அஞ்சு வெரலும் ஒன்னாவா இருக்கு
இன்னக்கி பாருங்க.... 25 பேரு சேர்ந்து வெட்டியா ஒரு அறைக்குள்ள நின்றும், நடந்தும், உட்கார்ந்தும் கேள்வியும் பதிலுமா(இதெல்லாம் சும்மா) பேசிட்டு இருக்காங்க. கேட்டா மூளையை உபயோகிக்க சரியான நேரம் இது தான். ஒரு பிரச்சனைக்கு தீர்வு உட்கார்ந்து பேசி தீர்மானிக்கிறதாம். சரி….. ஏதோ செய்துட்டு போகட்டும். நாம மோட்டுவளைய பார்த்துட்டு உட்கார்ந்திருப்போமின்னு கலந்து கிட்டா… மோட்டுவளைய பார்க்கக் கூடாதுன்னு சட்டமின்னு சொல்லிட்டாங்க. அப்புறம் என்ன செய்ய.. கையைப் பார்த்துட்டு உட்கார்ந்திருந்த வேளை… ஒரு அறிவு ஜீவி சொல்லுறாரு… எல்லாமே ஒரு காரணத்தோட தான் இருக்கும். காரணம் இல்லாது காரியம் இல்லைன்னு. அடடா... தத்துவம்... தத்துவம்...
அவ்வளவு நேரம் சும்மா இருந்த சிறு மூளை படக்குனு விழித்தெழுந்துட்டார். பெரு மூளையைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாரு பாருங்க. தூங்கிட்டு இருந்த பெரு மூளைக்கு ஒன்னும் புரியல. நம்மகிட்டேயே கேள்வியான்னு திரு திருன்னு பேய் முழி முழிக்கிறாரு. கேள்வி இது தாங்க. எதுக்காக விரல்கள் ஒவ்வொன்றும் ஒரு ஒரு சைஸ்ல இருக்குது? அதுக்கு என்ன காரணம் இருக்க முடியுமின்னு. சபாஷ் சரியான கேள்வி. ஆனா பதில்… நீங்க தாங்க நமக்கு விளக்கனும். இந்த அஞ்சி விரல் கதையை எத்தனை முறை கேட்டிருக்கோம்…. நாமே எத்தனை முறை சொல்லியிருக்கோம். அப்போல்லாம் தோனாத கேள்வி.. இன்னக்கி… தேவையா? கொஞ்ச நேரம் நானும் மூளைய சொரண்டி பார்த்தேன். அவங்கள திடீருன்னு வேலை செய்ய சொன்னா.... எப்படி செய்வாங்க… சொல்லுங்க.
நானும் கொஞ்சம் முயற்சி செய்துட்டு உங்க கிட்ட வரமின்னு......சரி… நமக்கு தெரியலைன்னா….. உடனே நம்ம குரு… ஞானி… இருக்கவே இருக்காருன்னு… 12 வயசிடம் கேட்டா… அவங்க ஒரு லுக்கு விட்டாங்களே பார்க்கனும். உனக்கு எங்கிட்ட கேள்வி கேக்குறதே வேலையாப் போச்சின்னு என்ற மாதிரி. எப்பவும் கேள்வியோட அவங்களை சந்திச்சா... பின்ன இது தானே கதி.... அவங்க உடனே அறிவி ஜீவியா… கூகிள்ல தேடினியா… அது செய்தியா.. இது செய்தியான்னு… நானோ… எனக்கு கேட்க மட்டும் தான் தெரியுங்க… நீங்க தான் பதில் எனக்கு சொல்லனுமின்னு அடம் பிடிக்க… அப்புறம் வான்னு துரத்திட்டாங்க. அவங்க அப்பாட்ட முறையிட்டா…. உன் பாடு… அவள் பாடுன்னு சொல்லிட்டு மனுஷன் எஸ்கேப்.
