இயற்கை சிற்பி நீ யாரோ
இயற்கை சிற்பி நீ யாரோ
கொஞ்சும் கிளியும்
பகையின் பருந்தும்
மருண்ட மானும்
வீருகொண்ட சிங்கமும்
மிரட்டலாய் ஒரு சேர உலவவிட்ட நீ யாரோ
கொத்தாய் கனியாட
அதை பறிக்கும் குரங்காட
தலையாட்டி கிளையாட
காற்று வந்து இன்னிசை பாட
கொள்ளை மனதை ஆட்டிவைக்கும் நீ யாரோ
மயக்கும் பச்சை புல்வெளியழகும்
சல சலக்கும் அருவியழகும்
ஒய்யார மலையழகும்
மூங்கில் இசையழகும்
காட்டில் ஒரு சேர தந்த அழகன் நீ யாரோ
பருத்திக் கொட்டை பஞ்சடைக்கி
பழுத்த மாதுளை பவளமடக்கி
உலவும் சிப்பியில் முத்தடக்கி
மானுட நெஞ்சில் ஈரமடக்கி
காட்சி உருவாக்கும் நீ யாரோ
மகத்துவமே மானிட உருவாய்
இயற்கையே என்னுருவாய்
சாதனை காட்டும் கருவாய்
மடிந்து துளிர்க்கும் சருகாய்
நாளும் மாறும் காட்சிதனை தீரஅமைக்கும் நீ யாரோ
கொஞ்சும் கிளியும்
பகையின் பருந்தும்
மருண்ட மானும்
வீருகொண்ட சிங்கமும்
மிரட்டலாய் ஒரு சேர உலவவிட்ட நீ யாரோ
கொத்தாய் கனியாட
அதை பறிக்கும் குரங்காட
தலையாட்டி கிளையாட
காற்று வந்து இன்னிசை பாட
கொள்ளை மனதை ஆட்டிவைக்கும் நீ யாரோ
மயக்கும் பச்சை புல்வெளியழகும்
சல சலக்கும் அருவியழகும்
ஒய்யார மலையழகும்
மூங்கில் இசையழகும்
காட்டில் ஒரு சேர தந்த அழகன் நீ யாரோ
பருத்திக் கொட்டை பஞ்சடைக்கி
பழுத்த மாதுளை பவளமடக்கி
உலவும் சிப்பியில் முத்தடக்கி
மானுட நெஞ்சில் ஈரமடக்கி
காட்சி உருவாக்கும் நீ யாரோ
மகத்துவமே மானிட உருவாய்
இயற்கையே என்னுருவாய்
சாதனை காட்டும் கருவாய்
மடிந்து துளிர்க்கும் சருகாய்
நாளும் மாறும் காட்சிதனை தீரஅமைக்கும் நீ யாரோ
-- காட்டாறு
17 பேர் மறுமொழிந்துள்ளனர்:
\\\கொத்தாய் கனியாட
அதை பறிக்கும் குரங்காட\\\
யாரு?...நானா..சொல்லீறு ஒழுங்கா
//\\கொத்தாய் கனியாட
அதை பறிக்கும் குரங்காட\\\
yo..yaarai solluringanu ennakum theriyanum
///காட்டில் ஒரு சேர தந்த அழகன் நீ யாரோ///
yaarunu neegale sollidunga yakka
//மகத்துவமே மானிட உருவாய்
இயற்கையே என்னுருவாய்
சாதனை காட்டும் கருவாய்
மடிந்து துளிர்க்கும் சருகாய்
நாளும் மாறும் காட்சிதனை தீரஅமைக்கும் நீ யாரோ
//
super lines yakkov.ippothaan yaarunu ennaku puriyuthu :P
இது..இது..இதுதான் காட்டாறுங்கிறது :)
\\பருத்திக் கொட்டை பஞ்சடைக்கி
பழுத்த மாதுளை பவளமடக்கி
உலவும் சிப்பியில் முத்தடக்கி
மானுட நெஞ்சில் ஈரமடக்கி
காட்சி உருவாக்கும் நீ யாரோ\\
அழகான வரிகள்...சூப்பர் கவிதை ;)
நல்ல கவிதை. உரை வீச்சு நன்றாக உள்ளது. காட்டாறுக்கு கண்டிப்பாக அணையோ தடையோ கிடையாது. ஜமாய்ங்க.
//துர்கா|thurgah said...
super lines yakkov.ippothaan yaarunu ennaku puriyuthu :P
//
சின்ன பொண்ணு துர்காவுக்கே புரிஞ்சிட்டதால... யாரை பத்தி சொல்லியிருக்கேன்னு இங்கே சொல்லல... ;-)
சரிம்மா துர்கா.... என் காதிலே மட்டும் சொல்லு... யாரை பத்தி இந்த கவுஜைல இருக்குதுன்னு?
