Monday, January 14, 2008

கண்மணித் தொடர்... பெஸ்ட் இஸ் ரெஸ்ட்

கண்மணி 'பதிந்ததில் பிடித்தது' சொல்ல கூப்பிட்டு இருக்காங்க அவங்களோட இந்த பதிவுல (http://kouthami.blogspot.com/2008/01/blog-post_12.html). அவங்களுக்கு முதல்ல நன்றி சொல்லி ஆரம்பிப்போம்.

எனக்கு பதிவு எழுத 10 அல்லது 20 நிமிடங்கள் தான். அதற்கு மேல நேரம் செலவழித்தது கிடையாது. அப்போதைக்கு மனசுல என்ன தோணுதோ, அவை மட்டுமே எழுத்துக்களாய். கவிதைகள் பெரும்பாலும் எப்பவோ எழுதியவைகள் தான். (இதுல கண்மணியை கலக்கிய கவிதையும் அடங்கும்). கவிதைகளும் 10 அல்லது 15 நிமிடத்தில் எழுதியவைகள் தான். எண்ணங்கள் செல்லும் வேகத்திற்கு டைப் அடிக்க முடியிறதும் காரணமாய் இருக்கலாம். அதனால எதுவுமே உருப்படி கிடையாது. ஒன்றைத் தவிர. (அதானே ஒன்னாவது இருக்கனுமேன்னு நெஞ்சை நிமிர்த்திக்காதீங்க மக்கா....). அது தான் தாயுமானவள்/அத்தையம்மா/.... (http://kaattaaru.blogspot.com/2007/12/blog-post_11.html) இது மட்டும் என்ன ஸ்பெஷல்ன்னு கேக்குறவங்க கோபியை கேட்கவும். அவரோட அன்புத்தொல்லை தாங்க முடியாம... 10 நாள் நச்சி தாங்காம, 10 நாள் ஓடி ஒளிஞ்சி, 10 நிமிஷத்துல எழுதி, 10 கரெக்ஷன் வாங்கி, 10 முறை திரும்ப திரும்ப வாசித்து... அப்பப்பா.. எத்தனை பத்து....தலைல குட்டு வாங்காத குறை தான். ;-)

இதிலே யாரைக்கூப்பிட.... எல்லாரையுமே கண்மணியக்கா 10 பேரை கூப்பிட்டு, அந்த 10 பேர், இன்னும் 10 பேரை கூப்பிட்டிருந்தா? இருந்தாலும் நாங்க ரூல்ஸ் மாற மாட்டோமில்ல.. அதனால... இதோ

1) யானைகளுக்கு சொந்தமான பொன்ஸ் (www.pookri.com)
2) கட்டுமான பிரிவுக்கு தலைவர் குமார் (http://madavillagam.blogspot.com)
3) சந்தன முல்லையாக வாசமளிப்பவர் (http://sandanamullai.blogspot.com)
4) தென்றாலாய் வருடுபவர், நாணயஸ்தன் (http://thendral2007.blogspot.com)
5) நம்மை பங்காளியாக்கி, மாயாவியாய் திரிபவர், பங்கு வணிகத்தை அலசி ஆராய்பவர் (http://aayirathiloruvan.blogspot.com) [சொக்கரே, இந்த முறை அழுகுணி ஆட்டம் ஆடப்பிடாது சொல்லிட்டேன். அதான் இரண்டாம் முறையும் விடாது கருப்பாய் தொடர்ந்திருக்கிறேன்]

பின்குறிப்பு:
ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் கண்மணியக்கா பதிவுல ((http://kouthami.blogspot.com/2008/01/blog-post_12.html) படிச்சிக்கோங்கப்பா.

19 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

கண்மணியின் வேண்டுகோளுக்கு இணங்கி ஒரு பதிவு. சுட்டியைச் சுட்டி, படித்து மகிழ்ந்து, மறுமொழியும் அங்கேயே எழுதி விட்டேன். பதிவர்களுக்கு எழுதுவது எல்லாமே பெஸ்ட் தானெ

said...