சரி…போன்னு விட முடியாம… ஆருயிருக்கு போன் செய்தா… கேள்வியைக் கேட்டதும்… சரிம்மா.. வீட்டுக்கு வந்ததும் பாத்திரம் கழுவித் தாரேன். அப்புறம் அந்த அறைய சுத்தம் செய்ய சொன்னியே… அதையும் செய்துறலாமின்னு சம்பந்தமில்லாம பேசுறாங்க. இது வேலைக்கு ஆகாதுன்னு நான் எஸ்கேப்.
அடுத்தது யாரிடம் கேட்பதுன்னு தெரியல… கண்முன்னாடி தெய்வம் வந்து நிக்குது. அன்னையேன்னு சரணடைஞ்றலாமின்னு கேள்வியைக் கேட்டா… அவங்க….. ஒன்னோட குசும்புக்கு அளவே இல்லாம போச்சின்னு ஒரு இடி இடிச்சிட்டு ஓடிப் போய்ட்டாங்க.
நமக்கு மண்டைக்குள்ள உள்ள குடைச்சல் நின்னாத்தானே….. உடனே ஆபத்பாந்தவனா நினைவுக்கு வந்தது நம்ம தமிழ் மண தெய்வங்கள் தான். கேள்வியை கேட்டுட்டேனப்பா… என்ன காரணத்துக்கு நம் ஐந்து விரல்களும் வெவ்வேறு அளவுல இருக்குது. பதில் சொல்லிப் போடுங்கய்யா. சரியா… என் சிற்றறிவுக்கு எட்டுற மாதிரி பதில் சொன்னீங்கன்னா…. உங்களுக்கு நம்ம பங்காளி வச்சிருக்கிற கோப்பை நிச்சயமாக பரிசாக உண்டு... உண்டு… உண்டு.
பின்குறிப்பு: (பங்காளிக்கு மட்டும்)
பங்காளி… அய்யா… ராசாத்தீ…. கால வாரிப் புடாதீக. இன்னும் கப்பு வச்சிருக்கீகல்ல. உங்களை நம்பி வாக்கு கொடுத்துட்டேன். பார்த்துக்கோங்கப்பா.
பின் வந்த பின்குறிப்பு: (வடுவூர் குமாருக்கு மட்டும்)
பங்காளி அய்யா கால வாரிட்டாகன்னா.. நீங்க பெளவுலிங் போட்டியில வாங்கின கப்பை வச்சி தனியா இருந்து என்ன செய்யப் போறீங்க.... நம்ம தமிழ் மண அறிவு கடலுக்கு பரிசா கொடுத்துருங்க. ஹி ஹி ஹி.
32 பேர் மறுமொழிந்துள்ளனர்:
கண்ணம்மா..
நீ கேள்வி கேக்குறதில கில்லாடின்னு ஒருத்தர் சொன்னாரும் சொன்னார்..அதுக்காக இப்ப்ப்ப்ப்படியா
சரி நானும் முயற்சி செய்யறேன்..பாப்போம்..
ஒரே அளவுல இருந்தா பிடிமானம் இருக்காது, இப்படி இருந்தா தான் உபயோகிப்பதற்கு இளகுவா இருக்கும்னு கேள்விப்பட்டுறுக்கேன்..
அறிவாளி பட வசனம் நியாபகம் வருதாக்கும்...
//எதுக்காக விரல்கள் ஒவ்வொன்றும் ஒரு ஒரு சைஸ்ல இருக்குது? அதுக்கு என்ன காரணம் இருக்க முடியுமின்னு.//
கட்டை விரல், மோதிர விரல், சுட்டு விரல், சுண்டு விரல்ன்னு அப்போதான் ஒண்ணொண்ணையும் அடையாளப்படுத்தறதுக்கு வசதியா இருக்கும்ன்னு....
என் பெருமை(?)யை இப்படி தமிழ்கூறும் நல்லுலகம் பூரா பரப்பீடறதுன்னு ஒரு முடிவோடதான் இருக்கீக போல....
