Friday, November 09, 2007

மீண்டும் மீண்டும் வா....

வெள்ளை நிற… மாளிகை போல் உள்ள சுண்ணாம்பு அடிச்ச கல் கட்டிடம். ஒரு கார் சர்ருன்னு வேகமா வந்து, அநாயசமா வளைவுல திரும்பி, சட்டுனு ப்ரேக் போட்டு, கல் வீட்டு வாசல் முன்னாடி வந்து நிக்குது. அதிலிருந்து காட்டாறு போல் விருட்டுனு இறங்கின ஆளு, இறுகிய முகத்தோட வாசலையே முறைச்சி முறைச்சிப் பார்த்துட்டு நிக்கிறாரு. மனசை தேத்திக்கிட்டு, மெதுவா வாயினருகிலே போய், சாவி கொடுத்து வீட்டைத் திறக்கிறார். திறந்து பார்த்தால் தூசும், தும்புமாய், ஒட்டடையும் வவ்வாலின் இருப்பிடமுமாய், பார்க்கவே ரொம்ப பயங்கரமாய் இருக்குது……. இறுக்கமான முகத்துடன், வரும் தும்மலை கட்டுப் படுத்திக் கொண்டு, தன்னையே நொந்தவராய், மோவாயை தடவியவாறு யோசனையில் ஆழ்கிறார்.

பின்னர் மள மளன்னு, தூசு தட்டி, மெருகேத்தி வைக்க ஆரம்பமாய், மீண்டும் ஒரு முறை வலம் வர ஆயுத்தமாகிறார். வேறு ஒன்னுமில்லிங்கோவ்… அதிகமா சன் டீவி பார்த்ததால மட்டுமில்ல… அதிலே வரும் நாடகங்களை வீட்டுப் பெரியவங்க கூட கம்பெனி கொடுக்குறேன் பேர்வழின்னு கூட உட்ககர்ந்து பார்த்ததால் வந்த விளைவு தானுங்கோவ்! ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளா (மாதங்களா) தமிழ்மணம் பக்கம் வராம இருந்துட்டு, என்னோட பதிவு பக்கம் போனாலே, ஏதோ புதுசா ஒரு இடத்துக்கு வந்த மாதிரி இருக்குதுங்க. என்னத்த கிறுக்குனோம் இவ்ளோ நாளான்னு பாத்தா…. ஒன்னுமே புரியல…. மண்டைக்குள்ள இருந்து எல்லாம் தூசு தட்டு எடுக்க வேண்டியிருக்குது… கொஞ்சம் டடம் வேணும் அதுக்கு. அதுக்கு முன்னனல....சரி ஒரு வணக்கத்துடன் திரும்பவும் ஆரம்பிக்கலாமின்னு… வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பிச்சிருக்கிறேன்…. இனியும் வீட்டை மூடிட்டு, ஓடிப்போகாம ஒழுங்கா இருக்கிறேனான்னு பார்க்கலாம். வணக்கமுங்க வணக்கமுங்க வணக்கமுங்க.

22 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

ஹைய்யா நான் தான் பஸ்ட்டு :))

இருங்க பதிவை படிச்சிட்டு வரேன்!

said...

யப்பா கும்மி அடிச்சி எவ்வளவு நாள் ஆச்சு பாசக்கார மக்கா ஓடியாங்க..ஓடியாங்க காணமால் போன காட்டாறு அக்கா கிடைச்சுட்டாங்க :))

said...

\\இனியும் வீட்டை மூடிட்டு, ஓடிப்போகாம ஒழுங்கா இருக்கிறேனான்னு பார்க்கலாம். வணக்கமுங்க வணக்கமுங்க வணக்கமுங்க.
\\

வாங்க வாங்க...கவிதை, கதைன்னு கலக்குங்க :))


\\கொஞ்சம் டடம் வேணும் அதுக்கு. \\

ஆமா அது என்ன டடம்? பிரியலியே! :)

said...

