இயற்கையின் சந்தோஷ கூச்சல்
இயற்கையின் சந்தோஷ கூச்சல்
கருக் கொண்ட மேகங்கள்
கண்ணிமைக்க மறக்க
கரிய விழிப் பார்வைதனை
மின்னல் படம் பிடிக்க
செல்லச் சிணுங்கலில்
பித்தம் தலைக்கேற
இடி டம டமத்து
தண்டோரா போட
சிலிர்க்கும் மேகம்
மழையாய் ஆனந்த கூத்தாட
விரிந்து வழியும் வெண் பொதியாய்
சந்தோஷ கூச்சலிட்ட அருவி
தடுமாறா வேகத்தில்
கரை புரண்டு ஓடிடும்
பாறை தனில் மோதி
வான் எட்டிப் பிடிக்கும்
இரு கரையடைத்து
நாணலுடன் விளையாடும்
பச்சிளம் கொடிகளை
தலை கோதி செல்லும்
காடு மலை தாண்டி
வரும் பாதை சிறப்பித்து
சல சலத்து நுரை பொங்க
சேர்ந்திடுமே தன்னவனிடத்து
-- காட்டாறு
10 பேர் மறுமொழிந்துள்ளனர்:
அழகாக விளையாடியிருக்கீங்க.
வாங்கம்மா...
என்ன ஒரே அடியா இயற்கையோடு ஒன்ன்ன்ன்ன்றிப் போயிட்டீங்க... இயற்கையின் சிற்பி யாரோனு கேட்டீங்க..
ஆமா இந்தக் கவிதையெல்லாம் நம்ம குற்றாலம் கொட்டும் காலம் கவியரங்கத்துல மட்டும் வந்து எழுதிடாம பத்திரமா உங்க பதிவுல மட்டும் எழுதுங்க :-P
//இடி டம டமத்து//
:-)
ஒரு பதிவு என்றாலும் ரசிக்கும் படியாக போடுறிங்க்கா ;))ரசித்தேன்...வரிகளில் விளையாடி இருக்கிங்க..
\\தடுமாறா வேகத்தில்
கரை புரண்டு ஓடிடும்
பாறை தனில் மோதி
வான் எட்டிப் பிடிக்கும்\\
ரொம்ப நல்லாயிருக்கு இந்த வரிகள்
\\சேர்ந்திடுமே தன்னவனிடத்து -- காட்டாறு\\
ம்ம்ம்....இந்த உள்குத்து இன்னும் நல்லாயிருக்கு ;))
சூப்பரா இருக்கு..
இது போன்ற தொடர்ந்து இயற்கையை குறித்த கவிதைகளை எழுதுங்க.... :)
அழகு!
'இந்தியா கிரிக்கெட்' மாதிரி நல்ல 'form'ல இருக்கீங்களா? ;)
// வடுவூர் குமார் said...
அழகாக விளையாடியிருக்கீங்க.
//
வாங்க குமார். ரொம்ப நாளாச்சி பார்த்து..:-)
நன்றி.
//சேதுக்கரசி said...
ஆமா இந்தக் கவிதையெல்லாம் நம்ம குற்றாலம் கொட்டும் காலம் கவியரங்கத்துல மட்டும் வந்து எழுதிடாம பத்திரமா உங்க பதிவுல மட்டும் எழுதுங்க :-P
//
அரசியாரே.. உங்க பாணி தான். பதிவெழுதாம பதில் மட்டும் எழுதுவேன்னு இருக்கிறீங்களே நீங்க. ;-)
//பதிவெழுதாம பதில் மட்டும் எழுதுவேன்னு இருக்கிறீங்களே நீங்க//
ஐயோ நீங்க வேற.. பதிவெழுதாதப்பவே மக்கள்ஸ் நம்மளப் போட்டுத்தாக்களாங்க, இதுல பதிவு வேறயா... நினைச்சாலே குலைநடுங்குது!!
//போட்டுத்தாக்களாங்க//
ஹிஹி தட்டச்சுப்பிழைக்கு வருந்துகிறேன் - "போட்டுத்தாக்கறாங்க" என்றிருக்கவேண்டும்.
Post a Comment