சரி இனி பதிவுக்கு வருவம்...
புத்தர் என்ன சொல்றார்னா...
"நான் என்பது ஒரு தவறு, ஒரு மயக்கம், ஒரு கணவு...கண்களை திறந்து விழித்து எழுங்கள்.விஷயங்களை உள்ளபடியே பாருங்கள்..உங்களுக்கு சாந்தி ஏற்படும்"
ஒன்னும் புரியலைல...உங்க பதிவ படிச்சவுடனே எனக்கும் அப்படித்தான் இருந்துச்சி....ஹி..ஹி..எதுக்கும் நான் இன்னொரு தடவ படிச்சிட்டு வந்துர்றேன்...ஹி..ஹி...
ஆத்தா செல்லம் நீயே பதில சொல்லிடு கப்பு வேனா என் செலவுல வாங்கித் தாரேன்.
பொருள்களை இலகுவாக எடுப்பதற்கு. சுருங்கச்சொன்னா வேலைகளை இலகுவாக செய்வதற்கு.
thlaiyai suththutheee!!!!!! nach, nach nach, athu nan suvathile thalaiyai mukkikira saththam! :P
அப்படி இல்லைன்னா ஒரு கையில் எல்லா விரலும் ஒண்ணாவா இருக்கு என்ற பழமொழி வந்திருக்குமா? அதுக்காகத்தான்.
வர்ட்டா!
யக்கோவ்...நாங்க எல்லாம் யாரு உங்க தம்பிகள் ஆச்சே...எங்களை பார்த்து இப்படி ஒரு கேள்வியை கேட்டு புட்டிங்களே...இதை நான் எங்க போயி சொல்லுவேன்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//மங்கை said...
கண்ணம்மா..
நீ கேள்வி கேக்குறதில கில்லாடின்னு ஒருத்தர் சொன்னாரும் சொன்னார்..அதுக்காக இப்ப்ப்ப்ப்படியா
//
தாயீ.. நமக்கு கேக்கத்தானே தெரியும். உண்மையச் சொல்லிப் போடுவோமில்ல....
//ஒரே அளவுல இருந்தா பிடிமானம் இருக்காது, இப்படி இருந்தா தான் உபயோகிப்பதற்கு இளகுவா இருக்கும்னு கேள்விப்பட்டுறுக்கேன்..
//
இப்பிடித்தான் இடக்கு மடக்கா சொல்லுவீங்கன்னு தெரியுமில்ல...கைல மட்டைய கட்டிட்டு கைப்பைய தூக்கிப் பார்த்தேன். நெசமாத்தான்... அதெல்லாம் ஜோரா பிடிமானம் இருக்குதாக்கும்
//Voice on Wings said...
கட்டை விரல், மோதிர விரல், சுட்டு விரல், சுண்டு விரல்ன்னு அப்போதான் ஒண்ணொண்ணையும் அடையாளப்படுத்தறதுக்கு வசதியா இருக்கும்ன்னு....
//
இப்போ சொன்னீங்களே இது பாயிண்ட்... அடையாளப் படுத்திட்டு? அப்புறம்?
:(
//பங்காளி... said...
என் பெருமை(?)யை இப்படி தமிழ்கூறும் நல்லுலகம் பூரா பரப்பீடறதுன்னு ஒரு முடிவோடதான் இருக்கீக போல....
//
பங்காளி பெருமையை எப்பவும் சொல்லிட்டே இருக்கனுமின்னு இப்போ தான் சன் டீவில தமிழ் படத்துல பார்த்தேனுங்க... நீங்க பங்காளி தானே... அதேன்.
(ஏன் டா இந்த பேரை தேர்ந்தெடுத்தோமின்னு இல்லையே)
//பங்காளி... said...
