அவனுக்கு தெரியும்… இவனுக்கு தெரியுமா?
இரு தினங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது. நடந்தது காலை 7 மணியளவில். இந்நாட்டில் அதிகாலையில் வேலை செல்வோர் அதிகம். வங்கியை கொள்ளையடித்து விட்டு, போலீஸில் மாட்டிக் கொண்டவன், தன் காரில் ஓட்டமெடுக்க…… அவனை விரட்டினர் காவலர்கள். போலீஸில் மாட்டிக் கொண்டால் என்னாவது என்ற பயத்தில், நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலையின் எதிர் திசையில் புகுந்தான் நம் கதாநாயகன் கள்வன். 70 மைல் வேகம் செல்லும் அந்நெடுஞ்சாலையில், மக்கள் சர்வ சாதாரணமாக 80களில் செல்வர். எதிரே யாரும் வரமாட்டர்கள் எனத் தெரிந்ததால், பின் வரும் கார்களின் வேகத்தோடும், முன் செல்லும் கார்களின் ப்ரேக்கிங், லேன் மாற்றுதல் முதலியவற்றில் மாத்திரம் கவனம் கொண்டு செல்வது நடைமுறை.
நம் கதாநாயக கள்வனோ, போலீஸின் அதிரெடி சேஸிலிருந்து தப்பிக்க, தவறுதலாக எதிர்திசை புகுந்ததும் அவனுக்கு தெரிந்திருக்கும், தான் பிழைக்க சாத்தியமில்லை என. என்ன கொடுமையடா இது…. காலையில் மனைவி மக்களிடம் சொல்லிக் கொண்டு, மாலை வரும் போது கடைகண்ணிக்கு போய் வருவேன் என சொல்லி சென்றவன்… தனக்கு நேர் எதிர் வந்த கள்வனின் நோக்கம் அறியாது, என்ன செய்வது என்றும் அறியாது, நிலைகுலைந்து, எதிர் மோதி, இருவரும் அத்தலத்திலே இறந்தனர். இது தான் செய்தி.
எதிர்திசையில் நுழைந்ததால் கள்வனுக்கு தெரியும் தான் இறந்துவிடுவோம் என்று. ஆனால், இம்மனிதனுக்குத் தெரியுமா இன்று நாம் இறக்கடிக்கப் படுவோம் என்று? செய்தியில் காண்பிக்கும் போது…. அந்த இரு கார்களின் நிலையும், அம்மனிதன் பின் வந்த மற்ற கார்களின் நிலையும் மனதை கசக்கிப் பிழிவதாய் இருந்தது.
11 பேர் மறுமொழிந்துள்ளனர்:
இதற்கு, விதியின் மீது
பழி போடுவதை விடுத்து
வேறு என்ன சொல்வது!.......
:-(
ரொம்ப க்ராபிக்கா இருந்ததுங்க அந்த
விபத்து செய்தி....எனக்கும் ஒடனே தான்மாட்டுக்கு தேமேன்னு போயிட்ட்ருந்தவர பத்திதான் தோணுச்சு.
சிலதெல்லாம் புறிஞ்சுக்கவே முடியமாட்டேங்குது.....
மரணம் எல்லா வகையிலும் ஒரு புதிர் தான்... அதன் விடையறிந்தோர், அறிந்தபின் சொல்லுவதற்குத்தான் நம்மிடம் இருப்பதில்லை ...
தண்டனை- நெர்வழி/எதிர்வழி இருவருக்கும்??
கொடுமை :-( ரெண்டொரு வருசத்துக்கு முன்னாடி இப்படித்தான் ஒருத்தன் குடிச்சிட்டு எதிர்வழில வண்டியை ஓட்ட, அவனும் இறந்து ஒழுங்கான திசைல போயிட்டிருந்தவரும் இறந்தார்...
ஹ்ம்ம்ம்...கொடுமை...அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்ற தெரியாத காலகட்டம்... கொடுமை
:( கடவுளே!!
அது என்னமோ
இறந்தவரை விட எப்போதுமே எனக்கு அவரை இழந்தவர்கள் தான் முன்னிற்பார்கள் மனதில்..
அப்ப இந்த ஆங்கிலப் படங்களில் எல்லாம் பார்க்கிறது ச்சும்மாத்தானா... எவனாவது எதிர் தரப்பு ட்ராஃபிக்கில் புகுந்தால் நமக்கு சங்குதானா ...
இப்படி எல்லாம் சொல்லி பயமுறுத்தினா நாங்க கார் ஓட்டுறதா வேண்டாமா?
ஏங்க பீதியக் கெளப்புறீங்க? ஏற்கனவே, இங்கே பனிக் கொட்டிக் கையெல்லாம்...ஆட்டம் போடுது ஸ்டியரிங்கப் புடிச்சா! இதுல, எதிர்க்கள்வர்கள வேறப் பயத்தோடப் பாக்கனுமா? ரெண்டு வாரமா பஸ்ஸுல போறேன், பாக்கலாம் பொழச்சுக் கெடக்குறனான்னு :)
http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2007/12/31/AR2007123100491.html
எதிர்திசையில் வந்த வண்டியினால் 3 குழந்தைகள், ஒரு 6 மாதக்குழந்தை, தாய் உட்பட 5 பேர் மரணம், மீதமுள்ள மூவர் பலத்த காயம். ஒஹையோ மாநிலத்தில் நடந்தது. விபத்தில் இறந்தவர்கள் மிச்சிகன் மற்றும் மேரிலேண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்! எதிரில் வந்தவன் முழுக்க முழுக்க குடித்துவிட்டு வந்திருக்கிறான். விபத்து நடந்த இடத்தில் gift wrap & toys இறைந்துகிடந்தனவாம் :-(
Post a Comment