Monday, November 12, 2007

உன்னுயிர் ஏந்தி

உன்னுயிர் ஏந்தி

மன்னவனே!
உனைத்தானே நம்பியிருந்தேன்
உனையன்றி வேறேதும் அறியேனே
தவிக்க விட்டுச் சென்றாயே
புரிகிறதா என் தவிப்பு

உன்னை என்னிடம் சேர்த்த
படைத்தவனைப் புகழ்வேனா
உன்னை தன்னிடம் சேர்த்த
எடுத்தவனைப் பழிப்பேனா
இல்லை,
என்னைதான் நோகுவேனா

உலகம் என்னைப் பழிக்குமா
சுடு சொல் என் மனம் தாங்குமா
குழந்தையுமாய் என்னைத் தாங்கினாயே
இன்று தாயும் தந்தையும் நானாக்கினாயே

என்ன செய்வேன்
இனி எப்படி வாழ்வேன்
தழுவி வாழ்ந்தவள்
தனித்து வாழ முடியுமா

கலங்கி நிற்கும் நம் செல்லங்களை
கரை சேர்க்க
உன் அன்பையும் சேர்த்துத் தர
அரணாய் நிற்க
என்னால் முடியுமா

வழிகாட்டியாய் வழி நடத்த
உன்போல் அரவணைத்து
அறிவுரைத்து,
தோழனாய் கொண்டாட
என்னால் முடியுமா

என்ன செய்வேன் நான்
என்னுயிர் தான் உன்னில் நீத்ததோ
உன் ஊணுடல் தான் மறைந்ததோ
உன்னுயிர் என் ஊணுடல் கலந்ததோ
புரியாது புரிய வைத்தாயோ

உன்னுயிர் ஏந்தி
உன் கனவு நனவாக
வழி நடத்துவேன் நம் மக்களை
சான்றோன் என கேட்கும் வரை!

சுவாசமாய் தாங்கிய என்னுயிரே
உன் நினைவில் உன்னுடன் வாழ்வேன்
துணையிருப்பாய் என்னுடனே
என் ஊணுடல் மறையும் வரை!
-- காட்டாறு

9 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

;)
கண்ணே காட்டாறு
சோகமே உன் மொழியானதோ
வேதனையே உன் பதிவானதோ
போதும் ஆத்தா
சந்தோஷமாய் ஏதும் எழுது
கவிதைன்னா கண்ணைத்தான் கசக்கனுமா?

Anonymous said...

டீச்சருக்கு ஒரு ரிப்பீட்டேய்!!!

said...

சொக்கரு கேட்டாரா ஒரு கவிதை எழுதுங்கன்னு ஒடனே போட்டாங்கய்யா காட்டாறு.. ம்..
இது யாரோட கதையோ.. பரவாயில்லை யாராவது இடத்துல உங்களை வச்சுயோசிச்சு உடனே அவங்களுக்காக கவிதை எழுதிடறீங்க.. இப்ப நாங்க விவரமுல்ல.. கேக்கமாட்டமே அக்கா என்ன சோகம்ன்னு..

said...

ஆரம்பிச்சிட்டிங்களா...

கவிதை :(

said...

கண்மணியக்கோவ்! வார்த்தைகள் விளையாடுது. ம்ம்ம்... :)

கவிதைன்னா கண்ணை கசக்க வேண்டாம்... அதனால... லொல்ஸ் ஃபாலோஸ்..

said...

ம்ம்ம்.. :( !

said...

//முத்துலெட்சுமி said...
சொக்கரு கேட்டாரா ஒரு கவிதை எழுதுங்கன்னு ஒடனே போட்டாங்கய்யா காட்டாறு..
//

நேயர் விருப்பத்தை நாங்க நெறைவேத்திருவோமில்ல. :)

said...

என்ன ஆச்சு! இவ்வளவு சோகம்!!

said...

கவுஜ... கவுஜ்....

ஜுட்ட்ட்ட்ட்ட்ட்ட்