ஒன்னும் புரியலைல...உங்க பதிவ படிச்சவுடனே எனக்கும் அப்படித்தான் இருந்துச்சி....ஹி..ஹி..எதுக்கும் நான் இன்னொரு தடவ படிச்சிட்டு வந்துர்றேன்...ஹி..ஹி...
//
நீங்களுமா....எஸ்கேப்பா.... நல்லாயிரு ராசாத்தி.
//கண்மணி said...
ஆத்தா செல்லம் நீயே பதில சொல்லிடு கப்பு வேனா என் செலவுல வாங்கித் தாரேன்.
//
யக்கோவ்... என்ன செய்ய தாயீ... எனக்கு கேள்வி மட்டும் தானே கேட்கத் தெரியும். :(
மக்க மாகான்கள் சொன்னா... உங்களுக்கும் கண்டிப்பா சொல்லுறேன். கப்பு தருவீங்கல்ல...
//நளாயினி said...
பொருள்களை இலகுவாக எடுப்பதற்கு. சுருங்கச்சொன்னா வேலைகளை இலகுவாக செய்வதற்கு.
//
:( நல்லா புரிஞ்சிது. :(
//கீதா சாம்பசிவம் said...
thlaiyai suththutheee!!!!!! nach, nach nach, athu nan suvathile thalaiyai mukkikira saththam! :P
//
ஆத்தீ.. இந்த அடி அடிக்கிறீக... நம்மூட்டாண்ட வரை கேட்டிச்சி... அடிச்சதுக்கு அப்புறமாவாவது பதில் தெரிஞ்சிதா? :(
//இலவசக்கொத்தனார் said...
அப்படி இல்லைன்னா ஒரு கையில் எல்லா விரலும் ஒண்ணாவா இருக்கு என்ற பழமொழி வந்திருக்குமா? அதுக்காகத்தான்.
//
இது... சரியா சொன்னீங்க.... ஆனாலும் உதைக்குதே... பழமொழிக்காக கைவிரலை இப்பிடி படைத்திருக்கலாம்... அப்போ கால் விரல்? :(
கேள்வியை அப்படியே விரிவுப்படுத்தினா, 'ஏன் ஒரே ஒரு நாக்கு இருக்கு. நாம ஏன் காலால நடந்துபோறோம். ஏன் ரெண்டு காதும ஒரே சைஸுல இருக்கு..?' இப்படி நிறையக் கேக்கலாம். பதில் தெரிஞ்சா எனக்கும் சொல்லுங்க.:)
கிளம்பீட்டாங்கய்யா... கிளம்பீட்டாங்க...
இறைவன்(நம்பிக்கை இருந்தால்) அல்லது இயற்கையின் படைப்பு இது... கேள்வி கேட்காம அனுபவிக்கனும்...
இப்ப கை விரல கேட்பீங்க... அப்புறம் கால் விரல் அப்புறம் ஏன் இரண்டு காது தான் இருக்குனு... கேள்விகள் தான் பிறக்குமே தவிர பதில் கிடைக்காது.. கிடைத்தாலும் அனைவரும் ஏத்துக் கொள்ளும்படியும் இருக்காது...
எல்லா விரல்களும் ஒரே அளவில் இருந்தா ஒவ்வொரு விரலுக்கும் எப்படி பேர் வைப்பது? ஆள் காட்டி விரல், சுண்டு விரல், மோதிர விரல், கட்டை விரல், நடு விரல்.
உங்க பதிவப்பார்த்துட்டு தல கலங்கிடுச்சு அதான் கொஞ்சம் உளறிட்டேன்.. :-)
இன்னும் இந்த வெள்ளாட்டு முடியலையா....
ஆக ஒருத்தருக்கும் பதில் தெரியல...இப்பவும் நாந்தான் பதில் சொல்லியாகனுமா...சரி சொல்றேன் கவனமா கேட்டுக்கங்க...
