங்க கருத்தை சில சமயங்களில் வாய் விட்டு வெளில சொல்லி, மகன், மருமகள், மகளிடம் திட்டு வாங்குவோர் அதிகம். என்ன சொன்னாலும் (நல்லதோ, கெட்டதோ) கண்ணீர் வந்துரும் இவங்களுக்கு. கோபத்தை சாப்பிட்டில் காட்டுவார்கள்
Moral of the story-ல்லாம் ஒன்னும் இல்லை. :-) இந்நன்னாளில், நாம நாட்டுக்கு என்ன செய்தோம், நாடு நமக்கு என்ன செய்ததுன்னு கேள்வியெல்லாம் கேட்காம, நம்மளால் முடிந்த ஒன்றை செய்வோம். அது நம் வீட்டில் ஆரம்பிக்கட்டுமே. நம்மூட்டு பெரியவங்களை குழந்தைகள் போல் நடத்துவோமே. அப்படி நடத்தும் போது, நீங்கள் அவர்களின் குழந்தை என்பதை மனதில் கொண்டால், கடிந்து நடக்கும் சந்தர்ப்பம் வந்தாலும், சுமூகமாக பேசும் திறன் வரும். நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்.
ஜெய்கிந்த்! இது முற்றுமல்ல... நீங்கள் தொடரவும்.
பின்குறிப்பு:
Mangai: http://manggai.blogspot.com/2006/10/growing-old.html
TheKa: http://thekkikattan.blogspot.com/2005/10/blog-post_112975875971348634.html
25 பேர் மறுமொழிந்துள்ளனர்:
காட்டாறு,
சுடச்சுட ரொம்ப பக்கத்தில யாரையோ ஒருத்தர வைச்சிப் பார்த்துகிட்டு எழுதின மாதிரியே இருக்கு. ரொம்ப கவனிச்சு எழுதியிருக்கீங்க.
உங்களமாதிரி எல்லா இளம்தாரி பெண்களும் யோசிக்க ஆரம்பிச்சு 60 வயதுற்கு மேற்பட்ட வயதானவர்களை ட்ரீட் பண்ண ஆரம்பிச்சா நம்மூர்ல பாதி சீரியல்கள் பாதியோட முடிஞ்சுடுமின்னு நினைக்கிறேன் :-)).
இன்னொன்னு நீங்க குறிப்பிட்ட வயசிற்குப் பிறகு இப்பொழுது நிறைய வயசானவங்க அவங்க வீட்டிலேயே இருந்து வயசாக முடியலைங்கிற அவலம் தெரியுமா, உங்களுக்கு? எல்லாரையும் பிடிச்சுக் கொண்டு போயி "முதியோர்கள் இல்லமாம்" அங்க கொண்டு போயி விட்டுட்டு வந்திடுறாங்க.
வயசான (யாரு இனிமே வரப் போற நாமதான்) கொஞ்சம் கவனமாக இருந்து அப்படியே யாராவது நம்மளையும் கொண்டு போயி அவ் இல்லங்களில் விட வந்தா யப்பா, உன் காசை நம்பி நான் இல்லடா நான் செத்து தனியா உட்கார்ந்து இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச இடத்திலேயே இருந்து மண்டையைப் போட்டுறேன்னு சொல்ற அளவிற்கு ரெடியாகிக்க வேண்டியதுதான்.
காலையில் NY Timesல் ஒரு ஆர்டிகில் படிக்கும் பொழுது இப்படி ஒரு பதிவு போடமின்னு நினைச்சுட்டு இருந்தேன். நீங்க முந்திட்டீங்க. ரொம்ப நன்றாக இருந்தது.
//சுடச்சுட ரொம்ப பக்கத்தில யாரையோ ஒருத்தர வைச்சிப் பார்த்துகிட்டு எழுதின மாதிரியே இருக்கு. ரொம்ப கவனிச்சு எழுதியிருக்கீங்க.