போட்டுவிடுவோம்.
என் கூட கூப்பிட்டவர்கள் பலரும் நான் படிக்கும் வலைப்பதிவர்கள் தான்.
முதலில் கண்மணி பதிவை போய் பார்க்கவேண்டும். :-)

said...

/அது தான் தாயுமானவள்/

நல்ல தேர்வுதான்! ஆனா..ஒண்ணோட நிறுத்திட்டீங்களே...!

'அடுத்தவங்க பதிவில் படித்தது பிடித்தது எதுனு' சொல்லச் சொன்னா அது எளிது...

ம்ம்...முயற்சி பண்றேன்...!

said...

ஆகா 10 நிமிஷத்து பதிவா எல்லாமே?
நமக்கு மேட்டர் சிக்கினாலும் டைப் பிரச்சினை.எப்படியோ [அபிஅப்பா மாதிரி தப்பா அடிக்காம] பொழப்பு ஓடுது.
அடுத்தது டேக் இருக்கு ...ஹாஹா ஆனா இப்ப இல்லை அடுத்த மாசம் [மேட்டர் ரெடி]

said...

நீங்கள் கொடுத்து இருந்ததையும் போய் படிச்சேன் அருமை.

ஆமாம் 10 நிமிடத்தில் பதிவு போடுவது எப்படின்னு ஏன் ஒரு 10 நிமிட பதிவை 10 தொடராக 10 நாள் இடைவெளியில் 10 மணிக்கு போட்டால் ஒரு 10 பேருக்கு உபயோகமாக இருக்கும்ல்ல அதனால் அவர்களுக்கு ஒரு 10 பதிவாவது போட ஐடியா கிடைக்கும் அதை 10 பேர் படித்த்தால் ஒரு 10 ரசிகர்கள் கிடைப்பார்கள் அந்த 10 பேர் மூலமாக மற்றவர்களுக்கு 10 பின்னூட்டம் கிடைக்கும்:)

said...

எனக்கு மிகவும் பிடித்த பதிவும் இதுதான்..மீண்டும் வாழ்த்துகள்.

said...

இதெல்லாம் ஆவுறதில்லை...

நான் எப்ப பிடிச்ச மாதிரி எளுதிருக்கேன்...இங்கன எடுத்து போட்டறதுக்கு....

ஆஆங்...ஒன்னு செய்வோமா....

நமக்கு தெரிஞ்ச ரெண்டு பயலுக முன்னால எளுதுனதுல இருந்து எடுத்துப் போட்ருவமா...ஹி..ஹி...

said...

\\ஒன்றைத் தவிர.\\

ஆனாலும் ஓவர் தன்னடக்கம் அக்கா ;)

said...

\\கோபியை கேட்கவும். அவரோட அன்புத்தொல்லை தாங்க முடியாம... 10 நாள் நச்சி தாங்காம, 10 நாள் ஓடி ஒளிஞ்சி, 10 நிமிஷத்துல எழுதி, 10 கரெக்ஷன் வாங்கி, 10 முறை திரும்ப திரும்ப வாசித்து... அப்பப்பா.. எத்தனை பத்து....தலைல குட்டு வாங்காத குறை தான். ;-)
\\

ஆகா..ஆகா.. இது என்ன என்னை வம்புல மாட்டி விட்டுடுவிங்க போல..! ;))

said...

// cheena (சீனா) said...
கண்மணியின் வேண்டுகோளுக்கு இணங்கி ஒரு பதிவு. சுட்டியைச் சுட்டி, படித்து மகிழ்ந்து, மறுமொழியும் அங்கேயே எழுதி விட்டேன். பதிவர்களுக்கு எழுதுவது எல்லாமே பெஸ்ட் தானெ
//
நமக்கு அப்படியெல்லாம் இல்லைங்க சீனா. நானெல்லாம் 10 நிமிடத்திற்கு மேல் செலவழித்தால் ஏதாவது உருப்படியா எழுதலாம். அதற்கு உடல் வணங்கனுமே. :)

said...

// வடுவூர் குமார் said...
போட்டுவிடுவோம்.
என் கூட கூப்பிட்டவர்கள் பலரும் நான் படிக்கும் வலைப்பதிவர்கள் தான்.
முதலில் கண்மணி பதிவை போய் பார்க்கவேண்டும். :-)
//

அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி குமார். கண்டிப்பா போய் கண்மணி பக்கம் படிங்க. கலக்கியிருக்காங்க (இதெல்லாம் சொல்லாமலே தெரியுமோ).

said...

