Tuesday, December 04, 2007

வாய்க்கா வரப்பு

வாய்க்கா வரப்பு

வாய்க்கா வரப்போரம்
தனிச்சி நின்னு நான் பாடவே
தலைசாச்ச நாத்தோட
காத்தும் வந்து விளையாடுதே

காத்திலாடும் கிளைமேலே
சல சலக்கும் இலையினூடே
வள மூக்குப் பச்சக் கிளி
கெஞ்சலாய் கொஞ்சுதே

பச்ச மண்ணு அது மேல
குமரிகள் நாத்தாங்கால் நட
கையிசையின் தாளமாய்
வரிசை வனப்பூட்டுதே

மரத்தசைவு சுகத்தினிலே
பச்சப் புள்ள கண்ணுறங்க
அம்மையின் துணையின்றி
காத்து வந்து தூளியாட்டுதே

ஓடிவரும் தண்ணீரு
தேங்கி நிக்கும்-அதனுள்ளே
ஆமக்குட்டி நீந்த
குட்டித் தவள கொட்டமடிக்குதே

கருக் கொண்ட சோளக் கதிரு
குமுஞ்சி நிக்கும் தன்னாலே
ராத்தூகம் போயி
வெடித்து சிதற நேரம் பாக்குதே

ஆத்தாங்கரையோரம்
வளர்ந்திருக்கும் புல்வெளில
ஆட்டுக்குட்டி தன்னோட
கன்னுக்குட்டியும் ஆட்டம் போடுதே


-- காட்டாறு

16 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

ஆஹா...

வரப்போரப் பாட்டெல்லாம் பாட ஆரம்பிச்சுட்டீங்க...

//கருக் கொண்ட சோளக் கதிரு
குமுஞ்சி நிக்கும் தன்னாலே
ராத்தூகம் போயி
வெடித்து சிதற நேரம் பாக்குதே//

நல்லாருக்கு அம்மணி...

said...

நல்லாருக்குங்க!

ம்ம்ம்... பாரதிராஜா படத்தில எதுவும் வாய்ப்பு கிடைச்சிருக்கா.. சொல்லவே இல்ல..!

Anonymous said...

'ஹோம் சிக்'...னு சொல்வாய்ங்களே...

அது வந்திருச்சின்னு நினைக்கிறேன்....காலகாலத்துல ஊர்பக்கம் வந்து நெலவரங்கள பார்த்துட்டு போங்க தாயீ....

அப்பால பாட்டு ஷோக்கா கீது....

Anonymous said...

நல்லா இருக்குதுங்க உங்க பாட்டு. கூடவே இசையமைக்கறதுக்கும் ஒரு ஆள புடியுங்க‌

said...

//ஓடிவரும் தண்ணீரு
தேங்கி நிக்கும்-அதனுள்ளே
ஆமக்குட்டி நீந்த
குட்டித் தவள கொட்டமடிக்குதே//

என்னங்க... இதெல்லாம் இன்னும் நெசமா என்ன? தேங்கி நிக்கிற தண்ணியில, மீனெல்லாம் பாத்துருக்கேன்...ம்ம்ம்ம்.... ஏக்கங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

நல்லா இருக்குங்க. தொடருங்க..

said...

//மங்கை said...
ஆஹா...

வரப்போரப் பாட்டெல்லாம் பாட ஆரம்பிச்சுட்டீங்க...
//
அது சரிங்க்... நாங்க பாடினா.. கேக்க யாரு இருக்காங்க?

said...

//தென்றல் said...

ம்ம்ம்... பாரதிராஜா படத்தில எதுவும் வாய்ப்பு கிடைச்சிருக்கா.. சொல்லவே இல்ல..!
//

நக்கலூ? பாரதிராசா நம்மள நடிக்க தான் கூப்பிட்டாக.. அம்மாவா இல்ல... நாயகியா... ;-)

said...

உண்மையிலே சின்ன வயசுல வாய்க்கா வரப்பு ஓரம் ஒடி ஆடினது நினைவுக்கு வருதுங்க...