//
ஆமாங்க.... வாரம் தவறாம பக்கத்தில் உள்ள முதியோர் இல்லம் போவேங்க. எந்த நாட்டில் இருந்தாலும், நம்ம வீட்டு பக்கத்திலிருக்கும் இல்லத்தில் நமக்கொரு இடம் இருக்கும்ங்க. அவங்க பேசுறதை கேட்க ரொம்ப பிடிக்கும். நாம் செய்யிற சிறு சிறு செய்கைகள் கூட அவங்களுக்கு பெரிசா தெரியும். அங்கேயிருந்து சுட்ட எண்ணங்கள் தான் இவை.
//எல்லாரையும் பிடிச்சுக் கொண்டு போயி "முதியோர்கள் இல்லமாம்" அங்க கொண்டு போயி விட்டுட்டு வந்திடுறாங்க.
//
இது பத்தி விரிவா மற்றுமொரு பதிவில் பேசலாம்.
//காலையில் NY Timesல் ஒரு ஆர்டிகில் படிக்கும் பொழுது இப்படி ஒரு பதிவு போடமின்னு நினைச்சுட்டு இருந்தேன். நீங்க முந்திட்டீங்க. //
அச்சச்சோ... நீங்க எழுதியிருந்தா தமிழ்மண உலகமே வந்து கருத்து பரிமாறியிருப்பாங்க. உங்களுக்கு இப்படி ஒரு எண்ணமிருப்பது தெரிந்திருந்தால், சந்தோஷமா உங்களை கிண்டலடிச்சிட்டு வாசிச்ருப்பேனே. Just miss ஆகிருச்சே. ;-)
அப்ப உங்களுக்கு மங்கை எழுதின Growing Old.... பதிவும், தெக்கிக்காட்டான் எழுதின முதுமை ஒரு சாபக்கேடா...? என்ற பதிவும் உங்க கண்களில் பட வில்லைன்னு சொல்லுங்க :-))). நாங்கள் எல்லாம் யாரு, சீனியருங்க ;-)))
Mangai: http://manggai.blogspot.com/2006/10/growing-old.html
TheKa: http://thekkikattan.blogspot.com/2005/10/blog-post_112975875971348634.html
எப்படி...எப்படி இதெல்லாம்.....ம்ம்ம்
அவ்வ்வ்வவ்வ்வ்வ்வ்வ்
நான் தெனமும் ரெண்டு சின்ன குழந்தை ரெண்டு பெரிய குழந்தைங்க கையில சிக்கி அல்லோகலப் பட்டுட்டு இருக்கேன்...ஹி..ஹி...
ர்ர்ர்ர்ர்ர்ரொம்ம்ம்ம்ம்ப கஸ்டம்....ஹி..ஹி...
//Thekkikattan|தெகா said...
அப்ப உங்களுக்கு மங்கை எழுதின Growing Old.... பதிவும், தெக்கிக்காட்டான் எழுதின முதுமை ஒரு சாபக்கேடா...? என்ற பதிவும் உங்க கண்களில் பட வில்லைன்னு சொல்லுங்க :-))). நாங்கள் எல்லாம் யாரு, சீனியருங்க ;-)))
//
ஆத்தீ.... என்ன இது! 2005-இல் எழுதியிருக்கீங்க. அப்போ நான் பிறக்கவேயில்லையே. தமிழ்மணத்தில் தான். நீநீஈஈஈஈஈங்க ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரொம்ப ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சீனியருங்க.
நீங்க மட்டுமில்லை. மங்கையும் தான். அப்பாடியோவ்! கத்துக்குட்டி நான்.
//பங்காளி... said...
எப்படி...எப்படி இதெல்லாம்.....ம்ம்ம்
அவ்வ்வ்வவ்வ்வ்வ்வ்வ்
நான் தெனமும் ரெண்டு சின்ன குழந்தை ரெண்டு பெரிய குழந்தைங்க கையில சிக்கி அல்லோகலப் பட்டுட்டு இருக்கேன்...ஹி..ஹி...
//
பங்காளி, உண்மையைச் சொல்லுங்க.