//பின்னர் மள மளன்னு, தூசு தட்டி, மெருகேத்தி வைக்க ஆரம்பமாய், மீண்டும் ஒரு முறை வலம் வர ஆயுத்தமாகிறார். வேறு ஒன்னுமில்லிங்கோவ்…அதிகமா சன் டீவி பார்த்ததால //

இதமட்டுமே அரைமணிநேரம் காட்டி ...'தொடரும்'னு போட்டிருப்பாங்களே.. ;)


//சரி ஒரு வணக்கத்துடன் திரும்பவும் ஆரம்பிக்கலாமின்னு… வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பிச்சிருக்கிறேன்…. //

அது...! வாங்க வாங்க!

ஆனா போன பதிவு மாதிரி ரொம்ப யோசிக்கிறவைக்கிற மாதிரிலாம் எழுதகூடாது... சரியா??

said...

//கோபிநாத் ...
யப்பா கும்மி அடிச்சி எவ்வளவு நாள் ஆச்சு பாசக்கார மக்கா ஓடியாங்க
//

ஆ...ஹா... தீபாவளிக்கு இங்கதான் சரவெடியா? அதுசரி...!!

கலக்குங்க கோபி...& Co!

said...

\\தென்றல் said...
//கோபிநாத் ...
யப்பா கும்மி அடிச்சி எவ்வளவு நாள் ஆச்சு பாசக்கார மக்கா ஓடியாங்க
//

ஆ...ஹா... தீபாவளிக்கு இங்கதான் சரவெடியா? அதுசரி...!!

கலக்குங்க கோபி...& Co!\\

அட கலக்குங்கன்னு சொல்லிட்டு நீங்க எஸ்கேப் ஆனா எப்படி வாங்க தென்றல் ;))

said...

//அட கலக்குங்கன்னு சொல்லிட்டு நீங்க எஸ்கேப் ஆனா எப்படி வாங்க தென்றல் ;))
//

ha..ha..நம்ம பாசக்கார மக்கள் 'level'க்கு எனக்கு அனுபவம் கிடையாதே...கோபி!!

கூட்டத்தில ஒரு ஓரமா இருந்துனா....

said...

\\தென்றல் said...
//அட கலக்குங்கன்னு சொல்லிட்டு நீங்க எஸ்கேப் ஆனா எப்படி வாங்க தென்றல் ;))
//

ha..ha..நம்ம பாசக்கார மக்கள் 'level'க்கு எனக்கு அனுபவம் கிடையாதே...கோபி!!

கூட்டத்தில ஒரு ஓரமா இருந்துனா....
\\

இருந்துனா? முடியுங்கள் ;)
(புரியுது தல வாங்க அதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் இல்ல)

said...

//மெதுவா வாயினருகிலே போய்//

அதோட வாய் கிட்ட எதுக்குப் போனாரு?

//கொஞ்சம் டடம் வேணும் அதுக்கு//

டயத்தை டடம்னு எழுதின அழகுலயே தெரியுது

(உங்களை ஓட்டி ரொம்ப நாளாச்சு)

said...

என்னங்க தீபாவளிக்கே ஒட்டடை அடிக்கிறேன்ங்கிறீங்க! பொங்கலுக்கு முன்னால தானே அதெல்லாம்!! ;-)

said...

எப்படிங்க இப்படியெல்லாம்....
chance..இல்லை...
கொஞ்சம் ஒவரா..ல்ல இருக்கு

said...

என்னை சுத்தம்வேணும் சுகாதாரம் வேணுமின்னு கிண்ட்ல் பண்ணிட்டு நீங்க இப்படி தூசும் தும்புமா வச்சுக்கலாமா ..க்ளீன் இட்..
அப்பறம்.. பாருங்க எத்தனை தகராறு.. தமிழில்.. இதான் தூசு போல.. :) சீக்கிரம் பதிவு வழக்க்ம்போல போடுங்க.. தமிழ் உலகத்தை கைவிடாதீங்க காட்டாறு.

said...

காணாமல் போனவர்....அப்படீன்னு ஒரு பதிவு போடலாம்னு நெனச்சிட்டு இருந்தேன்...

ஹி..ஹி..கெடுத்துட்டியளே...

கவிதைன்னு ஒன்னு எளுதுவீங்களே...மொதல்ல அதை எளுதறது...

said...