சூப்பரா இருக்கு :)

said...

கிராமியக் கவிதையெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க? கலக்கறீங்க போங்க :-)

said...

//இரண்டாம் சொக்கன் said...
'ஹோம் சிக்'...னு சொல்வாய்ங்களே...

அது வந்திருச்சின்னு நினைக்கிறேன்....
//

பங்காளி... ஹோம் சிக்கும் இல்ல.. சிக்கனும் இல்லைங்கோ... அம்மா வந்திருக்கும் போது.. ஏதாவது தலைப்பு சொல்லி எழுத சொல்லுவாங்க... இதிலே அம்மாவோட அனுபவங்களும் அடங்கியிருக்குது. அவங்களுக்கு ஏக சந்தோஷம்... :-)

//இரண்டாம் சொக்கன் said...
காலகாலத்துல ஊர்பக்கம் வந்து நெலவரங்கள பார்த்துட்டு போங்க தாயீ....
//
இது நல்லா தான் இருக்குதுங்க... உடனே டிக்கெட் போட்டு குடுங்க.. வந்து போறேன் ராசாத்தி...:)

said...

//சின்ன அம்மிணி said...
நல்லா இருக்குதுங்க உங்க பாட்டு. கூடவே இசையமைக்கறதுக்கும் ஒரு ஆள புடியுங்க‌
//

உடனே விண்ணப்பம் போட வேண்டியது தான்.... கெலுப்புக்கு உங்கள கூப்பிடலாமா? ;-)

said...

//தஞ்சாவூரான் said...
என்னங்க... இதெல்லாம் இன்னும் நெசமா என்ன? தேங்கி நிக்கிற தண்ணியில, மீனெல்லாம் பாத்துருக்கேன்...ம்ம்ம்ம்.... ஏக்கங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

நல்லா இருக்குங்க. தொடருங்க..
//

நெசமாவெ.. இந்த ஆமக்குட்டியில்ல... குழந்தைகள் மாதிரிங்க... நாம தூரமா நின்னு பாக்கனும். பக்கத்துல போனா... அதுகளுக்கும் வெக்கம் வந்துரும் போல. எங்க மாமா இது மாதிரி எடத்துக்கு கூட்டிப் போய் வேடிக்கை காமிப்பாரு... நாமெல்லாம் பட்டணத்து புள்ளைங்க பாருங்க.. அதனால.. ஹா ஹா ஹா

said...

//நாகை சிவா said...
உண்மையிலே சின்ன வயசுல வாய்க்கா வரப்பு ஓரம் ஒடி ஆடினது நினைவுக்கு வருதுங்க...

சூப்பரா இருக்கு :)
//

சிவா... நியாயமா சொல்லப் போனா... உங்களுக்கு இந்த பதிவை சமர்ப்பித்திருக்கனும். நீங்க தந்த உற்சாகத்திலே தான்.. பேப்பரில் உள்ளது கணணிக்கு மாறியது.

said...

//சேதுக்கரசி said...
கிராமியக் கவிதையெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க? கலக்கறீங்க போங்க :-)
//

அரசியாரே....கை வசம் ஆன்மீகக் கவிதைகள் நெறையாவே இருக்குது... மண்டைய பிய்ச்சுக்க வேணாமேன்னு பெர்ர்ரிய மனசு பண்ணிட்டேன்... நம்ம அன்புடனிலே... ஆன்மீக கவிதை சொல்லாடல் வைங்க... வந்துடலாம்

said...

தாயீ என்ன ஒரு கவிதையா பின்னுறீங்க.ம்ம்ம்ம் நடத்துங்க
மலரும் நினைவுகளா?

said...

கொஞ்சம் லேட்டு...

பாட்டு? கவிதை? ஏதே ஒன்னு ரொம்ப நல்லாயிருக்கு ;)

\\ பேப்பரில் உள்ளது கணணிக்கு மாறியது.\\

ஆஹா....மாத்துங்க இன்னும் எம்புட்டு இருக்கோ அம்புட்டையும் மாத்துங்க ;))