Saturday, September 08, 2007

கலர் பார்க்க வாரீகளா?

செப்டம்பர் போட்டி வச்சாச்சி.... கடைசி நாளும் வந்தாச்சி... காட்டாறு நானும் ஜோதியில ஐக்கியமாயாச்சி

இதோ போட்டி லிங்க்: http://photography-in-tamil.blogspot.com/2007/08/pit_30.html



வண்ண வண்ண விளையாட்டு விளையடலாம் வாங்க. புள்ளைங்க விடுமுறைல இருந்தப்போ... வா வான்னு அழைத்து... நானும் போனா.... நம்ம சைஸுக்கு..... ச்ச்ச்ச்ச்சச... இந்த பழம் புளிக்குமின்னு சுட்டுத் தள்ளிட்டு வந்திட்டேன்.




நயகரா நீர்வீழ்ச்சி.... 30 மாடி கட்டிடத்தில் இருந்து பார்த்தால், அப்படியே மெர்குரியை கொட்டிப் போட்டாற் போல் இருந்தது. சரி... புகைப் படம் எடுத்தால் எப்படியிருக்கும் எனப் பேராவல் எழ.... கிளிக்கினால்... அப்படியே... என் கண்கள் கண்ட காட்சியே... அசந்துட்டேன். வண்ணமயமாக தெரியாவிட்டாலும், போட்டிக்கு இது தான் அனுப்பவேண்டும் என மனம் ஆர்ப்பரிக்க.... இதோ உங்கள் முன்..


எனக்குப் பிடித்த சில:
கிறிஸ்தவ கோயில்களில் இது போல் கண்ணாடி பெயிண்டிங் ரொம்ப அழகா இருக்கும். எனக்கு இது மாதிரி புகைப் படம் எடுக்க ரொம்ப ஆசை. நெறையா கைவசம் இருக்குது. இது ச்சும்மா என் ஆசைக்கு.


பரிசா இதைத் தருவாங்களா? நிஜமான கார். கிறிஸ்மஸ் திருவிழா சிறப்பா கொண்டாடுவாங்க மேலை நாடுகளில். இம்முறை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது இந்த wrapping செய்யப்பட்ட சிவப்பு கார்.

19 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

யக்கோவ்...2வது படம் சூப்பர் :)

வர வர படம் மட்டும் தான் காட்டுறிங்க...ம்

வாழ்த்துக்கள்!

said...

எனக்கென்னவோ,முதல் படம் தான் பிடித்திருக்கிறது.அதில் தான் கலர் பளிச்.

said...

andha church padam, straightaa eduththirundhaa superaa irundhirukkum :)

said...

நல்லா இருக்குங்க...

2, 4 படங்களை பெரிசு பண்ணி பாக்க முடியல.....

உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

said...

எல்லா படமும் சூப்பர்!!!

said...

சர்ச் புகைப்படம் தான் எனக்கு பிடிச்சது... காட்டாறு ..கலக்குங்க

said...

karthare kaattaRRukku mattum ippadi colourfull aa padam edikka vaaypukkudikkariyee !lol! church is my favo!

said...

அந்த நயாகரா படம் பிரமிப்பா இருக்கு. அம்புட்டு உயரத்துலேர்ந்து பார்த்தாக்க, பயமாயிருக்காதா..

Anonymous said...

நாங்கூட...கலர்னு படிச்சவுடனே..என்னமோ ஏதோன்னு ஓடி வந்தா...ஹி..ஹி...

ஏமாத்தீட்டீகளே....

நல்லாவே படங்காட்றீங்க....வாழ்த்துக்கள்....

said...

முதல் படம் சூப்பர், ஆமா கோபி சொன்ன மாதிரி கவிதை எழுதி ரொம்ப நாளாச்சே ஏன், சீக்கிரம் எழுதுங்க குடும்பத்தோட வந்து விருந்து சாப்பிட்டு நாளாச்சு:-))

said...

எனக்கு முதலும் கடைசியும்.... கடைசியில கலர் ரொம்ப நல்லா இருக்குமா

said...

வந்த சனங்களுக்கு நன்றிங்கோவ்! வாழ்த்துக்கும் தான்.

said...

//நாகை சிவா said...
நல்லா இருக்குங்க...

2, 4 படங்களை பெரிசு பண்ணி பாக்க முடியல.....
//
ஏன்னு தெரியலயே. எனக்கும் பெரிசு பண்ணி பார்க்க முடியல. ஸ்க்ரீன் நிறைய பார்த்தப்போ இன்னும் அழகா இருந்துச்சி. :(

said...

//SurveySan said...
andha church padam, straightaa eduththirundhaa superaa irundhirukkum :)
//
அந்த சர்ச்சே முக்கோண வடிவத்தில் அமைக்கப் பட்டிருந்தது. இதுதான் straight-ங்கோவ்.

said...

//OSAI Chella said...
karthare kaattaRRukku mattum ippadi colourfull aa padam edikka vaaypukkudikkariyee
//
நக்கலு...

said...

//ஆழியூரான். said...
அந்த நயாகரா படம் பிரமிப்பா இருக்கு. அம்புட்டு உயரத்துலேர்ந்து பார்த்தாக்க, பயமாயிருக்காதா..
//

என்ன சாமீ இப்படி சொல்லிட்டீங்க... சுத்தி இருந்த கண்ணாடி தான் நல்லா திக்கா இருந்ததே. ரொம்ப அழகா இருந்தது.

said...

//அபி அப்பா said...
முதல் படம் சூப்பர், ஆமா கோபி சொன்ன மாதிரி கவிதை எழுதி ரொம்ப நாளாச்சே ஏன், சீக்கிரம் எழுதுங்க குடும்பத்தோட வந்து விருந்து சாப்பிட்டு நாளாச்சு:-))
//

அபி அப்பா...கவிதை வேணுமா... இல்ல கும்மிக்கு பதிவு வேணுமான்னு வெவரமா சொன்னீங்கன்னா... ஏற்பாடு பண்ணிருவோமில்ல.. உங்க பாசக்கார குடும்பத்துக்கு இல்லாததா. ;-)

said...

எல்லா படங்களும் அருமை!

ஆனா...இதைவிட அருமையான படங்களும் எடுத்திருக்கீங்களே.... அதலாம் அடுத்து எதிர்பார்க்கலாமா...?!!!

said...

என்னைப் போன்ற சின்னப்பசங்களை "கவர்ச்சிகரமான " தலைப்பை போட்டு ஏமாற்றுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.