அதில் ஒரு இன்பம் இருக்கத்தான் செய்யும்? நாம் எப்படி எடுத்துக்கிறோம் என்பது தானே முக்கியம். ஈஸியா எடுத்துட்டால்.... ;-)
அட
வித்தியாசமான பதிவு!
படிப்பதற்கு சுவையாக இருந்தது!! :-)
வாழ்த்துக்கள்!! :-)
நான் ரெண்டு சிறு குழந்தைகளையும் ஒரு பெரிய குழந்தையையும் சமாளிச்சு...முடிச்சு...இப்ப ஒரு பெரிய குழந்தையாயிருக்கிறேன்.கிட்டத்தட்ட இதே அனுபவங்கள் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். அதிலும் பெரிய குழந்தையை சமாளிப்பது இருக்கிறதே...ர்ர்ர்ர்ரொம்பப் பொறுமை வேணும். நிகழ்வுகளை தெளிவாகப் படம்பிடித்து காட்டியிருக்கிறீர்கள். காட்டாறு..அமைதியாக ஓடியது.
அருமை ராசாத்தி...
உன்னை போய் மண்டபத்துலே அது இதுன்னு சொல்றாங்களே.,,
இதுல நமக்கு அது புரிய வேற இல்லையாம்... ரெண்டு பேர் அதுக்கு விளக்கம் வேற குடுத்து இருக்காங்க..
:-)))
யக்கோவ்..
எப்படிக்கா இப்படி எல்லாம் வித்தியாசமாக எழுதுறிங்க...சும்மா வயசை எல்லாம் புட்டுபுட்டு வெச்சி கலக்கிட்டிங்க ;-))
காட்டாறுனு பேர் வச்சுக்கிட்டு, அமைதியான ஓடைபோல் எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.
வயதானவர்கள் சொல்லுவதைக் காது கொடுத்து கேட்டாலே அவர்களுக்கு அப்படி ஒரு சந்தோசம் வருவதைப் பார்த்திருக்கிறேன்!
//CVR said...
அட
வித்தியாசமான பதிவு!
படிப்பதற்கு சுவையாக இருந்தது!! :-)
வாழ்த்துக்கள்!! :-)
//
CVR அண்ணாச்சீ.... வாழ்த்துக்கள் இப்போ எதுக்குன்னு புரியலைங்க!
//நானானி said...
நான் ரெண்டு சிறு குழந்தைகளையும் ஒரு பெரிய குழந்தையையும் சமாளிச்சு...முடிச்சு...இப்ப ஒரு பெரிய குழந்தையாயிருக்கிறேன்.
//
பெரிய குழந்தையானதுக்கு வாழ்த்துக்கள் நானானி. ;-)
//
கிட்டத்தட்ட இதே அனுபவங்கள் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். அதிலும் பெரிய குழந்தையை சமாளிப்பது இருக்கிறதே...ர்ர்ர்ர்ரொம்பப் பொறுமை வேணும்.//
அது என்னமோங்க... நம்ம குழந்தைகள்ட்ட இருக்குற பொறுமை நம்ம பெற்றோரிடமோ, மாமனார் மாமியாரிடமோ இருக்குறதில்ல. அதுக்கு நம் மனப் பக்குவமின்மை தான் காரணமின்னு நினைக்கிறேன்.
//மங்கை said...
அருமை ராசாத்தி...
உன்னை போய் மண்டபத்துலே அது இதுன்னு சொல்றாங்களே.,,
இதுல நமக்கு அது புரிய வேற இல்லையாம்... ரெண்டு பேர் அதுக்கு விளக்கம் வேற குடுத்து இருக்காங்க..
:-)))
//
யக்கோவ்... சரியான் இடத்தில தான் இந்த பின்னோட்டமா? ஒன்னுமே பிரியலைங்க.
//மங்கை said...
அருமை ராசாத்தி...
உன்னை போய் மண்டபத்துலே அது இதுன்னு சொல்றாங்களே.,,
இதுல நமக்கு அது புரிய வேற இல்லையாம்... ரெண்டு பேர் அதுக்கு விளக்கம் வேற குடுத்து இருக்காங்க..