ஆத்தீ... கண்ண மூடி முழிக்கிறதுக்குள்ள.... இத்தனை பதில்களா?

said...

ஐயா கோபிநாத்து ஒரு முடிவோட தான் இருந்திருக்கீங்க.... ஏதோ பாசக்கார கும்பலு தீபாவளி கொண்டாடப் போனதால தப்பிச்சிட்டேன் போல.

தென்றல் அண்ணாச்சி, நியாயமா இது?

said...

//சேதுக்கரசி said...
(உங்களை ஓட்டி ரொம்ப நாளாச்சு)
//
யக்கோவ், ஒரு முடிவோட தான் வந்துருக்கீங்கன்னு சொல்லுங்க.

//சேதுக்கரசி said...
//மெதுவா வாயினருகிலே போய்//
அதோட வாய் கிட்ட எதுக்குப் போனாரு?
//
தமிழ் நாடகத்துல அப்படி இப்படி குற்றங்கள் இருக்கத்தான் செய்யும். கண்டுக்க கூடாதுல்ல.....

said...

//பொன்ஸ்~~Poorna said...
என்னங்க தீபாவளிக்கே ஒட்டடை அடிக்கிறேன்ங்கிறீங்க! பொங்கலுக்கு முன்னால தானே அதெல்லாம்!! ;-)
//

இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சி வந்திருக்கலாமின்னு சொல்ல வர்றீங்களா? ;-) தெளிவா சொல்லுங்க ஆத்தீ... நமக்கு மேல் மண்டையில ஏகப்பட்ட வெற்றிடமுங்கோவ்...

said...

//முத்துலெட்சுமி said...
என்னை சுத்தம்வேணும் சுகாதாரம் வேணுமின்னு கிண்ட்ல் பண்ணிட்டு நீங்க இப்படி தூசும் தும்புமா வச்சுக்கலாமா ..க்ளீன் இட்..
அப்பறம்.. பாருங்க எத்தனை தகராறு.. தமிழில்.. இதான் தூசு போல.. :) சீக்கிரம் பதிவு வழக்க்ம்போல போடுங்க.. தமிழ் உலகத்தை கைவிடாதீங்க காட்டாறு.
//

முத்துலெட்சுமி யக்கோவ்... உங்க காட்டுல மழை. அடிச்சி விளையாடுங்க.

said...

//விமலா said...
எப்படிங்க இப்படியெல்லாம்....
chance..இல்லை...
கொஞ்சம் ஒவரா..ல்ல இருக்கு

//

யக்கோவ்... புச்சா வந்திருக்கீங்க... இப்பிடி ஒட்டடை அடிக்கும் போதா வரணும். :)

வந்ததுக்கு நன்றிங்கோவ். ஓவரா இருக்குறதுக்கு நான் காரணமல்லங்கோவ்... நான் பார்த்த நாடகங்கள் தானுங்கோவ்... (யப்பா.. பழி போட ஒன்னு கெடச்சிப் போச்சி) ஹா ஹா ஹா

said...

//இரண்டாம் சொக்கன்...! said...
காணாமல் போனவர்....அப்படீன்னு ஒரு பதிவு போடலாம்னு நெனச்சிட்டு இருந்தேன்...

ஹி..ஹி..கெடுத்துட்டியளே...
//

இதெல்லாம் ஓவர் புளுகா இருக்குது... ஆமா சொல்லிபுட்டேன்.... நீங்களே மாயாவியாகி, இரண்டாம் இடத்துல ஒரு வழியா செட்டிலாகி.... நீங்க.. நான் காணோமின்னு தேடுனீங்க... நம்புறேன் ராசாத்தீ...நம்புறேன்.

//இரண்டாம் சொக்கன்...! said...
கவிதைன்னு ஒன்னு எளுதுவீங்களே...மொதல்ல அதை எளுதறது...
//

நேயர் விருப்பம் நிறைவேற்றப்படும்.... அதுவும் கவிதைன்னு ஒன்னுன்னு உண்மைய சொன்னதால... கண்டிப்பா உங்களுக்கு ஒரு கவிதை உண்டு.

said...

வாங்க..வாங்க.... மறுபடியும் ஓடுங்க :)

said...

வாங்க வாங்க :)