// தென்றல் said...
/அது தான் தாயுமானவள்/

நல்ல தேர்வுதான்! ஆனா..ஒண்ணோட நிறுத்திட்டீங்களே...!
//

சட்டில இருந்தா தானே அகப்பையில் வரும். ;-)

// தென்றல் said...
ம்ம்...முயற்சி பண்றேன்...!
//
அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி தென்றல். கண்மணி பக்கத்துக்கும் ஒரு நடை போய்ட்டு வந்துருங்க. கலக்கியிருக்காங்க.

said...

// கண்மணி said...
அடுத்தது டேக் இருக்கு ...ஹாஹா ஆனா இப்ப இல்லை அடுத்த மாசம் [மேட்டர் ரெடி]
//

ஆத்தீ.. ஆளவுடுங்க சாமீ... நமக்கு எழுதுறது தந்தானே போடுது. இதுல டேக்-ன்னா யோசிச்சி வேற எழுதனுமே. அம்மாடி.. வேணாம்மா.. :-)

said...

// குசும்பன் said...
ஆமாம் 10 நிமிடத்தில் பதிவு போடுவது எப்படின்னு ஏன் ஒரு 10 நிமிட பதிவை 10 தொடராக 10 நாள் இடைவெளியில் 10 மணிக்கு போட்டால் ஒரு 10 பேருக்கு உபயோகமாக இருக்கும்ல்ல அதனால் அவர்களுக்கு ஒரு 10 பதிவாவது போட ஐடியா கிடைக்கும் அதை 10 பேர் படித்த்தால் ஒரு 10 ரசிகர்கள் கிடைப்பார்கள் அந்த 10 பேர் மூலமாக மற்றவர்களுக்கு 10 பின்னூட்டம் கிடைக்கும்:)
//

குசும்பரே, நீங்க எழுதின எல்லாமே புரிஞ்சிது. ஒன்னைத்தவிர... அது ஏன் 10 மணிக்கு போடனும்? எந்த 10 மணிக்கு? காலைல 10 மணிக்கா? இல்ல இரவு 10 மணிக்கா? இல்ல அமெரிக்க நேரம் 10 மணிக்கா? இல்ல இந்திய நேரம் 10 மணிக்கா? இல்ல துபாய் நேரம் 10 மணிக்கா? இல்ல ... 10 10ன்னு சொல்லி 10 முறை மூச்சுவாங்கிட்டேன். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. அப்பப்பா.

said...

குசும்பன் said...
நீங்கள் கொடுத்து இருந்ததையும் போய் படிச்சேன் அருமை.

ஆமாம் 10 நிமிடத்தில் பதிவு போடுவது எப்படின்னு ஏன் ஒரு 10 நிமிட பதிவை 10 தொடராக 10 நாள் இடைவெளியில் 10 மணிக்கு போட்டால் ஒரு 10 பேருக்கு உபயோகமாக இருக்கும்ல்ல அதனால் அவர்களுக்கு ஒரு 10 பதிவாவது போட ஐடியா கிடைக்கும் அதை 10 பேர் படித்த்தால் ஒரு 10 ரசிகர்கள் கிடைப்பார்கள் அந்த 10 பேர் மூலமாக மற்றவர்களுக்கு 10 பின்னூட்டம் கிடைக்கும்:)

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்....

said...

//சட்டில இருந்தா தானே அகப்பையில் வரும். //

எழுத ஆரம்பிங்க..அகப்பையே பத்தாது..

said...

ஹம்ம் நல்ல பதிவு...உங்க பதிவு எல்லாமே எல்லார்க்கும் பிடிச்சது தானே..

said...

அழைப்பிற்கு நன்றி. பதிந்திருக்கிறேன் இங்கே...

http://sandanamullai.blogspot.com/2008/01/blog-post_25.html

said...

பதிந்துவிட்டேன்
http://madavillagam.blogspot.com/2008/01/blog-post_30.html