:-)))
//
யக்கோவ்... சரியான் இடத்தில தான் இந்த பின்னோட்டமா? ஒன்னுமே பிரியலைங்க.
//கோபிநாத் said...
யக்கோவ்..
எப்படிக்கா இப்படி எல்லாம் வித்தியாசமாக எழுதுறிங்க...சும்மா வயசை எல்லாம் புட்டுபுட்டு வெச்சி கலக்கிட்டிங்க ;-))
//
கலாய்க்காதீங்க தம்பி கோபிநாத்து.
//தஞ்சாவூரான் said...
காட்டாறுனு பேர் வச்சுக்கிட்டு, அமைதியான ஓடைபோல் எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.
வயதானவர்கள் சொல்லுவதைக் காது கொடுத்து கேட்டாலே அவர்களுக்கு அப்படி ஒரு சந்தோசம் வருவதைப் பார்த்திருக்கிறேன்!
//
வாங்க தஞ்சாவூர்காரரே.... முதல் முறையா வந்திருக்கீங்க. வாங்க.
வாழ்த்துக்களுக்கு நன்றி!
உண்மை தான் சாரே நீங்க சொல்லுறது. அந்த வயசுல அவங்களுக்கு தேவையானது நம்ம காது தான். ;-) ஒரு ம் கொட்டி கேட்டுட்டு இருந்தால் போதும். சந்தோஷமா சொன்ன கதையையே திரும்ப திரும்ப சொல்லுவாங்க.
///யக்கோவ்... சரியான் இடத்தில தான் இந்த பின்னோட்டமா? ஒன்னுமே பிரியலைங்க. ////
சரியான இடம் தான்....உன்னோட போன பதிவுல திருவிளையாடல் நாம பார்க்கலையோன்னு விளக்கம் வந்துச்சு இல்ல...:-))).. அது நியாபகம் வந்தி சொன்னேன்..அவ்வளவே...
kaattaaRu,
a very good analysis.
people become old after experiencing all the ups and downs of their lifes.
and to be understood or misunderstood by their own children do happen.
and new bridegrooms or brides who come into the family shd take time to figure out the possible goodness in them.
sameway, if the old people(me,me,me):))
just stop for a moment and be considerate to the younger generation maybe, just maybe...there will not be neccessity for old age homes.
But that is a BIG maybe.
you have done a marvellous piece. thank you.
love to your mom.
உங்களின் இந்தப் பதிவு இன்றைய உலகில் பல இடங்களில் நடக்கும் நிகழ்வுகள்.
நீங்கள் சொன்னது ஒருவகையான தீர்வும் கூட. இன்றைக்கு பல பேர் பெற்றோரை விட்டு வெளி நாட்டிற்கும் வெளி மாநிலத்திற்கும் செல்வதே கூட ஒருவகையான 'முதியோர் இல்லம்'தான். இதை காலக்கொடுமை என்று சொல்வதா? விதி என்று நொந்து கொள்வதா? நம் மனதால் வரும் பிரச்சனையை வந்தவளால் வரும் பிரச்சனை என்று கொள்வதும் கூடாது. இருப்பவர்களால் என்று கொள்வதும் கூடாது. எல்லாவற்றிர்கும் 'பொறுமை' அவசியம்.
தனக்குன்னு கிடைக்கற திண்பண்டம் எல்லாம் தலையணைக்கடியில் ஒளித்து வைத்து சாப்பிடுவது எப்படா வெளிய கூட்டிட்டு போவங்கன்னு காத்திருக்கறது இப்படி நிறைய இருக்கும்பா...காட்டாறு...
நல்லா இருக்கு பதிவு ...கலக்கலா ஆராய்ச்சி செய்து போட்டாச்சு போல.. :)
அட! இந்த பதிவை எப்படி படிக்காமல் விட்டேன்?
அட்டகாசமாக சொல்லியிருக்கீங்க,அதுவும் அந்த கடைசிப் பத்தி... சூப்பர்.
பின்னூட்டம் அல்ல
நலமாகத்தான் இருக்கேன்.
விஜாரித்ததற்கு மிக்க நன்றி
Post a Comment