//கோபிநாத் said...
இது..இது..இதுதான் காட்டாறுங்கிறது :)
//
இது!
//வித்யா கலைவாணி said...
நல்ல கவிதை. உரை வீச்சு நன்றாக உள்ளது. காட்டாறுக்கு கண்டிப்பாக அணையோ தடையோ கிடையாது. ஜமாய்ங்க.
//
முத தபா வந்துருக்கீங்க.. வாங்க வரவேற்கிறோம்.
இந்த உரை வீச்சுன்னு என்னவோ சொல்லுறீங்களே தாயீ அதெல்லாம் நமக்கு புரியாத விஷயந்தாயீ...
//மங்கை said...
\\\கொத்தாய் கனியாட
அதை பறிக்கும் குரங்காட\\\
யாரு?...நானா..சொல்லீறு ஒழுங்கா
//
இதெல்லாம் சொல்லிட்டு இருக்க முடியுமா? ;-)
//துர்கா|thurgah said...
//\\கொத்தாய் கனியாட
அதை பறிக்கும் குரங்காட\\\
yo..yaarai solluringanu ennakum theriyanum
//
கண்டிப்பா நான் இல்ல ராசாத்தீ.... ;-)
மறுபடியும் கவுஜு.. ஒரு முடிவோட தான் வந்து இருக்கீங்க போல...
ஆனாலும் நல்லா இருக்கு....
Ipaadi aenga vaikum avar yaaro !
TC
CU
//மங்கை said...
\\\கொத்தாய் கனியாட
அதை பறிக்கும் குரங்காட\\\
யாரு?...நானா..சொல்லீறு ஒழுங்கா//
அக்கா! இது உங்க கமெண்டா...
ஆஹா அக்காவும் ஆரம்பிச்சுட்டாங்களே! :))))
இந்த கவிதையில அழகான நடையும், அதுல அமைஞ்சிருக்கற அல்லது சேந்துருக்கற இசை நயமும் ரொம்ப நல்லாயிருக்கு..
சினிமாக்காரங்க பாஷையில சொன்னா பாட்டாப்பாட அங்கங்க கொஞ்சம் மீட்டர் இடிக்குது :) (இது என் டிஸ்கி: சும்மா சொன்னேன்)
//மகத்துவமே மானிட உருவாய்
இயற்கையே என்னுருவாய்
சாதனை காட்டும் கருவாய்
மடிந்து துளிர்க்கும் சருகாய்//
இந்த வரி உண்மையிலேயே ரொம்ப பிடிச்சிருக்குது.. ஆனா இத விடவும்,
//பருத்திக் கொட்டை பஞ்சடைக்கி
பழுத்த மாதுளை பவளமடக்கி
உலவும் சிப்பியில் முத்தடக்கி
மானுட நெஞ்சில் ஈரமடக்கி
காட்சி உருவாக்கும் நீ யாரோ//
இது ஏ ஓன்...
புதுசா நான் வேற என்னத்த சொல்லப்போறேன்..
//வித்யா கலைவாணி said...
நல்ல கவிதை. உரை வீச்சு நன்றாக உள்ளது. காட்டாறுக்கு கண்டிப்பாக அணையோ தடையோ கிடையாது. ஜமாய்ங்க.//
ஒரு பெர்ர்ர்ரிய ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிப்ப்ப்ப்ப்ப்ப்பீட்டேஏஏஏஏஏஏஏஏ :))))
//நாகை சிவா said...
ஆனாலும் நல்லா இருக்கு....
//
நன்றி சிவா. :)
//Compassion Unlimitted said...
Ipaadi aenga vaikum avar yaaro !
TC
CU
//
முதல் முறையா வந்திருக்கீங்க. வாங்க வாங்க.
அவர் யாருன்னு தெரியிறது இருக்கட்டும்... இந்த கோட் வார்த்தைகளுக்கு(TC, CU) அர்த்தம் என்னாங்கோவ்? Take care, See you ஆ?
//சென்ஷி said...
இந்த கவிதையில அழகான நடையும், அதுல அமைஞ்சிருக்கற அல்லது சேந்துருக்கற இசை நயமும் ரொம்ப நல்லாயிருக்கு..
சினிமாக்காரங்க பாஷையில சொன்னா பாட்டாப்பாட அங்கங்க கொஞ்சம் மீட்டர் இடிக்குது :) (இது என் டிஸ்கி: சும்மா சொன்னேன்)
//
சென்ஷி, உங்க மறுமொழி ரொம்ப நல்லாயிருக்குது. மீட்டர் இடிக்காம சொல்லியிருக்கீங்க. ;-)
உங்க traditional ரிப்பீட்டேய் போடலையோன்னு கீழே பார்த்தா.....ஆஆஆஆஆஆ.....
Post a Comment