பிரபஞ்சத்தின் சூன்யத்திலிருந்து வெடித்துக் கிளம்பும் ஒற்றை கதிரின் தாக்கத்தை வகிடெடுத்து நேர்கோட்டில் விரவினால் பெருகும் ஆளுமையின் அடக்கவொனா சிதறல்களை உள் வாங்க முடியாமல்...தொப்ப்ப்ப்ப்...
(ஹைய்யோ பங்காளி மயக்கம்போட்டு கீழ விழுந்துட்டான் யாராவது ஓடிவாங்க....)
கையை மூடும்போது விரல்கள் அனைத்தும் ஒரே கோட்டில் சந்திப்பதற்காகத்தான். ஆனால்
உண்மையில் வலது கையின் பின்புறம்
பார்க்கும் போது 'அல்லாஹ்' என்ற
அரபிப் பதம் தெரிய வரும்.
-அப்துல்லாஹ்
என்னாச்சு உடம்புக்கு சரியில்லையா? நல்லா ரெஸ்ட் எடுங்க சரியாகிடும். தனியா இருக்காதீங்க, டிவி பாருங்க, போன்ல யார்கிட்டயாவது பேசிகிட்டு இருங்க, நாங்க இருக்கோம், எதுக்கும் பயப்படாதீங்க!!சீக்கிரம் குணமடைய கோபி நாக்குல அலகு குத்திபதா வேண்டிக்கரேன்!
மரத்தின் கிளைகளுக்கு இடயே தவி செல்லும் குரங்குகளுக்கு நல்ல பிடிமானம் ஏற்ப்டவே இவ்வாறாக வித்தியாசம் வந்தது. நம்முடைய கட்டை விரலில் ஒரே மூட்டும் (joint)மற்ற நான்கு விரல்களில் இரண்டு மூட்டும் இருப்பது நான்கு விரல்களை பொருட்களுக்கு ஏற்ரமாதிரி வளைத்து நல்ல பிடிமானத்துடன் பிடிக்கவே. இதில் சில பெண்களுக்கு மோதிர விரலுக்கும் சுட்டும் விரலுக்கும் அதிக உயர வேறுபாடு இல்லாமலும், ஆண்களுக்கு வேறுபாட்டுடனும் இருக்கும். இதற்கு அவரவர் ஹார்மோன் (ஈஸ்ட்ரஜன், டெஸ்டோஸ்டீரோன்) அளவு காரணம். ஒரு பழத்தை பிடிப்பதற்கும் பென்சிலை [இடிக்கும் பொதும் இந்த மூட்டுகள் வளைந்து கொடுப்பதை பார்க்கலாம். இந்த http://instruct1.cit.cornell.edu/courses/biog105/pages/demos/106/unit08/8a.primates.html இணையதளத்தில் மற்ற உரினங்களின் விரல் அளவை மற்ற மூட்டுகளை பற்றியும் சொல்லி இருப்பதை காணலாம்.
காட்டாறு, நல்ல கேள்வி.
எப்படித்தான் இப்படி அறிவு கூர்மையாகக் கேக்க முடியுதோ:)0)
நன்றி பத்மா.
கேள்வி கேட்டதினால நல்ல பதில் கிடைத்து இருக்கு.
abi appa repeateeeeeee
aathaa gv the answer soon
kanmani
புதுசா ஒண்ணும் எளுதலயாக்கும்...!
இந்த மாயாவி யாரோ.... நீங்க அவர் இல்லையா..
ஹி...ஹி...நான் அவனில்லை
நான் அவனில்லைன்னு சொல்லி கன்பர்ம் பண்ணதுக்கு நன்றி மாயாவி
:-)))))
அடுக்கடுக்கா இறங்கிவந்தாத்தான் மோதிரங்கள் போடும்போது பார்க்க அழகா இருக்கும்.
ச்சுண்டுவிரல் மோதிரமும் வந்துருக்கு இங்கே. பிங்கின்னு பேர்.
கட்டைவிரலுக்குத்தான் ஒண்ணு வாங்கிக்கணும்:-))))
Post a Comment